Friday, March 27, 2009
புலிகள் அழிந்து விட்டார்களாம்...???
(எச்சரிக்கை: கண்டிப்பாக இளகிய மனமுடயவர்கள் இதில் உள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம்)
உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்?? பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம். புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்? அந்த அப்பாவிகள் யார்? இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி
‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க
இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப்பு வலய மக்கள்.
பாவம் உலகத்து மனிதாபிமான நடவடிக்கை நலன் விரும்பிகள்? என்ன செய்வார்கள் அவர்கள்? பயங்கரவாதம் ஒழிகிறது என்று நினைத்து முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். பயங்கரவாதம் அழிகையில் அப்பாவிகள் கொல்லப்படுவது நியாயம் என்று நிதானமாக நீண்ட சிந்தனையில் இருக்கிறார்கள். எது பயங்கரவாதம்? யாராவது விளக்கம் சொல்லுவீர்களா?? எவருக்காவது எது பயங்கரவாதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறத் தெரியுமா??
’பூதகிகள் பாலூட்ட வருகையில் முலையறுப்பதும், கடிக்க வரும் நாயை ஓட வைக்கக் கல் எடுத்து எறிவதும் , கொத்தவெனப் படமெடுக்கும் விசப் பாம்பைக் கொன்று போட நினைப்பதும் தான் பயங்கரவாதமோ? என்னய்யா வேடிக்கை இது? என்ன மனச்சாட்சி உள்ள உலகம் இது? என்ன மௌனித்துப் போய் விட்டீர்களா? கொஞ்சமாவது உங்கள் வாய்களைத் திறவுங்களேன்?? என்ன பயங்கரவாதம் பாதுகாப்பு வலயத்திற்குள்ளா புதைந்து கிடக்கிறது??
பாவம் எங்கள் உறவுகள்? அம்பலவண் பொக்கணையிலும், வலைஞர்மடத்திலும், புதுமாத்தளனிலும் பதை பதைக்கத், துடி துடிக்க நாளொரு பொழுதாகச் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள் என்ன இருண்ட கண்டத்திலா அந்தரிக்கிறார்கள்? இன்று அஞ்சி ஓடி அவலப்பட்டுச் செத்து மடிபவர்கள் யார்?? அவர்கள் யாரிடம் வேண்டுகை வைப்பார்கள்?
‘நேற்று வரை உலகம் அவர்களையே அதிகமாகப் பேசியது.
வன்னியில் நிமிர்ந்துள்ளோர் என்று உற்றுப் பார்த்து உறவாடியது.
ஆனால் இன்றோ??? அழியட்டும் அவர்கள் என ஆழத் துயில் கொள்கிறது??? என்ன செய்யும் உலகம் எங்கள் உறவுகளுக்கு??
’கையெடுத்த கடவுளருமே ஈழத் தமிழர்களுக்குக் கை கொடுக்கவில்லை?
அப்பமாக, அவல் பொரியாக, மோதகமாக வாங்கி உண்ட கடவுளர்
ஈழத் தமிழரைக் கைவிட்டு விட்டனராம்?
உலகம் மட்டும் இன்று உறக்கத்தில் இருக்கிறதாம்?? விடுதலை வேண்டியவர்களைப் பயங்கரவாதம் என்று சொல்லி வீர முழக்கமிடுகிறதாம் உலகம்? இது என்ன வேடிக்கை பாருங்களேன்??
’பாதுகாப்பு வலயத்திலும் பதுங்கு குழிகள்?
பாதுகாப்பு வலயம் என்பதன் அர்த்தம் என்ன?
ஓ அப்படியாயின் பதுங்கு குழிகளும் உயிர் பறிக்கும் குழிகள் தானே??
உலகம் எல்லாம் வாய் நிறையப் புன்னகையோடு வாழும் மனிதர்களே?
எப்படி வாய் நிறைய அழுகிற இந்த மனிதர்களைப் பார்க்க முடிகிறது உங்களால்??
என்ன செய்யப் போகிறீர்கள்?
கரங் கொடுத்து இவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டீர்களா??
இவர்களின் வாழும் உரிமையை வரமளிக்க மாட்டீர்களா?
இவர்கள் பட்டினியில் சாக ஒரு பிடி உணவையேனும்
உங்களால் ருசித்து உண்ண முடியுமா??
மனிதர்களின் மனச் சாட்சி அதற்கு இடம் தருமா??
