Friday, March 20, 2009
இழந்தவை இனிக் கிடைக்குமா??????????
பூமியில் பிறந்த ஒவ்வோர் மனிதனும் தன் வாழ் நாளில் எதையோ இழந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் ஈழத் தமிழர்களாகியா நாங்கள் இழப்பவை, இழந்து கொண்டிருப்பவை அதிகம்.. என் வாழ் நாளிலும் இப்படியான இழப்புக்கள் அதிகம் என்றே கூறலாம். நான் என் வயதில் என் அறிவுக்கு எட்டியவரை என் தந்தையாருடன் வாழ்ந்தது வெறும் மூன்றே மூன்று ஆண்டுகள் மாத்திரமே??? மிகுதிக் காலங்களை என் தந்தையாருடன் கழிக்க முடியாத பைத்தியக்காரனாக ஆகிவிட்டேன். காரணம்??? இன்று புலம் பெயர்ந்து இங்கு வந்து நடைப் பிணமாக வாழும் சராசரி மனிதனாக நானும் மாறியமையே ஆகும்??
என் தந்தையாரின் சொல்லுக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அவருடன் பேசும் போதும் ஒருவித தயக்கம் தான் மனதில் இன்றும் இருக்கும்? அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை??
இன்றைய உலகில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் செய்த பாவம் என்ன??? கொடிய யுத்தத்தின் கோரப் பசியால் தன் தந்தையை இழந்த ஒரு பிஞ்சு மனதின் மனக் குமுறலாய் ஒலிக்கும் ஒரு பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். இந்தப் பாடல் பற்றி அதிக விளக்கம் கொடுத்து உங்கள் மனதை நோகடிக்க நான் விரும்பவில்லை...
உணர்வின் வரிகளுக்குள் உங்களையே தொலைத்து விட்டு அழுபவர்கள் இந்தப் பாடலைக் கேட்காது இருப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.
பாடல்: அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே..
பாடியவர்: மாவீரன் குட்டிக்கண்ணன்
பாடல் வரிகள்: துளசிச் செல்வன்
பாடலுக்கு இசை: போராளி சிறீகுகன்
இந்தப் பாடலின் பாடல் வரிகள் இங்கே உங்களுக்காய்...
‘அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே
எப்போதும் நீயிருக்க ஆசை வைச்சேன் அப்பாவே
துப்பாக்கி போல் மனசு தூங்காமல் விழித்திருக்கும்
எப்போதும் உம் நினைவு கற்பனையில் விழித்திருக்கும்
(அப்பாவே பாரதி......)
மீசையிலை இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்?
கடலினில் கேட்ட வெடியினால் துடித்து
கரையில் இருந்து நானும் பாடித் தவிச்சேன்!
பட்ட மரம் தானே கட்டு மரங்கள்?
கட்டு மரம் மேலே பூத்த ஸ்வரங்கள்
வெட்டுப் பட்டுத் தானே ஓடும் சின்ன மரங்கள்??
வெட்டுப் பட்டுத் தானே வாடும் சின்ன மரங்கள்?
முட்டி மோதித் தந்ததாரு சோக வரங்கள்???
சின்ன வயசில் நான் என்ன செய்தேன்?
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்??
(அப்பாவே பாரதி...)
கடலினில் தானே எந்தன் கண்கள்
கண்ணுக்குள் வாழும் வற்றாக் கடல்கள்
உடலைக் கூடக் கண்ணில் நான் காணவில்லையே
கரையில் மீன்கள் வந்து கதை பேசவில்லையே??
நாளைக்கு கடல் எங்கள் கையில் சேரும்
உந்தன் மேனிக்கு அலை வந்து பூக்கள் போடும்??
(அப்பாவே பாரதி போல....)
இப் பாடலின் காணொளி இங்கே உங்களுக்காக.....!
null
பாடல் தொகுப்பிற்காக நன்றியுடன் தமிழமுதம்..!

