Wednesday, February 4, 2009

எனக்கொரு ஜோடி / சோடி தேவை!

வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதென்பது இன்று அவரவர் கைகளிலே தங்கியுள்ளது என்று கூறலாம். ஆரம்பகாலத்தில் பெற்றவர்களால் நிச்சயிக்கப்படும் இத் திருமண நிகழ்வுகள் பெரும்பாலான பகுதிகளில் பிள்ளைகளின் விரும்பத் தேவைகளை அறிந்து பெற்றோர் ஒத்துழைக்கும் நிகழ்வுகளாகவும் மாறிவிட்டது.

இரு மனங்களும் இணைந்த ஒரு மணமே திருமணம் என்பது ஆன்றோர் கூற்று. ஆனாலும் இன்றைய சூழலில் அவரவர் தேவைகளுக்கேற்ப, அவரவர் விருப்பத் தேவைகளுக்கு அமைவாகத் தமது துணைகளைத் தேடுவதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறு ஒவ்வொருவரும் தமக்குத் தாமே ஜோடிகளைத் தேடிக் கொள்ளும் போது நானும் எனக்குத் தேவையான ஜோடியினைத் தேடிக் கொள்வதில் என்ன தப்பு????

இன்று அரசியல், காதல், மொக்கை, பெண்ணியம், தலித்தியம், சமையல் கலை, சமூகவியல் எனப் பல தளங்களினூடாக விரிந்துள்ள வலைப் பூக்களினூடாக வாழ்க்கைத் துணை தேடுகின்ற/ ஜோடி தேடுகின்ற வலைப் பூக்கள் இல்லாமை மிகவும் வேதனைக்குரியது என்று நாளாந்தம் புலம்பியவர்களுக்கெல்லாம் ஒரு நற் செய்தி! அந்தக் குறை இன்றோடு நீங்கப் போகிறது. அதுவும் எனது ஜோடி தேடும் படலத்துடன் நீங்கப் போகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு.

ஜோடி தேடும் அளவிற்கெல்லாம் விளம்பரம் கொடுக்குமளவிற்கு நான் இன்னும் சிந்திக்கவில்லை. இன்று அந்த ஜோடி தேடும் படலத்தைக் கையில் எடுத்திருப்பவர் வேறு யாருமல்ல எமது மெல்பேண் அப்புக்குட்டி! ஆரம்ப காலத்தில்
''காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டதே இன்பம்......'' நிலையில் இருந்த இவ் இல் வாழ்க்கையானது இன்றைய சூழலில்
'கண்டவுடன் காதல் கொண்டார்
கச்சேரியில் மணந்து கொண்டார் - அண்டை
ஓர் இரவு அறையில் உணவுண்டார்
அடுத்த நாட் காலை ம(ன)ணந் தள்ளுண்டார்! (மகாகவி உருத்திரமூர்த்தி, பொருள் விளங்காவிடின் இரு தரம் படிக்கவும்.) எனும் நிலையிலேயே பயணிக்கின்றது.

இவ்வாறான சூழலுக்குப் புலம் பெயர் கலாச்சாரமும் ஒரு காரணமாய் அமைந்துள்ளது என்பது எங்கள் அப்புக்குட்டியின் வாதம். அப்புக்குட்டியின் இறுதி மகளும் பாடசாலையில் படிக்கின்றா. மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் படி பெரும்பாலனாவர்கள் பருவ வயதை எட்டியவுடன் அவர்கள் தமக்கென்றொரு நட்பு ரீதியான துணையினை வைத்திருக்க வேண்டும். ( இதனை Boy Friend / Girll Frind என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் )

அப்படியொரு துணை இல்லா விடின் அவர்களுக்கு மன அழுத்தம் அல்லது வேறேதும் குறைபாடுகள் உள்ளன என்பது மேலை நாட்டு உளவியலாளர்களின் ஆய்வுகளின் வெளிப்பாடு. இதனை அவர்களின் சமூகமும் அங்கீகரிக்கிறது. இத்தகைய சூழ் நிலையில் வாழுகின்ற போது அல்லது ஏதாவது நிகழ்வுகளுக்குச் செல்கின்ற போது அவர்கள் தம்முடன் ஒரு துணையினை அழைத்துச் செல்ல வேண்டும், அப்படியொரு துணை இல்லாது விடின் அவர்களை அந் நிகழ்வில் உள்ளவர்கள் ஓரக் கண்ணால் கழுகுப் பார்வையுடன் பார்பார்கள்.
(இப்படியொரு சம்பவம் எனக்கும் ஏற்பட்டது)

