Friday, January 30, 2009

உலகத் தமிழ் உறவுகளுக்கு!

எங்கள் தாய்த் தமிழகத்தில் எம் உறவுகள் எமக்கா எத்தனை எத்தனை தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதனை யோசித்துப் பாருங்கள். மனித உயிரின் மகத்துவம் பற்றி நாமெல்லாம் நன்றாகவே அறிந்துள்ளோம். எங்கள் உறவுகள் மீது கொண்டுள்ள கருணை வெளிப்பாட்டிற்கு நாமெல்லாம் எம் தாய் தமிழ் உறவுகளுக்கு என்ன கைம்மாறு செய்வோமோ என்று தெரியாமல் ஈடாடுகின்றோம் உறவுகளே!

இனிமேல் முத்துக்குமார்கள் வேண்டாம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் அகிம்சையின் மூலம், உணர்வுகளின் மூலம் தாய்த் தமிழக உறவுகள் பாரத அரசைப் பணிய வைக்க வேண்டும் என்பதே. உயிரையும், உணர்வுகளையும் காப்பாற்றத் தானே இந்தப் போராட்டங்கள்??? பிறகு ஏன் நீங்களாக உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்?

உலகெங்கும் வாழும் எங்கள் உறவுகளே! இந்த நேரத்தில் எமது கடமை என்ன?? நாம் என்ன செய்யப் போகிறோம்?? எங்கள் உறவுகள் இருக்க இடமின்றி அல்லற்பட்டுத் துடிக்கின்றார்கள். உண்ண உணவின்றி பட்டினியால் வாடி உழல்கின்றார்கள்..
நாங்களோ இங்கிருந்து கடந்த கால வரலாற்றை மட்டும் மீட்டும் மீட்டிப் பார்த்துப் பழமை பேசுகின்றோம்..
பாசிசம் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும், விடுதலைப் புலிகள் மீது பல தவறுகள் உள்ளன என்பது பற்றியும் பேசுவதற்கான நேரம் அல்ல இது??
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம். எமது பழைய குரோத விரோதங்களையும் களைந்தெறிந்துவ் விட்டு, பழைய கறை படிந்த விடயங்களைக் களைந் தெறிந்து விட்டு எல்லோரும் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வன்னியில் அல்லற்படும் மக்களுக்குக் குரல் கொடுக்கத் துணிய வேண்டும்.
இப் பொழுது வீடு பற்றி எரிகின்றது. எரிகின்ற வீட்டை அணைக்க முயற்சி செய்வதை விடுத்து நீ முந்தி எனக்கு அது செய்தாய் ஆதலால் ஒரு வாளி தண்ணி கூட ஊற்றி உனது வீட்டை அணைக்க என்னால் முடியாது என்று சொல்லி இருப்பது, ஒதுங்கி வாழ்வது மிக மிக இழிவான விடயம்.

பாசிசம் பற்றியோ பயங்கரவாதம் பற்றியோ இணையத்தில் எழுதித் தமிழர்களைப் படு குழியில் மேலும் மேலும் தள்ளுவதற்கான் நேரம் அல்ல இது. கொஞ்சம் சிந்தியுங்கள்..நாங்கள் இப்போது செயற்படுவதற்கான நேரம்.. துணிந்தெழுங்கள் உறவுகளே!

உங்கள் உங்கள் நாடுகளிள் உள்ள சட்ட திட்டங்களிற்கு அமைவாக எமது இரத்த உறவுகளுக்காக, எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தக்க தருணம் இது. இந்த வரலாற்று வேளையில் நாம் அனைவரும் ஒன்று படா விட்டால் ஒரு இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றத் தவறிய மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்த பிணியராகி விடுவோம். தயவு செய்து அனைத்துப் பேதங்களையும் மறந்து துடைத்தெறிந்து விட்டு இப்போது எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்கத் துணியுங்கள்.

புலிகள் அடிபார்களா?? எப்போது அடிப்பார்கள் என்றெல்லாம் கதை பேசி எம்மைத் தேற்றிக் கொள்ளும் காலமல்ல இது. அவர்களுக்குரியதை அவர்கள் செய்வார்கள். எமக்குரி பணியை யார் செய்வார்கள்? எமது இன்றைய பணி என்ன?? துன்பப்படும் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வது, அதனை விரைந்து செய்வோம். இன்றே செய்வோம். இந்தக் காலப் பெருங் களத்தில் நாம் ஒன்று திரளா விட்டால் வரலாறு எம்மை ஒரு போதும் மன்னிக்காது. சிந்திப்போம். இன்றே செயற்படுவோம்!

உலகெங்கும் வாழும் உறங்கிக் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் இப்போது விழித் தெழ வேண்டிய தக்க தருணம் இது.

எங்கள் உலகத் தமிழர்களுக்காக பத்மசிறி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய ஒரு பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

பாடல்: உலகத் தமிழா எழுந்து வா..
பாடல் வரிகள்: பிரித்தானியா பாபா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பாடலுக்கு இசை: வேதம் புதிது தேவேந்திரன்
Get this widget | Track details | eSnips Social DNA


உறங்கிக் கிடக்கும் உறவுகளே காலத்தின் தேவை கருதி உணர்ந்தெழுங்கள்.

பிற் குறிப்பு: இப்பதிவு அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக உங்கள் பொன்னான ஓட்டுக்களை இட்டு அனைவரையும் இப்பதிவு சென்று சேர உதவுங்கள்.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)பொறுத்தது போதும் பொங்க வேணும்! தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்! Read More......

Wednesday, January 28, 2009

முல்லைத்தீவு சிவக்கிறது!

எல்லைகள் யாவும் இன்று
எம்மவரை வெறித்தபடி பார்த்திருக்க(க்)
கொல்லுவோம் அவரை விரைவில்
குடிப்போம் அவர் உயிரை
தொல்லைகள் கொடுத்தே நாமும்
தொலைப்போம் தமிழர்களை என்பதனால்
நல்லவர் வல்லவர் யாவும்
நம்பக்கம் இப்போது நிற்கிறாராம்!

பிடிக்கப்பட்ட இடங்களெல்லாம் பல
பினாமிகள் கொடியேற்று கையில்
குடிக்கப்பட்ட உயிர்களின் எல்லாக்
குருதிகளும் பன்னீர் தெளிக்கிறதாம்
துடிக்கத் துடிக்கத் தமிழர்களை (த் )
துவம்சம் செய்வோம் என்பதனால்
வெடிக்கவெனக் குண்டுகளாய் வேகமாய்
வேற்றுப் படைகளும் வருகிறதாம்!

ஏற்றமிகு வாழ்வோடு இருக்கையில்
எட்டிப் பேசியவ ரெல்லாம்
கூற்றனவன் வாசலுக்கு வந்தவுடன்
குரலடைத்துச் செத்து விட்டனராம்
காற்றெனவே வந்து காதோடு
கனவுபல தந்தோரெல்லாம் இன்று
வேற்றுலகில் இருந்து மௌனித்து
வேடிக்கையாய் பார்த்து(க்) களிக்கிறார்கள்!

ஒருவழியாக மக்கள் இனி
ஒதுங்கியே வாழ்வோமென்றாலும்
பெரும் படையும் வந்து
பொசுக்கிட(த்) துடிக்கிறதாம்!
தருவதைத் தாருங்கள்
தமிழருக்காய் என்றாலும்
உருவினை அழித்தால் தான்
உதயமும் கிடைக்குமாம்!

எண்ணுவோம் எம்மக்கள் நிலையை
என எவரும் இல்லாததால்
கண்ணீர் விடுவதை(த்) தவிர
கண்ணுக்கும் ஏதும் தெரியவில்லை
திண்ணிய உயிர் துடிக்க
தீங்குகள் சூழ்ந்து நின்றாலும்
மண்ணுக்காய் வாழ்பவர்க்கு மரணமில்லை!
மலர்ச்சியும் வெகு தொலைவிலில்லை!

இன்றோடு முடியட்டும் சரிதம்
இனி யாம் வென்றோம் என(க்)
கொண்டாடப் பலரும்
கொடி கொண்டு வெளிக்கிட்டாராம்!
முன்னாளில் வந்து
மூக்குடைந்து சென்றோரெல்லாம் இப்போது
பன்னாட்டுப் படைகளாய்(ப்)
பல புலனாய்வு செய்கிறாராம்!
நின்றாடும் சமர்க்களம்
நீதி வேண்டித் தொடர்கிறதாம்!

அலையாக வந்து அடிவாங்கி
அஞ்சியோடிய அமைதியர்கள் எல்லாம்
மலையிற்குள் வைத்தே அவரை
மடக்கலாம் என உரைக்கிறாராம்!
மலையாகப் பல உயிர்கள்
மடிந்து போவதனால் இன்று
நிலையான குருதிகளால் தினமும்
நிலையற்று முல்லைத்தீவும் சிவக்கிறதாம்!

28.01.2009 @ 17.20
ஒலி வடிவில் கேட்கக் கீழே பயணிக்கவும்.
பிற் குறிப்பு: இங்கே பல விடயங்கள் தற்போதைய யதார்த்த சூழ் நிலைகளுக்கு அமைவாக மறைமுகமாகவும், சிலேடையாகவும் சொல்லப்பட்டுள்ளன.

Get this widget | Track details | eSnips Social DNA



Mullaitivu Sivakkirathu.mp3 - Kamal Read More......

மெல்பேணில் கவனயீர்ப்பு நிகழ்வு தொடர்பான நேர்காணல்!

சிறீலங்கா அரசாங்கத்தால் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படும் தமிழின பேரழிப்பை உலகுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் மெல்பேணில் எதிர்வரும் 30.01.2009 அன்று இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு தொடர்பாக மெல்பேண் தமிழ் இளையோர் அமைப்பின் தலைவர் கௌரிகரன் அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல். உங்களுக்காக...

New_Melb Tyo Inter.mp3 - Melboure Tyo
புலத்தில் உள்ள தமிழன் என்ன செய்கிறான் என்று யதார்த்தத்தை உணராமல் மிகவும் கீழ்த்தரமாக தமிழ் மக்களையும், தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும் விமர்சிக்கின்ற ஏதுமறியாத அப்பாவி ஜந்துகள் இதனைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்..

மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி
அன்புக்குரிய தமிழ் மக்களே!!
இன்று தமிழீழத்தில் எமது இரத்த உறவுகள், ஊரிழந்து, உயிரிழந்து, உற்றார் அற்று சொந்த நாட்டிலேயே சோகத்துடன் இடம்பெயர்ந்து அலைகின்ற வரலாற்றுத் துயரத்தை நாம் கண்ணுற்றுக் கலங்குகின்றோம். நாம் செயலற்றுக் கலங்கி நிற்பதற்கு அப்பாற்பட்டு, எமது தாயகத்திற்கான கடமையைச் செவ்வனே செய்து முடிப்பதற்கான காலம் இது!

ஆகையால், விக்ரோரியா வாழ் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் நீதிக்காக, நியாயத்திற்காக ஓரணியில் ஒன்றிணைவோம். சிறிலங்கா அரச பயங்கரவாதச் செயல்களுக்கு ஒரு முற்றான முடிவைக் கொண்டு வருவதற்காக நாம் உரிய அரசியல் அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுப்போம்!!

இத்தகைய ஜனநாயகச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக ஜனவரி மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணியொன்று சகல தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எம் தமிழ் உறவுகளின் பேரவலத்தை வெளி உலகிற்குத் தெரிவிக்க திரண்டு வருமாறு, அனைத்துத் தமிழ் உறவுகளையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம்.

காலம்:- 30ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை (30.01.2009)

பேரணி ஆரம்பிக்கும் இடம்: Treasury Gardens, Treasure Pl, Melbourne.
Through State Parliament of Victoria (Mel Way Ref: 44 K8)

பேரணி முடிவடையும் இடம்:- Venue will be confirmed.

Date: Friday, 30th January 2009
Time: 1.30 pm till 6.00pm
Awareness Rally Starting Point: i Treasury Gardens, Treasure Pl, Melbourne (Mel Way Ref: 44 K8), through State Parliament of Victoria u
Awareness Rally finishing Point: Venue will be confirmed.


Get this widget | Track details | eSnips Social DNA


இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)பொறுத்தது போதும் பொங்க வேணும்! தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்!

2)எங்களின் தாய் நிலமே!

3)ஈழ தேசம் எங்களின் தேசம்! Read More......

Tuesday, January 27, 2009

பொறுத்தது போதும் பொங்க வேணும்! தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்!

காலங் காலமாகக் கண்ணீர் விட்ட தமிழினம் விடிவேதும் காணாது அழிந்துவிடுமென்று யார் யாரோ எல்லாம் கனவு காணுகின்றார்கள். நாளும் பல உயிர்கள் வகை தொகை இன்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க இனிமேல் தமிழன் தலை நிமிரவே வழி ஏதும் இல்லை என்றும், தமிழனைச் சிதைத்துவிட்டோம் என்றும் ஆதிக்கச் சக்திகளும், முண்டு கொடுக்கும் அண்டை நாடுகளும் கனவு மயக்கத்தில் மகிழ்ந்திருப்பதும் இப்போது கண் கூடாகக் காணும் காட்சிகளாகி விட்டன.

இத்தகைய சூழ் நிலையில் புலத்தில் உள்ள எமது மக்களின் கடமை என்ன??? புலத்து வாழ் மக்களின் மன நிலையை மாற்றும் நோக்கில் போலியான வதந்திகள் தாங்கிய பரப்புரைகளும் இப்போது முடக்கி விடப்பட்டுள்ளன. எனவே புலத்து வாழ் மக்களின் கடமை என்ன? புலத்து வாழ் தமிழர்கள் இத்தகையதொரு இக்கட்டான சூழ் நிலையில் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றிய தகவல்கள் தாங்கிய ஒரு பாடல் வெளி வந்துள்ளது. நிச்சயம் உங்கள் அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் பாடலாக இது அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை.


பாடல்: பொறுத்தது போதும் பொங்க வேணும்...!
பாடல் வரிகள்: சுஜித்ஜி
பாடியவர்: சுஜித்ஜி
பாடலுக்கு இசை: சந்தோஷ்

அறிமுகம்: குரல் வடிவில்: ''சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா(ச்) சண்டையைத் தொடங்கி சனம் கஸ்ரப்படுதாம் என்று சிலர் கதையைக் கிளப்பி விட்டிருக்கீனை. ஒன்டு சொல்லோணும் பாருங்கோ. இந்த ஆரியத் திராவிட யுத்தம் எண்டுறது முப்பது இல்லை பாருங்கோ மூவாயிரத்து ஐநூறு வரியமாய் நடக்குது. இப்ப என்னடா என்டால் திராவிடத்தின்ர இறுதிப் பலத்தையும் அழிக்கிறம் என்று உந்த ஆரியக் கும்பல் கங்கணம் கட்டி நிற்குது. இந்த நேரத்திலையும் நீங்கள் வீட்டுக்குள்ள நிண்டு குசு குசுக்காமல் தயவு செய்து றோட்டுக்கு இறங்குங்கோ.....ஆ......தம்பி..ம்..

ஒலி வடிவில் கேட்க உங்களிடம் Adobe Flash Player இருத்தல் வேண்டும்.

Makkal Por - SujeethG
'பொறுத்தது போதும்
பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்
விட்டாற் தன் மானம் காத்தோடு போகும்
என்றே நீ இப்போதே வென்றாகனும்!

பொறுத்தது போதும்
பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்
எம் தமிழா செந் தமிழா
எங்கள் நிலை பார் பார்
பொங்கியெழு ஓங்கியெழு
எங்களுக்காய் வேறு யார்???

வாழ்ந்த தமிழன் வீழ்ந்து இங்கு
மாண்டு தாழ்ந்து போவதோ?
வாழ்ந்த மறவன் தாழ்ந்து இன்று
மண்டியிட்டுப் போவதோ?
'நரிகள் முன்னாலே நரி வால்கள் பின்னாலே
முறியும் இந் நாளே! முறிந்து போகும் தமிழாலே!

தமிழை நினைத்துச் சோர்வு கழற்று
தமிழா நீயும் எழுந்து வா!
உரிமை காக்க மண்ணைக் காக்க
மறவனே நீ மீண்டும் வா!