உலகம் இதயமின்றி இரங்க மனமின்றி இறுமாப்போடு இருக்கிறதாம்?? யாரிடமும் சொல்லி அழ முடியாதுள்ளவர்கள் வேறிடம் சென்று வாழ மாட்டார்கள்??
’சொந்த நிலத்தில் குந்தி இருக்க ஓர் குடி நிலம் கேட்பது தப்பா?? யாரும் ஏதும் சொல்லாமல் உறங்கிக் கிடக்கிறீர்கள் போலும்??? அழியும் நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்??
மீண்டும் அவர்களின் வாசற் கதவுகள் திறக்கப்படும்! மீண்டும் ஆண்ட பரம்பரை தேராவில் வீதியிலும், ஆனையிறவுப் பெரு வெளியிலும், அம்பகாமத்திலும் அச்சமின்றி அகலக் கால் வைக்கும்? இதுவெ உலக நியதி? இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் என எல்லோர் முகங்களும் புன்னகை புரியலாம்? இன்னும் இருப்பது ஐந்து கிலோமீற்றர்கள் தூரமே என இசைப்பாட்டும் இயற்றிப் பாடலாம்? குண்டு துளைப்பினும் பிரபாகரன் படைகள் சாகமல் குறி தவறாமல் தாக்குகிறார்கள் எனப் பெரும் கோசமும் எழும்பலாம்?? வந்த பகையை நிச்சயமாய்த் தமிழன் வெல்லுவான் என்பதும் நாளை ஓர் வரலாறாக மாறலாம்???
தர்மம் அழிந்ததாகவோ, அதர்மம் மோலோங்கியதாகவோ இது வரை யாரும் இலக்கணம் சொன்னதில்லை??? தர்மம் வெல்லும் என்பது வரலாறு??
‘இப்போது இங்கு வரும் காட்சிகளை நீங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தோ
மெத்தையில் இருந்தோ பார்த்து மகிழலாம்?
புலிகள் எப்போது அடிப்பார்கள்? என நானும் நீங்களும் புலத்தில் இருந்து புதிய கவிதைக்கான தலைப்பும் தேடலாம்????
புலிகள் அடிக்கையில் கொடியோடு வீதியில் இறங்கி வீராவேசம் காட்டப் புலத்தில் இருந்து நானும் நீங்களும் புறப்படலாம்??
குளிரூட்டிய அறைக்குள் இருந்து நானும் நீங்களும் புலிகள் அடித்தால் மகிழ்ச்சியாகவும், அடிக்கவில்லை என்றால் துக்கமாகவும் எங்கள் காலத்தைக் கழிக்கலாம்???
‘வன்னிக் குழந்தையாயிற்றே என்று வகை பிரித்து இந்தத் துயர் நிறைந்த காட்சிகளைக் கண்டு உலகம் தூங்கியிருக்கலாம்??? அவர்கள் காத்திருக்கிறார்கள் தங்கள் சொந்த ஊரிற்குப் போவதற்காக?? அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் உலகத்து மனிதர்களைப் போலத் தாமும் உரிமையோடு வாழ்வதற்காக?? வழிகளைத் திறவுங்கள் உலகத்து மனிதர்களே இவர்களுக்காக??
அடக்கு முறைக்கு எதிராகப் போராடியவர்கள் வீழ்ந்ததாக வரலாறு இல்லை.. நாளை நானும் நீங்களும் புலிகள் அழிந்து விட்டால் புலம் பெயர் வாழ்வின் பரவசத்தில் எம்மை நாமே மறந்து, வரலாறுகளைத் தொலைத்தவர்களாய் வண்ண வண்ணக் கனவுகளோடும் வலம் வரலாம்? ஆனால் அடக்கப்பட்ட இனத்திலிருந்து மீண்டும் ஓர் பிள்ளை பிறப்பான்? அவன் பனங்காம மண்ணுள், வன்னிக் காட்டுப் பற்றைகளுக்குள் புதைந்துள்ள துப்பாக்கியினைத் தேடி எடுப்பான்? அவனிலிருந்தும் மீண்டும் ஒரு சரித்திரம் ஆரம்பமாகும்?? அவன் மீண்டும் தன் முந்தையர் வீரத்தை நிலை நிறுத்தப் புறப்படுவான்?