இப்படியான சூழ் நிலையில் எமது புலம் பெயர் இளைஞர் யுவதிகள் தமக்கென்று ஜோடி இல்லாதவர்களாய்த் தனித்துவத்தோடு வாழ்ந்தாலும் மேலை நாடுகளில் பாடசாலையில் படிக்கின்ற போது வருடாந்த ஒன்று கூடல் மாதிரியான நிகழ்வுகளுக்கு ஜோடி இல்லாமற் செல்வதனைக் கௌரவக் குறைவாக ஒரு சில இளசுகள் நினைக்கின்றார்கள். இழிவாகக் கருதுகின்றார்கள். அப்படியான எண்ணங்களால் தற்காலிக ஜோடி தேடிப் பிடிக்கும் படலத்திற்கும் தள்ளப்படுகின்றார்கள்.

எல்லோரும் ஜோடியுடன் அல்லது தற்காலிக ஜோடியுடன் வரவேண்டும் என்ற இறுக்கமான கட்டாய விதிமுறைகள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் இங்கு ஏதும் கிடையாது. ஆனால் இத்தகைய நிகழ்வுக்காகவே தற்காலிக ஜோடி பிடித்துக் களியாட்ட விடுதி வரை சென்று கலக்கி விட்டுப் பின்னர் எம்மிளசுகள் சிலர் பெற்றோர் பார்க்கும் நல்லவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களைத் திருமணம் செய்கின்றமையும் நாம் இங்கு காணுகின்ற விதி விலக்கான விடயங்கள்.

அப்புக்குட்டியின் மகளும் இதுவரை காலமும் ஜோடி இல்லாது வாழ்ந்து விட்டு இப்படியானதொரு நிகழ்வு வரும் போது தனக்கும் தற்காலிக ஜோடி தேவை என்னும் விண்ணப்பத்தை எங்கள் அப்புக்குட்டியிடம் முன்வைத்திருக்கிறா. இதனாற் குழப்பமடைந்த அப்புக் குட்டியும் 'எங்கடை கலாச்சார விதி முறையின் படி இப்படியான ஜோடியுடன் செல்வதற்கு உனக்கு அனுமதியில்லை. அப்படியான ஜோடி உனக்குத் தேவையும் இல்லை'' என்று எச்சரிக்கைப் பதில் வழங்கிவிட்டு விடயத்தை வானொலி வரை கொண்டு வந்து விட்டார். (என்னிடம் நேரடியாக இப்படியொரு உதவி கேட்டால் செய்திருக்க மாட்டேனா?? பிறகு ஏன் றேடியோ வரை வர வேணும்??)

மேலை நாடுகளில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கு தமிழர்களாகிய நாம் தற்காலிக ஜோடியுடன் செல்வது சரியா?? எமக்குத் தற்காலிக ஜோடியெல்லாம் தேவையா?? என்பது எங்கள் அப்புக்குட்டியின் ஆழ் மனக் கேள்விகள். இதனைப் புல்லட் பாண்டி முதலிய ஆட்கள் கண்டு கொள்ள வேணும்.

இடையில் குறுக்கே நிற்பது சரியில்லை என்பதால் நான் இப்போதே விலகுகின்றேன். அப்புக் குட்டியின் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தரப்பட்டுள்ளது. என்னால் முடிந்த வரை சரியான பதில்களை அங்கங்கே தர முயற்சி செய்தும் அப்புக் குட்டியின் மனதில் திருப்தி இல்லை என்பது அவரின் முகத்தில் தெரிகிறது, எனவே அவருக்குத் தக்க பதில் கூற வேண்டியவர்கள் நீங்களே!

நிகழ்ச்சியைக் கேட்டபடி தொடருங்கள்......

