Friday, April 3, 2009
வீணாப் போன கமலும் விசிலடிக்கும் கூட்டமும்???
நாங்களும் தமிழ்ப் பதிவராகிட்டமில்ல! கொஞ்சம் இங்காலையும் எட்டிப் பார்க்கிறது!
என்னைப் பற்றித் தனிப் பதிவெல்லாம் போடுமளவிற்கு நானும் பெரிய பதிவராகி விட்டேனோ என்று யோசித்துப் பார்த்தேன்? சீ....நான் எல்லாம் போயி இப்படி ஆக முடியுமா?? நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முளைத்த காளானாக உள்ள நாங்கள் எல்லாம் பதிவரா என்று எண்ணவும் தோன்றுகின்றது?? நான் தமிழில் எழுதுகிறேனா? நான் கதைக்கும் தமிழ் சரியானதா?? என்னுடைய தமிழ் மற்றவர்களுக்குப் புரியவில்லையாம் என்றெல்லாம் பல பல கருத்துக்களை ஒரு சகோதரி முன் வைத்திருந்தார்? அது பற்றி மேலும் அறிய ஆவல் இருப்பின் இங்கே சொடுக்குங்கள்?? இப்படியே போனால் ‘வீணாப் போன கமலைப் பற்றி’ நிறைய விடயங்கள் புரியுமாம்??
இதில் உள்ள பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தால் ஏதாவது புரியும் என்று நினைக்கிறேன்??
இனியும் நான் எழுதுவது சிறந்ததா?? என்னுடைய தமிழ் உங்களுக்குப் புரிகிறதா?? என்பது பற்றிய வினாக்களுக்கு விடையளித்தால் நானும் தொடர்ந்து எழுதுவது பற்றித் தீர்மானிக்கலாம் என்று நினைக்கிறேன்??
நான் பதிவுலகத்தில் எழுதுவதற்குத் தகுதி அற்றவன், ஒழுங்காகத் தமிழ் கதைக்கத் தெரியாதவன் என்கின்ற சூழ் நிலையில் என்னுடைய தமிழ் மதுரம் இன்று நூறு பதிவுகளைத் தாண்டி உங்கள் ஆதரவுகளோடு வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். கூட்டி கழித்துப் பார்த்த கணக்கு வழக்குகளின் படி இது என்னுடைய நூற்றியோராவது பதிவு. கொஞ்ச நாட்களாக பதிவுலத்தில் பதிவிட எனக்கும் என் மனசிற்கும் உடன் பாடில்லை.
என்னுடை அத்தை, மாமா, இரண்டு சிறிய குழந்தைகள் மற்றும் போராளிகளாக உள்ள என்னுடைய சித்தி மற்றும் சித்தப்பா முதலியோரைப் பற்றிய கவலைகள், நாளாந்தம் மனதினுள் பதியும் பாதுகாப்பு வலையப் படுகொலைகள் என எல்லாமே என்னை கட்டிப் போட்டுக் கண்ணீருக்குள் நனைத்துச் செல்கின்றன. போராளிகளாக உள்ளவர்களில் ஒருவர் ஆட்டிலறிப் பிரிவில் இருப்பதாலும் மற்றையவர் உந்துகணைப் பிரிவில் இருப்பதாலும் மனதிற்குக் கொஞ்சம் ஆறுதல்! ஆனாலும் ஏனைய உறவுகள் பலரை நினைக்கையில் என்னை அறியாமலே கண்ணீர் வரும்? என்ன செய்ய முடியும்? எங்கள் உறவுகளின் நிலமை இது தானே???
கவினும் ’மச்சான் நூறாவது பதிவுக்கு சிறப்பாக ஏதாவது போடன் என்று ஒரே நச்சரிப்பு? என்னால் எதுவும் எழுத முடியாத சூழ் நிலையில், சிறப்புப் பதிவாகக் குரல் பதிவு போட்டாலும் ‘என் தமிழ் உங்களுக்குப் புரியாதாம்’ என்கின்ற நிலையில் அவற்றினைத் தவிர்த்து வந்தேன்? என்ன செய்ய?? இப்ப மட்டும் ஏதோ எழுதுறேனாக்கும் என்று யாரோ திட்டுவதும் என் காதில் விழுகிறது??
