Friday, March 13, 2009

நக்கலும் நளினமும்! (03)

களவியல் கு(சு)றும்பு!


பெஞ்சனியர் பொன்னம்பலம்
பேருவளை போனார்
றஞ்சினியை பைக்கிலேற்றி
றவுண்டடித்து(ப்) பார்த்தார்
அஞ்சு மணி ஆனதுமே
அம்மணமாய் ஆனார்
பஞ்சு மெத்தை மீதினிலே
பம்பரமாய்(ச்) சுழன்றார்!


*****************************************


உத்தமியின் பெயரோ
உலகழகி ஊர்மிளாவாம்
முத்தமதை மழையாய்
முதன்மையாக(த்) தருவாளாம்
அத்தையுடன் சேர்ந்து
அலாதியாய்(த்) திரிவாளாம்
உத்தியோகம் ஏதுமி(ல்)லை
உடலிழைத்து வருவாளாம்
நித்தியத்தில் ஆடவரை
நிலை குலைய வைப்பாளாம்
பத்தினியாய் பாரினிலே
பகலெல்லாம் திரிவாளாம்!


*********************************************


பெண்டிலை(க்) கேட்டாராம் பெரிசு
பெறு மாதம் எப்பவென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
கேட்ட பின்னர்
இண்டை நீர் போய்
இனிதாய்த் திரும்பி வாரும்
’மண்டே’ சொல்லுவேன் நான்
மறக்காமல் என்றாளாம்!


*****************************************


கண்டியர் கந்தையருக்கு
கான்சராம் என்று - அவரை(க்)
கொண்டு போய் விட்டனராம்
கோல்பேசு ஹொஸ்பிட்டலில்- அவர்
வண்ட வாளம் வந்து
வானத்தை(ப்) பிய்த்ததாம்-உடன்
தண்டவாளம் ஏறி(த்)
தம்பிரான் தாவினாராம்!


*********************************************

ந‌க்க‌லும் ந‌ளின‌மும் தொட‌ரும்..............


இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
*நக்கலும் நளினமும்! (01)

நக்கலும் நளினமும்! (02)

12 comments:

புல்லட் பாண்டி said...

எனக்கு கவிதையெல்லாம் விளங்கிறளவுக்கு அறிவில்லை... உதுக்கொரு பொழிப்புரையும் எழுதி.. என்ன ராகம் என்ன தாளம் என்ன பண்ணில பாடோணுமெண்டு எழுதுங்கோ... அப்பதான் நமக்கெல்லாம் புரியும்...

நம்மள மாதிரி சீ செண்டர் காரங்களுக்கும் கவனம் செலுத்தோணும் கமல் :)

tamil24.blogspot.com said...

நக்கலும் நளினமும் கூடிப்போச்சு. வாறம் அவுஸ்ரேலிய ஒலிரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரை ஒருக்கா சந்திச்சு நளினங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும்.

கீகீகீ

அசத்தல் நக்கலும் நளினமும்.

tamil24.blogspot.com said...

//பெண்டிலை(க்) கேட்டாராம் பெரிசு
பெறு மாதம் எப்பவென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
கேட்ட பின்னர்
இண்டை நீர் போய்
இனிதாய்த் திரும்பி வாரும்
’மண்டே’ சொல்லுவேன் நான்
மறக்காமல் என்றாளாம்!//

இருட்டடி நிச்சயம்
இனியுமக்கு சத்தியம்.
பெண்டிரெலாம் கூடியும்மைக்
கும்மோகும்மென்று குத்த றெடி....

ஆதவா said...

கமல்... நீங்கள் நக்கலாக எழுதியிருப்பது புரிகிறது... ஆனால் அதுன் உட்சாரம் எனக்கு விளங்கவில்லை.. இருமுறை படித்துப் பார்த்தேன்...ம்ஹூம்.. ஆனால் பொதுவாகப் பார்த்தால், நக்கலின் தொனி அதிகமாகவே இருக்கீறது. களவு இயல் என்று முன்னமே கொடுத்திருப்பதால் அதிலிருந்து ஓரளவு வாசனை பிடிக்க முடிகிறது. அதிலும் முதலிரண்டு கவிதைகளின் காட்டம் அதிகம்..