எம் தமிழா செந் தமிழா!
எங்கள் நிலை பார் பார்!
பொங்கியெழு ஓங்கியெழு
எங்களுக்காய் வேறு யார்??

நீ காத்திருந்தது போதும் - அட
காத்திருந்தது போதும்
தமிழ பூத் தெழுந்திட வேணும்
மண் காத்தெழுந்திட வேணும்
இதுவும் போர்க்களம்- சர்வதேச போர்க்களம்
இங்கும் தாக்கணும் கோசம் கொண்டு தாக்கணும்
'மண் தன்னை அவர் மீட்பார்
அங்கீகாரம் நீ கேளு!
களம் தன்னை அவர் பார்ப்பார்
புலத்த்தில் நீ போராடு!


பொறுத்தது போதும் பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்!
விட்டாற் தன் மானம் காத்தோடு போகும்
என்றே நீ இப்போதே வென்றாகனும்!

பொறுத்தது போதும்
பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்
எம் தமிழா செந் தமிழா
எங்கள் நிலை பார் பார்!
பொங்கியெழு ஓங்கியெழு
எங்களுக்காய் வேறு யார்???

பொய்களெல்லாம் பூனை போல பதுங்கி வரும் நம்பாதே!
வதந்தியெல்லாம் கழுகு போலக் கௌவ வரும் வெம்பாதே!
'அவனை நீ நம்பு! 'அவனே நம் தெம்பு!
ஈழம் நமதென்று கோசம் போடின்று!
ஒன்றாகச் சேர்ந்து நின்று
புரிவோம் இது மக்கள் போர்!
தமிழ் மானம் காக்கவென்று போடும்
இது இறுதிப் போர்!

எம் தமிழா செந் தமிழா
எங்கள் நிலை பார் பார்
பொங்கியெழு ஓங்கியெழு
எங்களுக்காய் வேறு யார்???

முப்பதாண்டு முற்றுக் கொடுத்து வந்தானே புலத் தமிழன்!
வெற்றி தோல்வி யாவிற்கெல்லாம் நின்றானே புலத் தமிழன்!
இறுதிப் போரில் நின்று மானம் காக்க வென்று
உணர்வை நீயும் தந்து களத்தில் ஆடு நின்று!
ஒன்றாகச் சேர்ந்திருந்து புரிவோம் இது மக்கள் போர்!
தமிழ் மானம் காக்கவென்று போடும் இது இறுதிப் போர்!

'பொறுத்தது போதும்
பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்
விட்டாற் தன் மானம் காத்தோடு போகும்
இன்றே நீ இப்போதே வென்றாகனும்!

பொறுத்தது போதும்
பொங்க வேணும்
தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்
எம் தமிழா செந் தமிழா
எங்கள் நிலை பார் பார்
பொங்கியெழு ஓங்கியெழு
எங்களுக்காய் வேறு யார்???

பொருள் விளக்கம்: குசு குசுக்காமல் - மெது மெதுவாகக் கதைத்தல்... எனும் பொருளில் வரும்!

பாடல் உதவிக்காக நன்றியுடன் சுஜித்ஜி இணையத்தளம்!

பட உதவிக்காக நன்றியுடன் தாய்கக் குரல் புலிகளின் குரல்!

நேற்றும் முந்நூறிற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் பலர் அரச பயங்கரவாதத்தினால் கோரமாகக் கொலை செய்யப்பட்ட பின்னர் எமது உறவுகளின் நிலமை பற்றி ஏதும் அறியாது உறங்குகின்ற சர்வதேசத்தை நோக்கி ஆர்ப்பரிக்கும் அலையாக அணிதிரண்டு எமது உறவுகளின் நிலமைகளை அனைவரும் விரைந்து சொல்லிட வேண்டும்..இதுவே ...இன்று தரணி முழுவதும் உள்ள தமிழர்களின் தலையாய கடமை...

பிற் குறிப்பு: வழமை போலவே இப் பதிவிற்கும் பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் திரட்டப்படுகின்றன.. எவராக இருந்தாலும் உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்,!

காணொளியில் பார்க்க



இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)எங்களின் தாய் நிலமே!

2)ஈழ தேசம் எங்களின் தேசம்! Read More......

Sunday, January 25, 2009

பருவமும் பாவையும்!

மட்டக்குளி மருதானை
மாங்கேணி ஓரம்
கட்டுப்படா ஆசையுடன்
கங்காணி நின்றாராம்
தொட்டுவிடக் கூடாத
தோகையினைக் கண்டாராம்
வட்டமிடும் பருந்தாகி
வரிசையாகத் தொடர்ந்தாராம்!

அந்தி மாலை வேளைகளில்
அழகி களைக் கண்டாராம்
சந்தியிலே தினம் நின்று
சங்கம் வைக்க முனைந்தாராம்
நிந்தை தனில் கன்னியரின்
நினைப் புடனே திரிந்தாராம்
மந்தியினைப் போல தினம்
மரம் தாவ முயன்றாராம்!

கட்டழகி கனகாவை(க்)
கண்ட வுடன் நெகிழ்ந்தாராம்
சிட்டுப் போன்ற அன்னவளை(ச்)
சீக்கிரமாய்த் தொடர்ந்தாராம்
மொட்டு விடா மலரிதென்று
மோகமுடன் அலைந்தாராம்
கட்டி வைக்க வேன்டுமென்று
கங்கணமும் கொண்டாராம்!

சுப்ப(ர்) ஸ்ரார் நானென்றால்
சிறிதேவி நீ தானே
கப்பென்று வாடியம்மா
கடலோரம் போய் வருவோம்
அப்பன் தான் தொல்லையெனில்
அமெரிக்கா சென்றிடுவோம்
தப்புத் தான் என்றாலும்
தாலியினை மறந்திடுவோம்!

என்றாராம் கங்காணி; அவ்
ஏந் திழையாள் தவித்தாளாம்
நன்றாக இருக்கவி(ல்)லை என
நாய் போலக் குரைத்தாளாம்
வண்டாடும் சோலைக்குள் அவளை
வா வென்று அழைத்தாராம்
கொண்டாடி மகிழ்ந்தாராம்; தினமும்
கோல் பேசில் அலைந்தாராம்!

எப்போதோ அறிந்த கதை
எம் நாட்டில் நடந்த கதை
தப்பேதும் இல்லை; இதில் சில
தமிழ்(க்) குற்றம் இருந்திடலாம்
இப்போது நான் சொல்வேன்
இவர் போல் நீர் இருந்திடாதீர்!
நப்பாசையால் நீரும் இனி
நம் இன மானமதை விற்றிடாதீர்!
++++++++++
கோல் பேஸ்: இலங்கையில் உள்ள காதலர்கள் கூடி மகிழும் கடற்கரை!

2005 ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட கவிதை!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
Read More......

Thursday, January 22, 2009

நானும் அவளும்!

தேனவள் உடலில் சில
தேடலை மேற்கொள்ள
மாணவன் நானும் நாளும்
மையலை(க் ) கொண்டேன்
வானகம் செல்வேனா; இலை
வாழ்ந்துமே கெடுவேனா என
நானுமே நினைத்தேன் - அந்த
நங்கையும் வந்தாள்!

எட்டி இழுத்தேன்
என்னருகே வந்தாள்
கிட்ட இழுத்தேன்
கீதம் இசைத்தாள்
முட்டிப் பார்த்தேன்
முகத்தைச் சுழித்தாள்
கட்டி அணைத்தேன்
கரும்பாய் இனித்தாள்!

முல்லை போல் சிரித்தாள்
முத்துப் போல் தவித்தேன்
எல்லைகள் கடந்தாள்'; ஆதலால்
என்னை நான் மறந்தேன்
தொல்லைகள் தீர்த்தாள்; விரல்
தொட்டுமே எனை அணைத்தாள்
சில்லெனச் சிலிர்த்தேன்; அவள்
சிட்டுப் போல் துடித்தாள்!

பூமகள் சிலிர்த்தாள்
புதுக் கவி படைத்தாள்
வாவென அழைத்தாள்; எனை
வார்த்தாயால் நனைத்தாள்
சோவென இசைத்தாள்; தன்
சோகங்கள் மறந்தாள்
பூவெனப் பூத்தாள்; பல
புன்னகை புரிந்தாள்!

எட்டியே இழுத்தாள்; நான்
என்னையே இழந்தேன்
கட்டிலில் கிடந்தேன்
கால் தவறியே விழுந்தேன்
சட்டென எழுந்தேன்; மனச்
சங்கடம் தெளிந்தேன்
பட்டென நிமிர்ந்தேன்
பகற் கனவென நினைத்தேன்!

30.12.2005 மெட்ரோ நியூஸ் பிரசுரம்.
Read More......

நம்மூர் கலாசாரம்!

காலையில் கன்னியைக் கண்டான், அவள் மேல்
காதலைக் காளையும் கொண்டான்
வேளைகள் நெருங்கும் என்றிருந்தான்; தினமும் தன்
வேட்கையைத் தீர்த்திட முயன்றான்
ஓலையில் எழுதியே கொடுத்தான்; அவள் அதை
ஒருமுறைக் கிருமுறை படித்தாள்
வேலையை வெட்கத்தை இழந்தான்; இப்போ அவள்
வெளி நாடென்றுமே பறந்தாள்!
[வேறு]

தாடியைத் தனயனும் வளர்த்தான்; அவளோ
தமிழினைத் தப்பென்று மறந்தாள்
கோடியாய்ப் பணத்தினை இழந்தான்; அந்தக்
கோதையைத் தேடியே அலைந்தான்
நாடினை நகரினை மாற்றந்தான் ;அந்த
நங்கையின் நினைவினில் திளைத்தான்
பீடியை விரும்பியே சுவைத்தான்; இப்போ
'பாடியில் கான்சராம்' பயந்தான்!
[வேறு]

கண்டியாம் ஊராம் 'கவர்மெண்ட' தொழிலாம்
லண்டனாம் என்றதும் தன் லட்சியம் மறந்தாள்
செண்டுகள் கொடுத்தாள், சேலையை மறந்தாள்
'சொப்பிங்' போனாள், இதுவே சொர்க்கமாம் என்றாள்
கண்டதும் காளையைக் கையினால் அணைத்தாள்
கட்டிய கணவனை அக் கன்னியும் பிரிந்தாள்
இன்றைய பெண்களின் இழி நிலை இதுவாம்
இதனையும் நீவிர் மாற்றிட நினைப்பீர்!
என்றுமே சொல்வது எவனடா என
எண்ணிடும் முன்னே நானும் முடிக்கிறேன் இதையாம்!

10.04.2006 நமது ஈழநாடுப் பிரசுரம்.
Read More......

இனி அசைலம் அடிக்கேலாதாம்...

ஹலோ! ஓம் அம்மாவே! நான் செல்வன் கதைக்கிறன்... சீ நாசமாய்ப் போன ரெலிபோன். ஒழுங்கா ரெண்டு கதையும் கதைச்சு முடிக்கேல்லை. அதுக்குள்ள கட்டாப் போச்சு. யாழ்ப்பாணம் முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்கை, இந்தா புலிகளை ஒழிச்சிட்டம், பாதை திறக்கப் போறம் என்று வாய்க்கு வந்தபடி அரசாங்கமும் மாரி மழைக்குக் கத்துற தவளை மாதிரி அறிக்கை விடுதே தவிர அங்கை சமான்களின்ர விலை குறைஞ்ச மாதிரியோ, ரெலிபோன் ஒழுங்கா வேலை செய்கிற மாதிரியான நிலமையோ இருப்பதாய் நான் இன்னும் கேள்விப் படவில்லை.

தமிழருக்கு எழுதப்பட்டது இவ்வளவும் தான். எதிர் பார்ப்புக்கள் இருக்கும் போது ஏமாற்றமும் இருப்பது இயல்புதானே, என நான் எனக்குள்ளே எண்ணியவாறு அடுத்தடுத்துப் பல முறை முயற்சி செய்தும் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதாம் என்பது போல் ஒரு 'றிங்' உடன் போன் கட்டாகிப் போனது. நன்றாக யோசித்துத் தான் பழ மொழிகளும் இயற்றியுள்ளார்கள் போலும் என்ற படி தொடர்ந்தேன்.

மிகுந்த சலிப்பின் மத்தியில் ஒருவாறாகக் கஸ்ரப்பட்டு லைன் கிடைச்சதும் அம்மாவும் தன் பாட்டுக்கு வழக்கம் போலவே தனது பழைய பல்லவியை வாசிக்கத் தொடங்கினா. சுகம் கேட்டுச், சாப்பிட்டியோ என்று கேட்டது மட்டும் தான்; அதற்குப் பிறகு 'என்ன மோனை காசு ஏதும் அனுப்ப மாட்டியோ??? நீ போய் எவ்வளவு காலம்? 'இல்லை அம்மா! இப்பத்தானே நானும் வந்தனான். அதுவும் படிச்சுக் கொண்டு வேலை செய்கிறன். அதுக்குள்ள வந்த காசு கட்டி முடிக்கவே கொஞ்சக் காலம் போட்டுது, பிறகு ஏதோ என்னாலை முடிஞ்சதை நான் அனுப்புறேன் தானே?

'அதுக்கை நீ எல்லோ மிச்சம் பிடிச்சு வைக்க வேணுமணை. அதை விட்டிட்டு உப்பிடிக் கதைக்கிறது முறையோ என்று நானும் பேச்சு வார்த்தை மேசையில சுகாதாரம் கதைத்த நிமால் சிறீபாலடி சில்வா மாதிரி என் பாட்டுக்கு நீட்டி முழக்கினேன்.

அம்மாவும் பதிலுக்கு விடுவதாயில்லை. தம்பி இப்ப போன் காட் என்ன விலை? அரிசி என்ன விலை? பருப்பு என்ன விலை என்றெல்லாம் தெரியாமல் நீ உங்கை இருக்கிறாய் போல. அப்ப எப்ப தம்பிமாரைக் கூப்பிடப் போறாய்?? ம்... இப்ப ஒட்டு மொத்த யாழ்ப்பாணமும் ஒரு வெளிநாட்டை நம்பியிருக்கிற நிலமை. அப்ப வெளிநாட்டிலை ஆட்களில்லாதவையின்ர பாடு என்னவாகும்?? கேள்வியும் நானே பதிலும் நானே என நொந்து கொண்டேன்.

'அம்மா இப்பத்தான் 'போம்' எல்லாம் 'இமிக்கிறேசன்' ஒப்பீசில குடுத்திருக்கு. நிலமையைப் பார்த்தால் கொஞ்சக் காலம் கூட எடுக்கும் என்று லோயர் சொல்லுறார். அதோடை இப்ப பொடியள் மடங்கிப் போறதாலை இனித் தமிழ் ஆட்கள் கேஸ் அடிக்கேலாதாம் என்ற கட்டத்திற்கு வந்திட்டணை இங்க நிலமை என்றேன். அம்மாவும் 'ஏன் தம்பி, உது நடக்கிற காரியமோ என்று, 'வீட்டு வேலிக்கு மேலாலை வளர்ந்த யாழ்ப்பாண வேலிகளின் கதியால்கள் திடீரெனக் காணாமற் போவது போல, சரி தம்பி.. வேறை ஏதும் கதை. போனில உப்பிடி ஏதும் வேண்டாம் என்றவளாய் இழுத்தா.

நானும் சரி அம்மா. அப்பர் எங்க?? பிஸ்ணஸ் எல்லாம் எப்பிடி ஓடுது என்று இழுக்க... அம்மாவும் மீண்டும் ஒரு தரம் யாழ்ப்பாணத் தற்போதைய நிலமையை விளக்க முற்பட்டா. நான் 'போம்' எல்லாம் போட்டிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கிறன், அதுவும் நான் பொடியளைச் சாட்டியெல்லோ கேஸ் கொடுத்தனான். இப்பத்தான் யாழ்ப்பாணத்தில எவையளுமில்லையே. அதோட என்ர கேஸையும் இனி மாற்றேலாது. வெள்ளைக்காரன் சொல்லுறான், இப்ப யாழ்ப்பாணத்திலை பிரச்சினை ஏதுமில்லை. வெயிட் பண்ணிப் பார்ப்பம். அதுக்குப் பிறகு ஏதாவது இடக்கு முடக்கு என்றால் யோசிப்பமாம்.