பதிவுலகத்திற்கு வர வேண்டும் என்று நீண்ட காலமாக ஆவல் இருந்தது. என்னுடைய வேலைப்பளு, சோம்பல், கல்வி நடவடிக்கைகள் முதலியவற்றின் பயனாக கடந்த வருடத்தின் இறுதியில் அதுவும் கடந்த ஐப்பசி (ஒக்டோபர்) மாசத்தின் இறுதிப் பகுதியில் இருந்து நானும் ஏதாவது எழுதலாம் என்ற நோக்கில் எழுதத் தொடங்கினேன்??? ’எல்லோரையும் போலவே நான் எழுதினால் யார் வாசிப்பார்கள் என்கிற மனச் சோர்வு எனக்கும் இருந்தது விதிவிலக்கல்ல. நான் முதன் முதல் எழுதிய பதிவு ‘தமிழ் கூறும் நல்லுலகிற்கு........ இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் வருமா என்று நினைக்கையில் முதல் பின்னூட்டமாக மூத்த பதிவர்’கானாபிரபா’ அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்தது... மிக்க மகிழ்ச்சி அந்த நேரத்தில்.
என்னுடைய முதற் பதிவுக்குப் பின்னூட்டமூட்டிய பெருமை கானாபிரபா அவர்களையே சாரும்? அடுத்த பதிவில் இருந்து என்னை ஊக்கப்படுத்தி இற்றை வரை என்னுடை பதிவுகளைச் சலிப்படையாமல் படித்து, என்னுடைய விளக்கமில்லாத ஒஸ்ரேலியத் ‘தமிலைப்’ புரிந்து கொண்டு பின்னூட்டமிடுகின்ற பெருமை எங்கள் சகோதரி ’ஹேமா’ அவர்களையே சாரும். ஆரம்ப காலத்தில் ஒரீரு பதிவுகளை மட்டுமே போட்டு விட்டு பேசாமல் இருந்து விடுவேன். எங்கள் மூத்த பாட்டி ஹேமா தான் ‘கமல் ஏதாவது எழுதும்.. என்று பேசி ஊக்கப்படுத்தி என்னை எழுதுமளவிற்குத் தூண்டியவர் என்று கூறலாம்??? ஹேமாவுக்கு மட்டும் கமல் சொல்லுற தமிழ் விளங்குதாக்கும் என்று யாரோ புலம்புவது புரிகிறது?? பின்னர் வந்த பின்னூட்டங்களை இட்ட பெருமை ‘சுந்தர மீனாட்சி, மற்றும் ‘கொழுவி அவர்களையும் சாரும்!
ஆரம்ப காலத்தில் ‘பின்னூட்டமிட்டால் தான் பின்னூட்டம் கிடைக்கும்’ என்கிற நோக்கத்திற்கமைவாக என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் வரவில்லையே என்று நான் ஏங்கிய காலங்கள் அதிகம்? அப்படி ஓரிரு பின்னூட்டங்கள் வந்தாலும் ஒரு சில நண்பர்கள் ’பதிவும் நானே! பின்னூட்டமும் நானே! எனத் தனித் தவில் வாசிக்கிறேன் என்று சொல்லிக் கிண்டல் பண்ணுவதும் உண்டு. பின்னூட்டமிட்டால் தான் பின்னூட்டம் கிடைக்குமாம்! இது மூத்த பதிவர் சயந்தன் அவர்களின் தத்துவம்.
என்னை எழுதச் சொல்லியும், நான் சில தவறான வழிகளில் பயணிக்கையில் மூத்த எழுத்தாளர் என்ற ரீதியில் பல ஆலோசனைகளை வழங்கியும் பின் தளத்திலிருந்து பல உதைகளை மன்னிக்கவும் உதவிகளை வழங்கியும் வருகின்ற பெருமை சாரல் புகழ் நண்பன் சயந்தன் அவர்களையே சாரும்!
இந்தப் பதிவுலகத்தின் மூலம் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது என்று நினைக்கையில் மிக்க சந்தோசம். நண்பர் கவின் என்னுடை பால்ய நண்பன். யாழ்ப்பாண திறந்த வெளிச் சிறைக்குள் தொலைந்து போன கவினுடனான தொடர்புகளை மீளக் கட்டியெழுப்ப வைத்த பெருமையும் இந்தப் பதிவுலகத்தையே சாரும்! அது மட்டுமன்றி இணைய தொழில் நுட்பங்கள் பலவற்றை என் பாடசாலை நாட்கள் முதல் இன்று வரை கற்றுத் தரும் பெருமையும் நண்பர் கவினையே சாரும்??
