Thursday, February 26, 2009

நான் கட்ட(க்) கவுணொடு குட்டி ஒன்றைக் கண்டேன்..!

நான் மட்டக்குளியிலை
கட்ட ’கவுணொடு’
குட்டி ஒன்றைக் கண்டேன்-அந்த
மச்சியுடன் பஸ்ஸில் இச்சையுடனே
கொச்சிக்கடை வந்தேன்..!
(நான் மட்டக்குளியிலை...)

பம்பலப்பிட்டிக்கு வந்தாளாம்-அவள்
சம்பலும் தோசையும் தின்னாளாம்
’தெம்பிலி’ ஒன்றைக் குடித்தாளாம்-பின்
தேகத்தில் சோம்பல் முறித்தாளாம்
அம்புலிப் பொட்டுடன் ஆடி
அசைந்து நடந்தாளாம்- அவள்
அழகைக் கண்டு
ஆண்கள் சிலரும் தொடர்ந்தாராம்..!
(நான் மட்டக்குளியிலை....)

கும்பலைக் கண்டு குலுக்கினாளே-இரு
கண்களைக் காட்டி மயக்கினாளே!
அங்கம் தெரிய உடுத்தாளே
எங்கள் ஆண்கள் மனதைக் கெடுத்தாளே!
பங்கஜமே அடி பைந்தமிழ் மங்கையும் நீயாமோ?
இந்தச் சங்கம் கெட்ட உடை
வாட்டி வதைப்பது தேயாமோ???
(நான் மட்டக்குளியிலை...)

கரகாம்பிட்டிக்கு வந்து நின்று அவள்
காதலும் கையையும் சேர்த்துக் கொண்டு
நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு-இந்த
நகரைச் சுற்றி(ப்) பவணி வந்து
மிருக வாழ்க்கை வாழ்வதென்னடி பொன்னம்மா-நீ
மீட்சி பெறுவதெப்போதென்று சொல்லம்மா??
நீ மீட்சி பெறுவதெப்போதென்று சொல்லம்மா??
சொல்லம்மா? சொல்லம்மா?
(நான் மட்டக்குளியிலை...)

பொருள் விளக்கம்:
1)தெம்பிலி: தேங்காய்/ இளநீருக்குச் சிங்களத்தில் பயன்படுத்தப்படும் சொல்.
2)மட்டக்குளி, கொச்சிக்கடை, பம்பலப்பிட்டி, கரகாம் பிட்டி : இவை சிறீலங்காவின் தலை நகர் கொழும்பிற்கு அருகில் உள்ள பிரதேசங்களின் பெயர்கள்.
3)கவுண்: சோட்டி- இது பெண்கள் அணியும் ஒரு வகை ஆடையை இலங்கையிற் குறிக்கப் பயன்படும் சொல்.

பிற் குறிப்பு: இந்தப் பாடல் இலங்கையில் வெளியிடப்பட்ட ‘சிறீலங்கன்ஸ் கானா’’ என்ற இசைக் குறுவட்டில் இடம்பெற்ற ஓர் கானாப் பாடலாகும்.

பாடலைப் பாடியவர் : நவகம்புர கணேஸ்.
பாடலுக்கு இசை வழங்கியவர்: கருப்பையாபிள்ளை பிரபாகரன்.
பாடலை இயற்றியவரும் : நவகம்புர கணேஸ் என்று தான் நினைக்கிறேன்...சரியாக ஞாபகம் இல்லை??

இந்தப் பாடலுக்கு ஒரு மீள் கலவையை (Video Editing & Video Mixing) நான் என் சிறு வயதில் செய்திருந்தேன். அதனை இப்போது பார்க்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கிறது. நான் என் சின்ன வயசில் ஓய்வாக இருக்கும் போது, ஒவ்வோர் பாடலாகத் தெரிவு செய்து வெட்டுக் கொத்து வேலைகளில் ஈடுபட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருப்பேன்.

அப்படித் தான் இந்தப் பாடலுக்கும் ஒரு மீள் கலவையை எனது தம்பியுடன் இணைந்து செய்திருந்தேன். எனது தம்பியை எலோரும் கலீஸ் என்றே அழைப்பார்கள்.(ஆதலால் எங்கள் இருவரின் பெயரையும் போட்டு மீள் கலவைப் பாடல்கள் செய்து, அவற்றை எமது நண்பர்களுக்கு விற்றுக் கைச் செல்லவிற்குக் காசு சேர்த்ததும் எமது சின்ன வயசு ஞாபகங்கள்.

ஒரு சில தவறுகள் இப் பாடலின் காணொளியில் இடம்பெற்றிருக்கலாம். யாவரும் பொறுத்தருள்வீர்களாக..