Get this widget | Track details | eSnips Social DNA

பிற் குறிப்பு: இவ்வளவு நாளும் தனது நிகழ்ச்சியை வலைப் பதிவில் இணைக்கவில்லை என்று அப்புக் குட்டி அவர்கள் எனக்கு ஒரே நச்சரிப்பு. சனம் இப்படித் துடித்து மடியும் போது உமது நிகழ்ச்சியைப் போடுவது சரியா? என்றதும் ஆள் அடங்கி விட்டார். ஆனால் மறுபடியும் அப்புக்குட்டி எனக்குத் தந்த பலப் பல அன்புத் தொல்லைகளின் காராணத்தால் அப்புக் குட்டியின் நிகழ்ச்சியை நான் இன்று உங்களுக்காய்த் தருகின்றேன், அப்புக் குட்டியையும், அப்புக்குட்டி மாதிரியான ஆட்களையும் தெளிவிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)திருமணமானவர்களுக்கு மட்டும்!

2)மெல்போர்ன் அப்புக்குட்டியும் நானும்!

3)தமிலும் தமிழும்...!

4)ஆண்களோடு போட்டி போடும் பெண்களிங்கு யாரு????

5)என்ர பிள்ளைக்குப் பேர்(பெயர்) வைக்கவேணும்!

24 comments:

’டொன்’ லீ said...

தாரளமாக..இப்ப ஜோடியாக திரியாம அப்புக்குட்டி காலத்திலேயே திரிய முடியும்...?

வேத்தியன் said...

நோ ப்ராப்ளம்...
ஆனா எங்க தேடுறதா உத்தேசம்???

வேத்தியன் said...

//’டொன்’ லீ said...
தாரளமாக..இப்ப ஜோடியாக திரியாம அப்புக்குட்டி காலத்திலேயே திரிய முடியும்...?//

:-)

tamil24.blogspot.com said...

அப்புக்குட்டித் தாத்தாவை மெல்பேணை விட்டுத் துரத்தினா உந்தச் சிக்கலெல்லாம் வராது கண்டியளோ கமல் !

காடு வாவா வீடு போபோ நிலமைக்கு அப்புக்குட்டித்தாத்தாவை குடும்ப உறுப்பினர்கள் துரத்தும் நிலவரை இட்டுச் செல்லாமல் எங்கள் தாத்தாவைக் காப்பாற்றுமாறு மெல்பேன் மக்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
(தாத்தா நிலத்தில போட்ட பொல்லுக்கட்டையை எடுக்கும் சத்தம்வருகிறது நான் போட்டு வாறன்)

சாந்தி

ஹேமா said...

அப்புக்குட்டியருக்கு வரவரப் பிரச்சனை கூடுதே தவிர குறைஞ்சபாடாயில்ல.அப்புக்குட்டிக்கு பழைய ஞாபகம் எல்லாம் கிண்டிக்கிளறுது அல்வா போல.ஏன் அப்புக்குட்டி ஒண்டு சொல்லேல்ல.
விடியவில பள்ளிகூடம் போகேக்க பக்கத்து வீட்டில அவருக்கு கேக்கிறாப்போல "அம்மா போட்டுவாறன் அம்மா போட்டுவாறன்" எண்டு 2-3 தரம் கத்திக் கத்திச் சொல்றதாம்.இந்த முறை அப்புக்குட்டியரின்ர பிரச்சனை OK தானே!

சக்(ங்)கடத்தார் said...

அது சரி கமல் என்னவாம் வெள்ளைக்காரன் கலாசாரத்தில இருக்கிறம்.அதால பிள்ளைகளை அதுகள் கேக்கிறபடி விடட்டுமாமோ!சரி அப்புக்குட்டி விடுறார் எண்டு வச்சுக்கொள்ளுவம்.ஒரு கதைக்கு அப்புக்குட்டியின்ர மகளைத்தான் கமல் கல்யாணம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எண்டா கமல் ஓம் எண்டுவாராமோ!வெள்ளைக்காரன் எல்லாமே பழக்கித்தான் பிறகு செய்யத்தொடங்குவான்.கறிக்கு உப்புக்கூட புத்தகம் பாத்துத்தான் போடுவான்.அதுபோல கல்யாணம்கூட ஒருசிலரோடு பழகிப்பாத்துத்தான் கவனமா ஒரு கல்யாணம் செய்வான்.அது எங்களுக்குச் சரிவருமாமோ!