அப்போது நானும், நீங்களும் எங்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இனி எப்போது புலிகள் அடிப்பார்கள்? எத்தனை ஆமி செத்தவனாம் என்று கேட்டு இன்ரநெற்றைத் தட்டிக் கொண்டிருப்போம்? அட விழுந்தாலும் இவர்களுக்கு மீசையிலை மண் ஒட்டவேயில்லை என்று றம்புக்வெலவினதும், கோத்தபாய, மகிந்தவினதும் வம்சக் குழந்தைகள் மீண்டும் ஓர் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் எஞ்சியுள்ள மெலிவதற்கு இடமுமின்றி, பட்டினியால் வாடி, எலும்பும் தோலுமாக உள்ள தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பார்கள்??
உலகம் அப்போது தான் விழித்துக் கொள்ளும்? பழைய விண்டோஸ் விஸ்டாவில் பதியப்பட்ட வன்னிப் படுகொலைகளைத் தூசு தட்டிப் பார்த்து விட்டு ‘அட நாங்கள் எல்லோரும் பிழை விட்டு விட்டோம்? எங்கள் முந்தையர்களாவது தமிழர்களுக்குத் தனி நாட்டினைக் குடுத்திருக்கலாம்?? விழுந்தாலும் மானத்தோடு விழுபவன் தமிழன் அல்லவா?? இனிமேலும் தமிழர்களைப் பணியவைக்க முடியாது என்று சொல்லி தங்கள் மூதாதையர் தமிழர்களின் தனி நாட்டினைக் கண்டு கொள்ளவில்லையே என மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுத் தமிழர்களுக்கென்று தனி நாட்டினை வழங்கி உலகம் மகிழ்வெய்தும்?? அப்போது நான் என்ன செய்வேன்?? நீங்கள் என்ன செய்வீர்கள்?? ‘பிஸ்ணஸ் கிளாஸில்(Bussiness Class) பிளைட் ரிக்கற் புக் பண்ணிக் கிளிநொச்சிக்குச் சென்று இப்போது உள்ள வன்னிப் படுகொலைகள் நிறைந்த வீடீயோக்களும், சண்டைக் காட்சிகளும் கலந்த திரைப்படம் திரையிடப்படுகையில் பின்னிருக்கையில் அமர்ந்து விசிலடித்துப் பார்த்து மகிழ்வோம்?? இது தானே எம்மால் முடிந்தது??? சீ....தூ.....
(இன்னும் ஒரு இரண்டு மாசம் பொறுங்கோ?? இதில் உள்ள நிறைய விடயங்கள் உங்களுக்குப் போகப் போகப் புரியும்??????)
‘அடங்கா மண்ணுக்கு விலங்கிடுதல் சாத்தியமோ??
பனங்காம மண் பணிந்ததாக வரலாறும் உண்டோ???
’வேரிழந்து ஊரிழந்து ஓடி வந்தவர்- நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்??
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் எல்லைப்
போரின் படையாகிப் புலியோடு நின்றவர்??
எம் தலைவா எங்களுடன் நின்று எடுப்பாய்- மீண்டும்
எங்கள் ஊரில் சென்று வாழ வென்று கொடுப்பாய்???
ஆவி உடல் யாவும் உமக்காகக் கொடுப்போம்-தம்பி
அச்சமின்றி உம் அருகில் என்றும் இருபோம்???
எனும் பாடல் காற்றில் கலந்து கந்தகத்துகள்களின் வாசனைகளின் நடுவே பரவும் ஓர் நாள்??
வாழ்வளித்த வன்னி மண்ணே உன்னைக் கொஞ்சவா- நாங்கள்
பட்ட கடன் உந்தனுக்குக் கொஞ்ச நஞ்சமா??
...................................
மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம்- எங்கள்
ஊரில் ஏறி வந்த பகை யாவும் துடைப்போம்
நாளை தமிழ் ஈழம் என நம்பியிருபோம்
அந்த நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்..!
எனும் புதுவையின் பாடலும் மொழிபெயர்ப்பு இலக்கிய வரிசையில் தனக்கென ஓர் தன்யிடத்தையும் பிடிக்கலாம்??? என்ன ஏதாவது புரிகிறதா?? போகப் போகப் புரியும்??
இதில் உள்ள காணொளியை இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம்.
காணொளித் தொகுப்பிற்காக நன்றியுடன் ‘ஊடக இல்லம் மற்றும் தாயகக் குரல்’
பிற் குறிப்பு: இப் பதிவிற்கு உங்கள் வாக்குகளை வாரி வழங்கி அனைவரையும் இப் பதிவு சென்று சேரச் செய்யுங்கள்..!



31 comments:
காங்கிரசும் கருனானிதியும் நகமும் சதையும் போல...
