Saturday, March 28, 2009

வன்னிக்குள் என்ன நடக்கிறது???

உலகம் எல்லாம் இன்று விடை தெரியாத கேள்வியாய் அனைவர் உள்ளங்களிலும் இருக்கும் ஒரு வினாத் தான் வன்னிக்குள் என்ன நடக்கிறது? பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? அட புலிகளில் இன்னும் எத்தனை பேர் மிச்சமுள்ளார்கள் என்றெல்லாம் பல பல வினாக்க்கள் அனைவர் மனங்களிலும் எழுந்து நடமாடுகின்றது? இந்த விடை தெரியாத வினாக்களுக்கெல்லாம் எப்போது விடை கிடைக்கும் என்று எல்லோர் விழிகளும் நாளாந்தம் இணையத்தளத்தினை நம்பி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றன.




இன்று வன்னிக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் மக்களின் இறப்பினை விட புலிகள் எப்போது அடிப்பார்கள் எனும் வினாவே அனைவர் உள்ளங்களிலும் தொக்கி நிற்கிறது? பாவம் புலிகள் அவர்கள் என்ன செய்வார்கள்? தங்களால் இயன்றவரை போரிடுகிறார்கள்?? மக்களின் இறப்பானது அன்றாடம் தொடர்ந்து கொண்டிருக்கையில் புலிகள் எப்போது அடிப்பார்கள்? மக்கள் இறந்தாலும் பரவாயில்லை! புலிகள் அடித்தால் சரி என்றும் எண்ணுவோர் இன்னும் இணையத்தளங்களைச் சுற்றி மேய்ந்தபடி தான் இருக்கிறார்கள்.



இந்த நேரத்தில் தான் வணங்கா மண்ணைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். உணவுத் தடை, மருந்துத் தடை , எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் எனப் பல வகையான தடைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தாலும் எவருக்கும் பணியாது, தலை தாழ்த்தாது உள்ள வன்னி மண்ணினை வணங்கா மண் என்று கூறுதல் சரி தானே? வன்னியில் உள்ள மக்கள் தான் யாழ்பாணத்தை விட்டுப் புலிகள் பின்னகர்ந்த போது புலிகளை வளர்த்து விட்ட மக்கள். இன்னும் சொல்லப் போனால் புலிகளின் ஒப்பற்ற, அதீத படைக் கட்டுமான வளர்ச்சிகளும் வன்னி மண்ணில் இருந்தே முளை கொள்ளத் தொடங்கின.



வணங்கா மண்ணின் பெருமைதனை எடுத்தியம்பும் ஓர் புதிய பாடலை உங்களுக்காகத் தரலாம் என்று நினைக்கின்றேன். இந்தப் பாடல் இப்போது தான் வெளி வந்துள்ளது. எவர்க்கும் பணியாத வணங்கா மண்ணின் பெருமை தனைக் கூறும் பாடலின் பாடல் வரிகளை முதலில் உங்களுக்காகத் தருகின்றேன்.



பாடல்: தமிழர் புரட்சி....
பாடலுக்கு இசை: சந்தோர்ஷ்
பாடலைப் பாடியவர்: சுஜித்ஜி
பாடல் வரிகள்: சுஜித்ஜி








குரல்: காலங் காலமாக இந்த உலகம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்கப் புரட்சி, பிரான்சுப் புரட்சி, ரஷியப் புரட்சி, போன்ற பெரும் புரட்சிகளுக்குப் பின் தமிழீழ தேசத்திலிருந்து அடக்கு முறைகளை உடைத்துப் போராட்டமாய் உருவெடுத்து, இன்று உலகளாவிய ரீதியில் தமிழன் ஒரு பெரும் சூறாவளியாய் தன் இன மானத்திற்காகக் கிளர்ந்தெழுந்திருக்கிறான். இதுவே தமிழர் புரட்சி..!




உரிமை பறித்தார், உடமை அழித்தார்
உறவை எரித்தார் முடிவெது
உண்மை மறைத்தார், பொய்யை விதைத்தார்
எள்ளி நகைத்தார் கொடியவர்!
படை வரும் படை வரும் தமிழரின் படை வரும்
கொடியவர் படை விழும் உறுதியடா
எழுந்து நீ குரல் கொடு சேர்ந்து நீ குரல் கொடு
நம் புல உலகமே அதிருமடா...!



வணங்காமண் கலங்கா மண்
எந்த சக்திக்கும் அடங்கா மண்
முடங்கா மண், நுடங்கா மண்
வன்னியன் கொண்ட வணங்கா மண்???