ஹேமா said...

கமல்,எப்பிடி இப்பிடி.நக்கலும் நளினமும் எண்டாலும் சந்தத்தோட வரிகள் பாட்டாய் பாடுது எங்கட பாடுகளை.

ஆனாலும் தங்களைத்தான் சொல்றீங்க எண்டு இந்தப் பேர் வழிகள் கையில அகப்பட்டீங்க எண்டா தொலைஞ்சீங்க நீங்க கவனம்.

கலை - இராகலை said...

ஆஹா ஒரு பாட்டவே படிக்கலாம் போல!!!!!

கமல் said...

புல்லட் பாண்டி said...
எனக்கு கவிதையெல்லாம் விளங்கிறளவுக்கு அறிவில்லை... உதுக்கொரு பொழிப்புரையும் எழுதி.. என்ன ராகம் என்ன தாளம் என்ன பண்ணில பாடோணுமெண்டு எழுதுங்கோ... அப்பதான் நமக்கெல்லாம் புரியும்...

நம்மள மாதிரி சீ செண்டர் காரங்களுக்கும் கவனம் செலுத்தோணும் கமல் :)//

சரி கோபப்பட வேண்டாம்...ஒரு விளக்க உரை குடுத்தாச் போச்சு...

கமல் said...

tamil24.blogspot.com said...
//பெண்டிலை(க்) கேட்டாராம் பெரிசு
பெறு மாதம் எப்பவென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
கேட்ட பின்னர்
இண்டை நீர் போய்
இனிதாய்த் திரும்பி வாரும்
’மண்டே’ சொல்லுவேன் நான்
மறக்காமல் என்றாளாம்!//

இருட்டடி நிச்சயம்
இனியுமக்கு சத்தியம்.
பெண்டிரெலாம் கூடியும்மைக்
கும்மோகும்மென்று குத்த றெடி....//

அக்கோ வேணாம் வம்பு...பின் விளைவுகள் ஆபத்தானவை..

கமல் said...

ஆதவா said...
கமல்... நீங்கள் நக்கலாக எழுதியிருப்பது புரிகிறது... ஆனால் அதுன் உட்சாரம் எனக்கு விளங்கவில்லை.. இருமுறை படித்துப் பார்த்தேன்...ம்ஹூம்.. ஆனால் பொதுவாகப் பார்த்தால், நக்கலின் தொனி அதிகமாகவே இருக்கீறது. களவு இயல் என்று முன்னமே கொடுத்திருப்பதால் அதிலிருந்து ஓரளவு வாசனை பிடிக்க முடிகிறது. அதிலும் முதலிரண்டு கவிதைகளின் காட்டம் அதிகம்..//


சரி சரி...விரைவிலை இந்தக் கவிதைகளுக்கான பொழிப்புரை வரும்.

கமல் said...

ஹேமா said...
கமல்,எப்பிடி இப்பிடி.நக்கலும் நளினமும் எண்டாலும் சந்தத்தோட வரிகள் பாட்டாய் பாடுது எங்கட பாடுகளை.

ஆனாலும் தங்களைத்தான் சொல்றீங்க எண்டு இந்தப் பேர் வழிகள் கையில அகப்பட்டீங்க எண்டா தொலைஞ்சீங்க நீங்க கவனம்.//

ம்...என்ன காப்பாற்றத் தானே நீங்கள் இருக்கிறீங்கள்???

கமல் said...

கலை - இராகலை said...
ஆஹா ஒரு பாட்டவே படிக்கலாம் போல!!!!!//

கலை அப்ப இசையமைக்கிறது யாரு???

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).