இருக்கட்டும்...தமிழக மக்கள் தேவையற்ற "நகத்தை" வெட்டி எறிவோம்!
உங்கள் கோபாவேசப் பதிவு கண்டு பிரமிப்புறுவதா, கொதித்தெழுவதா, அடங்கிப் போவதா, சாவகாசப்படுவதா என்ற உணர்வு தெரியாமல் இருக்கிறேன் கமல். உங்கள் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்தான்.. காலம் என்பதன் நீட்சி முடிவில்லாததாக இருக்கிறது. அது விடையளிக்குமளவுக்கு பொறுமை இருக்கலாம்.. ஆனால் உயிர்?
முல்லைத் தீவை இன்னும் நெருங்கிக் கொண்டிருக்கும் படையினரால் ஜீரணிக்க இயலாத கோபங்கள் மருத்துவமனையின் கீழ் பாய்கிறது. மிச்சத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு குண்டுச் சோறு திணிக்கப்படுகிறது. எனக்கென்னவோ இப்பொழுது ஓரளவுக்கு அவர்கள் பின் தங்கலாம் எனும் கருத்து எழுகிறது. இங்கிலாந்து இந்தியாவை நிர்பந்திக்க, இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவருமா... இல்லை செவிடன் காதில் ஓதிய சங்கைப் போன்று மகிந்தா செவிடாவாரா என்பது தெரியவில்லை..
ஆனால் ஒன்று உறுதி... எந்த கொலைகாரனும் நிர்பந்தத்தால் நல்லவனாகமாட்டான்.... அவனாக திருந்தினால்தான் உண்டு!
அண்ணை அப்ப அண்ணையாக்கள் இனி என்னவாம் செய்யப் போகினை???? ஒருக்கால் கேட்டுச் சொல்ல ஏலுமே??
உமக்கு என்ன விசரே?? உந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறீர்? அண்னை எப்பவுமே அடிப்பார். அவர் எங்களைக் கை விட மாட்டார்?? நீர் எங்கை இருந்து வந்தனீர்??
ஈழத்தின் நிலை கண்டு உள்ளம் நோகிறது கமல்.. :-(
இத்தனை மக்களை கொன்றும், அவலநிலைக்கு தள்ளி என்ன சாதிக்க போகிறது இந்த சிங்கள தேசம். புலத்தில் தமிழர்கள் ஒன்றினைந்து யுத்த நிறுத்தற்கான அழுத்தங்களை கொடுத்த போதிலும் இங்கு வாழும் தமிழர்கள் இதுவரை ஓர் போராட்டத்திற்கு முன்வரவில்லை. என்ன பயப்பிட வேண்டியிருக்கிறது கமல். எத்தனை பேரை சுட்டு வீழ்த்த முடியும், எத்தனை பேரை கைதுப்பன்ன முடியும். கடவுளே... முழுநிலத்ததையும் பிடித்து விட்டதாக மார்த்தடிக்கொள்ளும் துவேஷவாதிகள் இருக்கின்ற கொஞ்ச நிலைத்தை கூட விட்டுவைக்கலாமே! அங்கு சொன்று என்ன சாதிக்க போகிறார்கள்? இவை வெறும் இன அழிப்பு மட்டுமே!
ஈழத்தமிழனின் ஓலம் என்று தீருமோ????/
everyday SLA's deat toll is
100, 200, 300, 600, 1000,...
:)
why are you crying Kamal?
we are winning...
within weeks
atleast 50000 Army will be dead...
we can walk to Jaffna from Mullai through Elephant Pass....
ttpian said...
காங்கிரசும் கருனானிதியும் நகமும் சதையும் போல...
இருக்கட்டும்...தமிழக மக்கள் தேவையற்ற "நகத்தை" வெட்டி எறிவோம்!//
நீங்கள் இன்னும் பதிவை முழுசாகப் படிக்கவில்லைப் போலும்?? நான் சொல்லாத விடயத்தை வைத்துப் பின்னூட்டமா? ஆடுங்கள் கபடி...
ஆதவா said...