ஆரம்பத்தில் நான் என்னுடைய பதிவுலகத்திற்கு வைத்த பெயர் ’இதயத்தின் பதிவுகளும் இடிந்து போன நினைவுகளும்! எனும் பெயர் தான்? அந்தப் பெயரினை என்னிடமுள்ள பல இணையப் பெயர்களின் மத்தியிலிருந்து அன்ரி ஒருவர் தான் தேர்வு செய்தார். அவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகள்.. ஒரு சில பின் தள ஊக்குவிப்பாளர்களின் (அவர்களின் பெயர் விபரங்களை இங்கே சந்தர்ப்ப சூழ் நிலைகள் கருதித் தவிர்த்துள்ளேன்)
வேண்டுகோளுக்கு அமைய என்னுடய தளத்தையும் இணையத்தளமாக மாற்ற வேண்டும் என்கின்ற முடிவிற்கு நானும் வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
என்னுடைய சோம்பல் காரணமாகவும், ‘இப்பவே ஒருத்தரும் வந்து வாசிக்கிறதைக் காணேல்லை? அதுக்கை இணையத்தளமாக மாற்ற வேணுமோ?? என்கிற என் மனச் சிந்தனைகளுக்கு அமைவாகவும், தமிழ் மதுரம் இணையத்தள மாற்றம் வெகு விரைவில் எனச் சொல்லிக் கொண்டு நானும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு பயணிக்கிறேன்?? தொடர்ந்தும் உங்கள் ஆதரவு இருப்பின் தமிழ் மதுரம் இணையத் தளமாக விரிவடையும் என்பது எங்களின் செயற்குழு உறுப்பினர்களின் ஒட்டு மொத்த முடிவு...!( மத்திய குழு உறுப்பினர்களுக்கு இதில் வேலை இல்லை என்பதால் அவர்களினை இங்கு சேர்த்துக் கொள்ள முடியவில்லை)
நானும் ஏதோ எழுதுறேனாம் என்று சலிப்படையாமல் உங்களின் பொன்னான நேரத்தை என்னோடு செலவழிக்கும் உங்களுக்குப் பல கோடி நன்றிகள்??? அது மட்டுமன்றி உங்கள் வாக்களிக்கும் உரிமையை என் பதிவுகள் மீதும் காட்டி ஆதரவு தெரிவிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!
இதுவரை எனக்கு மூன்று முறை ‘பட்டாம் பூச்சி‘ விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருதுகளை வாங்கும் தகுதி எனக்கு இன்னமும் வரவில்லை என்பதாலும், உறவுகள் உதிர்ந்து கொண்டிருக்கையில் இந்த விருதுகளை ஏன் நான் மட்டும் ஒட்டி அழகு பார்க்க வேண்டும்???? என்ற கெட்ட எண்ணம் என் மனதில் உள்ளதாலும் பட்டாம் பூச்சியைப் பறக்க விடுவதைத் தவிர்த்து விட்டேன். அதற்காக என்னை மன்னிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்!
முதன் முதல் எனக்கு விருது வழங்கியவர் இந்த வருடத்தின் ஆரம்பத்தில், கடந்தவருடத்தின் இறுதியில் சகோதரி ஹேமா அவர்கள். பின்னர் தற்பொழுது விருது வழங்கிய பெருமைக்குரியவர்கள் நண்பர்களான வேத்தியன், மற்றும் கலை...!
என்னையும் கண்டு கொண்டதற்கு நன்றிகள் நண்பர்களே!
இது தவிர ஏதோ நல்ல ஆக்கம் என்று என் பதிவுகளுக்கு அந்தஸ்து வழங்கும் ஆதவா, சாந்தி, புல்லட் பாண்டி, சோமிதரன், சிநேகிதி, காரூரன், டொன்லீ முதலிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்....!
நான் வளர்ந்து வரும் பதிவர் தானே? அட ‘நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முளைத்த காளான்’ என்பதால் சொல்கிறேன். என்னை ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களையே சாரும். தொடர்ந்தும் உங்களது ஆதரவு உள்ள வரை தமிழ் மதுரம் வீறு நடை போடும் என்பது என்னுடைய கருத்து...!