'தம்பி ஏதோ நல்ல காலத்துக்கு உந்த ரெண்டு பொடியளையும் கூப்பிட்டாய் என்றால் நானும் அவரும் எங்கயாவது ஒரு கொட்டிலுக்கை இருந்து சீவிப்பம். ஏலுமண்டாப் பார்த்து விரைவாகச் செய்யனப்பு. தம்பி காசும் கையில இல்லை. ஏதாவது கொஞ்சமாயெண்டாலும் போடனப்பு. என்றதும் ஓமம்மா. அடுத்த கிழமை நான் அனுப்புறேன். வேறை என்ன புதினம்? நான் வைக்கட்டே என வேண்டா வெறுப்புடன் அழைப்பைத் துண்டித்தேன்.

புலத்திலை ஓய்வின்றி நிம்மதியற்று இருக்கும் எங்களுக்கு பெற்றவர்களுடன் கதைத்தால் தான் ஏதாவது சந்தோசம் நிலைக்கும் என்றால், அவர்களும் புரிந்துணர்வைப் தொலைத்தவர்கள் போலிருக்கிறார்கள். எல்லாம் கால நதிக் கரையில் நீள நடந்தவன் திரும்பிப் பார்க்கையில் தெரிவது போலாகி விட்டன.

உண்மை தான் இங்கே எமக்கு ஏதாவது மன அழுத்தம் என்றாலோ துன்பம் என்றாலோ 'றூமில' உள்ளவங்களுக்குச் சொல்லி அழ முடியுமோ?? அவனவன் தன்ர வேலையில இருப்பான். எங்கட பாட்டை நாங்கள் தானே பார்க்க வேணும். தமிழர்களைப் புரிந்து கொள்ளாத சிங்களவர்கள் போலத் தான் எம்மவர்களும் என்பதில் எந்தவித தப்புமில்லைத் தானே?

மனதிற்குள் இருந்த வலிகளையெல்லாம் மறப்பதற்காய் மகிந்தன் வீடு நோக்கிப் புறப்பட்டேன். நான் அங்கே போனதும் தான் தாமதம் ரூபன், எழில், சாந்தன் எல்லோரும் கடதாசிக் கூட்டத்தோடு ஒன்றியிருந்தார்கள். நானும் போய்ச் சேர்ந்து கொண்டேன். திடீரென மகிந்தன் 'இப்ப நாடு போற போக்கைப் பார்த்தால் இனி வெளிநாட்டிலை 'அசைலம்' அடிக்கேலாதாம் என்றான். நானும் எல்லாம் தெரிந்த ஒற்றர்கள் போல என் பாட்டிற்குத் தலையாட்டினேன்.

இவ்வளவு நாளும் புலிகளைச் சாட்டிப் புலிகள் இயக்கத்துக்கு வரச் சொல்லிச் சொன்னதாலை தான் இங்க வந்தனாங்கள், புலிகளுக்கு உதவி செய்ததால் ஆமி தேடுறான் என்று சொல்லி அடிச்சது பெரிய அதிஸ்டமெல்லோ, என்று இங்க உள்ள ஒரு சிலர் சொல்லீனமாம்.. புலிகள் சண்டையைத் தொடங்கா விட்டால் இனி அசைலம் அடிக்கேலாது, பிள்ளையளைக் கூப்பிட ஏலாது என்றும் சிலர் நோகீனமாம் என்றான் சாந்தன்,

நானும் அது பரவாயில்லை மச்சான். போராட்டத்துக்குத் துளியளவும் பங்களிப்புச் செய்யாத பல பேர் திருவிழாவிலை பஞ்சாமிர்தம் கிடைச்சது மாதிரியெல்லோ இந்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தியிருக்கீனம், இனியென்ன ஒருத்தருக்கும் ஒரு சாட்டும் கிடைக்காது என்றேன். நீ விசர்க் கதை கதைக்கிறாய். புலிகளைச் சாட்டி நன்மையடைஞ்ச வெளி நாட்டில் உள்ள பல பேர் எங்கட தாயகம், போராட்டம் சம்பந்தமான நிகழ்வுகளுக்குத் தலையே காட்டுவதில்லையே என்று சொன்னேன்.

உண்மையில் இன்று பெரும்பாலானவர்கள் ஏக போகம் அனுபவித்து மகிழ்வது இருபத்திரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் கல்லறைகளைச் சாட்டித் தானே? என்ன செய்வது 'ஓசியிலை கிடைச்சால் ஏசியும் ஊசி போட ஓடி வருமாம்' என்ற படி நானும் என் கருத்தை வைத்தேன்.

அப்ப இனி அசைலம் அடிக்கேலாதோ? எனும் விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதாய் எழில் சொன்னான். 'இனித்தான் மச்சான் நிறையச் சாண்ஸ் இருக்கு. புலிகளுக்கு உதவி செய்ததாலை ஊருக்கு இனிப் போனால் ஆமி எங்களைப் போட்டுத் தள்ளுவான் என்று சொல்லி அடிக்கலாம் தானே? அதோடை இந்த ஜென்மத்திலை வெள்ளைக்காரன் திருப்பி அனுப்பவும் மாட்டான் என்றான், இப்படியும் யோசிக்குமளவிற்கு மனிதர்கள் உள்ளார்களா என்று எனக்குள் நானே நல்லூரானை நினைத்து நொந்து கொண்டேன்.

இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்கள். குருவிகள் பல சேர்ந்து கூடு கட்டுவதற்கும், குருவி ஒன்று கூடு கட்டுவதற்கும் எந்தளவு வேறுபாடு உள்ளது? இது என் எண்ணவோட்டம். குருவி ஒன்றினால் கட்டப்பட்ட கூடு குலைந்து விடுமா என்று நானே எனக்குள் சிந்தித்தேன். காலம் சுழலும் தன் வேகத்திற்கமைவாகச் சகதியைப் பரிசளித்து விட்டுச் செல்கிறது எனும் தத்துவத்தை நினைத்துப் பார்க்கையில்; பின்னிய கும்மிருட்டுக்குள் மெல்லிதாய்ப் பல உருவங்கள் நகர்வதும், நுண்ணிய ஆய்வில் அவை எந்தளவு துல்லியமாக ஈடுபட்டன என்பதுவும் என் நினைவில் ஒரு தரம் வந்து போயின.

மறு நாள் வேலைக்குப் போக வேண்டும் என்று தூங்குவதற்கு முயற்சி செய்கையில், தூக்கமும் தமிழர்களின் தீர்வுப் பொதியை அடிக்கடி வெளியே எடுப்பதுவும், பின்னர் உள்ளே வைப்பதுமாய்ப் பலர் நாடகமாடுவது போலாகி விட்டது. மின்னல்களுக்கிடையில் முகங் காட்டுகின்ற நுண்ணிய சிறு ஈசல்களாய்ப் பல நினைவுகள் வந்து போயின.

தூக்கம் வராமல் துவண்டபடி வானொலிப் பெட்டியை முறுக்கினேன். வானொலியில் விசேட செய்தி போய்க் கொண்டிருந்தது. 'விடுதலைப் புலிகளைக் கடலினுள் தள்ளி விடும் நன்னாளில் வீடுகளிற் கொடியேற்ற அனைத்து இலங்கையரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார், என்பதோடு தூங்கி விட்டேன். திடீரென்று விழித்துப் பார்த்தேன். வானொலியை நிறுத்துவதற்காக அப்போது காதுகளில் ''ஆட்டுவிப்பார் யார் எவரோ??? ஆடாதோர்.... எனும் பாடல் கலந்து போனது.
யாவும் கற்பனை(யே)யல்ல..
21.01.2009 @ மாலை 02.33

"அசைலம்: வெளி நாட்டில் அரசியல் அந்தஸ்து/ புகலிடம்/ அடைக்கலம் கோருதலைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.

பிற் குறிப்பு: இது எனது நீண்ட நாளின் பின்னரான ஒரு முயற்சி.. ஏற்கனவே இப்படிப் பல எழுத்துருவாக்கிய போதும் அவை எல்லாம் கால நதிக் கரையில் கரைந்து தொலைந்து போய் விட்டன. மீண்டும் ஒரு புதிய பிரசவம் இது. இது பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது பற்றிய உங்கள் எண்ணங்கள், ரசனைகள் என்பவற்றில் தான் நான் இப்படியான படைப்பினைத் தொடர்ந்தும் தர முயற்சி செய்யலாம். இதுவும் உங்களைக் கவர்ந்திருந்தால் தான் நான் இப்படியான முயற்சிகளைத் தொடர்ந்தும் செய்யலாம்... இல்லை என்றால்......???????? Read More......

Wednesday, January 21, 2009

எரிகின்ற எனது நகரம்! (2)

நிஜமற்ற நிழல்

நான் இன்று வரை வாழ்வதுவும்
என் உடல் இப்போது ஓரளவு இயங்குவதும்
எனக்கு ஏதோ கனவுலகம் போலாகி விட்டது!
ஏனெனில் இனவாதப் பேய்களின்
பிடியில் அகப்பட்டவன் பிழைத்துவிட்டான் என்றால்
யாரும் நம்பவே மாட்டார்கள்!
+++++

எங்கள் ஊரின் அவலங்களும், நாங்கள் பட்ட ரணங்களும்
இங்கிருப்பவர்களுக்கு ஏதோ ஆங்கிலப் படம்
பார்ப்பது போலாகி விட்டதாம்!
+++++

நான் பட்ட வேதனைகளும்
நான் சந்தித்த சோதனைகளும்
இங்கு எவரும் அறிந்திருக்க வாய்பில்லை!
ஏனெனில் அவர்கள் நினைப்பது போல்
எங்கள் ஊரில் யுத்தம் என்று ஏதுமில்லை
எல்லாம் இங்கு வருபவர் (விசாவிற்காக) கூறும் கட்டுக் கதைகள்கள் தான்!
+++++

பேயுலவும் பெரு நகர்கள்

யாரும் பேய்களை நேரில் பார்த்திருக்கிறீர்களா??
உங்களில் யாருக்காவது பேய்களைப் பார்க்க வேண்டுமா??
என்னுடன் கூட வாருங்கள்; நான் என் ஊரின்
பேய்களின் நகருக்கு அழைத்துச் செல்கிறேன்!
+++++

நான்கு இரவும், அரைப் பகலும்
நான் பேய்களின் வீட்டினில் கழித்தது
ஏதோ ஒரு பேய்க் கனவு போலாகி விட்டது!
+++++

அழியா நம்பிக்கை!

பூமியில் புதைந்தவன் புத்துயிர் பெறுவான்
புதியதோர் சரித்திரம் அவன் பின்னே எழுதப்படும்!
+++++

தினப் படுகொலைகள்!

கேள்வி கேட்க யாருமில்லை என்பதனால்
தமிழன் வாழ்வு கேள்விக் குறியாக நீள்கிறது????????
+++++

சொகுசான புலம் / சோக்கான புலம்

நிகழ்காலம், இறந்தகாலம் என்பன மறந்து
எதிர்காலம் நோக்கி நடை பயிலும் ஏதிலிகளாய் நாமிங்கு !
+++++

யாருமற்ற பொட்டல் வெளியில் இருக்கின்ற ஆறு போல்
எங்கள் வாழ்க்கையும் இங்கு!
+++++

புகைப் படங்களுக்காக நன்றியுடன் ஈழவிசன் இணையத்தளம்.

எரிகின்ற எனது நகரம் தொடர்ந்தும் வரும்..........

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

எரிகின்ற எனது எனது நகரம்! (01) Read More......

Sunday, January 18, 2009

எங்களின் தாய் நிலமே!

தாய்த் தமிழகத்திற்கும் எமது ஈழத்திற்கும் இடையே உள்ள உறவினைத் தொப்புள் கொடி உறவு என்று சொல்வார்கள்! தமிழகம் ஒரு தரம் விழி திறந்தால் கண்ணீர் விடும் ஈழத் தமிழர்களின் துன்பம் தொலைந்து விடும் என்பார்கள். எத்தனை தரம் இரஞ்சியும் கேட்பவர்கள் யாருமில்லை. ஈழத் தமிழர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் கூற்று நிரூபணமாகி விடும் போல உள்ளது என்று ஒரு நண்பர் சொன்னார்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களாலே ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியாத கையறு நிலமை ஏற்பட்ட பின்னர் எங்கள் தாயக உறவுகள் மீது கொண்ட பற்றுறுதியின் வெளிப்பாட்டின் காரணமாகத் தாய் தமிழகத்து வீரத் தமிழன், பெரு மதிப்பிற்குரிய தொல். திருமாளவன் அவர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளமை எம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது.

(உங்களுக்காக இங்கே ஒரு பாடல்)



Enkalin Thai Nilame.mp3 - Ramesh Sarma

ஏற்கனவே தியாகி திலீபன், தியாகதீபம் அன்னை பூபதியம்மா முதலியோர் ஊடாக அஹிம்சையின் இருப்பிடமாய் விளங்கும், பாரத மாதாவிற்கு அஹிம்சையைப் புரிய வைக்க முயன்று இரு உயிர்களை ஈழத் தமிழர்கள் அஹிம்சைக்காக இழந்திருப்பது எம்மவர் அனைவரினதும் நெஞ்சை விட்டகலாத கடந்த கால வரலாறு.
இதே சூழ் நிலையில் அஹிம்சையின் இருப்பிடத்திற்கே இப்போது மீண்டும் அஹிம்சையைப் புரிய வைக்க திருமாவளவன் புறப்பட்டிருக்கின்றார்.

அதுவும் புலத்தில் இருந்து ''புலிகள் எப்ப அடிப்பினம், இந்தா வாற மாதம் அடிக்கப் போகீனம், இப்ப பொடியள் அடிச்சால் ஆமி ஓடவே இடம் இருக்காது, என்று ஸ்கோர் கேட்டுச் சுய தம்பட்டம் அடிக்கும் எம் போலித் தாயகப் பற்றுமிகு வீர வால்கள் எவரும் இதனையோ அல்லது இப்படியொரு அஹிம்சை வழி முறையையோ திருமாவளவனிற்கு முன்பதாகச் செய்யயாத நிலையில், நீங்களே கூறுங்கள் தாய் தமிழகத்திலிருந்து இப்படியொரு எம் மக்கள் மீதான கரிசனை மிகுந்த ஒரு நல் மனிதரைப் பெற்றுக் கொள்ள ஈழத் தமிழர்கள் எந்தளவு தூரம் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்று??? எங்கள் அன்னைத் தமிழகத்து இந்தத் தார்மீக வாதிகளுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம் என்று துடிக்கின்றோம் உறவுகளே??

இத்தகைய சூழ் நிலையில் எங்கள் தாய் தமிழக நிலத்திடம் எமக்கான உதவியினை வேண்டியும், எம் தாயகத்து உறவுகளுக்கு ஒரு செய்தியினையும், பேரினவாதிகளுக்கு அவர்கள் மொழியில் கருத்துக்களையும் சொல்லுவதாக விளங்குகின்ற ஒரு பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன்.!

கடந்த முறை புதுப் பாட்டுக் கொண்டு வந்து வாங்கிக் கட்டினது காணாதென்று இந்த முறையும் பாட்டோடு வந்திட்டியோ??? நீ திருந்த மாட்டியா என்று யாரோ சொல்வது கேட்கிறது.

எதுவாக இருந்தாலும் பின்னூட்டமாகப் போடுங்கோ.

பிற்குறிப்பு: எம் உறவுகளுக்காக உண்ணா நோன்பிருக்கும் திருமாவளவன் அவர்களின் கோரிக்கை வெற்றி பெற, அவரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வர இந் நேரத்தில் நாம் எல்லோரும் வாழ்த்தி! வேண்டுவோமாக!

பட உதவிக்காக நன்றியுடன் தட்ஸ் இந்தியா.

பாடல்: எங்களின் தாய் நிலமே!
பாடியவர்: றமேஷ் சர்மா
பாடலுக்கு இசை: சந்தோஷ்

இந்தப் பாடலின் பாடல் வரிகள் உங்களுக்காக....