//உங்கள் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்தான்.. காலம் என்பதன் நீட்சி முடிவில்லாததாக இருக்கிறது. அது விடையளிக்குமளவுக்கு பொறுமை இருக்கலாம்.. ஆனால் உயிர்?//
இது தான் மனித வாழ்வு என்ற வரையறைக்குள் வாழப் பழகிக் கொண்டவர்கள் நாங்கள் என்பதால் காலைத்தை நம்பி என்ன? இனி எங்கள் கால்களை நம்பி என்ன??//
முல்லைத் தீவை இன்னும் நெருங்கிக் கொண்டிருக்கும் படையினரால் ஜீரணிக்க இயலாத கோபங்கள் மருத்துவமனையின் கீழ் பாய்கிறது. மிச்சத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு குண்டுச் சோறு திணிக்கப்படுகிறது. எனக்கென்னவோ இப்பொழுது ஓரளவுக்கு அவர்கள் பின் தங்கலாம் எனும் கருத்து எழுகிறது. இங்கிலாந்து இந்தியாவை நிர்பந்திக்க, இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவருமா... இல்லை செவிடன் காதில் ஓதிய சங்கைப் போன்று மகிந்தா செவிடாவாரா என்பது தெரியவில்லை..
ஆனால் ஒன்று உறுதி... எந்த கொலைகாரனும் நிர்பந்தத்தால் நல்லவனாகமாட்டான்.... அவனாக திருந்தினால்தான் உண்டு!//
இனிமேல் திருந்துதல் என்ற பேச்சை விட இனத்தின் கருவினை அழித்த பின்னர் தான் இங்கே திருந்துதல் சாத்தியமாகலாம் என்று கூறல் சரி.
மதவடி said...
அண்ணை அப்ப அண்ணையாக்கள் இனி என்னவாம் செய்யப் போகினை???? ஒருக்கால் கேட்டுச் சொல்ல ஏலுமே??//
நான் என்ன அண்ணையாக்கடை ஊடகப் பேச்சாளரே?? சனம் செத்தாலும் பரவாயில்லை அடி விழவேணும் என்று தான் இருக்கிறீங்கள்?? நல்லதே நடக்கட்டும்.! //
+++++++++++++++++++++++++
பொலிகண்டியான் said...
உமக்கு என்ன விசரே?? உந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறீர்? அண்னை எப்பவுமே அடிப்பார். அவர் எங்களைக் கை விட மாட்டார்?? நீர் எங்கை இருந்து வந்தனீர்??//
அது சரி அண்ணை எப்பவுமே கை விட மாட்டார் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் மட்டும் உங்கடை கைகளைக் காப்பாற்றூவதற்காக வெளி நாட்டிற்கு ஓடி வந்து ஒளிஞ்சிருப்பீங்கள்?? அப்ப அங்கை உள்ள மிச்ச ஆட்களின் நிலமை???
கலை - இராகலை said...
இத்தனை மக்களை கொன்றும், அவலநிலைக்கு தள்ளி என்ன சாதிக்க போகிறது இந்த சிங்கள தேசம். புலத்தில் தமிழர்கள் ஒன்றினைந்து யுத்த நிறுத்தற்கான அழுத்தங்களை கொடுத்த போதிலும் இங்கு வாழும் தமிழர்கள் இதுவரை ஓர் போராட்டத்திற்கு முன்வரவில்லை. என்ன பயப்பிட வேண்டியிருக்கிறது கமல். எத்தனை பேரை சுட்டு வீழ்த்த முடியும், எத்தனை பேரை கைதுப்பன்ன முடியும். கடவுளே... முழுநிலத்ததையும் பிடித்து விட்டதாக மார்த்தடிக்கொள்ளும் துவேஷவாதிகள் இருக்கின்ற கொஞ்ச நிலைத்தை கூட விட்டுவைக்கலாமே! அங்கு சொன்று என்ன சாதிக்க போகிறார்கள்? இவை வெறும் இன அழிப்பு மட்டுமே!//
துப்பாக்கி முனைகள் கழுத்திற்கு முன்னே நீட்டிக் கொண்டிருக்கப்படும் போது எவரய்யா முன் வருவார் போராட...???
இன அழிப்பு என்பது மட்டும் வெளிப்படையான உண்மை...
வெத்து வேட்டு said...
everyday SLA's deat toll is
100, 200, 300, 600, 1000,...
:)
why are you crying Kamal?
we are winning...
within weeks
atleast 50000 Army will be dead...
we can walk to Jaffna from Mullai through Elephant Pass....//
கனடாவிலை குளிர் அறையிக்கை இருந்து கொண்டு யாழ்ப்பாணத்திற்கு ஆனையிறவாலை நடந்து போகலாம் என்று நல்லாச் சொல்லுவீங்கள்? இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வாழ்வது உங்களுக்கு நல்ல சொகுசான விடயம் போல?? உங்கள் உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்து வந்து ரொரன்றோவிலு, ஸ்காபுறோவிலும், மார்கத்திலும் சந்தோசமாக இருக்கலாம்??