நான் இன்னும் முயற்சி செய்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என்று இப்போது எண்ணத் தூண்டும் பாடல். ஆர்வக் கோளாறு காரணமாக அடிக்கடி எழுத்தோட்டமாக என் பெயர் வந்து உங்களுக்குச் சலிப்பூட்டும் என்று நினைக்கின்றேன். அதனையும் சிரமமாக எடுக்காது இந்தக் காணொளியைப் பார்த்து மகிழுமாறு உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.

இதில் வரும் மின்னஞ்சல் முகவரி (E-mail ID) தற்போது செயலிழந்திருக்கும் என்று நினைக்கின்றேன். தயவு செய்து யாரும் அதற்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். பாடலைப் பார்த்துச் சிரித்து மகிழுங்கள்.

இப்படியான குறும்பு வேலைகளில் நான் ஈடுபடும் போது எனக்குக் ‘கவின்’ அடிக்கடி ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் வழங்குவார். அவரின் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முகமாக ‘’நண்பர் கவினும் கவினின் அவாவும்(திரு & திருமதி கவின் ஜோடிகள்) சேர்ந்து ஆடிய பாடல்’’ ஒன்றையும் நான் மீள் கலவை செய்திருந்தேன். அதனையும் வெகு விரைவில் உங்களுக்காகத் தரவுள்ளேன்.

இந்தப் பாடலைப் பார்ப்பதில் ஏதாவது தடங்கல்கள் உங்களுக்கு இருந்தால் சொல்லுங்கள். அவை சீர் செய்யப்படும்.
நான் கண்ட கட்டக் கவுண் குட்டியின் காணொளி இங்கே உங்களுக்காக....!

24 comments:

ஆதவா said...

பாட்டு நல்லா இருக்கு... (சில வார்த்தைகள் புரியலை).. மிக்ஸிங் நீங்க பண்ணினதா??? ரொம்ப திறமைதாங்க..!

கலை - இராகலை said...

பாடல் மட்டுமே கேட்டு இருக்கின்றேன். வீடியோ வந்ததா தெரியவில்லை ஆனால் இந்த மிக்ஸிங் சூப்பர். எந்த தடையும் இல்லாமல் கட்ட கவுணொடு வந்த குட்டியை....

வந்தியத்தேவன் said...

கமல் நன்றாக இருக்கின்றது. முன்னர் சூரியனில் அடிக்கடி இந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள் இப்போது யாரும் ஒளிபரப்புவதே இல்லை. எழுதியவரும் நவகம்புர கணேஷ் தான்.

மட்டகுளியில் ரீமா சென்போல் யாரைப் பார்த்தீர்கள்.

ஆதிரை said...

நல்லா இருக்கு றிமிக்ஸ் புகழ் கமல்.
:D

கவின் said...

பழசை மறக்கலை போல... ஆனாலும் நீண்ட நாட்களின் பின் பார்க்கும் போது... அந்த நாள் ஞாபகங்கள்...

கவின் said...

இப்படியான குறும்பு வேலைகளில் நான் ஈடுபடும் போது எனக்குக் ‘கவின்’ அடிக்கடி ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் வழங்குவார். அவரின் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முகமாக ‘’நண்பர் கவினும் கவினின் அவாவும்(திரு & திருமதி கவின் ஜோடிகள்) சேர்ந்து ஆடிய பாடல்’’ ஒன்றையும் நான் மீள் கலவை செய்திருந்தேன். அதனையும் வெகு விரைவில் உங்களுக்காகத் தரவுள்ளேன்.
***********
யாரு நயன் தானே அவா????

tamil24.blogspot.com said...

கவின் February 27, 2009 5:41 AM
யாரு நயன் தானே அவா????

சிம்புவின் சிலம்படி விழாமல் தப்பினாச்சரி தம்பி.

tamil24.blogspot.com said...

சொன்னவர் கமல்
நான் கண்ட கட்டக் கவுண் குட்டியின் காணொளி இங்கே உங்களுக்காக....!
-----------------------------
கவனம் வீட்டிலை அடிவிழப்போகுது

ஹேமா said...

அடக் கடவுளே.....கமல்.என்ன சொல்ல நான்!

ஆனாலும் அருமையான தயாரிப்பு.கலாரசனை கமலுக்கு.
அழகாக, தாளம் தவறாமல்-நடனத்தோடு வெட்டி ஒட்டிய விதம் அசத்தல்.பாராட்டத்தான் வேணும்.

தியாகி said...

பல தடவை சூரியனில் ஒளிபரப்பக் கேட்டுள்ளேன்.Video remix, அதுவும் கட்ட கவுண் சூப்பர்.

அத்திரி said...

//tamil24.blogspot.com
சொன்னவர் கமல்
நான் கண்ட கட்டக் கவுண் குட்டியின் காணொளி இங்கே உங்களுக்காக....!
-----------------------------
கவனம் வீட்டிலை அடிவிழப்போகுது//

ரிப்பீட்டேய்.........

வேத்தியன் said...