எங்களின் தாய் நிலமே!
வீரம் விளைந்திடும் தமிழ் நிலமே!
எம் பேச்சிலும் மூச்சிலும்
பொங்கிடு தமிழலையே!
ஆண்டுகள் ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்தது
போதும் என் தமிழா!
பகைவனை விரட்டிப் புது யுகம் அமைப்போம் வா!
(எங்களின் தாய் நிலமே.......)

உரிமைகள் மறுத்தாயே- எங்கள்
உணர்வினை எரித்தாயே!
பகைவா நீயும் வெளியே போடா
இனியும் இருந்தால் அழிவேதாண்டா!
தொடங்கிடும் போர்க்களம் மறுபடி கொடியவனே!
(எங்களின் தாய் நிலமே.......)

உறவினை அழித்தானே!
எம்மைப் புலம் பெயர் வைத்தானே!
எதிரியை விரட்டி மண்ணை மீட்போம்!
எங்கள் மண்ணை நாமே ஆள்வோம்!
இணைந்திடு தமிழா! மலர்ந்திடும் தமிழ் நிலமே!
(எங்களின் தாய் நிலமே.......)

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)ஈழ தேசம் எங்களின் தேசம்! Read More......

Friday, January 16, 2009

எரிகின்ற எனது எனது நகரம்! (01)

எல்லா நகரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது!
என் நகரம் மட்டும் அச்சத்தினால்
இருண்டு கொண்டிருக்கிறது!
(நரக ஞாபகங்கள்)

****
நடு இரவில் பேய்களினால் துரத்தியடிக்கப்பட்ட
நகரத்திலிருந்து வந்தவனாய் நானிங்கு!
(உயிர்க் குடிப்பு!)
****

முட்கம்பி வேலிகளுக்கால் எட்டிப் பார்த்த
அவளின் இன்னொரு வருகைக்காய்
ஏங்குகிறது இதயம்!
(சமாதானம்)
****

பசியால் கதறும் பிஞ்சுகள்,
பாலுக்காய் அழுதிடும் குழந்தைகள்
பாணுக்காய் கியூவில் நிற்கும் உறவுகள்
உணவின்றி நிதம் வாடும் சொந்தங்கள்,
இவர்கள் அனைவரின் அவலங்களாலும்
நிரம்பி வழிகிறது என் நகரம்!
(இருள் சூழ்ந்த பிரதேசம்)
****

என் உடலில் உள்ள அத்தனை ரணங்களும்
இனவாதக் கீறல்களும்,
இன்னும் சொல்ல முடியாத பலவும்,
சாட்சியாய்! பேரினவாதத்தின் கொடூரமாய்!
(நிஜமும் நிழலும்!)

எரிகின்ற எனது நகரம் தொடர்ந்தும் வரும்! Read More......

Thursday, January 15, 2009

எலியட்ட என்டே! (02)

இந்தத் தொடர் பதிவின் இரண்டாம் அங்கத்தினூடாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! இதன் முதற் பாகத்திற்கு நீங்கள் வழங்கிய ஆதரவிற்கும், உங்கள் கருத்துகளுக்கும் மீண்டுமொரு தரம் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
பாதை திறந்த பிறகு எனக்கு கொழும்பு போய்ப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது என்றால் மிகையாகாது.

ஆனால் அன்று பெரும் கர்வத்துடனும், தமிழன் என்ற இறுமாப்புடனும் நாங்கள் ஓடித் திரிந்த, ஆடி மகிழ்ந்த பாதை இன்று, இப்போது எம்மை விட்டுப் போய் விட்டது... எல்லாமே காலவோட்ட மாற்றத்தின் சதி லீலைகள் தான்.. நல்லவர்களும், சந்தோசங்களும் உலகில் அதிக காலம் நிலைப்பதில்லை என்னும் விதி உண்மையானது தானே??? பாதை திறந்த பின்பு நாங்கள் பெற்ற பேரின்பங்களும், எம்மவர் எல்லோரின் முகங்களிலும் ஏற்பட்ட பெரு மகிழ்வும் இன்று ஏதோ பெருங் கனவாக ஆகிவிட்டன! காலம் தன் வேகத்திற்கேற்ப ஏதேதோ மாற்றங்களை எல்லாம் செய்து கொண்டு செல்கிறதாம். யாரோ ஒரு அனுபவ ஞானி தான் இதனைத் தீர்மானித்துச் சொல்லி விட்டு நிம்மதியாகப் போய் விட்டான்?? நாங்கள் தான் இப்போது மீதமிருந்து சில வேண்டத்தகாக, சொல்லெண்ணாத் துன்பங்களை அனுபவித்து நிதமும் உழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் சொல்லப் போனால் வசதி வாய்ப்புக்கள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. எங்கள் வயசில் ஒரு சிலருக்குத் தான் பாதை திறந்த பின்னர் தென்னிலங்கையோடு 'லக்ஸறி' வாழ்க்கை வாழுமளவிற்குக் கை கோர்க்க முடிந்தது, மீதமுள்ள பலருக்கு இன்னும் கொழும்பே என்ன வடிவம், என்ன கலர் என்றே தெரியாத நிலமை தான் இந்தக் கொடிய போரால் பரிசளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி சந்தர்ப்பங்களும், சூழ் நிலையும் தான் சிலருக்குச் சிலவற்றைத் தேடிப் பெற்றுக் கொள்ளக் காரணமாய் அமைகின்றது.

சொன்னால் நம்பமாட்டீர்கள் என் அம்மம்மாவிற்கும் அம்மாவுக்கும் கொழும்புக்குச் செல்லும் சந்தர்ப்பம் இதுவரை அவர்கள் வாழ்வில் கிடைக்கவில்லை. யாரும் சிரிக்க வேண்டாம்.. இப்படி எத்தனை அம்மாக்களும், அம்மம்மாக்களும் எங்கள் தாயகத்தில் உள்ளார்களோ தெரியாது???

நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை கொழும்பில் உள்ள எமது சகோதரர்களின் பாடசாலையான ஆனந்தாக் கல்லூரியின் அறிவிப்பாளர் கழகத்தின் எழுபத்தைந்தாவது (75) ஆண்டு விழாவிற்கு எமது பாடசாலையில் உள்ள தேர்ச்சி பெற்ற அறிவிப்பாளர்களை அழைத்திருந்தார்கள்... ஆதலால் எனக்கும் அப்போது கொழும்பிற்குச் சென்று கொழும்பு மட்டுமன்றி தென்னிலங்கையின் பல பிரதேசங்களையும் பார்க்கும் வாய்புக் கிட்டியது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால் கொழும்பில் உள்ள பாடசாலையில் அவர்கள் 75 வது ஆண்டு விழாக் கொண்டாடும் போது தான் எமது பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எமது அறிவிப்பாளர் கழகம் தனது முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது என்றால் பாருங்களேன்?? அதுவும் பல பிரபல அறிவிப்பாளர்களை ஒட்டு மொத்த இலங்கைக்கும், உலகிற்கும் தந்த எமது யாழ் மண்ணில் இந்த நிலமை என்றால் போரின் ரணங்கள் எந்தளவு துரதிஸ்ட நிலமைகளை எமக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளன??
ம்...........

ஆனந்தாக் கல்லூரியின் நிகழ்ச்சிக்குப் போன நால்வர் நானும், ஞானவேலும், ரஜீவனும், ஹர்சனும் தான். நிகழ்ச்சி ஆங்கில மொழியிலே நடைபெறுமென்று அறிவிக்கபட்டிருந்தாலும் அவர்கள் தமது தாய் மொழிக்கு எந்தளவு முக்கியமளிப்பார்கள் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லைத் தானே?? நிகழ்சியின் ஆரம்ப ஒரு சில மணி நேரம் மட்டுமே பொது மொழியில் இடம் பெற்றிருந்தது. ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் பெரும்பான்மை மொழியிலே இடம் பெற்றது.

சிங்களம் என்றால் உரையாடுமளவிற்கோ அல்லது புரிந்து கொள்ளுமளவிற்கோ வளர்ச்சியடையாத எமக்கு ஏற்பட்ட நிலமையை எப்படிச் சொல்வது?? ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள்... முருங்கை மரத்தை வேதாளம் பார்த்த மாதிரி என்று... அது போலத்தான் எமது நிலமையும். ஏனடா இந்த நிகழ்விற்கு வந்தோம் என்றிருந்தது?? எமக்கு அருகில் இருந்த குட்டிகளோடும் உரையாட முடியாத நிலமை என்றிருந்தோம்.

நிகழ்வு நடை பெற்ற இடம் பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபம். பக்கத்தில் இருந்த சிங்களக் குட்டி ஒன்று என்னிடம் ஏதோ கேட்டது...எனக்கு என்னவென்றே புரியாத நிலமையில் 'ஆங்கிலத்தைப் பாவித்து என் பூர்வீகம் பற்றிச் சொல்லிச் சிங்கள மொழிக்கும் எமக்குமிருந்த நெருக்கத்தைப் புரிய வைத்தேன். பின்னர் உலகப் பொது மொழி நமக்குக் அந்த சகோதர்களுக்கும் பொதுவாகி விட்டது.

அந்தப் பிள்ளை கேட்டுது.. எல்ரீரீ நல்லவையாம்.ஆமி மாதிரி இல்லையாம், தனக்கும் அவையளை ஒருக்கால் பார்க்க வேணும் என்று சொல்லிச்சு, நானும் சொன்னன் அவையள் நல்லவைதான் அதிலை ஏன் சந்தேகம்? என்றதும் அது மேலும் பல ஆச்சரிய மூட்டும் கேள்விகளை என்னிடமும் எமது நண்பர்களிடமும் தொடுத்தது. இப்படியொரு பேரினவாதத் தீவில் இப்படி எம்மவர்களைப் பற்றியும், பொடியளைப் பற்றியும் புரிந்து கொண்ட நல்ல மனிதர்கள் உள்ளார்களா, என்பதை நேரில் அறிந்த போது எமக்கே வியப்பாக இருந்தது.

நாங்கள் சொன்னோம்... நீங்கள் யாழ்ப்பாணம் வருவதாக இருந்தால் அவர்களை வரும் வழியில் காணலாம் என்றோம். அப்படிச் சொன்னதும் அந்தப் பிளையின் முகத்தில் சிறு மலர்ச்சி, அதன் பின்னரான விடயங்கள்...... நிகழ்வு ஏதோ நட்டாற்றில் நிற்பது போன்ற உணர்வையே தந்தது,.. காரணம் மொழி புரியாத நிலமை.. அப்பாடா என்ன ஒரே 'போறிங்காக' இருக்கு என்று இருந்தவர்களுக்கு இலங்கையின் அமைச்சர் ஜயலத் ஜெயவர்த்தனாவின் உரை ஒன்று மகிழ்ச்சியைத் தந்தது.

ஏன் தெரியுமா?? அவர் அடிக்கடி பேசும் போது 'எலியட்ட என்டே ' எலியட்ட என்டே என்ற வார்த்தையினைப் பிரயோகித்தார். எம்முடன் கூட வந்த ஞானவேலுக்கு நாங்கள் வழங்கிய சிறப்புப் பெயர் 'எலி'. எலியட்ட என்டே ...எலியட்ட என்டே என்று அவர் அடிக்கடி கூறும் போதும் எமது சகோதர மொழி நண்பர்கள் எல்லோரும் சிரிப்பார்கள்.. அந் நேரம் பார்த்து நாமும் எமது ஞானவேலை நினைத்துச் சிரிப்போம். ஆனால் எமக்கு அருகே இருந்த எல்லோரும் எமக்கும் மொழி புரியும் என்பதால் தான் சிரிக்கிறோம் என்று நினைத்திருப்பார்கள் பாருங்கள்???? அப்போது எமக்கு ஏற்பட்ட நிலமையைச் சொல்லவா வேண்டும்?? இதுவும் மொழி புரியாததால் வந்த முசுப்பாத்தி (பகிடி) தானேங்கோ??

இப்பத்தான் எனக்கு இன்னுமொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. யாழ் குடா நாட்டை இராணுவத்தினர் கைப்பற்றிய காலம் முதல் சமாதானம் ஏற்படும் காலப் பகுதி வரை எமது குடா நாட்டில் சந்திக்குச் சந்தி 'செக் பொயின்ற்' அல்லது இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் தடை முகாமைத் தாண்டிச் செல்பவர்களிடம் இராணுவத்தினரும் தம் பாட்டிற்கு ஏதாவது கேள்விகளைக் கேட்பதுவும், அவர்களது பொதிகள் முதல், உடல்களைச் சோதனை செயவது முதலிய இதர பல வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.

இந்தச் சோதனைச் சாவடியைத் தாண்டி எனது நண்பர் ஒருவரும் அடிக்கடி செல்வார். அவர் கொஞ்சம் குறும்புத்தனம் மிக்கவர். அதிலை ஒவ்வொரு நாளும் அதே ஆமி தான் நிற்பான். (அந்த இராணுவ வீரனின் விடுமுறை நாட்களைத் தவிர்த்து) ஆமியும் நண்பரிடம் அடையாள அட்டையை வாங்கித் தன் கடமைக்காகப் பார்த்து விட்டு, உடற் சோதனையையும் முடித்து விட்டுச் சிங்களத்தில 'கொய்த யன்ன மல்லி (எங்கே போறாய் தம்பி) என்று கேட்பானம்.. அதற்கு எனது நண்பரும் '' சேர் கோத்தேன்ட தென்ன என்று இலாவகமாகப் பதில் சொல்லித் தப்பித்து விடுவாராம். ஆமிக்காரனுக்கும் பொருள் விளங்காத நிலமை என்பதால் ''மல்லி யன்ட'' (தம்பி நீ போ) என்று சொல்லி அனுப்பி விடுவானாம்.

இப்படி நாட்கள் பல நகர்ந்த படியிருக்க வழமை போல ஒரு நாள் அதே ஆமி கேள்வி கேட்கும் போது அருகே பொலிஸ் காரனும் நின்றிருக்கிறான். இவரும் வழமை போலவே தனது வழமையான பதிலைச் சொல்லியிருக்கிறார். பக்கத்திலை நின்ற பொலிஸ் காரன் ஆமிக்காரனுக்குச் சிங்களத்திலை ஏதோ சொன்னது தான் தாமதமாம்... வழமையாக ''மல்லி யன்ட' சொல்லும் ஆமிக்காரன் இந்த முறை நண்பரைக் கிட்ட வரச் சொல்லிக் கூப்பிட்ட பின்னர் என்ன செய்தான் தெரியுமா?????......

ஆளும் அடி வாங்கின கதையை வந்து எங்கள் எல்லோரிட்டையும் சொன்னார்,, நானும் கேட்டன்.. டேய் மச்சான் உனக்கு ஆமி அடிச்சதை நான் பேப்பருக்குக் கொடுக்கவா??? இராணுவ வீரரால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் என்று செய்தி வரும் என்று சொன்னேன்.. நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?? மச்சான் உதைப் பேப்பரில போட்டால் இந்தச் சிங்கத்தின்ர பேருக்கு அசிங்கம் வந்திடும். பிறகு நான் பெண்களின் முகத்தைப் பார்க்கவே முடியாது என்றார்.. அத்தோடு நான் பேப்பருக்குப் போடும் விசயத்தையும் கைவிட்டு விட்டேன்.

பொருள் விளக்கம்: கோத்தை என்பது கொம்மா/ அம்மா எனப் பொருள் கொள்ளப்படும்..
அப்ப அந்த நண்பர் ஆமியிட்ட என்ன கேட்டிருப்பார் தெரியுமா??
உன்ர அம்மா எங்க??? உன்ர அம்மா எங்கே??.....இப்படி இவன் என்னைப் பார்த்து எத்தனை நாள் கேட்டிருப்பான் என்ற நினைப்பில் ஆமி வழங்கிய பூசையை அவரால் ஒரு நாளும் மறக்க முடியாதாம்.
அப்பாடா பக்கத்திலை தமிழ் தெரிஞ்ச பொலிஸ் நிற்கிறான் என்பது அவருக்குத் தெரியாமற் போய்ச்சே!