அங்கே உள்ள ஈழத்திற்காகப் போராடியவர்கள் மட்டும் இலங்கை இராணுவம் முற்றாகக் கைப்பற்றிய பிறகு வதைப்பட்டுச் சாவதோ???? என்னயா நீதி சொல்லுறீங்கள்? உங்களுக்கு உள்ளது என்ன மனசா? இல்லைக் கல் நெஞ்சமா?
கொஞ்சமெண்டாலும் உந்த வறட்டுக் கொள்கையை விட்டு வெளியே வாங்கே? கண்ணைத் திறவுங்கோ? புலிகள் மீது ஆயிரம் கோபம் உங்களுக்கு இருக்கலாம்? அவர்களில் ஆயிரம் பிழைகள் இருக்கலாம்? எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நண்பரே?
இன்னும் புத்தி தெளியவில்லையோ?
ஒரே வழி ஸ்காபுறோவிலை புலிகளை ஒழிப்பும் என்று போய் முழங்குவதும் முல்லைத்தீவு மக்களைக் கொன்ற பின்னர் மீட்டெடுப்போம் என்று சங்கூதுவதும் தான்?? என்ன புரிகிறதா???
we are winning...
within weeks //
இதைத் தானே நீங்கள் கிளிநொச்சி பிடிச்ச போதும் சொன்னீங்கள்? இந்தா பிரபாவைப் பிடிக்கிறம்? புலிகளைப் போடுறம் என்று முழக்கமிட்டுப் போட்டு ஏதாவது செய்தீங்களே?? இன்னும் நிழலைக் கூட நெருங்கக் காணேல்லை? அதுக்கை ஒரு கிழமை காலக் கெடு சொல்லுறீங்கள்???
சொல்லுறதை விடுத்துச் செயலிலை ஏதாவது காட்ட யோசியுங்கோ? இல்லையெண்டால் எல்லோரும் அண்டப் புளுகர்கள் தான்???
கமல்,பொதுமக்களால் அல்லது ஒற்றை மனிதனால் செய்ய முடியாத ஒன்றை "நீங்கள் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்"என்று திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்.எங்கள் அரசியலால் அல்லது உலக நாடுகளால் மட்டுமே இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர முடியும்.
என்னால் இப்போதைகு அழ மட்டுமே முடிகிறது.முடிந்தால் சொல்லுங்கள்.
தனிப்பட்ட ஹேமா என்ன செய்ய வேண்டும் என்று.என்னால் முடிந்ததைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.அது தீர்வுக்கு வழி இல்லையே.
//எது பயங்கரவாதம்? யாராவது விளக்கம் சொல்லுவீர்களா?? எவருக்காவது எது பயங்கரவாதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறத் தெரியுமா?? //
எனக்கும் இதுவரை பொருள் தெரியாத ஆனால், பொருள் தெரியப்படவேண்டிய பதம் இது. பொருள் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
தேடிப்பார்த்ததில் சிக்கியது:
Terrorism is the war of the poor, and war is the terrorism of the rich.
அடேயப்பா! மனது கலங்கி போகிறது. குழந்தைகள் கூட விடுபடவில்லையே!
கடவுளே! இறந்தபின்னர்தானே சொர்க்கம் நரகம் என்பதெல்லாம்?!
இதென்ன இவர்களுக்கு மட்டும் உயிரோடிருக்கையிலேயே நரகமா?!
இவர்களும் நம்மைப்போல வாழ்ந்திட இறைவன் அருள் புரியவேண்டும்
In 2004-5
everyone believed that it is matter of time for Praba to "win" Tamil Eelam and
Srilankan Army is at the mercy of ltte :)
today what happened?
whether you accept it or not
Singalese Army (whether it be obtaining Indian or International major countries' support...or kicking ltte) they won..fair and square..
today whole of Tamils' lives is at the MERCY OF SINGALESE.... :)
the killings in No-Fire-Zone is a teaching for anyone who thinks that "armed struggle" can bring any solution...
So far ltte won because of it's brutality...
Do you remember "how ltte came to someone's house and took them for enquiry and the nextday that guy was found with bullet in head"...as a normal (spineless) tamil..to me ltte, karuna, SLA all are same...
i praise the one who wins ;)
you should have read
"why are you crying Kamal?
we are winning...
within weeks
atleast 50000 Army will be dead...
we can walk to Jaffna from Mullai through Elephant Pass...."
that "we are winning" - is from Tamils in Canada Scarborough :)
கமல்!
