Saturday, April 4, 2009
ஒஸ்ரேலிய மாப்பிளையும் ஆறுமுகத்தாற்றை பொட்டையும்- நாடகம்
எனக்குச் சின்ன வயசிலை இருந்து நாடகம் நடிக்க வேணும், நாடகம் எழுத வேணும் என்றெல்லாம் ஆசை இருக்கும். நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது ஹர்சனும் நானும் இணைந்து நாடகங்கள் தயாரித்து அரங்கேற்றி மகிழ்வோம். சில நேரம் ஹர்சன் தனியாக நாடகம் செய்வான். சில நேரம் நான் தனியாக நாடகம் உருவாக்கி வகுப்பில் உள்ள சக நண்பர்களை நடிக்க வைத்து மகிழ்வோம். இன்று ஹர்சனுடன் பேசும் போது இந்த நினைவு மீட்டல்களை மீட்டிப் பார்க்கையில் ’இழந்த பருவங்கள் மீண்டும் வராதா’ என்று நாங்கள் நினைத்து ஏங்குவதுண்டு?
சில நேரம் உடனடியாகவும் நாடகம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஏதாவது நகைச்சுவை நாடகமோ இல்லையென்றால் சீரியஸான விடயங்களோ எங்கள் நாடகங்களின் கருப்பொருளாகும். எந்தவித ‘ஸ்கிறிப்ட்‘ எழுத்துருவாக்கமும் இன்றி நானும் ஹர்சனும் இணைந்து உடனடியாக எமது நாடகத்தின் விடயங்களை ஏனைய நடிக நண்பர்களுக்குச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைத்து வெற்றிகரமாக மேடையேற்றி மகிழ்ந்திருக்கிறோம்.
பிற்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதரண வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக நாடகமும் அரங்கியலும் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த நாடகத்தின் மீது கொண்ட பற்றுறுதி காரணமாக நானும் ஹர்சனும் இன்னும் பல நண்பர்களும் நாடகமும் அரங்கியலையும் O/L வகுப்பில் எடுத்துத் தேறியுமிருந்தோம். ‘நான் நல்லாப் பாடுவேனாம். எனக்கு பாடுவதற்கு ஏற்ற நல்ல குரல் இருக்குதாம்’ என்று என்னுடைய அவா அடிக்கடி என்னுடன் கதைக்கும் போது சொல்லுவா.. (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே??)
ஏன் நான் நாடகம் எடுத்தனான் என்று கேட்டுக் கிண்டல் பண்ணுவா?? தொடர்ந்தும் சங்கீதத்தைப் படிச்சிருக்கலாம் தானே என்றும் சொல்லுவா?? நான் நாடகத்தின் மீது தான் எனக்குப் பற்று அதிகம் என்று சொல்லிச் சமாளித்து விடுவேன்? அட...ஒவ்வோர் சுரவரிசையையும் ஆரோகண, அவரோகண ஏற்ற இறக்கத்திலை மாற்றிப் பாடுற விசயம் மாதிரி எனக்கு வேதனையான விசயம் வேறை ஒன்றும் இல்லை? பிறகு எப்பிடி நான் சங்கீதம் படிச்சிருக்க முடியும்??
இப் பதிவில் நான் தரவிருக்கிற நாடகம் தான் ‘ஒஸ்ரேலிய மாப்பிளையும் ஆறுமுகத்தாற்றை பொட்டையும்! இந்த நாடகத்தை ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்காக நான் எழுதியிருந்தேன்? ஏற்கனவே இங்கு பதிவிடப்பட்ட ’கனடாக்காற மாப்பிளையும் கதிர்காமற்றை பொட்டையும்..! எனும் பதிவினைப் படித்த எங்களின் அறிவிப்பாளர் திருமதி சாந்தினி அவர்கள் இதனை நாடகமாக ஒஸ்ரேலிய நடை முறை வாழ்விற்கு ஏற்ற வகையில் மாற்றினால் என்ன என்று கேட்டா? அவாவின் எண்ணக் கருத்துக்கு அமைவாகவே அந்தப் பதிவு ஒரு சில மாற்றங்களோடு இங்கே நாடகமாக அரங்கேறியுள்ளது.