பிற் குறிப்பு: அந்த நண்பர் யாரென்று தானே எல்லோரும் யோசிக்கிறீங்கள்?? ஆமியிடம் பகிடி விட்டு அடி வாங்கியவர் வேறு யாருமல்ல இன்று ஒரு வலைப்பதிவை எழுதி வரும் எனது பால்ய நண்பன் தான்.
இதுவும் தெரிவிப்பது நாங்கள்! வாசித்து விடை கண்டு தெளிந்து கொள்வது நீங்கள்!

நண்பா மன்னித்தருள்க!
எலியட்ட என்டே என்டாகிவிட்டது!
இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)எலியட்ட என்டே! (01) Read More......

Wednesday, January 14, 2009

கண்ணிய நடிகையின் கலக்கல் கவர்ச்சி நடனம்! (காணொளி/ வீடியோ)

தமிழ் மணம் நிர்வாகத்தினருக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் தலைப்பைப் பார்த்தவுடன் இந்த வலைத் தளம் தணிக்கை செய்யப்ப்பட வேண்டிய வலைத் தளம் என்றே தோன்றலாம், நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் ஓர் ஆர்வக் கோளாறு தான். இப்படி ஓர் பதிவை இட்டதனால் இன்று தான் நான் கடைசியாக தமிழ் மணப் பக்கம் வருகின்றேன் என்று எண்ணவும் தோன்றுகிறது.

இந்தப் பதிவைப் படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பானவர்கள் அல்ல என்பதால் இவ் இடத்தில் நிறுத்துக! எச்சரிக்கை- இது கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும் என்ற தலைப்போடு உள்ளது எனும் நம்பிக்கையில் நீங்கள் உள்ளே நுழையலாம்..

இவ்வளவு நாளும் ஈழம் பற்றிப் பதிவெழுதிப் போட்டு இவன் ஏன் திடீரென்று இப்படி மாறினான் என்று நீங்கள் எல்லோரும் யோசிக்கலாம்..! ஆனால் நான் மட்டும் பார்த்த இவ் அதிசய காணொளியைத் தனியே வைத்துப் பார்த்து ரசிப்பது அழகு இல்லை என்பதால் உங்களோடும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது தமிழகத்தையே இப்போது கலக்கும் ஒரு கண்ணிய நடிகையின் கலக்கல் கவர்ச்சி நடனம் என்பதால், இதனை நீங்கள் மிகவும் பொறுமையாகப் பார்ர்க வேண்டும்... என்ன யோசிக்கிறீர்கள்??
கண்ணியமான கவர்ச்சி நடிகை யார் தெரியுமா??? அவர் தான் பெருமதிப்பிற்குரிய எமது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐயா அவர்கள். இந்தக் கவர்ச்சி நடிகையின் ஊழித் தாண்டத்தாலும், அதன் கூட்டாளிகளின் கலக்கல் விமானக் குண்டு வீச்சுக்களாலும் தினமும் உணர்விழந்து இறந்து போகின்றவர்கள் யார் தெரியுமா??? வன்னியில் இப்போது வாழுகின்ற மீதமுள்ள மானமுள்ள தமிழர்கள்!

சுருங்கச் சொன்னால் இனவாத அரச பயங்கரவாதத்தின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது அப்பாவி மக்களின் நிகழ்காலத் துன்பியல் வாழ்வினைத் தாங்கிய ஒரு பாடலே இப்பதிவு. எமது மக்கள் இப்படித் துன்பபடும் போது நான் இவ்வாறு தலைப்பை வைத்தமை பற்றிப் பல கண்டனங்கள் வரலாம்.. நானும் மிகுந்த சிரமப்பட்டு அல்லற்படும் வன்னி மக்களது அவலங்களை எல்லாம் பதிவாக்கிய பின் காத்திருக்கிறேன்.,.. ஒருத்தர் கூட கடந்த இரு நாட்களாக எனது தளப் பக்கம் வர முயற்சியே செய்யவில்லை.... (மீதமுள்ள - தளத்திற்கு வந்த ஒரு சிலர் பொறுத்துக் கொள்க)

இத்தகைய சூழ் நிலையில் இப்படி ஒரு தலைப்பினூடாகப் பதிவிட்டால் தான் எமது மக்களின் துன்பங்களை அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்றால் நான் என்ன செய்ய முடியும்???

பிற்குறிப்பு: என்னதான் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து எல்லாத்தையும் படிச்ச நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து இக் காணொளியையும் பார்த்து விட்டுச் செல்லுங்கோ!
புது வருசத்தில் இடம் பெற்ற ஏமாற்றங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் நான் பொறுப்பல்ல....

எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!



இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகள்! (நேரடி ஒலித் தொகுப்பு)

2)வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......!

3)திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்! Read More......

வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகள்! (நேரடி ஒலித் தொகுப்பு)

வன்னிக்குள் என்னதான் நடக்கிறது என்று ஏதும் அறியாதவர்களாய் உலக நாடுகளும் மனிதாபிமான அமைப்புக்களும் பகல் வேடம் போட்டு உலகம் எனும் அகலத் திரையில் நாடகம் ஆடிக் கொண்டிருக்க இனவாத அரசின் நடிகர்களின் துணையுடன் பயங்கரவாதம் எனும் போர்வையின் கீழ் அப்பாவிப் பொது மக்கள் நாளுக்கு நாள் கொல்லப்படுகின்ற போது மௌனித்துப் போயிருக்கும் சூழ் நிலையில், வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடுகள் அடங்கிய ஒலித் தொகுப்புக்கள் உங்களுக்காக இங்கே தரப்படுகின்றன!

விடிவிற்காக ஏங்கும் மக்களின் உண்மையான உள்ளது உணர்வுகளும், அரச படைகளால் கொல்லப்படுபவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், அப்பாவிப் பொது மக்களே! என்பதையும் இவ் ஒலித் தொகுப்பினூடாக நீங்கள் கேட்டுத் தெளிந்து கொள்ளலாம். வாழ்வில் விடுதலைக்காக ஏங்கும் உண்மையான இனத்தின் உணர்வின் வெளிப்பாடுகளும் எல்லோராலும் நட்ட நடு ஆற்றில் கைவிடப்பட்ட பொது மக்கள் அனைவரினதும், நீதி வேண்டிய நிஜாயங்களின் பிரதிபலிப்புக்களும் இங்கே உங்கள் செவிகளை நோக்கி விரிகின்றன.

மனிதாபிமானம், பயங்கரவாதம், ஜனநாயகவாதம், சம உரிமை வாதம், பாசிச வாதம் முதலிய தார்மீகச் சிந்தனை பற்றித் தலை முறை தலை முறையாக விளக்கமளிப்பவர்களே எனக்குப் புரியவில்லை இது எந்த வாதமென்று??? யாராவது புரியவைப்பீர்களா???


Vanni Avalam.mp3 - Melbkamal
இவ் ஒலித் தொகுப்பைக் கேட்க உங்களிடம் Adobe Flash Player இருத்தல் வேண்டும்.

ஒலித்தொகுப்பு மற்றும் பட உதவிக்காக நன்றியுடன் தாயகக் குரல் புலிகளின் குரல்!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......!

2)திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்!

3)முல்லைத்தீவிற்குள் முடங்குமா?? அல்லது முல்லைத்தீவிலிருந்து முழங்குமா??? Read More......

Tuesday, January 13, 2009

புதுமைகள் படைக்கும் புதுவையின் கவிதைகள்! பாகம் (01)

காலம் தன்னுள் பல மாற்றங்களைக் கண்டபடியே பயணிக்கின்றது. ஒரு காலத்தின் வளர்ச்சிப் போக்கினையும், ஒரு இனத்தின் வரலாற்றையும் நாம் இலக்கியங்களூடாகக் கண்டு கொள்ளலாம். இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். மக்கள் மனங்களில் மாற்றங்களையும், பல பிரதிபலிப்புக்களையும் ஏற்படுத்தவல்ல ஒரு சாதனமாக இந்த இலக்கியங்கள் விளங்குகின்றன.

தமீழ விடுதலைப் போராட்டத்தில் படைப்பிலக்கியங்கள் பலவும், போராட்ட கள இலக்கியங்கள் பலவும் முதன்மை பெறுகின்றன, இந்த வகையில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் படைப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனரஞ்சக அந்தஸ்தும், தனித்துவமும் இருப்பதை நாம் கண் கூடாகக் காணலாம். யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூரிலே பிறந்த புதுவை அவர்கள் தனது கவிதைகள் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

வானம் சிவக்கிறது (1970), ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள்(1980), உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும், முதலிய கவிதைத் தொகுப்புக்களோடு களத்தில் மலர்ந்தவை (01.02.1989) முதலிய ஒலி நாடாக் கவிதைகளையும் இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கண்டு கொள்ளலாம்.

ஒரு தேசத்தின் விடுதலைக் குரலின் மூச்சாக விளங்கும் பாடல்களுக்குள் பல புரட்சிகள் செய்து இன்று புதுமைகள் படைக்கும் கவிஞராக விளங்கும் புதுவையின் கவிதைத் தொகுப்புக்கள், பாடல்கள் முதலியவற்றோடு இன்னும் பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு ஒலித் தொகுப்பை உங்களுக்காக இங்கே தருகின்றேன், கேட்டுப் பாருங்கள்....

Puthuvai Part 01.mp3 - Kamal
பிற் குறிப்பு: எனக்கு இந்தத் தகவல்களைத் தொகுக்க உதவிய சாரல் புகழ் சயந்தன் அவர்களுக்கும், எனது தமிழாசிரியருக்கும் என் நன்றிகள்:
படத் தொகுப்பிற்காக நன்றியுடன் புதுவை இணையத்தளம்.


புதுவையின் கவிதைகள் பற்றிய தொகுப்பு தொடர்ந்தும் புதுமைகள் படைத்தபடி வரும்......

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......! Read More......

Saturday, January 10, 2009

ஈழ தேசம் எங்களின் தேசம்!

இனிமேல் ஈழம் என்ற பேச்சுகே இடமில்லை என்று யார் யாரோ எல்லாம் வாய்க்கு வந்தபடி புலம்பித் திரியும் நேரமதில் தன் மானம், தன் நியாயப் போராட்டம், தன் இன வீரம் எப்போதும் வெல்லும் என்பதை உறுதியுள்ள தமிழன் உணர்வோடும் திடமோடும் சொல்லி வருகின்றான். திடமான உறுதி தரும் வார்த்தைகளும் யதார்த்த நிலமைகளும் கலந்ததாக நம்பிக்கை தளர்ந்தவர்களுக்கெல்லாம், மன உறுதி குலைந்தவர்களுக்கெல்லாம் நம்பிக்கையூட்டும் வகையில் இன்று ஓர் பாடல் வெளிவந்திருக்கிறது.

பாடல்: ஈழ தேசம் எங்களின் தேசம்....
பாடியவர் : சுஜித்ஜி.
பாடல் வரிகள்: சுஜித்ஜி.
பாடலுக்கு இசை: சந்தோஷ்.

Eela Thesam - SujeethG
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!

அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??
அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??

வான் பரப்பிலை ஹெலி பறக்குது!
தெற்கிலங்கை கொடி பறக்குது!
தமிழ் ஒழிந்ததாய்க் கதை பிறக்குது!
வெற்றிக் களிப்பில் நிலை மறக்குது
பதுங்கிப் போறதாலைப் பயந்து போனார் என்கிறார்கள்
விட்டுப் போறதாலைப் பட்டுப் போனார் என்கிறார்கள்.
தருணம் பார்த்துத் தாக்கும் போது தப்பி ஓட முடியாது!
தப்ப எண்ணும் போது அவர்கள் ஓட இடமுங் கிடைக்காது!


அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??
அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??

கிளிநொச்சியைக் கொண்டு போய் நீ காலியிலை வைக்கேலா
பச்சை மண்ணைச் சுட்ட மண்ணைப் பசையைப் போட்டு ஒட்டேலா
வடக்கும் தெற்கும் சேராது! கனவு காணக் கூடாது!
இது எங்கள் தனி ஈழம்! எமதன்புத் தமிழீழம்!

ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!

அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??
அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??

சட சடவெனப் பட படவெனக் களமுனையெ(ல்)லாம் வெடி வெடிக்கும்!
முழு நரிகளின் வெளி நரிகளின் உயிர்களையெல்லாம் தமிழ குடிக்கும்!
பொறி கொடுத்துமே அழைத்திருக்கிறோம்! பொறிக்குள்ளே உனை விழுத்தி நிற்கிறோம்!
அடித்து முடித்துப் புதைக்கப் போறம்! தமிழர் கொடியை ஏற்றப் போறம்!

அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??
அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??

தமிழன் எதற்கும் சளைக்கவில்லை!
உலகில் அவர்க்கு ஏது எல்லை!
தமிழனுக்கென நாடு பிறக்கும்!
தடுக்க வருவோர் உயிர் பறக்கும்!
ஈழம் எங்கள் நாடடா!
இன்பமான வீடடா!
ஈனர் வந்த போதிலே நாம் தொடுப்போம் போரடா!

ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!

அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??
அடிக்கவா?? அழிக்கவா???
அணுகும் நரியை எரிக்கவா??

ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!
ஈழ தேசம் எங்களின் தேசம்
வீசும் காற்றெல்லாம் எங்கள் சுவாசம்!

இந்தப் புதிய பாடல் எப்படி இருக்கிறது?? என்னதான் இருந்தாலும், எதுவாக இருந்தாலும் பின்னூட்டமாகப் போடுங்கோ. Read More......

Friday, January 9, 2009

அடப் பாவிகளா?? என்னமா யோசிக்கிறாங்கள் இவங்கள்??

இன்று எல்லாம் முடிந்து விட்டதாக உலகமும் , உணர்வற்ற தமிழர்களும் நினைத்து மகிழ்வடைந்து கொள்கிறார்கள் என்று ஒரு நண்பர் என்னிடம் கூறி ஆதங்கப்பட்டார். சரி அப்படி என்னதான் முடிந்து விட்டது என்று ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்??? இது வன்னியிலிருக்கும் உறவுகள் கரிசனையோடு உலகையும் உறவுகளையும் பார்த்துக் கேட்கும் கேள்வி. துணைக்குத் தாய்த் தமிழகம் உள்ளதென நம்பியிருந்தவர்களுக்கெல்லாம் பிரணாப்முகர்ஜி அவர்களின் பின்னிரவும் புலம்பல்கள், புலுடாக்கள் போலத் தெரிவதாக எம்மவர்கள் எல்லோரும் ஆதங்கப்படுகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க நான் ஒஸ்ரேலியாவில் வேலை செய்யும் எரி பொருள் நிரப்பும் நிலையத்தில் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது ஆங்கிலப் பத்திரிகைகளையும் தவறாது அலசுவது வழக்கம். அலசுவது என்றால் படிப்பதுங்க,... சும்மா எல்லாம் யோசிக்க வேண்டாம்...கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரும் புலிகள் முடிந்தார்கள் என்று தம்பட்டம் அடிப்பதைப் போலவே பத்திரிகைகளும் தமது பக்கத்தில் மாறி மாறிச் செய்திகளை வெளியிடுவதுண்டு. அதற்கு இங்கே ஒஸ்ரேலியாவில் உள்ள பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல.