அட கலக்கிப்புட்டீக தல....
அருமை அருமை...
:-)

வேத்தியன் said...

‘’நண்பர் கவினும் கவினின் அவாவும்(திரு & திருமதி கவின் ஜோடிகள்) சேர்ந்து ஆடிய பாடல்’’ ஒன்றையும் நான் மீள் கலவை செய்திருந்தேன். அதனையும் வெகு விரைவில் உங்களுக்காகத் தரவுள்ளேன்.//

காத்திருக்கிறேன்...
:-)))

கமல் said...

ஆதவா said...
பாட்டு நல்லா இருக்கு... (சில வார்த்தைகள் புரியலை).. மிக்ஸிங் நீங்க பண்ணினதா??? ரொம்ப திறமைதாங்க..!//

ம்....நானே தானுங்கோ....

கமல் said...

கலை - இராகலை said...
பாடல் மட்டுமே கேட்டு இருக்கின்றேன். வீடியோ வந்ததா தெரியவில்லை ஆனால் இந்த மிக்ஸிங் சூப்பர். எந்த தடையும் இல்லாமல் கட்ட கவுணொடு வந்த குட்டியை....//

உண்மையாவோ???

கமல் said...

கலை - இராகலை said...
பாடல் மட்டுமே கேட்டு இருக்கின்றேன். வீடியோ வந்ததா தெரியவில்லை ஆனால் இந்த மிக்ஸிங் சூப்பர். எந்த தடையும் இல்லாமல் கட்ட கவுணொடு வந்த குட்டியை....//

அது தானுங்கோ எனக்கும் தெரியேல்லை???

கமல் said...

ஆதிரை said...
நல்லா இருக்கு றிமிக்ஸ் புகழ் கமல்.
:D
//

என்ன விருது வழங்கப் போறீங்களா??

ம்..சொல்லவேயில்லை??

கமல் said...

கவின் said...
பழசை மறக்கலை போல... ஆனாலும் நீண்ட நாட்களின் பின் பார்க்கும் போது... அந்த நாள் ஞாபகங்கள்...//

பின்ன எப்படி மறக்க முடியும் மச்சான்??

கமல் said...

கவின் said...
இப்படியான குறும்பு வேலைகளில் நான் ஈடுபடும் போது எனக்குக் ‘கவின்’ அடிக்கடி ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் வழங்குவார். அவரின் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முகமாக ‘’நண்பர் கவினும் கவினின் அவாவும்(திரு & திருமதி கவின் ஜோடிகள்) சேர்ந்து ஆடிய பாடல்’’ ஒன்றையும் நான் மீள் கலவை செய்திருந்தேன். அதனையும் வெகு விரைவில் உங்களுக்காகத் தரவுள்ளேன்.
***********
யாரு நயன் தானே அவா????//

அது இப்போதைக்கு ரகசியம் சகலை...

கமல் said...

tamil24.blogspot.com said...
கவின் February 27, 2009 5:41 AM
யாரு நயன் தானே அவா????

சிம்புவின் சிலம்படி விழாமல் தப்பினாச்சரி தம்பி.//

சிலம்படி விழாது...இது கவினின் நிஜ ஜோடி...

கமல் said...

tamil24.blogspot.com said...
சொன்னவர் கமல்
நான் கண்ட கட்டக் கவுண் குட்டியின் காணொளி இங்கே உங்களுக்காக....!
-----------------------------
கவனம் வீட்டிலை அடிவிழப்போகுது//

அவா இப்ப பக்கத்திலை இல்லை...அதாலை அடி விழாது...

கமல் said...

ஹேமா said...
அடக் கடவுளே.....கமல்.என்ன சொல்ல நான்!

ஆனாலும் அருமையான தயாரிப்பு.கலாரசனை கமலுக்கு.
அழகாக, தாளம் தவறாமல்-நடனத்தோடு வெட்டி ஒட்டிய விதம் அசத்தல்.பாராட்டத்தான் வேணும்.//

பாராட்டு மட்டும் தானா? பரிசு ஏதும் இல்லையா???

கமல் said...

தியாகி said...
பல தடவை சூரியனில் ஒளிபரப்பக் கேட்டுள்ளேன்.Video remix, அதுவும் கட்ட கவுண் சூப்பர்.//

யாரோடை கட்டக் கவுண்??

கமல் said...

வேத்தியன் said...
‘’நண்பர் கவினும் கவினின் அவாவும்(திரு & திருமதி கவின் ஜோடிகள்) சேர்ந்து ஆடிய பாடல்’’ ஒன்றையும் நான் மீள் கலவை செய்திருந்தேன். அதனையும் வெகு விரைவில் உங்களுக்காகத் தரவுள்ளேன்.//

காத்திருக்கிறேன்...
:-)))//

கவின் உம்மிலை அக்கறை உள்ள ஜீவன்கள் தான் எத்தனை??? எத்தனை???

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).