சில தவறான கண்ணோட்டங்களை நீங்கள் விதைக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். எந்தவொரு வேளையிலும் எதிர்மறையாகவே பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்று புலம்பெயர் நாடுகளில் கணிசமான அளவு மக்கள் பெருங்கோபத்துடனும் ஆற்றாமையுடனுமே இருக்கிறார்கள்.வீதிப்போராட்டங்களில் வரும் மக்களின் உணர்ச்சிப் பெருக்கினையும், தாயக மக்கள் பற்றிய அக்கறையையும் நீங்கள் அறியவில்லையா? அவர்களுக்கு உணர்வுகள் உள்ள அளவுக்கு எதை எப்படிச் செய்யவேண்டும் என்பது தெரியவில்லை, அல்லது அதைச் சொல்லவேண்டியவர்கள் உருப்படியாகச் சொல்லவில்லை. ”நீங்கள் காசைத்தந்தால் போதும் எல்லாத்தையும் அண்ணை பாத்துக்கொள்ளுவார்” என்று மக்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் வளர்த்துவிட்டது யார் குற்றம்? எதற்கெடுத்தாலும் வெளிநாட்டில் ஏசி அறை என்று பாட்டுப்பாடும் பழைய செயற்பாட்டை நாங்களாவது விடுவோம் நண்பா. போராட்டம் என்ற கத்தியின் இரண்டுமுனைகளில் ஒன்று புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது. அது போராடிக்கொண்டும் இருக்கிறது.(மேற்குலக நிலைப்பாடுகளைக் கொஞ்சம் கவனியுங்கள்) அதை எப்படி இன்னும் வீரியமாக்கலாம் செயற்திறனாக்கலாம் என்பதைப்பற்றிச் சிந்திப்போம், எழுதுவோம். உங்களைப்போன்ற ஒரு கருத்தாளரிடமிருந்து எதிர்மறையான எண்ணங்கள் வரக்கூடாது என்பதுதான் என் எதிர்பார்ப்பு.
வன்னி மக்கள் படும் துயரங்கள் மிகப்பெரியவை. அதைத் தீர்க்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எழுதுங்கள். உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்.
கிருஷ்ணா சொன்னது போல எமக்கிப்பொழுது தேவை அடுத்து நாம் என்ன செய்யலாம் என்பதுதான், முறையான தீர்வு இப்பொழுதிருக்கிற தலைமுறையிடம் இருக்கிறது கமல்...
ஹேமா said...
கமல்,பொதுமக்களால் அல்லது ஒற்றை மனிதனால் செய்ய முடியாத ஒன்றை "நீங்கள் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்"என்று திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்.எங்கள் அரசியலால் அல்லது உலக நாடுகளால் மட்டுமே இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர முடியும்.
என்னால் இப்போதைகு அழ மட்டுமே முடிகிறது.முடிந்தால் சொல்லுங்கள்.
தனிப்பட்ட ஹேமா என்ன செய்ய வேண்டும் என்று.என்னால் முடிந்ததைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.அது தீர்வுக்கு வழி இல்லையே.//
உலகம் உறங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் என்ன செய்வோம்???
ஆதிரை said...
தேடிப்பார்த்ததில் சிக்கியது:
Terrorism is the war of the poor, and war is the terrorism of the rich. //
ஆதிரை அப்ப இது தான் சமாதானத்திற்கான யுத்தமோ???
ஷீ-நிசி said...
அடேயப்பா! மனது கலங்கி போகிறது. குழந்தைகள் கூட விடுபடவில்லையே!
கடவுளே! இறந்தபின்னர்தானே சொர்க்கம் நரகம் என்பதெல்லாம்?!
இதென்ன இவர்களுக்கு மட்டும் உயிரோடிருக்கையிலேயே நரகமா?!
இவர்களும் நம்மைப்போல வாழ்ந்திட இறைவன் அருள் புரியவேண்டும்//
நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
வெத்து வேட்டு said...
In 2004-5
everyone believed that it is matter of time for Praba to "win" Tamil Eelam and
Srilankan Army is at the mercy of ltte :)
today what happened?
whether you accept it or not
Singalese Army (whether it be obtaining Indian or International major countries' support...or kicking ltte) they won..fair and square..
today whole of Tamils' lives is at the MERCY OF SINGALESE.... :)
the killings in No-Fire-Zone is a teaching for anyone who thinks that "armed struggle" can bring any solution...
So far ltte won because of it's brutality...