நிக்காத முறைக்காதை
தமிழைத் தொடர்ந்து மிதிக்காதை?
சிரிக்காதை, நடிக்காதை
நாயாய் நக்கிப் பிழைக்காதை?
தமிழை அழிக்க நினைத்தாயோ??
கூடும் என்று சிரித்தாயோ?
தமிழன் என்ன பனங்காயோ?
கல்லை எறிய நீ நினைத்தாயோ?



தமிழர் உணர்வினிப் பொறுக்காது?
தொடர்ந்தும் பார்த்தது இருக்காது?
துணிவாய் முடிவாய்ப் படை மோதும்
கயவர் படைகள் இனி வேகும்?
இது எங்கள் உரிமைப் போர்!
உலகத் தமிழர் உரிமைப் போர்!
தமிழை முடக்க நினைக்காதை?
முழங்கி முடிப்போம் மறக்காதை!




வணங்காமண் கலங்கா மண்
எந்த சக்திக்கும் அடங்கா மண்
முடங்கா மண், நுடங்கா மண்
வன்னியன் கொண்ட வணங்கா மண்???

(உரிமை பறித்தார், உடமை அழித்தார்...)



இது எட்டுக் கோடி தமிழர் போர்
அவர் தம் வாழ்வின் உரிமைப் போர்
தமிழன் இல்லா தேசம் இல்லையே??
அவனுக்கென்றோர் தேசம் இல்லையே??
பரந்து உலகில் வாழ்ந்தும் அகதி
பிறந்த நாட்டில் கூட அகதி
நிற்காது, நிலைக்காது
நிலமை தொடர்ந்தும் இருக்காது???



தமிழர் மொத்தப் பலம் மோதும்
தட படவென்று தடை வீழும்
கயவர் ஆட்டம் குடை சாயும்
தமிழர் தாகம் நிறை வேறும்
தமிழினில் இல்லை விளையாட்டு
மெதுவாய் நீயும் நடை கட்டு
தமிழர் மறு முறை வாழப் போறார்!
தம்மைத் தாமே ஆளப் போறார்!





வணங்காமண் கலங்கா மண்
எந்த சக்திக்கும் அடங்கா மண்
முடங்கா மண், நுடங்கா மண்
வன்னியன் கொண்ட வணங்கா மண்???

(உரிமை பறித்தார், உடமை அழித்தார்...)



இந்தப் பாடலினைக் கேட்க உங்களிடம் அடோப் பிளாஷ் (Adobe Flash Player) பிளேயர் இருக்க வேண்டும்...




Get this widget | Track details | eSnips Social DNA











இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....


*உலகத் தமிழ் உறவுகளுக்கு!



*பொறுத்தது போதும் பொங்க வேணும்! தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்!


*எங்களின் தாய் நிலமே!


*ஈழ தேசம் எங்களின் தேசம்!



பாடல் தொகுப்பிற்காக நன்றிகளோடு சுஜித்ஜி..!

14 comments:

ஆதவா said...

அப்படி இணையத்தில் தேடிக்கொண்டிருப்பவர்களுல் நானும் ஒருவன் தான்... என்ன நடக்கிறது எனும் ஆவலா? அல்லது என்ன நடக்குமோ எனும் அச்சமா என்று தெரியவில்லை. முல்லைத் தீவை நெருங்கியவர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது..

வழக்கமான உங்களின் அலசல் இதில் மிஸ்ஸிங்.... அதை இந்த பாட்டு நிவர்த்தி செய்கிறது...

கவின் said...

பாடலை கேட்க முடியவில்லையே??
என்ன நடந்த்து??

கவின் said...

வரிகள் நல்லா இருக்கு....!

யாழினி said...

என்னாலும் பாடலை கேட்க முடியவில்லை;
ஆனால் பாடல் வரிகள் அற்புதம்!


//தமிழர் உணர்வினிப் பொறுக்காது?
தொடர்ந்தும் பார்த்தது இருக்காது?
துணிவாய் முடிவாய்ப் படை மோதும்
கயவர் படைகள் இனி வேகும்?
இது எங்கள் உரிமைப் போர்!
உலகத் தமிழர் உரிமைப் போர்!
தமிழை முடக்க நினைக்காதை?
முழங்கி முடிப்போம் மறக்காதை!//

வ‌ரிக‌ளை பார்க்கும் போது புது ச‌க்தியே வ‌ந்த‌து போல் உள்ள‌து.

கலை - இராகலை said...

பாடல் கேட்குதே

கலை - இராகலை said...