************************************************************
அண்மையில் எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார்!
மச்சான் விசயம் தெரியுமோ??
மெல்பேணிலை வாற கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கப் போகுதாம் என்று??
ஏன் மச்சான் யார் வைக்கீனை? என்ன விசயம் என்று கேட்டேன்?
அவன் சொன்னான்? சிங்கள ஆட்கள் வைக்கீனையாம்? ஒரு முந்நூறு பேர் வருவீனம் என்று சிங்கள ஆட்கள் எதிர்பார்க்கீனை என்று சொன்னான்???
‘ஆர்ப்பாட்டத்துக்கு என்ன பேர்? ஏன் செய்கிறீனை என்று கேட்டேன்???
’புலிகளே தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை நிறுத்துங்கள்!
புலிகளிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்க உலகமே விரைக!
என்றெல்லாம் கோசங்கள் போடப் போவதாக ‘பேஸ் புக்கிலை’செய்தி வந்திருக்கு என்று சொன்னான்???
எனக்குச் சிரிப்புத் தான் வந்தது?? ஆடு நனையுது என்று ஓநாய் அழுதிச்சாம்???
தொடர்ந்தும் வாங்கோ நண்பர்களே! உங்கள் ஆதரவுகளைத் தாருங்கள் நண்பர்களே!
என்ன தான் என்னைப் பற்றித் தனிப் பதிவு போட்டாலும் வாசிக்க ஆட்கள் வரவேணுமெல்லோ??? இது எங்கையோ கேட்ட வசனம்???? என்னைப் பற்றிப் பதிவு போட்ட சகோதரிக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்!
அடுத்த பதிவாக உங்களை மகிழ்விக்க ஒரு நாடகம்.....! அதுவரை தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்...!
நாடகம் என்ன தெரியுமா???
“ஒஸ்ரேலியா மாப்பிளையும் ஆறுமுகத்தாரின்ரை பெட்டையும்....!
நான் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கே சொடுக்குங்கள்.! (இந்த ஐடியா நண்பர் ‘ஆதவாவிடம் சுட்டது! ஆதவா பொறுத்தருள்க...)
இதுவும் தெரிவிப்பது நாங்கள்! தீர்மானிப்பது நீங்கள்....!



35 comments:
முதலில் 101 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஏனைய உறவுகள் பலரை நினைக்கையில் என்னை அறியாமலே கண்ணீர் வரும்? என்ன செய்ய முடியும்? எங்கள் உறவுகளின் நிலமை இது தானே???//
உண்மைதான் நண்பரே..என்ன சொல்ல என்று தெரியவில்லை
இதுவரை எனக்கு மூன்று முறை ‘பட்டாம் பூச்சி‘ விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருதுகளை வாங்கும் தகுதி எனக்கு இன்னமும் வரவில்லை என்பதாலும், உறவுகள் உதிர்ந்து கொண்டிருக்கையில் இந்த விருதுகளை ஏன் நான் மட்டும் ஒட்டி அழகு பார்க்க வேண்டும்???? கெட்ட எண்ணம் என் மனதில் உள்ளதாலும் பட்டாம் பூச்சியைப் பறக்க விடுவதைத் தவிர்த்து விட்டேன். அதற்காக என்னை மன்னிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்!//
மூன்று முறை பட்டாம்பூச்சியை பிடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்.பட்டாம்பூச்சியை பிடிக்க இதுதான் தகுதி என்று யாரும் வரையறுக்கவில்லை...ஆகவே..உங்கள் ப்ளாக்கில் அதை பறக்க விடவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
Rajeswari said...
முதலில் 101 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//
*******************
Rajeswari said..
மூன்று முறை பட்டாம்பூச்சியை பிடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்.பட்டாம்பூச்சியை பிடிக்க இதுதான் தகுதி என்று யாரும் வரையறுக்கவில்லை...ஆகவே..உங்கள் ப்ளாக்கில் அதை பறக்க விடவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.//
உங்கள் வேண்டுகோள் எங்கள் பொதுக் குழுவினால் தீர்மானிக்கப்படும்....உங்கள் வேண்டுகோளின் நியாயத்தன்மை சரியாக இருப்பின் பட்டாம் பூச்சி பறக்க விடப்பட்டும்...
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி..!