Do you remember "how ltte came to someone's house and took them for enquiry and the nextday that guy was found with bullet in head"...as a normal (spineless) tamil..to me ltte, karuna, SLA all are same...
i praise the one who wins ;)//
நண்பா வெத்து வேட்டு..?
காலங் கடந்த பின்னர் தான் அவர்கள் அப்படிக் கொன்றது சரியா?
அவர்கள் தான் கொன்றார்களா என்பது பற்றியெல்லாம் ஆராய்வது அழகல்ல?
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் புலிகள் நிச்சயம் வெல்வார்கள் என்பது தான்.
அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்புக்களும் பொய்யாகிப் போகாது....
எதற்கும் பொறுத்திருங்கோ....
வெத்து வேட்டு said...
you should have read
"why are you crying Kamal?
we are winning...
within weeks
atleast 50000 Army will be dead...
we can walk to Jaffna from Mullai through Elephant Pass...."
that "we are winning" - is from Tamils in Canada Scarborough :)//
நீங்கள் வழமையாகவே எதிர் கருத்துத் தான் சொல்லுவீர்கள்?
அது தான் நானும் அப்படி நினைத்தேன்??
கிருஷ்ணா said//
சில தவறான கண்ணோட்டங்களை நீங்கள் விதைக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.//
கிருஸ்ணா நான் தவற கருத்தை விதைக்க வில்லை...
ஒரு சில எதிர் மறையான கருத்துக்களைக் கூறுபவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத் தான் நான் அப்படிக் கூறினேன்....அது தவிர நான் அதனை விட வேறு ஏதும் தப்பான கண்ணோட்டத்தில் சொல்ல முன் வரவில்லை..
++++++++++++++++++++++++++++++++
வீதிப்போராட்டங்களில் வரும் மக்களின் உணர்ச்சிப் பெருக்கினையும், தாயக மக்கள் பற்றிய அக்கறையையும் நீங்கள் அறியவில்லையா?//
நண்பரே இன்றைய புலம் பெயர் மக்களின் எழுச்சி பற்றி நான் நன்கு அறிந்தவன். நான் இன்னமும் திறக்கப்படாத கண்களைத் திறக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கருத்துக்களைச் சொன்னேன். மக்களின் அபரிமித எழுச்சி காரணாகமாகவே சிறீலங்கா அரசானது இன்றைய கால கட்டத்தில் சர்வதேச மட்டத்தில் பாரிய அழுத்தங்களைச் சந்திக் கொண்டிருப்பதும் உண்மை..
*******************************
நீங்கள் காசைத்தந்தால் போதும் எல்லாத்தையும் அண்ணை பாத்துக்கொள்ளுவார்” என்று மக்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் வளர்த்துவிட்டது யார் குற்றம்? //
ம்....அது ஒரு சில செயற்பாட்டாளர்களின் வேண்டத்தகாத கருத்துக்கள் தான். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.
தமிழன்-கறுப்பி... said...
கிருஷ்ணா சொன்னது போல எமக்கிப்பொழுது தேவை அடுத்து நாம் என்ன செய்யலாம் என்பதுதான், முறையான தீர்வு இப்பொழுதிருக்கிற தலைமுறையிடம் இருக்கிறது கமல்...//
நன்றி தமிழன்...
இளைய தலை முறையின் முறையான செயற்பாடுகளால் தான் எங்கள் இனத்தின் அவலங்கள் உலகறிய்ச் செய்யப்படுகின்றன என்பது மட்டுமே உண்மை..
நன்றி தமிழன்... தொடர்ந்தும் வாங்கோ....!
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and who is misleading them.. but the true is they are deciding the majority of an opinion..
Krishna u have done a great work.. kamal don't post anything in negative way.. encourage the diaspora.. they r doing their maximum.. its start bit late...but don't make it to stop.. now only the world is getting to know about the war in Sri Lanka and then the Tamil nationality and then the Tamil nation and then the the great leader of us.
please encourage and think in all ways to bring this up.. and to pour oil to the liberation fire on Tamils' (each of ours) mind...
காணொளி துயரத்தின் சிகரம்.
கமல்!அருந்ததிராயின் பார்வையில் இலங்கை என்ற எனது பதிவை எட்டிப் பாருங்கள்.அருந்ததிராயின் கருத்தின் சாரத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் பலருக்கும் கொண்டு செல்வது நமது கடமை.
நமது குரல்களுடன் அருந்ததிராய் போன்ற முகம் தெரிந்த குரலும் சேர்ந்து ஒலிப்பது மனித அவலங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.
Post a Comment