//உரிமை பறித்தார், உடமை அழித்தார்
உறவை எரித்தார் முடிவெது
உண்மை மறைத்தார், பொய்யை விதைத்தார்
எள்ளி நகைத்தார் கொடியவர்!
படை வரும் படை வரும் தமிழரின் படை வரும்
கொடியவர் படை விழும் உறுதியடா
எழுந்து நீ குரல் கொடு சேர்ந்து நீ குரல் கொடு
நம் புல உலகமே அதிருமடா...!//

அருமையான வரிகள்

கலை - இராகலை said...

///இன்று வன்னிக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் மக்களின் இறப்பினை விட புலிகள் எப்போது அடிப்பார்கள் எனும் வினாவே அனைவர் உள்ளங்களிலும் தொக்கி நிற்கிறது? பாவம் புலிகள் அவர்கள் என்ன செய்வார்கள்? தங்களால் இயன்றவரை போரிடுகிறார்கள்?? மக்களின் இறப்பானது அன்றாடம் தொடர்ந்து கொண்டிருக்கையில் புலிகள் எப்போது அடிப்பார்கள்? மக்கள் இறந்தாலும் பரவாயில்லை! புலிகள் அடித்தால் சரி என்றும் எண்ணுவோர் இன்னும் இணையத்தளங்களைச் சுற்றி மேய்ந்தபடி தான் இருக்கிறார்கள்.///

:::::::::::::::::::::::::::::
இதை தவிர இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை நண்பரே!

கமல் said...

ஆதவா said...
அப்படி இணையத்தில் தேடிக்கொண்டிருப்பவர்களுல் நானும் ஒருவன் தான்... என்ன நடக்கிறது எனும் ஆவலா? அல்லது என்ன நடக்குமோ எனும் அச்சமா என்று தெரியவில்லை. முல்லைத் தீவை நெருங்கியவர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது..

வழக்கமான உங்களின் அலசல் இதில் மிஸ்ஸிங்.... அதை இந்த பாட்டு நிவர்த்தி செய்கிறது...//



என்ன செய்ய...ஆதவா.....எங்கள் உள்ளங்கள் வேகுகிறது?? உடல் மட்டும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது....

கமல் said...

கவின் said...
பாடலை கேட்க முடியவில்லையே??
என்ன நடந்த்து??//

நண்பா இப்போது பாடலைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன்....
மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்....

கமல் said...

யாழினி said...
என்னாலும் பாடலை கேட்க முடியவில்லை;
ஆனால் பாடல் வரிகள் அற்புதம்!


//தமிழர் உணர்வினிப் பொறுக்காது?
தொடர்ந்தும் பார்த்தது இருக்காது?
துணிவாய் முடிவாய்ப் படை மோதும்
கயவர் படைகள் இனி வேகும்?
இது எங்கள் உரிமைப் போர்!
உலகத் தமிழர் உரிமைப் போர்!
தமிழை முடக்க நினைக்காதை?
முழங்கி முடிப்போம் மறக்காதை!//

வ‌ரிக‌ளை பார்க்கும் போது புது ச‌க்தியே வ‌ந்த‌து போல் உள்ள‌து.//



வரிகளில் உள்ளது போல விடிவு கிடைத்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே யாழினி....

நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்.

கமல் said...

கலை - இராகலை said...
//உரிமை பறித்தார், உடமை அழித்தார்
உறவை எரித்தார் முடிவெது
உண்மை மறைத்தார், பொய்யை விதைத்தார்
எள்ளி நகைத்தார் கொடியவர்!
படை வரும் படை வரும் தமிழரின் படை வரும்
கொடியவர் படை விழும் உறுதியடா
எழுந்து நீ குரல் கொடு சேர்ந்து நீ குரல் கொடு
நம் புல உலகமே அதிருமடா...!//

அருமையான வரிகள்//


எல்லோர் எதிர்பார்புக்களும் நிறைவேற வேண்டும் என்பதே எனது விருப்பமும்...நன்றிகள் கலை....

ஹேமா said...

வீரம் மிக்க வரிகள்.பாடும் குரலின் உணர்வுக்கு ஒரு சபாஷ்.

கமல் said...

ஹேமா said...
வீரம் மிக்க வரிகள்.பாடும் குரலின் உணர்வுக்கு ஒரு சபாஷ்.//


நன்றிகள் ஹேமா வருகைக்கும் கருத்துக்களுக்கும்....

பிளாட்டினம் said...

சபாஷ் சுஜித்ஜி!!!

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).