என்னை எழுதச் சொல்லியும், நான் சில தவறான வழிகளில் பயணிக்கையில் மூத்த எழுத்தாளர் என்ற ரீதியில் பல ஆலோசனைகளை வழங்கியும் பின் தளத்திலிருந்து பல உதைகளை மன்னிக்கவும் உதவிகளை வழங்கியும் வருகின்ற பெருமை சாரல் புகழ் நண்பன் சயந்தன் அவர்களையே சாரும்!//
யோவ்.. மூத்த முத்தின என்ற அடைமொழிகைள தூக்குங்கப்பா.. பாக்கிறாட்களுக்கு நான் ஏதோ நைன்டி என்ற என்ற நினைப்பு வரப்போகுது..
(வடிவேலு ஸ்டைலில்) எல்லாரும் பாருங்க பாருங்க.. நானும் பொடியன்தான் நானும் பொடியன்தான்....
------------
மற்றும்படி உங்கட பதிவுகளை வைச்சு பாக்கும்போது..
நீங்க தேறிட்டியள்... இனி
வாழ்த்துகள் கமல்...தொடர்ந்து எழுதுங்கோ...
//நான் வளர்ந்து வரும் பதிவர் தானே? அட ‘நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முளைத்த காளான்’
//
அப்படியே...பார்த்தா அப்படி தெரியேலை..:-))
அன்புள்ள கடுக்கன் (எங்கட கலாச்சாரச் சின்னமேல்லோ?) கமல்....
உங்களை யாரு எழுத வேண்டம் என்றார்கள்... என் தங்கை சார்பா உங்களிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.. தொடர்ந்து எழுதுங்கோ.. ஆனால் தப்பா நினைக்கிறது எல்லாத்தையும் எழுதாதையுங்கோ... விசேடமாக நாட்டு பிரச்சனை விஷயத்தில... நீங்க தப்பா மற்றவையை வழிநடத்தி, நீங்களும் விலைபோன மாதிரி எழுதுறது தான் கனக்க கவலை... அப்புறம்.. நாட்டுக்காக, மக்களுக்காக, அவர் தம் பிரதிநிதிகளுக்காக களத்தின் தேவை அறிஞ்சு சரியான விதத்திதில எழுதுங்கோ....
என்றும் வாழ்த்துக்களுடன்,
அன்பின்,
பிளாட்டினம்.
ஆஹா! “அண்ணையும் தன்னைப்பற்றி ஆரம்பிச்சுட்டார்” என்று நினைத்தேன். போகப்போகத்தான் பதிவின் நோக்கம் புரிந்தது. கருத்துக்களை எழுதும்போது முரண்பாடுகள் வருவது இயற்கைதானே? அதுக்கே சோர்ந்திட்டா எப்பிடி? இன்னும் எத்தினையப் பாக்கவேண்டியிருக்கு :) தொடர்ந்து எழுதுங்கோ..
ஒரு வேண்டுகோள்- இது எனது இத்தினையாவது பதிவு என்பதைக் கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளலாமே?
கமல்... ஒரு சிறந்த பதிவர் நீங்க.. இப்ப எதக்காக கலங்குறீங்க... நீங்க ஒரு துரோகி எண்டு நீங்களே தலையிலடித்து சத்தியம் செய்தாலும் ஒருத்தனும் நம்பமாட்டான்...
பிறகு எதற்கு இது? நீங்க தொடர வேணும் நாங்க படிக்க வேணும்...
அடுத்த சுறுசுறுப்பான ஒரு பதிவ நாங்க விரைவா எதிர்பாக்கிறம்...
நீங்க நல்லா பதிவுகள் பொடுவதாலதான் நிறைய பேர் வாறாங்க... நிறைய மோதுறாங்க.. கவலைப்படாதீங்க... இதே ஒரு அவார்டுதான்..
மகிழ்ச்சியாக தொடருங்கோ!
வாழ்த்துக்கள் கமல்
Pilatinum Anna, You dont have to apologize for me :-|
Kamal,
As I said, dont talk about sensitive issues. There are many other issues to talk about. I personally feel that this article was a "stunt".
stunt (n). something unusual done for publicity.