காஸாவில் குண்டு வீசப்பட்டு பலர் கொல்லப்படும் போது, அதே தினத்தில் எங்கள் ஈழத்திலும் முரசுமோட்டைப் பகுதியிலும், வட்டக்கச்சிப் பகுதியிலும் அரசபடைகளின் குண்டு வீச்சில் பல அப்பாவிப் பொது மக்கள்(இது புலிகள் அல்ல.... பொது மக்கள் நீங்களாவது நம்புங்கள்) கொல்லப்பட்டனர். அது பற்றி இங்கிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகள் வாய் திறக்கவே இல்லை... வெறுமனே காஸாவில் இடம் பெற்ற சம்பவத்தை மட்டும் தலைப்புச் செய்தியாக்கி வர்ணப் படங்களோடு வெளியிட்டிருந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க கடந்த செவ்வாய் அதிகாலையன்றும் வழமை போலவே எனது வேலையில் உள்ள போது எனக்கு உள்ள எல்லா வேலைகளையும் விரைவாக முடித்து விட்டு இங்கிருந்து வருகின்ற பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மூத்த பத்திரிகையான ''தீ ஏய்'' இனைப் புரட்டினேன், அடங் கொய்யாலா....உள்ளே மூன்றாம் பக்கத்தில் ஒரு வர்ணப் புகைப் படத்தோடு எங்கள் ஊர் அரசியல் செய்தி. அதுவும் நேரடியாகக் கிளிநொச்சியிலிருந்து அதிரடிச் செய்தியாக வெளிவந்திருந்தது. கட்டுரை எழுதியவரின் பெயர் வன்னியாராச்சி...... இவர் எமது ஈழத் திரு நாட்டின் சகோதர மொழியாளர் என்று நினைக்கிறேன்.

ஆர்வக் கோளாறு காரணமாகக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன்...ஆரம்பம் அறிமுகம் மிக மிக நன்றாகவிருந்தது. கட்டுரை ஆசிரியர் எந்தளவு தூரம் ஆய்வில், கட்டுரையில் சிறந்தவர் என்று தெரியுமா??? நியமா அந்த வன்னியாராச்சியை அசிங்கப்படுத்த வேணும் என்று நான் நினைக்கவில்லை... ஆனால் அவர் கட்டுரையில் எப்படியெல்லாம் யோசித்து எழுதியிருக்கிறார் என்பதனை மட்டும் இங்கே உங்களுக்குத் தருகின்றேன்.

''விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலை நகராகவிருந்த கிளிநொச்சி வீழ்ச்சியடைந்து விட்டது. கடந்த முப்பதாண்டு காலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருவதாகப் பொய் கூறித் தமிழ் மக்களையும், அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றிவரும் புலிகளின் போராட்டம் முடிவிற்கு வரும் காலம் நெருங்கி விட்டதாம்.

முல்லைத்தீவிலிருந்து விடுதலைப் புலிகளால் இனி மீண்டும் எழும் அளவிற்கு அவர்களிடம் போதிய ஆட்பலமோ , ஆயுத பலமோ இல்லை. இந் நிலையில் அவர்கள் மீது மக்களே அதிருப்தி அடைந்து விட்டார்கள். அப்பாவிப் பொதுமக்களை அடி பணியவைத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை மனிதக் கேடயமாகப் பாவிக்கும் புலிகளைக் கண்டிக்க உலக நாடுகள் தவறி விட்டனவாம்; என்று கூறும் கட்டுரையாளர் அதனுடன் இணைத்து வன்னியிலிருந்து வவுனியாவிற்கு வந்து இராணுவத் தடை முகாமில் தங்கியுள்ள ஒருவரின் சிறு வாய் முறைப்பாட்டைத் தனது கட்டுரையுடன் சேர்த்திருந்தார்... மீதி விடயங்கள் இங்கே பதிவிடப்படவில்லை. அவை எவரினதும் சிந்தனைக்கு எட்டாத விடயங்கள் என்பதால்.

அடக் கடவுளே....இதுக்கெல்லாம் ஒரு கட்டுரை தேவையா?? புலிகள் மனிதக் கேடயமாகப் பொதுமக்களைப் பயன்படுத்துவது உண்மை என்றால் எங்கள் அரசு தலைவர் மகிந்த ராஜபக்ச விரைந்து ஒரு போன் கோல் எடுத்து ஒஸ்ரேலிய அரசாங்கத்திற்குச் சொன்னால் அவர்கள் அரசின் வேதனைகளைப் புரிந்து கொண்டு புலிகளைத் தடைசெய்திருக்க மாட்டார்களா??? அடங் கொய்யாலா??? இதுக்கெல்லாம் ஒரு பிரபல பத்திரிகையில் அரைப் பக்கத்தை ஒதுக்கி அந்தப் பக்கத்தில முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் புதைக்கும் விடயங்களை எழுதப் பத்திரிகை இடங் கொடுத்துள்ளதென்றால் பாருங்களேன்???

இந்தக் கட்டுரை எழுதக் கிளிநொச்சியில் போய் இருந்து றூம் போட்டு யோசிக்க வேணுமோ??
கட்டுரையாளர் கிளிநொச்சி பற்றியும் கிளிநொச்சியின் வரலாற்று முக்கியத்துவங்களையும் தனது பார்வையில் விளக்கிக் கூறவும் தவறவில்லை..சரி உலக நாடுகளையும் உலக நாட்டு மக்களையும் யார் ஏமாற்றுகிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளாமல் உண்மைகளை எடுத்துக் கூறும் பத்திரிகைகளும் ஏனோ தானே என்று தகவல்களை வெளியிடுவதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

இந்தக் கட்டுரைக்கு எதிர் விவாதமாக எமது மக்கள் வன்னியில் படும் அவலங்களை எடுத்துக்காட்டி, கட்டுரையாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை நான் மறுத்துரைத்து ஒரு கட்டுரை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப வேண்டும் எனத் தீர்மானித்தேன்,.. பின்னர் உலகம் நீதிக்கும் நியாயத்திற்கும் மதிப்பளிப்பது குறைவு.... நீதியையும் நியாயத்தையும் நீண்ட கால ஆய்வின் பின்னர் தானே புரிந்து தெளிந்து கொள்ளும் என்கின்ற என் அனுபவ அறிவால்; உலகின் இன்றைய மெத்தப் போக்கினால் நான் கட்டுரை எழுதி அனுப்பினாலும் பிரசுரிக்கப்படாது என்பதனால் எனது முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

அடுத்த பக்கத்தில் பிறிதொரு ஆசிரியர் அவர் ஆங்கில மொழியாளர். அவரிற்கு உண்மையில் கை கொடுக்கத்தான் வேண்டும். அவர் பலஸ்தீனர்கள் பிரச்சினையையும், ஈழ மக்களின் பிரச்சினையையும், அவர்களின் உண்மையான போராட்டத்தின் இன்றைய நிலையையும் மிகவும் ஆக்கபூர்வமாகத் தெளிவாகப் புரிந்து எழுதியிருந்தார். ஈழ மக்களும் சுய நிர்ணய உரிமை வேண்டித் தனித் தேசம் வேண்டிப் போராடுவது போலவே பலஸ்தீனர்களும் போராடுவதாகக் சுட்டிக் காட்டிப் போராட்ட நியாயத் தன்மைகளை விளக்கி எழுதியிருந்தார்.

அவர் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவர் தான். விசத்திற்குள்ளும் அமிர்தம் உள்ளதென்பதற்கு இதுவும் ஓர் நல்ல எடுத்துக்காட்டு. புலிகள் பற்றித் தமிழ் மக்கள் துன்பப்படுவது பற்றிக் கட்டுரை எழுதுவதற்கு ஜயா மகிந்தவின் சொல்லைச் செயலில் உலகெங்கும் ஊடகங்களால் காட்டுவதற்கு; கிளிநொச்சி போய்த்தான் நிலமைகளைப் பார்த்து வந்து தான் தான் கட்டுரைகள் வரைய வேண்டுமோ???

ஏற்கனவே முழு உலகையும் ஏமாற்றி விட்டோம்... இப்போது ஒஸ்ரேலியாவும் ஒரு சில நாடுகளும் தான் தமிழர்களின் தார்மீகப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்களைத் தடை செய்யாதிருக்கின்றன... இப்படி யாரையாவது ஏவி அவர்கள் மூலம் பத்திரிகை உலகில் தங்கள் அதி மேன்மை தங்கிய அராஜக அதர்ம வழியை நிலை நாட்டலாம் என்று யாரோ நினைக்கிறார்கள் போலும்??

ஜயோ சந்நிதியானே??? வல்லிபுர ஆழ்வாரே! இப்படியெல்லாம் மனிதர்கள் யோசிப்பார்களோ??? இதுக்கெல்லாம் நேரத்தை வீணடித்துக் கிளிநொச்சி போய்க் கட்டுரை எழுத வேணுமோ?? 'கொஞ்சம் குனிந்து விட்டாலே முதுகில் கூர் வேல் பாய்ச்ச நினைப்பவர்கள் முழுமையாக மண்டியிட்டு முடங்கி விட்டால் எமையெல்லாம் என்ன செய்வார்கள்??? கொஞ்சம் நீரும் சிந்தித்துப் பாரும்... இது யாரோ ஒருவர் சொன்னது.

பொருள் விளக்கம்: புலுடாக்கள்- சுத்து மாத்து/ பம்மாத்து/ ஏமாற்று/ கண்கட்டிவித்தை....இன்னும் பல பொருள் கூறலாம்.

பிற் குறிப்பு: அடக்கு முறைக்கெதிராக எவர் போராடுகிறார்களோ??? விடுதலைக்காக எவர் அதிக விலை கொடுத்துப் போராடுகிறார்களோ அவர்களால் உலகால் இனங்காணப் படுவதில்லை. அது போலத்தான் பலஸ்தீனர்களும் ஈழத் தமிழர்களும் எனும் இரண்டாவது ஆங்கிலேயக் கட்டுரையாளரின் கூற்று மிகவும் நியாயமானது,... ஆனால் ஒரே பத்திரிகையில் இவ்விரு கட்டுரைகளையும் பிரசுரித்த பத்திரிகை நிர்வாகத்தினருக்கு எது அநீதிக்கு எதிரான முறை ??? எது அராஜகம் சார்ந்த முறை என்பது புரியவில்லைப் போலும்... இப்படியும் யோசிப்பாங்களோ???
எவனடா உவன் இப்படிக் கேட்பது என்பதற்கு முதல் நான் வரட்டே?????

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)முல்லைத்தீவிற்குள் முடங்குமா?? அல்லது முல்லைத்தீவிலிருந்து முழங்குமா??? Read More......

Thursday, January 8, 2009

முல்லைத்தீவிற்குள் முடங்குமா?? அல்லது முல்லைத்தீவிலிருந்து முழங்குமா???

உலகமே ஒன்று திரண்டு உரிமை வேண்டிப் போராடுபவர்களை ஒழித்திடுவோம் என இலங்கை அரசுடன் சேர்ந்து சபதம் பூண்டு நிற்கையிலும் தாம் உறுதி தளர மாட்டோம் என்பதனைப் புலிகள் நிருபித்து வருகிறார்களா??? அல்லது நிரூபிப்பார்களா???
என்னடா இவன் அரசியல் கட்டுரை எழுத வெளிக்கிட்டிட்டான் என்று ஏங்குகிறீர்கள்.. என் நண்பன் கவின் என்னிடன் ஒரு வினாவினைத் தொடுத்தார்.

'ஏன் மச்சான் நீ ஊரில இருக்கும் போது பேப்பருக்கு அரசியல் கட்டுரை எல்லம் எழுதிக் கொடுக்கிறது போல இப்பவும் புலத்தில இருந்து ஏதாவது எழுதலாம் தானே என்று??? நான் சொன்னேன் ஏன் மச்சான் நான் எத்தனை நாளைக்கென்று தான் ''நான் ஏற்கனவே சொன்னேன்... இவர்கள் இப்படிச் செய்வார்கள்.....இது போல நிறையத் தடவை அவர்கள் பின் வாங்கி இருக்கிறார்கள்.... இனி வெகு விரைவில் புலிகள் புதிய களமுனை ஒன்றைத் திறப்பார்கள்... என்று எல்லாம் எழுதிப் போட்டு..... அடுத்த கட்டுரையில ''நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம்....புலிகள் இந்தப் பகுதியில் இருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்குவார்கள்....இந்தப் பகுதியில் புதிய தாக்குதலை ஆரம்பிப்பார்கள்' என்று எழுதி எத்தனை நாளைக்கென்று சனத்தைப் பேக்காட்டிச் சலிப்படையச் செய்ய முடியும்???

அதோட எங்கட தாயக நிலப்பரப்பை விட்டு பத்தோ அல்லது பதினைந்தோ வருடங்களிற்கு முன்பு புலம் பெயர்ந்து வெளிநாட்டிற்கு வந்து விட்டு இப்பவும் எங்கட ஊர் வீதிகளையும், எங்கட ஊரில உள்ள காடுகளையும், மரங்களின் பெயரையும் மற(றை)க்காமல் தங்கட ஆய்வுக் கட்டுரைகளில போட்டுத் தாங்கள் இப்பவும் தாயகத்தில இருந்து நேரடி ஆய்வு அலசல் நடத்துறம் என்று சொல்லுறவையின்ர பிழைப்புக்கு ஏன் நான் மண் அள்ளிப் போட வேணும்??? அதான் அந்தக் அரசியல் கட்டுரை எழுதுற ஆசையை அடக்கிட்டன் என்றேன்....

கவின் சரி சரி என்று தன்ர கேள்விக்கு விடை சொல்லிட்டார் கமல் என்ற திருப்தியில், இப்ப ஒஸ்ரேலியா வந்ததும் தாயகத்தை மறந்திட்ட கமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுத முடியும்??? அதுவும் எங்கட ஊர் வீதிகளின் நீள அகலங்களைக், காடுகளின் பரப்பளவுகளை மறந்த கமலால ஆய்வுக் கட்டுரை இன்றைய ஆய்வால(ள)ர்களைப் போல எழுதத் தெரியாது....அதனால ஏதோ ஒரு மாதிரிச் சொதப்பல் விடை சொல்லிச் சமாளிச்சிட்டான் உவன் பாவி என்று யோசித்திருப்பார்... ஆனாலும் என்ன செய்வது மனசுக்குள்ளை உள்ள சந்தேகங்களைக் கட்டுரையாக எழுத வேணும் என்று இப்ப தொடங்கிட்டன்.... சத்தியமா இது ஒன்றும் சமகால அரசியல் ஆய்வு என்று யாரும் நினைக்க வேண்டாம்.

இன்றய சூழலில் புலிகளின் பலம் அப்படியே இருக்கிறதா??? புலிகள் பலமிழந்து விட்டார்களா என்றெல்லாம் நான் விவாதம் நடத்தி உங்களைக் குழப்ப விரும்பவில்ல..
நான் இந்தக் கட்டுரையை மன்னிக்கவும் இந்தப் பதிவை எழுதும் வரை பளைப் பகுதி இராணுவத்திடம் வீழ்ந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன,.. என்ன செய்வது சிலதை இழந்து தானே சிலதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்... அனைத்துலகமும் திரண்டு வந்து அராஜகத்திற்குத் துணை போகும் போது நீதி அழிந்து விடுமா??? அல்லது அநீதி தலை தூக்குமா என்பது எல்லோர் மனங்களிலும் உள்ள கேள்வி... இப்போது புலிகளின் முக்கிய பிரதேசமாக உள்ள பகுதி முல்லைத்தீவு... அதுவும் இந்த முல்லைத்தீவில் ஒரு சில பகுதிகள் அரச படைகளிடம் வீழ்ச்சி கண்டு விட்டன.... .

அப்படி என்றால் இனி மீதமுள்ள பகுதிகள்.?? விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதியாகவிருந்த அலம்பில் பகுதியும் இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்து விட்டது. 'இனி முல்லைத்தீவின் மீதமிருக்கும் பகுதிகளைப் புலிகள் தக்கவைப்பார்களா??? இது நாம் எல்லோரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்'. (இது ஆய்வுக் கட்டுரைகளைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கத்தினால் இவ்விடத்தில் நான் எழுதும் வசனம்.)
இப்படிப் புலத்திலிருந்து அரசியல் அலசிக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

மச்சான் அப்ப முல்லைத்தீவையும் ஆமி பிடிச்சிட்டான் என்றால் என்ன நிலமை என்றார்?? அப்ப மச்சான் முல்லைதீவுக்கை புலிகள் முடங்குவீனமோ??? இப்பவே கிளிநொச்சி விழுந்ததும் 'எல்லாவல மேதானந்த தேரர்....மகிந்த ஜயாவின்ர ஆட்சி இன்னும் இருபது வருசத்துக்குத் தொடர வேணும் என்று யாகங்கள்...சிறப்பு வழிபாடுகள் செய்ய வேணும் எனச் சொன்னதுடன் கிளிநொச்சி சிங்களவரின் பூர்விகக் குடியேற்ற இடமாம்,... அங்கே ஏற்கனவே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சிங்களவர் வாழ்ந்ததற்கான சான்றாதாராங்கள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கூறுராராம்.

