Tuesday, February 17, 2009

யாழ்ப்பாணத் தமிழன் நான்!

ஈழத்துத் தமிழிசை வரலாற்றில் அவ்வப் போது அத்தி பூத்தாற் போல ஒரு சில கலைஞர்களின் பெரு முயற்சியின் பலனாக நல்ல பாடல்கள் வெளிவந்து மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது வழமை. மக்கள் மனங்களில் காணப்படும் தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தின் காரணமாக ஈழத்துப் பாடல்கள் புறந்தள்ளப் படுகின்றமையும் நாம் அறிந்த வரலாறுகள். அந்த வகையில் தற்போது வளர்ந்து வருகின்ற ஈழத்து நவீன தமிழ்ச் சொல்லிசையில் வெகு விரைவில் வெளி வரவுள்ள ஓர் பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

இந்தப் பாடலுக்கு
இசை: டிலுக்ஸன் இராஜேந்திரன்
பாடல் வரிகள் & பாடியவர்: சாய்
முதலில் இந்தப் பாடலின் பாடல் வரிகளை உங்களுக்காய்த் தருகின்றேன்.

ஒரு நாளில் வாழ்க்கையே
உனதாகிப் போய் விடும்
எதிர் காலம் என்வசம்
இந்தக் காலம் எனதா??

நடை பயிலும் காலத்தில்
நெடுந் தூரம் ஓடினேன்
வருங் காலம் விடிகையில் என்
யாழ் மண் எனதா???

விழியில் ஓடும் நதிகளைக் கண்டு
மழை போதும் என்றது மின்னல்
தரையில் வாழும் மனிதர்கள் நடுவே
எனக்காகத் தூறிடும் யன்னல்

தொடும் வரை வானம்
உன் எதிரில் எங்கும் கார் மேகம்
பொற்க் காலம் எதுவும்
என் தாயுடன் வாழ்ந்த போர்க்காலம்
நெடுஞ் சாலை வழிகள்
என்னைத் தேட ஒரு நாள் போதும்
நெடுங் காலம் முதலாய்
என் மனதில் எங்கும் தீக் கோலம்!

ஒரு நொடியில் காதலும்
இடம் மாறிப் போய் விடும்
வருகின்ற நாட்களே
என் வாசல் வருமா??
யாழ்ப்பாணத் தமிழன் நான்!
தோல்விகளின் தலைவன் நான்!
விடிகின்ற காலங்கள்
புது விடை கூறுமா??

கடல் கொடு நதியது
நிறைவைப் போல
என் வாழ்க்கை போகின்ற பயணம்
சிறையது கொடியர்கள், மாந்தர்கள் நடுவே
என் வாழ்வில் குண்டுகள் சகயம்!

தொடும் வரை வானம்
உன் எதிரில் எங்கும் கார் மேகம்
பொற்க் காலம் எதுவும்
என் தாயுடன் வாழ்ந்த போர்க்காலம்
நெடுஞ் சாலை வழிகள்
என்னைத் தேட ஒரு நாள் போதும்
நெடுங் காலம் முதலாய்
என் மனதில் எங்கும் தீக் கோலம்!

சொந்தங்களும் சுற்றி நண்பர்களும்
எனைச் சுமந்த காலங்கள் மறப்பேனா??
போர் நொடியும் பல ஊரடங்கும்
இருள் சூழ்ந்த நிலவுகள் மறப்பேனா?
இந்த நாட்கள் உனதல்லவா?
இந்த நாட்கள் உனதல்லவா?
போகும் பாதையெல்லாம் பல
நினைவுகள் தொடர்கிறதா?

உன் வ‌லி என் வலியான‌ பின்னே
என் க‌ண்ணிமை வ‌ழிவ‌தும் ஓர் சாரல்!
புக‌லிட‌ம் தேடிப் போகின்ற‌ க‌ண‌க்கு
குடை வ‌ழி நீரும் ஓர் கார‌ல்!

தொடும் வரை வானம்
உன் எதிரில் எங்கும் கார் மேகம்
பொற்க் காலம் எதுவும்
என் தாயுடன் வாழ்ந்த போர்க்காலம்
நெடுஞ் சாலை வழிகள்
என்னைத் தேட ஒரு நாள் போதும்
நெடுங் காலம் முதலாய்
என் மனதில் எங்கும் தீக் கோலம்!

Get this widget | Track details | eSnips Social DNA

இந்த‌ப் பாட‌லைக் கேட்ட‌ பின்னர் இவ் இளங் கலைஞர்கள் பற்றிய‌ உங்க‌ள் உள்ள‌த்து உண‌ர்வுக‌ளையும் உதிர்த்து விட்டுச் செல்லுங்க‌ள். இப் பாட‌லுக்கு இசைய‌மைத்த‌ டிலுக்ஸ‌ன் இராஜேந்திர‌னின் வானொலி நேர்காண‌ல் வெகு விரைவில் இவ் வ‌லைப்ப‌திவில் இணைக்க‌ப்ப‌ட‌வுள்ள‌து. கேட்டு மகிழத் தவற வேண்டாம்.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை......(சுனாமி நினைவுப் பாடல்)

2)இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி!

6 comments:

வேத்தியன் said...

நான் தான் முதலா???
பாடல் வரிகள் சூப்பர்...
பாடலும் சூப்பர்...
கமல் அண்ணே காதல் பத்தின நியுட்டன்ட விதிகளை அறிய நம்ம பக்கம் வந்து பாருங்க...
:-)

tamil24.blogspot.com said...

நல்லதொரு பாடல். ரகுமானையும் இளையராஜாவையும் இன்னும் சொல்லிக்கொள்ளக் கூடிய தமிழகக் குரல்களைக் கேட்டுப்பழகியவர்களுக்கு இந்தப்பாடலும் குரலும் இசையும் இன்னொரு வழியைத் திறக்கட்டும்.

பாராட்டுக்கள்.

சாந்தி

’டொன்’ லீ said...

நன்றி கமல் :-)

வேத்தியன் said...

கமல் அண்ணே,
நம்ம பக்கம் வந்து ஒரு லுக்க விட்டுட்டு போறது...

கமல் said...

வேத்தியன் said...
நான் தான் முதலா???
பாடல் வரிகள் சூப்பர்...
பாடலும் சூப்பர்...
கமல் அண்ணே காதல் பத்தின நியுட்டன்ட விதிகளை அறிய நம்ம பக்கம் வந்து பாருங்க...//

என்னங்க அண்ணா??? அதான் வந்திட்டமில்லே?

கமல் said...

tamil24.blogspot.com said...
நல்லதொரு பாடல். ரகுமானையும் இளையராஜாவையும் இன்னும் சொல்லிக்கொள்ளக் கூடிய தமிழகக் குரல்களைக் கேட்டுப்பழகியவர்களுக்கு இந்தப்பாடலும் குரலும் இசையும் இன்னொரு வழியைத் திறக்கட்டும்.

பாராட்டுக்கள்.

சாந்தி
**************************

’டொன்’ லீ said...
நன்றி கமல் :-)
**********************

நன்றிகள் நண்பர்களே!

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).