I am adding the meaning to ensure that I only mean this stunt :-)
I just started reading your blog. But, unfortunately,I got to check the Jaffna article first and it led to some arguments. However, pls no stunts again... :P:P:P
100 வது பதிவு தாண்டி 101 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் அதிக பதிவுகளை நீங்க தரவேண்டும் கமல். நிச்சியமாக நாம் தொடர்வோம். காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லடி விழுமாம், அதற்காக மரம் காய்ப்பதை நிறுத்துவதில்லை கமல். உங்கள் பதிவினை தொடர்ந்து பார்த்துவருபவர்களுக்கு தெரியும் நீங்கள் யார் என்று.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
எனக்கு பிரச்சினைகள் ஏற்ப்படும் போதெல்லாம் விகட கவியின் இந்த வார்த்தைகள் போதுமெனக்கு அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
வார்த்தைகளின் வலிகளை அறியாதோர் பலர்.
வாழ்த்துக்களுடன்...
கமல்;;;
ஏன் இந்த கவலை? விமர்சனங்கள் ஆயிரம் வரும் அதை எல்லாம் கண்டு ஆரம்பத்திலேயே துவண்டு விட்டால் பின்னர் சாதிப்பது எப்படி? நாங்கள் சாதனக் கமலை தான் எதிர்பார்க்கின்றோம், வேதனைக் கமலை அல்ல!
கமல்
யாரோ ஏதோ சொல்லி விட்டார் என்று யோசிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க கேட்க ரொம்பப் பேர் இருக்கிறோம். உங்கள் தனித்த அடையாளங்களை(குரல் பதிவு, மொழி பிரயோகம்) எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
வாழ்த்துக்கள் கமல்
வாழ்த்துக்கள்
ம்ம்ம்....அப்ப ஒரு முடிவோடைதான் இருக்கிறீங்கள்.... சரி நல்லாயிருங்கோ வாழ்த்துக்கள்....:) :) :)
வாழ்துக்கள் பாஸ்!
நான் சொல்லுவம்ன்னு வந்ததை எல்லாருமா சொல்லிட்டாங்க!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சயந்தன் said...
என்னை எழுதச் சொல்லியும், நான் சில தவறான வழிகளில் பயணிக்கையில் மூத்த எழுத்தாளர் என்ற ரீதியில் பல ஆலோசனைகளை வழங்கியும் பின் தளத்திலிருந்து பல உதைகளை மன்னிக்கவும் உதவிகளை வழங்கியும் வருகின்ற பெருமை சாரல் புகழ் நண்பன் சயந்தன் அவர்களையே சாரும்!//
யோவ்.. மூத்த முத்தின என்ற அடைமொழிகைள தூக்குங்கப்பா.. பாக்கிறாட்களுக்கு நான் ஏதோ நைன்டி என்ற என்ற நினைப்பு வரப்போகுது..
(வடிவேலு ஸ்டைலில்) எல்லாரும் பாருங்க பாருங்க.. நானும் பொடியன்தான் நானும் பொடியன்தான்....
------------
மற்றும்படி உங்கட பதிவுகளை வைச்சு பாக்கும்போது..
நீங்க தேறிட்டியள்... இனி//
வாங்கோ சயந்தன்.... இனி என்ன? ஏதாவது புரியிற மாதிரிச் சொல்லுங்களேன்??? சரி தூக்கிட்டாப் போச்சு
’டொன்’ லீ said...
வாழ்த்துகள் கமல்...தொடர்ந்து எழுதுங்கோ...
//நான் வளர்ந்து வரும் பதிவர் தானே? அட ‘நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முளைத்த காளான்’
//
அப்படியே...பார்த்தா அப்படி தெரியேலை..:-))//
அட மெய்யாலுமே???
பிளாட்டினம் said...
அன்புள்ள கடுக்கன் (எங்கட கலாச்சாரச் சின்னமேல்லோ?) கமல்....
உங்களை யாரு எழுத வேண்டம் என்றார்கள்... என் தங்கை சார்பா உங்களிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.. தொடர்ந்து எழுதுங்கோ.. ஆனால் தப்பா நினைக்கிறது எல்லாத்தையும் எழுதாதையுங்கோ... விசேடமாக நாட்டு பிரச்சனை விஷயத்தில... நீங்க தப்பா மற்றவையை வழிநடத்தி, நீங்களும் விலைபோன மாதிரி எழுதுறது தான் கனக்க கவலை... அப்புறம்.. நாட்டுக்காக, மக்களுக்காக, அவர் தம் பிரதிநிதிகளுக்காக களத்தின் தேவை அறிஞ்சு சரியான விதத்திதில எழுதுங்கோ....