16 comments:
//மீசையிலை இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்?//
அருமையான வரிகள்... பிரிவின் துயரம் எப்போது முடியும்????.........
துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்புவோம்.
பகிர்வுக்கு நன்றி!
இழந்தவைகள் என்றும் கிடைப்பதில்லை... ஏனெனில் இழப்பு என்பது இல்லாமல் எதுவுமில்லை.... ஆனால்...
என் அண்னனை நான் இழந்தபொழுது ஏற்பட்ட நினைவு வடு, இன்றும் துருத்திக் கொண்டு நிற்கிறது கமல்... ஒவ்வொரு சக மனிதர்களையும் இழக்கும் ஈழத்தில் எப்படியிருக்கும் என்று கற்பனிக்க முடியவில்லை.
தந்தையரோடு நீங்கள் இருந்த காலம்ங்கள் குறைவு என்றாலும் அவரது நினைவுகள் ஆக்கிரமித்திருக்கும் பாசமே நிறைவுதான்...
பாடலில் அடங்கியிருந்த அர்த்தமும் லாவகமான சமூக சிந்தனையும் கவர்ந்தது!!! கேட்க முடியாத எனக்கு படிக்கத் தந்தமைக்கு நன்றி கமல்.
இழந்தவர்களதும் இழந்தவைகளதும் நினைவுகள்தான், இருப்பவர்களை இலக்குகள் நோக்கி விரையவைக்கும். போர்க்களம் முதல் பொதுமக்கள் வாழ்க்கை வரை இது பொருந்தும்.
இந்தப்பாடல், எனக்கு அண்ணனாகவும் நண்பனாகவும் இருந்த ஒரு மாவீரனை ஞாபகப்படுத்துகிறது. அதிகமாக நேசிக்கும் எதுவும் நிலைப்பதி்ல்லை என்பது உண்மைதான்...
கமல் நிறைந்த சொந்தங்கள் இழந்துவிடோமே தவிர அவர்களது நினைவுகளை இழக்கவில்லை
தானே.போனவாரம் என் சொந்த அத்தான்(அத்தையின் மகன்)இறந்துவிட்டார்.எத்தனை சண்டைகள் சந்தோஷங்கள்.உறவைத் தவிர்த்தேன் வேண்டாம் என்று.என்றாலும்...!
அப்பா..சொல்லும்போதே வலிதான்.மிச்சம் ?
கமல்.... உங்கள் துயர் புரிகிறது.... ஆனாலும் துயரை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு என்று சொல்ல வைக்க இந்த முப்பது வருடமாய் தன் தந்தை மட்டும் இல்லை குடும்பத்தையே அடைவு வைத்து செயலாற்றும் தீர்க்கதரிசி , கவிய நாயகன் மீண்டும் ஒருமுறை பிறக்க மாட்டன்... எவர் என்ன செய்தாலும் பொறுத்து போகும் மென் குணம் கொண்ட இனத்திர்ற்கு அதன் வீரத்தின் புறநானுற்று பக்கத்தை தட்டி எழுப்ப எல்லாராலும் முடியாது... அதற்கென்று பிறந்த மன்னன் குடிகளை பலிகொடுக்க மாட்டன்... இதை என்று நீங்களும் உங்கள் உறவுகளும் உணர்குரீர்களோ அன்று முடியும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் விளங்க... அடிமையாய் தினம் செத்து வாழாமல் வீரனாய் வழுவமே...
எனக்கும் ஒரு சித்தப்பா நான் நாலு வயத இருக்கும் போது என் கால் தளஙியை எடுத்துபோய் போட்டு படுப்பார் 12 மணிக்கு பிறகு விட்ட வந்திட்டு.. அயல் நட்டு பேய்கள் அவரை அந்த மனநிலைக்கு ஆளாக்கிச்சு... திலீபன் மாதிரி அவரால முடியேல்ல...குப்பி தான் கை கொடுத்துது... பள்ளிக்கு என்னை கூட்டி போக சித்தப்பா கிடைக்காமல் போயிட்டார்... அப்பம்மாவுக்கு ஒற்றை மகனே இல்லை. கவலையை விட மனதில மேலோங்கி இருந்தது தன் தங்கையின் , மகளின் மனம் கைப்பற்றப் பட்டது தான். ஆனாலும் அவை சொல்லி தந்ததில்லை இந்த நியாய அநியாயங்கள்... நானே புரிஞ்சு கொண்டது தான்... இது எங்களிட்ட திணிக்கப் பட்டது தான்... நாங்க விரும்பினதில்லை... என்றாலும் நாங்கள் அடங்கி அடிமையாய் சாகும் இனம் இல்லை அன்றோ... ஏன் இந்த புலம்பல்...