இது ஒலிப்பதிவு செய்யப்படுகின்ற என்னுடைய முதலாவது நாடகம் என்பதால் நிறையத் தவறுகளும், குறைகளும் இருக்க வாய்புக்கள் உள்ளன. ஆகவே குறை நிறைகளைச் சுட்டிக் காட்டினால் அவை கண்டிப்பாக எனக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும். உங்களது ஆக்க பூர்வமான எண்ணக் கருத்துக்களும், விமர்சனங்களும் தான் என்னை மென்மேலும் சிறப்புற நாடகங்களைப் படைக்க வழி வகுக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
இன்றைய புலம்பெயர் சமூக அமைப்பில் ஏற்படுகின்ற நிஜங்களின் பிரதிபலிப்பினைத் தாங்கியே இந்த நாடகம் அமையப் பெற்றுள்ளது. சமூகத்தில் நடக்கும் ஒரு சில விடயங்களை வைத்தே இந்த நாடகத்தை எழுதியுள்ளேன்? என்ன யோசிக்கிறீர்கள்? யார் யாரெல்லாம் நாடகத்தில் நடித்திருக்கிறார்கள் என்றா?? நாடகத்தைக் கேட்டுப் பாருங்கள்? அவை எல்லாம் புரியும்???
|
இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
*கனடாக்காற மாப்பிளையும் கதிர்காமற்றை பொட்டையும்..!
*தேடலும் தெறிப்பும் ....!
*இனி அசைலம் அடிக்கேலாதாம்...



13 comments:
சிறப்பான முயற்சி கமல்! குழுவினருக்கு வாழ்த்துக்கள்... :)
சிறிது வேலை...
பின்னர் கேட்டுவிட்டு கட்டாயமாக பின்னூட்டுகிறேன்...
:-)
நன்றிகள் புல்லட் மற்றும் வேத்தியன்...!
ஆஹா... இயல் இசை நாடகம்னு பின்னிப் பெடலெடுக்கிறீங்களே கமல்!!!
ஆறுமுகத்தாற்றை பொட்டை என்பது என்ன... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். நல்ல தமிழ்னு மட்டும் விளங்குது! !!!
தொடருங்க!! தொடருங்க!!!
ஆதவா said...
ஆஹா... இயல் இசை நாடகம்னு பின்னிப் பெடலெடுக்கிறீங்களே கமல்!!!
ஆறுமுகத்தாற்றை பொட்டை என்பது என்ன... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். நல்ல தமிழ்னு மட்டும் விளங்குது! !!!
தொடருங்க!! தொடருங்க!!!//
ஆறுமுகத்தாரின்ரை மகளைத் தான் எங்கள் பாசையில் ஆறுமுகத்தாரின் பொட்டை என்போம்?
வாழ்த்துக்கள்.....
நல்லாயிருந்தது! இன்னும் பல நாடகங்கள் வேண்டும். சாந்தினி அக்காவும் சிறப்பா பேசியிருந்தாங்க!
எழுத்து வடிவம் முன்னமே வாசித்திருந்தேன்.
என்றாலும் இந்த நாடகம் வடிவம் இன்னும் நல்லாய் இருக்கு ...வாழ்த்துக்கள்
கேட்க ஆவல்..
வாங்கோ கலை, டொன்லீ, சின்னக்குட்டி அண்ணா, சிந்து! தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....
ச்சீ...இந்த தமிழ கேக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு...இப்பவே போய் லங்காவுக்கு call எடுக்க போறன்....நல்லா இருக்கு கமல் அண்ண...தொடர்ந்து நாடகங்கள் வேணும்..
கமல்,அருமை அருமை.எழுத்தில் இருந்ததை விட,நீங்கள் எடுத்துக் கொண்ட கரு நாடகத்தில் அருமையாகத் தொனிக்குது.உங்கள் குரலின் பாவம் அசத்தல்.சாந்தினி அக்காவும் குறைஞ்சவ இல்லை.இன்னும் இதுபோலத் தொடர்ந்தும் முயற்சிக்கலாம் நீங்கள்.உங்களுக்கு என் ஆதரவு எப்பவும் இருக்கும் கமல்.
இணையதில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று .. வாழ்த்துக்கள் .. பதிவரே.. !! உண்மைநிலவரத்தை சொல்லீருக்ரீற்கள்!!
எனது மூஞ்சி புத்தகத்தில் share பண்ணியும் இருக்கேன்
Post a Comment