என்றும் வாழ்த்துக்களுடன்,
அன்பின்,
பிளாட்டினம்.//
யோ நாங்கள் எங்கையப்பா விலை போனம்?? நீங்கள் தான் நாங்கள் சொல்ல வாற விசயத்தைத் தப்பாகப் புரிந்துள்ளீர்கள்??
நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கு... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் விடுறீங்கள்??
கிருஷ்ணா said...
ஆஹா! “அண்ணையும் தன்னைப்பற்றி ஆரம்பிச்சுட்டார்” என்று நினைத்தேன். போகப்போகத்தான் பதிவின் நோக்கம் புரிந்தது. கருத்துக்களை எழுதும்போது முரண்பாடுகள் வருவது இயற்கைதானே? அதுக்கே சோர்ந்திட்டா எப்பிடி? இன்னும் எத்தினையப் பாக்கவேண்டியிருக்கு :) தொடர்ந்து எழுதுங்கோ..
ஒரு வேண்டுகோள்- இது எனது இத்தினையாவது பதிவு என்பதைக் கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளலாமே?//
சோர்ந்து போகேல்லையப்பா?? என்னுடைய தமிழ் புரியேல்லை என்று அறிக்கை விட்டிச்சீனம் பல பேர்? அது தான் ஒரு சின்ன டம்மி..... ம்..தவிர்த்திட்டாப் போச்சு!
புல்லட் பாண்டி said...
கமல்... ஒரு சிறந்த பதிவர் நீங்க.. இப்ப எதக்காக கலங்குறீங்க... நீங்க ஒரு துரோகி எண்டு நீங்களே தலையிலடித்து சத்தியம் செய்தாலும் ஒருத்தனும் நம்பமாட்டான்...
பிறகு எதற்கு இது? நீங்க தொடர வேணும் நாங்க படிக்க வேணும்...
அடுத்த சுறுசுறுப்பான ஒரு பதிவ நாங்க விரைவா எதிர்பாக்கிறம்...
நீங்க நல்லா பதிவுகள் பொடுவதாலதான் நிறைய பேர் வாறாங்க... நிறைய மோதுறாங்க.. கவலைப்படாதீங்க... இதே ஒரு அவார்டுதான்..
மகிழ்ச்சியாக தொடருங்கோ!//
உங்களின் ஆதரவு இருக்கும் வரை தொடர்ந்தும் பதிவுகள் வரும்..
நன்றிகள் புல்லட்....
Triumph said...
Pilatinum Anna, You dont have to apologize for me :-|
Kamal,
As I said, dont talk about sensitive issues. There are many other issues to talk about. I personally feel that this article was a "stunt".
stunt (n). something unusual done for publicity.
I am adding the meaning to ensure that I only mean this stunt :-)
I just started reading your blog. But, unfortunately,I got to check the Jaffna article first and it led to some arguments. However, pls no stunts again... :P:P:P//
நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது???
வாழ்த்துக்களையும், உங்களின் உள்ளக் கருத்துக்களையும் தெரிவித்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்..
தொடர்ந்தும் கமலின் பதிவுகள் உங்களின் ரசனைக்கேற்ற படி வரும்...! தொடர்ந்தும் வாருங்கள்!
நூறு பதிவுகள் தாண்டியமைக்கு வாழ்த்துகள் கமல். ஒவ்வொரு மைல்கற்களையும் நீங்கள் நகர்த்தி செல்லும் பொழுதினில் பின்னால் திரும்பிப் பார்த்தால் உங்களது அர்த்தமுள்ள பல பதிவுகளே மிஞ்சியிருக்கும்... நல்ல அலசல்கள், கவிதைகள் அனுபவக்குறிப்புகள் என அருமையான நடையில் வாசகர் வட்டத்தை இழுக்கும் எழுத்து உங்களுடையது!!
இன்னும் நிறைய எழுதுங்கள். நீங்கள் எனக்கு உதவி செய்திராவிடில் நான் யாருக்கும் தெரியாத வலைப்பக்கத்திலேயே இன்னும் தொடர்ந்திருப்பேன்..