ஏனுங்கோ அது என்ன மெல்பேர்ன் கமல் அங்க்யே பொறந்து வளந்தீங்களோ
"Anonymous said...
ஏனுங்கோ அது என்ன மெல்பேர்ன் கமல் அங்க்யே பொறந்து வளந்தீங்களோ"
He has been living there, so he can put, because, we can identify that he is in Melbourne, right?
Also, didn't you read his other posts?
Nice post anna...
Everything will be alright (We must think this way)
அத்திரி said...
//மீசையிலை இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்?//
அருமையான வரிகள்... பிரிவின் துயரம் எப்போது முடியும்????.........//
+++++++++++++++++++++++
அது தான் எனக்கும் தெரியவில்லை??
ஜோதிபாரதி said...
துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்புவோம்.
பகிர்வுக்கு நன்றி!//
நம்புவோம்...
ஆதவா said...
இழந்தவைகள் என்றும் கிடைப்பதில்லை... ஏனெனில் இழப்பு என்பது இல்லாமல் எதுவுமில்லை.... ஆனால்...
என் அண்னனை நான் இழந்தபொழுது ஏற்பட்ட நினைவு வடு, இன்றும் துருத்திக் கொண்டு நிற்கிறது கமல்... ஒவ்வொரு சக மனிதர்களையும் இழக்கும் ஈழத்தில் எப்படியிருக்கும் என்று கற்பனிக்க முடியவில்லை.
தந்தையரோடு நீங்கள் இருந்த காலம்ங்கள் குறைவு என்றாலும் அவரது நினைவுகள் ஆக்கிரமித்திருக்கும் பாசமே நிறைவுதான்...
பாடலில் அடங்கியிருந்த அர்த்தமும் லாவகமான சமூக சிந்தனையும் கவர்ந்தது!!! கேட்க முடியாத எனக்கு படிக்கத் தந்தமைக்கு நன்றி கமல்.//
துயரங்கள் சூழ்ந்த வாழ்வினுக்குள் புதைந்து எம்மை நாமே தொலைத்து விட்டு அழுது கொண்டிருக்கின்றோம்..
கிருஷ்ணா said...
இழந்தவர்களதும் இழந்தவைகளதும் நினைவுகள்தான், இருப்பவர்களை இலக்குகள் நோக்கி விரையவைக்கும். போர்க்களம் முதல் பொதுமக்கள் வாழ்க்கை வரை இது பொருந்தும்.
இந்தப்பாடல், எனக்கு அண்ணனாகவும் நண்பனாகவும் இருந்த ஒரு மாவீரனை ஞாபகப்படுத்துகிறது. அதிகமாக நேசிக்கும் எதுவும் நிலைப்பதி்ல்லை என்பது உண்மைதான்...//
கிருஸ்ணா..நாங்கள் இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையில் இன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்,..
ஹேமா said...
கமல் நிறைந்த சொந்தங்கள் இழந்துவிடோமே தவிர அவர்களது நினைவுகளை இழக்கவில்லை
தானே.போனவாரம் என் சொந்த அத்தான்(அத்தையின் மகன்)இறந்துவிட்டார்.எத்தனை சண்டைகள் சந்தோஷங்கள்.உறவைத் தவிர்த்தேன் வேண்டாம் என்று.என்றாலும்...!