அப்ப முல்லைத்தீவும் முற்றாக ஒரு கதைக்கு விழுந்து விட்டால் ஆட்சியாளர்களும், இனவாதிகளும் தமிழர்களை எப்படி மதிப்பார்கள் என்று என்னிடம் கேட்டார். இதற்கெல்லாம் நான் ஏற்கனவே விடையும் கூறி விளக்கமும் கூறி விட்டேன். இருந்தாலும் என்னிடம் பலர் சந்தேகப்பட்டுக் கேட்ட கேள்விகளை உங்களிடம் விடுகின்றேன்.

...அப்ப முல்லைத்தீவிலிருந்து புலிகள் முழங்குவார்களா??? அல்லது முல்லைத்தீவுக்குள் முடங்குவார்களா???
இதுவும் வழமை போலவே எழுதுவது நாங்கள்....எளிதில் வாசித்துத் தெளிந்து கொள்வது நீங்கள்....

பிற் குறிப்பு: அனைவரினதும் ஆக்க பூர்வமான எண்ணக் கருத்துக்களைத் தாங்கிய பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், எவராக இருப்பினும் பின்னூட்டமாகப் போடுங்கோ....
இவை எல்லாவற்றிற்குமுரிய விடைகள் விரைவில் தெரியும்... அது வரை???? நீதி ஒரு நாள் வெல்லும்....இது உலகப் பொது மொழி....... Read More......

எலியட்ட என்டே! (01)

இவன் என்ன தமிழ் பற்றியெல்லாம் எழுதிப் போட்டுச் சிங்களத்தில தலையங்கம் வைத்திட்டான் என்று யாரோ புலம்பியபடி இதனைப் படிப்பது எனக்குப் புரிகிறது. ம்....சரி சரி கொஞ்சம் பொறுமையாயிருங்கோ....நான் விசயத்திற்கு வாறேன்.

சமாதான காலம் என்பது என் போன்ற இள வயதில் உள்ள யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்த காலமாகும், எண்பத்தியொன்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட பேரினவாதக் கனவுகளின் விளைவால் புகைவண்டி என்றால் மன்னிக்கவும் ரயில் என்றால் என்னவென்று நேரில் பார்க்கும் வாய்ய்புக் கிடைக்கவில்லை. இது மட்டுமன்றிக் கொம்பியூட்டர் என்றால் பேச்சளவில் மட்டுமே தெரிந்திருந்தும், தொலைக்காட்சியில் பார்த்துமறிந்திருந்த பெரும்பாலானவர்களுக்கு புகைவண்டி, தொலைக்காட்சி பிளாஸ்ரிக் கதிரைகள், கொம்பியூட்டர் எனப் பலப் பல இத்தியாதி அயிட்டங்களை எமக்கு அறிமுகப்படுத்திய வசந்த காலமது. ம்...

ஏன் சொல்லப் போனால் கொழும்பையே எமக்கு அறிமுகப்படுத்திய காலமது, ஒரு பழைய கசற் ஒன்று எங்கட வீட்டு மூலைக்குள் இருந்தது, அது லூஸ் மாஸ்ரரின்ர பகிடிக் கசற். அதில வாற கொழும்புப் பகிடி சுவையாக இருக்கும். இப்படித்தான் யாழ்ப்பாணத்தில இருந்த்து ஒருவர் முதல் முதல் கொழும்புக்குத் தனது மாமனாருடன் கொழும்புக்குப் போனார். அவர் போகும் போது அவரின் அம்மம்மா சொல்லி விட்டது... 'எடேய் அப்பு... நீ போற இடம் கொழும்படா மோனை,,, வலு கவனம். சனம் நெரிச்சலுள்ள இடம்... மாவாவை விட்டிட்டு விலகிப் போடாதை.... உன்னை அங்க தேடிப் பிடிக்கிறது கரைச்சல்''என்று சொல்லியிருக்கிறா...
கொழும்புக்குப் போனவரும் அங்கால இங்கால திரும்பவில்லையாம்..... தனது மாமனாருக்குப் பின்னாலே சென்றாராம்... கொழும்பெல்லாம் பார்த்து முடிஞ்ச பிறகு நம்மவரும் யாழ்ப்பாணத்திற்கு வந்ததும் நண்பர்கள் கேட்டார்களாம் எப்படி மச்சான் கொழும்பு என்று,.... அவர் யோசிச்சார்...நான் எங்க கொழும்பைப் பார்த்தனான்..மாமாவின்ர முதுகை எல்லோ பார்த்தனான்.... இதைச் சொன்னால் வெட்கக் கேடு என்று விட்டுக் கொழும்பில உள்ள புதுப் புது விடயங்கள் என்று ஏதோ எல்லாம் அவிழ்த்து விட்டாராம் மனுசன்.


இந்த லூஸ் மாஸ்ரர் கசற்றை நாங்களும் சின்னனில படிக்கும் போது கேட்டுக் கேட்டுக் சிரிப்பதுவும்....பின்னர் அதனை அப்படியே மனப்பாடம் செய்து ரியூட்டறியிலயும், எங்கட யாழ் மத்திய கல்லூரியிலயும் நாங்கள் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது தனி நடிப்பென்று நடித்து எல்லோரையும் ரசிக்க வைச்சதும் என் சின்ன வயது ஞாபகங்கள்.

நாங்கள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது எங்கட பள்ளிக் கூடத்தில ''D'' வகுப்புத்தான் பெஸ்ற் கிளாஸ் (Best Class) என்று சொல்லுவீனம். ஒரு மாதிரி கஸ்ரப் பட்டுப் படிச்சு ''D' வகுப்பை ஆறாம் ஆண்டில இருந்து (O/L) உயர் தரம் படிக்கும் வரை தக்க வைப்பதென்பதை பெரிய சாதனையாகத்தானே சொல்ல வேணும். எங்கட வகுப்பென்றால் கெட்டிக்கார வகுப்பென்று தான் எல்லொரும் சொல்லுவார்கள்.

வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லையென்றால் நாங்கள் பக்கத்து வகுப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் நாடகங்கள் எல்லாம் தயார் செய்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழுங்கமைத்து ஒரு நாற்பது நிமிடப் பாட நேரத்திற்குள் எதனையோ சாதித்ததாய் எங்கள் சின்ன வயதில் பெருமைப் பட்டுக் கொள்வோம்.
ஹர்சன், ஞானவேல், ரஜீவன், பிரசன்னா, அகீனன், திருக்குமார், நான் உட்பட இன்னும் பல பேர் சேர்ந்து ஆசிரியர் வகுப்பிற்கு வராத பாட நேரத்தில் ஏதாவது நாடகங்கள், இல்லை என்றால் பாடுக் கச்சேரி, பட்டி மன்றம் எனப் பல சுவையான நிகழ்ச்சிகள் உடனடியாகத் தயார் செய்து எமது சக மாணவர்களுக்கு வழங்கிச் சந்தோசப் பட்டுக் கொள்வோம்.


இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் தான் ஒரு நாள் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது எமது இரண்டாம் தவணை முடிந்து மூன்றாம் தவணை தொடங்கும் போது எமது தமிழாசிரியை அவர்கள் கேட்டார். எல்லோரும் இந்த விடுமுறைக் காலத்தில என்ன செய்தனீங்கள் என்று?? உடனே ஞானவேல் எழும்பி தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல அந் நேரம் நானும் என்ர தனி ரகத்தைக் காட்டப் போய் பக்கத்தில இருந்த ஹர்சனிடம் 'ஏன் மச்சான் உவன் மட்டும் தான் கொழும்புக்குப் போனவன்??? நானும் தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல ஹர்சனும் உடனடியாக எங்களாசிரியரிடம் ''ரீச்சர் இவன் கமலும் கொழும்புக்குப் போனவன் என்று கூற ரீச்சரும் உடனே ''எப்படிக் கொழும்பு??? கொழும்பில எங்க எங்க போனீங்கள்??? எங்க இருந்தீங்கள் என்று கேட்க??? நானும் எனக்குள்ளை இருந்த சமூகக்கல்விப் பாட அறிவை வைச்சு ஒரு மாதிரிக் கொழும்பைப் பற்றிச் சொல்லி ஜமாய்த்ததும் என்ர சின்ன வயசுச் சமயோசிதம் என்றே சொல்ல வேணும்.

இந்த ஏ ஒன்பது நெடுஞ்சாலை திறக்கும் வரைக்கும் எங்கடை வகுப்புப் பொடியளுக்கு கொழும்பு பார்த்த ஆட்கள் நானும் ஞானவேலுமாகத்தான் இருந்திருப்பம்.... இப்போது வரைக்கும் பாதை திறப்பதற்கு முன்னர் கொழும்பு பார்த்தது பற்றி நான் அப்போது சொன்னது பொய் என்று எங்கள் வகுப்புப் பொடியங்கள் யாருக்கும் தெரியாது,,,,

எலியட்ட என்டே என்டாகவில்லை.....இன்னும் வளரும்.......... Read More......

Wednesday, January 7, 2009

வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......!

யாருமற்ற வெட்ட வெளியில் வாழ்வைத் தொலைத்தபடி, வழக்காடிய படி நின்று உலகின் கரிசனைக்காய் ஏங்குக் உறவுகளின் குரலாக ஒலிக்கும் ஒரு ஒலிக் கவிதை.. இது.

'ஆல மரத்தின் கீழ் அரைநாண் கயிறு
தொய்யக் காலால் நடந்து தனது கடப்படிக்கும் போக
ஏலாதிருக்குமொரு இடம் பெயர்ந்த
தமிழ் கவிஞன் வாயால் ஓதும் வன்னிக் கதை இது!

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் கனலாய் மனதைக் கரைக்கின்றன.

எத்தனை பேர் தனை இரந்தோம்
ஒருவருமே
சத்தியமாயெம்மைத் தலையெடுத்துப் பார்க்கவில்லை
செத்திடுவார் எமக்கேனிச் சோலி
என நினைத்தா விட்டார்??
எனினும் யாம் விழமாட்டோம் எனச் சொல்வாய்!

என்று கவிஞர் கூறுகையில் பல அர்த்தங்கள் நிறைந்த உறுதி கவிதையினூடாகத் தெரிகிறது.

நாளாந்தம் நோயால் நலிந்தும்,
ஒரு கவளம்
ஆகாரமின்றி அயர்ந்தும்
கூவிவரும் குண்டால் உயிர் கூடு குலைந்தும்
பொல்லாத சண்டைக்குள் வாழும் சனத்தை எவர் நினைத்தார்???

வாழ்வைத் தொலைத்தும், வாழ்விடத்தின் வேரறுத்தும்,
பாழ் விதிக்குத் தம்மைப் பறி கொடுத்தும்
ஆகாயப் பந்தலதின் கீழ் வாழும் பாவியரை யார் நினைத்தார்???

இது அங்குள்ள மக்களின் குரலாக கவிஞனின் கவிதையூடாக வெளிப்படுகிறது...

இதற்குமப்பால் வன்னி மக்களின் ஒட்டு மொத்த அவலத்தினைப் புடம் போட்டுக் காட்டுவதாய்....,,,

குருக்களை நேற்று விசுவமடுவில் கண்டேன்.
அவரும் அகதி..நானும் அகதி....
எல்லோர் வாழ்வும் அவதி.... எனும் கவி வரிகள் விளங்குகின்றன....
இக் கவிதையின் இறுதிப் பகுதியில் வரும் வசனங்களைக் கேட்டுப் பாருங்கள்... இப்போது எல்லாம் முடிந்து விட்டதென்றெண்ணி ஏங்கும் அனைவருக்கும் இனித்தான் ஏதோ இருக்கிறது.......என்பதை உணர்த்தும் நம்பிக்கை வரிகளாய் அவை விளங்குகின்றன.

இத்தகைய உணர்வின் வரிகள் நிரம்பிய யதார்த்தம் ததும்பும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று இங்கே உங்களுக்காக.....


Puthuvai Kavithai - Kavithai

கவிதைத் தொகுப்பிற்காக நன்றியுடன் தாயகக் குரல் புலிகளின் குரல்!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்! Read More......

Sunday, January 4, 2009

அடி மேல் அடி! காணொளி!

மனித மனங்கள் எப்போதும் விசித்திரமானவை. அச்சப்பட்டு அடங்கி ஒடுங்கி வாழும் இயல்பு சமூகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு இருப்பதும், ஒரு சிலர் தனது தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி வெற்றிக் கொடி பதிப்பதும் நாம் கண் கூடாகக் காண்பவையே!

கலைகள் எப்போதும் மனதிற்கு மகிழ்வினைத் தருகின்றவையாகவே விளங்குகின்றன, இந்த வகையில் மேற்குலகில் பல புரட்சிகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற சொல்லிசையை(Rap Music) தனது கருத்துக்களை மக்களுக்குச் சொல்வதற்கேற்ற ஊடகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஒரு இளங் கலைஞன், அவர் தான் இன்று எல்லோராலும் உலகெங்கும் ''வாழ்வும் வரும் சாவும் வரும்.....''எனும் பாடலினூடாக அறியப்பட்ட சுஜித்ஜி அவர்கள்.

இக் கலைஞன் தன் வாழ்வில் தான் சந்தித்த துயர்களையும், தமிழிசைக்குள் சொல்லிசை ஊடாக நமது மக்களுக்குத் தனது கருத்துக்களைச் சொல்வதற்காக தான் ஆரம்பகாலத்தில் பாடல்களை உருவாக்கி வெளியிட்ட போது சமூகம் தனக்கு ஏற்படுத்திய வலிகளையும் பாடலாக்கியுள்ளார். இந்தப் பாடல் மனதிற்கு நம்பிக்கை தருகின்ற நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கிய பாடலாகும். 'அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்பது எம் ஆன்றோர் பழமொழி. இந்தப் பழமொழிக்கமைவாக சுஜித்ஜி எப்படி அடிமேல் அடி வைத்துள்ளார் என்று படித்துப் பாருங்கள்.

'அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

I had enough with this society

இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை
தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு
ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை
உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம்
உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும்
நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்!
அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

சேர்ந்து வாழும் போது அவர் சிரிக்கிறார்
மேலே போக எண்ணக் குழி பறிக்கிறார்
நல்லோர் இவரா?
நய வஞ்சர் இவரா?
தீயில் வெந்த பின்பும் பினிக்ஸ் பறக்குமே!
சிலிர்ப்புடன் உள்ளுணர்வு பிறக்குமே!
எங்கே வந்து பார்!
என்னைக் கீழே தள்ளிப் பார்!
வந்து தள்ளிப் பார், கொள்ளி வைத்துப்பார்!
வாழ்வினை வாழுவேன் வாழ்வினில் வெல்லுவேன்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

என் வார்த்தை பிழையாது - பேர்
பலத்தில் வளையாது

நான் சொல்லி விட்டே போவேன்
உன் தோளைத் தட்டிப்போவேன்!
வாழ்வின் அடி மட்டம் நான்
கண்ட பின் இக் கட்டம்
வந்து நின்றே சொல்வேன் - இம்
மாயைதனைக் கொல்வேன்!
குள்ள நரிக் கூட்டம் அது என்றும் உன்னில் நோட்டம்
இங்கு வாழ்ந்து நீயும் காட்டு அதைத் தூர நீயும் ஓட்டு
வாழ்ந்து காட்டி விடு ஊரின் வாய்கள் மூடிவிடு
நிலம் கடல் வானம் எங்கும் நிம்மதியைக் காணு
நான் சொல்லி விட்டே போவேன்!
உன் தோளைத் தட்டிப்போவேன்!

பாடல் வரிகள்: சுஜித்ஜி.
பாடலுக்கு இசை: சந்தோஷ்.
பாடல் வரிகள் & பாடியவர்: சுஜித்ஜி.

இந்தப் பாடலின் காணொளி இங்கே உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
பார்த்து மகிழுங்கள்!



இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு!

2)பொறாமை!

3)பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை......(சுனாமி நினைவுப் பாடல்)

4)இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி!