மூன்றுமுறை கிடைத்திருக்கிறது என்றால், அது பதிவின் தரத்தை நிர்ணயிக்கிறது!!! பட்டாம்பூச்சிகளை வலைப்பூவில் அமரவிடுங்கள்..!! கமல்!!!!
வாழ்த்துகளோடு
ஆதவா
வாழ்த்துக்கள் கமல். உங்கள் பதிவுகள் மொக்கைப்பதிவுகளாக இல்லாமல் மிகவும் தரமானவை நமது ஊர்மணத்தை கொண்ட வசனங்கள். எதற்காக உங்களையே நீங்கள் தாழ்த்திப் பதிவு எழுதவேண்டும். தொடர்ந்து அதிகமாக எழுதுங்கள்.
வீணாப்போன கமல் தலைப்பைப் பார்த்து ஏதோ உலக நாயகனைத் திட்டுகின்றீர்கள் என்று பார்த்தால் உங்களையே திட்டியுள்ளீர்கள்.
ஆதவா said...
நூறு பதிவுகள் தாண்டியமைக்கு வாழ்த்துகள் கமல். ஒவ்வொரு மைல்கற்களையும் நீங்கள் நகர்த்தி செல்லும் பொழுதினில் பின்னால் திரும்பிப் பார்த்தால் உங்களது அர்த்தமுள்ள பல பதிவுகளே மிஞ்சியிருக்கும்... நல்ல அலசல்கள், கவிதைகள் அனுபவக்குறிப்புகள் என அருமையான நடையில் வாசகர் வட்டத்தை இழுக்கும் எழுத்து உங்களுடையது!!
இன்னும் நிறைய எழுதுங்கள். நீங்கள் எனக்கு உதவி செய்திராவிடில் நான் யாருக்கும் தெரியாத வலைப்பக்கத்திலேயே இன்னும் தொடர்ந்திருப்பேன்..
மூன்றுமுறை கிடைத்திருக்கிறது என்றால், அது பதிவின் தரத்தை நிர்ணயிக்கிறது!!! பட்டாம்பூச்சிகளை வலைப்பூவில் அமரவிடுங்கள்..!! கமல்!!!!
வாழ்த்துகளோடு
ஆதவா//
வாங்கோ ஆதவா?? என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்கள்?? நன்றிகள் ஆதவா!
உங்கள் அன்பு உள்ள வரை கமல் என்றும் வருவான்...!
வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் கமல். உங்கள் பதிவுகள் மொக்கைப்பதிவுகளாக இல்லாமல் மிகவும் தரமானவை நமது ஊர்மணத்தை கொண்ட வசனங்கள். எதற்காக உங்களையே நீங்கள் தாழ்த்திப் பதிவு எழுதவேண்டும். தொடர்ந்து அதிகமாக எழுதுங்கள்.
வீணாப்போன கமல் தலைப்பைப் பார்த்து ஏதோ உலக நாயகனைத் திட்டுகின்றீர்கள் என்று பார்த்தால் உங்களையே திட்டியுள்ளீர்கள்.//
வாங்கோ நண்பா.... யாரோ என்னைத் திட்டி எழுதியதை வைத்துத் தான் இப் பதிவுக்கு இந்தத் தலைப்பை வைத்தேன்.... நன்றிகள் நண்பா.. உங்களின் கருத்துக்களுக்கு!
தொடர்ந்தும் எழுதிட்டாப் போச்சு!
வாழ்த்துக்கள் கமல்....101க்கு...
மீண்டும் சொல்லுறன் கமல்.... தயவு செய்து காலத்தின் + களத்தின் தேவை அறிஞ்சு சரியான விதத்திதில எழுதுங்கோ.... விளங்காடி மீட்டும் என் பின்நூட்ட்ள வாசியுங்கோ , நீங்க எங்க தப்பு பண்ணுறீங்கள் என்று தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீங்கள்..
கமல்...கமல்.முதல்ல மன்னிப்பு.
உண்மையா மன்னிப்பு.ஒரு கிழமை பேசாம இருந்ததில அட...சீ உங்கட நூறாவது பதிப்பைக் கவனிக்கவே இல்ல.கமல் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
பிந்தினாலும் மனதார என் வாழ்த்துக்கள் எப்பவும் உங்களுக்கு.இன்னும் இன்னும் நிறைய எழுத வேணும்.அன்பான அக்கா ஹேமா.
Post a Comment