அப்பா..சொல்லும்போதே வலிதான்.மிச்சம் ?//
ஹேமா...என்ன செய்வோம்?? என்று தணியும் இத் துயர்???
பிளாட்டினம் said...
கமல்.... உங்கள் துயர் புரிகிறது.... ஆனாலும் துயரை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு என்று சொல்ல வைக்க இந்த முப்பது வருடமாய் தன் தந்தை மட்டும் இல்லை குடும்பத்தையே அடைவு வைத்து செயலாற்றும் தீர்க்கதரிசி , கவிய நாயகன் மீண்டும் ஒருமுறை பிறக்க மாட்டன்... எவர் என்ன செய்தாலும் பொறுத்து போகும் மென் குணம் கொண்ட இனத்திர்ற்கு அதன் வீரத்தின் புறநானுற்று பக்கத்தை தட்டி எழுப்ப எல்லாராலும் முடியாது... அதற்கென்று பிறந்த மன்னன் குடிகளை பலிகொடுக்க மாட்டன்... இதை என்று நீங்களும் உங்கள் உறவுகளும் உணர்குரீர்களோ அன்று முடியும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் விளங்க... அடிமையாய் தினம் செத்து வாழாமல் வீரனாய் வழுவமே...
எனக்கும் ஒரு சித்தப்பா நான் நாலு வயத இருக்கும் போது என் கால் தளஙியை எடுத்துபோய் போட்டு படுப்பார் 12 மணிக்கு பிறகு விட்ட வந்திட்டு.. அயல் நட்டு பேய்கள் அவரை அந்த மனநிலைக்கு ஆளாக்கிச்சு... திலீபன் மாதிரி அவரால முடியேல்ல...குப்பி தான் கை கொடுத்துது... பள்ளிக்கு என்னை கூட்டி போக சித்தப்பா கிடைக்காமல் போயிட்டார்... அப்பம்மாவுக்கு ஒற்றை மகனே இல்லை. கவலையை விட மனதில மேலோங்கி இருந்தது தன் தங்கையின் , மகளின் மனம் கைப்பற்றப் பட்டது தான். ஆனாலும் அவை சொல்லி தந்ததில்லை இந்த நியாய அநியாயங்கள்... நானே புரிஞ்சு கொண்டது தான்... இது எங்களிட்ட திணிக்கப் பட்டது தான்... நாங்க விரும்பினதில்லை... என்றாலும் நாங்கள் அடங்கி அடிமையாய் சாகும் இனம் இல்லை அன்றோ... ஏன் இந்த புலம்பல்...//
நாங்கள் இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றியே எங்கள் இதயங்களைப் பறி கொடுத்து விட்டோம்...நாங்கள் மட்டும் ஒதுங்கி இருந்து கொண்டு, உடம்பில் கீறல் படாமல் இருந்து கொண்டு மற்றவர் எமக்கு அதனைத் தருவார், தலைவர் கை விட மாட்டார் என்று எம்மை நாமே சிகரத்தில் ஏற்றிக் கொண்டு வாழ்கிறோம்,....என்ன செய்ய....காலம் தான் பதில் சொல்ல வேண்டும் தங்கம். சொறி பிளாட்டினம்....இனி வெள்ளி...இனி வைரம்.....
Sinthu said...
"Anonymous said...
ஏனுங்கோ அது என்ன மெல்பேர்ன் கமல் அங்க்யே பொறந்து வளந்தீங்களோ"
He has been living there, so he can put, because, we can identify that he is in Melbourne, right?
Also, didn't you read his other posts?//
+++++++++++++++++++++++++++++++++++
Sinthu said...
Nice post anna...
Everything will be alright (We must think this way)//
சிந்து உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.. நான் மெல்போர்ன் கமல் எனும் பெயரை மாற்றியே பல காலம் ஆகி விட்டது......அவர் பதிவுலகில் இப்போது தான் கடந்த வருடத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்....
பாவம்..அவரைக் கொஞ்சம் பிடிச்சு மேலை ஏற்றி விடுங்கோவன்???
Post a Comment