5)கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு பாகம்(02) Read More......

திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்!

எச்சரிக்கை இளகிய மனமுடையவர்களும், அதிர்ச்சியடையக் கூடியவர்களும் இதனைப் பார்க்க வேண்டாம். தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைகளுக்கு சிறுவர்களும், ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் விதி விலக்கல்ல என்பதனை உணர்த்துகின்ற காணொளித் தொகுப்பு இது .


பிறந்து இரண்டு நாளான குழந்தை முதல், இரண்டு மாதமான குழந்தை வரையும், எந்த வித ஈவிரக்கமுமின்றி வன்முறையாளர்களால் கொல்லப்படும் போது அந்தப் பிஞ்சு மனங்களின் ஆத்மாக்கள் சாந்தியடையாமல் துடிப்பதைச் சித்தரிக்கும் ஒரு ஒளிக்கலவை இது.


சாந்தியடையாமல் துடிக்கும் இந்தப் பிஞ்சு உள்ளங்கள் உங்களிடம் கேட்பவை என்ன??? அவை மனிதாபிமானம் பேசும் உலக நாடுகளிடமும், சிறுவர் நலன் பேணும் அமைப்புக்களிடமும் கேட்டு நிற்பவை என்ன??? இஸ்ரேலியர்களால் பலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது கண்டனம் தெரிவிக்கும் உலக அரசுகள், மனிதாபிமான அமைப்புக்கள், இலங்கை அரசால் எம் தமிழ் உறவுகள் கொல்லப்படுவதைக் கேள்வியுற்றும் வாய் மூடி மௌனமாக இருப்பது தான் ஏனோ???


எங்கள் தமிழர்கள் கொல்லப்படும் போது உலக நாடுகளால் நீதிக்காகக் குரல் எழுப்ப முடியாது என்றால் ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்கள் கொல்லப்படும் போது அவர்களால் அந்தச் சிறுவர்களுக்காக ஒரு வார்த்தை என்றாலும் மனமிரங்கிக் கூற முடியாதுள்ளதே??? இது என்ன வேடிக்கை???? யாராவது பதில் கூறுங்களேன்???

'உலகே உனக்குக் கண்ணில்லையா?? எங்கள் தமிழீழ மண் என்ன மண்ணில்லையா???
உலக மக்கள் தான் மக்களா??? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா???
என்கின்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளைத் தான் எம்மால் இப்போது நினைவு கூர முடிகிறது, ''பாலஸ்தீனர்கள் துடித்த போது அவர் பக்கம் நீயிருந்தாய் .. ஈழத் தமிழர்கள் நாளும் மடிகிறோம் உலகே எமை ஏன் நீ மறந்தாய்???

மனிதாபிமானம் பற்றிப் பறை சாற்றுபவர்களே?? பயங்கரவாதம் பற்றி வரை விலக்கணம் கூறுபவர்களே??? பயங்கரவாதம் பற்றி வியாக்கியானம் கூறுபவர்களே??? தயவு செய்து இதனைப் பாருங்கோ??? எது பயங்கரவாதம் என்று புரியும்???

'பள்ளியில் வாழும் பிள்ளைகள் தலையிலும் பாயும் குண்டுகள் பார்???
கொள்ளை நீதிகள் சொல்லும் உலகே உன் கண்ணை(ப்)பறித்தது யார்????

உலகெங்கும் வாழும் தரும நெறி அறிந்த அறிஞர்களே?? புலிகள் இயக்கத்தில் பிறந்து 'நான்கே' மாதமான குழந்தைகளும் ஆயுதம் ஏந்திப் போராடுவதால் தானே வன்முறையாளர்கள் அவர்களைக் கொல்லுகிறார்கள் என்று நினைத்து இது நாள் வரை உங்கள் விழிகளை மூடியிருந்தீர்கள்???? இப்போதாவது உங்கள் விழிகளைத் திறந்து கொஞ்சமென்றாலும் பாருங்களேன்.

எங்கள் உறவுகள், ஏதுமறியாத சிறுவர்கள் கொல்லப்படுவதைப் பார்த்தும் நீங்கள் விழி மூடி இருப்பது முறையா???? இதுவா மனிதாபிமானம்??? இதுவா உலக சிறுவர் அமைப்புக்கள் கூறும் தர்ம நெறி??? உண்மையான ஈழ நிலவரத்தை நன்றாக உணர்ந்தவர்கள் இதனைப் பார்த்தால் நிச்சயமாக உங்கள் விழியில் இருந்து நீர் கண்ணீர் சொரிவதை உணர்வீர்கள்.

தருமவாதிகளே! மனிதாபிமானவாதிகளே! உலக சிறுவர் அமைப்பாளர்களே! உங்கள் விழிகளை ஒரு தரம் திறவுங்கள்! உங்கள் மனங்களின் மாயையை ஒரு தரம் உதறித் தள்ளுங்கள்! உண்மையான மனிதாபிமானத்தை உணர்ந்தவர்கள் நீங்கள் என்றால் மட்டும் இதனைப் பாருங்கள்...

அறிவித்தல்: இந்தக் காணொளி வெகு விரைவில் ஆங்கிலத்தில் குரல் மாற்றம் செய்யப்பட்டு இணையத்தளத்தில் இணைக்கப்பட்வுள்ளது. புலம் பெயர் உறவுகளே உங்களால் முடிந்தால் இதனை உங்கள் நாட்டு மொழ்களில் மொழி மாற்றம் செய்து உங்கள் நாட்டிலுள்ள மனிதாபிமான நிறுவனங்கள், சிறுவர் நலன் பேணும் அமைப்புக்களுக்கு அனுப்பி வையுங்கள். அப்போதாவது அவர்கள் விழிகள் திறக்கின்றதா என்று பார்போம்..

பிஞ்சு மனம் புலியானதா???? பிறர் பார்த்திருக்க எங்கள் சிறுவர் உயிர் பலியாவதா??
வெஞ்சமரில் இவர் எப்போ துவக்கெடுத்தார்??? உலகம் வேடிக்கையாய்ப் பார்த்திருக்கையில் அவர் உயிரை ஏன் அரக்கர் பறித்தெடுத்தார்???


புகைப் படத்தொகுப்பிற்காக நன்றியுடன் அருச்சுனா புகைப்படக் கலையகம்.



இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)காணத்தவறாதீர்கள்! அக்கினிப் பெரு மூச்சு!

2)காணத்தவறாதீர்கள்! அக்கினிப் பெரு மூச்சு! அங்கம் (02) Read More......

கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு பாகம்(02)

இசைக்கு எல்லை இல்லை என்று சொல்வார்கள். இசை மனித மனங்களை அமைதிப்படுத்துவதற்கும், மனதிற்கு மகிழ்வினைத் தருவதற்கும் ஏற்ற ஊடகமாக விளங்குகின்றது என்பதில் எந்த வித ஜயமும் இல்லை.

இந்த வகையில் இப் பதிவில் தமிழ் சொல்லிசையில்(Tamil Rap) பெயர் சொல்லுமளவிற்கு பிரபல்யமாக விளங்குகின்ற சுஜித்ஜி பற்றிய வானொலித் தொகுப்பினை உங்களுக்காக தரவிருக்கின்றேன்... இவ் வானொலித் தொகுப்பின் முதற் பகுதியினை நீங்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்,

தனது கருத்துக்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கில் சொல்லிசையின் ஊடாகக் கவி நயம் மிக்க பாடல்களை இச் சுஜித் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் இலக்கிய நயம் ததும்பும் பாடல்களையும், தமிழரின் உரிமைகள் பற்றிய கருத்துக்கள் தாங்கிய பாடல்களையும் எழுதுவதில் கைதேர்ந்த ஓர் கலைஞராக, கவிஞராக விளங்குகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக உங்களுக்கு இந்த ஒலிப்பதிவில் ஒரு சில பாடல்களைச் சேர்த்திருக்கின்றேன். அவற்றையும் செவிமடுத்துப் பாருங்கள்.

Somthing Abt SujeethG.mp3 - MelbKamal

இன்றைய சமூகமானது எம்மவரின் கலைப் படைப்புக்களைப் புறந்தள்ளி, தென்னிந்திய சினிமாக் கலைகளுக்கு முதன்மையளித்து, எம்மவர் மூலம் தென்னிந்திய சினிமாவை வளர்க்க நினைக்கின்ற சூழலில் இந்தக் கலைஞர்களின் கலைப் படைப்புக்கள் சில வேளை இனங் காணப்படாமற் போகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு மனிதனது வாழ்க்கையில் அவன் சந்திகின்ற சோதனைகளையும், வேதனைகளையும் மிக மிக அழகாக, எளிமையாக பாடலாக்கி அதனையும் சுஜித்ஜி அவர்களே பாடியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக
'அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு
I had enough with this society

இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை
தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு
ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை
உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம்
உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும்
நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்...... எனும் பாடல் வரிகளைக் குறிப்பிடலாம்.

இவற்றுக்குமப்பால் சமூகத்தில் உள்ள புரையோடிப் போயுள்ள பல விடயங்களையும், சமூகக் கருத்துக்களையும் தனது பாடல்களினூடாகப் புலப்படுத்தி வருகின்ற சுஜித்ஜி, எதிர்காலத்தில் தமிழ்ச் சொல்லிசை வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்து நிற்பார் என்பதில் எந்தவித ஜயமுமில்லை.

இச் சுஜித்ஜி அவர்கள் ஏற்கனவே 'சிங்கிள்ஸ்', 'அடிமேல் அடி' ஆகிய இரு இசைத் தட்டுக்களை வெளியிட்டிருக்கின்றார். இவரது அடுத்த இசைத் தட்டு ''இராவணன்'' எனும் பெயர் தாங்கி இவ்வாண்டில் வெளிவரவுள்ளது. இந்த இளங் கவிஞன், இந்த இளங் கலைஞன் பற்றி நீங்கள் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ள விரும்பினால் இங்கே சொடுக்கவும்.
இது சுஜித்ஜி அவர்களின் உத்தியோக பூர்வ இணையத் தளம்.

இவரது மற்றைய இணையத்தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
இவரின் காணொளிப் பாடல்களை கனடாவில் ரீவிஜ(tvi), ஜரோப்பாவில் தீபம் தொலைக்காட்சி, உலகெங்கும் ஜீரீவி(GTV) ஊடாகவும் கண்டு களிக்கலாம்.

சுஜித்ஜி அவர்கள் ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக வழங்கிய சிறப்பு நேர்காணல் வெகு விரைவில் உங்களுக்காக எனது பதிவில் பதிவேற்றப்படுமென்பதை அறியத் தருகின்றேன்.

பிற் குறிப்பு: மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் மீண்டும் ஓர் வானொலியில் மெல்போர்னிலிருந்து நிகழ்ச்சி படைக்கும் போது செய்த முதல் நிகழ்ச்சி இதுவாகும். அங்கங்கே சொற்கள் தடுமாறுகின்றன...சில நேரம் பாடல்கள் ஒலிபரப்பும் போதும் தாமதமாகி விடுகின்றது. யாவரும் பொறுத்தருள்க.

படத் தொகுப்பிற்காக நன்றியுடன் சுஜித்ஜி இணையத்தளம்.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு!

2)பொறாமை!

3)பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை......(சுனாமி நினைவுப் பாடல்)

4)இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி! Read More......

Thursday, January 1, 2009

யாழ்ப்பாணத்தின் எதிர்கால நோக்(கம்)கு யாருக்காவது தெரிகிறதா??

(இது ஓர் நேரடிப் புகைப்பட அலசல்)
எங்கள் தாயக உறவுகள் இருக்க இடமின்றி இடம் பெயர்ந்து, உண்ண உணவின்றி அந்தரித்த படி ஆகாயப் பந்தலின் கீழ் அண்ணார்ந்து பார்த்தபடி, அடுத்த குண்டு எப்போது எம் தலை மீது விழுமென்று எதிர் பார்த்திருக்க எங்கள் கந்த புராணக் கலாசார மரபினை ஒட்டிய யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் 29ம் திகதி என்ன நடந்ததென்று தெரியுமா????

( கரந்த சிங்க...இலகு காலட்படைப் பிரிவு சொல்லுவது: அம்மோ புத்தா... கடவுலே....நாமளே எப்போ கன்காட்சி ஆவோன்னு தெரியாது... அதுக்க இந்த மினிஸ்ரர்சுக்கு இப்ப இது தேவயா???)

உறவுகள் உயிர் வாழ உலகையே இரந்து கேட்கும் நேரமதில் எங்கள் யாழ் மண்ணில் ''யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் குத்தாட்டமும். கன்டியன்(kandiyan Dance) நடனமும் கலக்கலாய் நடைபெற்றதாம்??? என்ன உலகம் இது??? யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா??? இந்த நேரத்தில் இது தேவை தானா என்று????

(யாழ் மக்கள் சொல்வது: நாமளே எப்படா வெள்ளை வான் வருமென்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்... அதுக்க இவங்கள் வந்து குத்தாட்டம் போட்டு எங்களை உசுப்பேத்தி விட வந்திட்டாங்களாம்??ம்.....நடக்கட்டும் நடக்கட்டும்...எல்லோரும் எப்ப ''டோர்ச் லைட் ''மூடியால அடி வாங்கப் போகினமோ தெரியாது????????)

யாழ் குடாநாட்டில் உள்ள பல இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமற் போகடிக்கப் படும் நிலையில் அதற்கான காரண கர்த்தாக்களை மக்கள் இன்னமும் இனங் காணாத நிலையில் யாழ் மக்களின் ஒத்துழைப்போடு இந் நிகழ்வு இடம் பெற்றதாம்... ம்ம்ம்ம்ம்.... கேட்டியளோ சங்கதி???


எங்கள் யாழ் மக்களுக்கு இன்னமும் காணாமற் போதல்களுக்கும், கடத்தல்களுக்கும் காரணமான பிரதான சூத்திரதாரிகளை இனங்காணத் தெரியவில்லை என்பது மிகவும் வேடிக்கையான் விடயம் தான்... அப்படி அந்த மக்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் இந்த நிகழ்வுக்கு.....................(மிகுதி வசனங்கள் உங்கள் சிந்தனைக்கு)
யார் தான் இந்த யாழ்ப்பாணத்தவர்களைக் காப்பாற்றப் போகிறார்களோ??? எல்லாம் அவனுக்குத் தான் வெளிச்சம்.

(என்ர சந்நிதியானே???? நல்லூர் நாயகனே???? இப்ப கை கொடுக்கும் போதும் பயமா இருக்கு.... கையில உள்ள கைச் சங்கிலி எத்தினை பவுண் என்று பார்த்திட்டு வெள்ளை வானுடன் களவுக்கு வந்திடுவாளுங்க............)

'யாழ்ப்பாணத்தின் எதிர்கால நோக்கு' எனும் பெயரில் இடம் பெற்ற இந் நிகழ்வில் எங்கே யாழ்ப்பாணத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா???
இதற்குப் பிறகு நான் அதிகம் எழுதுவதை விடுத்து உங்கள் சிந்தனைக்கு இந்தப் பதிவினையும் புகைப் படத்தினையும் விடுகின்றேன்.......

இதுவும் எழுதுவது நாங்கள்.......! வாசித்துத் தெளிந்து கொள்வது நீங்கள்....
இன்றைய யாழ் மக்களின் சிந்தனையைக் கிளறி, அவர்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைத்த இந் நிகழ்வு பற்றிய ஆக்க பூர்வமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.... எதுவாக இருந்தாஅலும், எவராக இருந்தாலும் பின்னூட்டமாகப் போடுங்கோ சாமியோவ்......!




பிற் குறிப்பு:: இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திலிருந்து சுட்ட புகைப்படங்களுடன்.... புகைப்பட(பிடி)க்காரன்.....

முக்கிய அறிவித்தல்: சில நேரம் இந்தப் படங்களில் உள்ளவர்களின் எதிர்கால நோக்கம் கருதி யாராவது அவர்களை இப்போது உடனடியாகத் தேடத் தொடங்கியிருக்கலாம்....வெள்ளைவான் உதவியுடன்...... .
Read More......

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).