அப்புக்குட்டி said...

விடயத்தை வானொலி வரை கொண்டு வந்து விட்டார். (என்னிடம் நேரடியாக இப்படியொரு உதவி கேட்டால் செய்திருக்க மாட்டேனா?? பிறகு ஏன் றேடியோ வரை வர வேணும்??)//

தம்பி நீர் பிரச்சினைக்குரிய ஆள் என்டு இப்பத்தான் தெரியுது.. அது பரவாயில்லை உம்மை இவ்வளவு நாளும் என்ர வீட்டுக்கு உள்ள விட்ட என்னைச் செருப்பாலை அடிக்க வேணும்?? இனிமேல் பட்டு நீர் என்ர வீட்டுப் பக்கமே வரக் கூடாது.. நானும் உம்மை நல்ல பிள்ளை என்டு நினைச்சால்? நீரும்?? இனிமேலும் என்னை ஏத்தக் வாறன், றேடியோப் பக்கம் கூட்டிக் கொண்டு போக வாறன் என்டு வரவே கூடாது??? இந்தக் காலத்திலை ஒருத்தரேம் நம்ப ஏலாமல் இருக்கு??

கமல் said...

’டொன்’ லீ said...
தாரளமாக..இப்ப ஜோடியாக திரியாம அப்புக்குட்டி காலத்திலேயே திரிய முடியும்...?//

அதைத் தானே நானும் கேட்கிறன்??

கமல் said...

வேத்தியன் said...
நோ ப்ராப்ளம்...
ஆனா எங்க தேடுறதா உத்தேசம்???//

ஏன் உங்கை வெள்ளைவத்தைப் பக்கத்திலை தேடேலாதோ??? நீங்கள் தான் யோசிக்க வேணும்?

கமல் said...

tamil24.blogspot.com said...
அப்புக்குட்டித் தாத்தாவை மெல்பேணை விட்டுத் துரத்தினா உந்தச் சிக்கலெல்லாம் வராது கண்டியளோ கமல் !

காடு வாவா வீடு போபோ நிலமைக்கு அப்புக்குட்டித்தாத்தாவை குடும்ப உறுப்பினர்கள் துரத்தும் நிலவரை இட்டுச் செல்லாமல் எங்கள் தாத்தாவைக் காப்பாற்றுமாறு மெல்பேன் மக்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
(தாத்தா நிலத்தில போட்ட பொல்லுக்கட்டையை எடுக்கும் சத்தம்வருகிறது நான் போட்டு வாறன்)

சாந்தி//

அதைத் தான் நானும் யோசிக்கிறேன்??

கமல் said...

ஹேமா said...
அப்புக்குட்டியருக்கு வரவரப் பிரச்சனை கூடுதே தவிர குறைஞ்சபாடாயில்ல.அப்புக்குட்டிக்கு பழைய ஞாபகம் எல்லாம் கிண்டிக்கிளறுது அல்வா போல.ஏன் அப்புக்குட்டி ஒண்டு சொல்லேல்ல.
விடியவில பள்ளிகூடம் போகேக்க பக்கத்து வீட்டில அவருக்கு கேக்கிறாப்போல "அம்மா போட்டுவாறன் அம்மா போட்டுவாறன்" எண்டு 2-3 தரம் கத்திக் கத்திச் சொல்றதாம்.இந்த முறை அப்புக்குட்டியரின்ர பிரச்சனை OK தானே//

ம்..ஹேமா அவர் பிரச்சினைக்கென்டே பிறந்த ஆள்....என்ன செய்வது???

கமல் said...

சக்(ங்)கடத்தார் said...
அது சரி கமல் என்னவாம் வெள்ளைக்காரன் கலாசாரத்தில இருக்கிறம்.அதால பிள்ளைகளை அதுகள் கேக்கிறபடி விடட்டுமாமோ!சரி அப்புக்குட்டி விடுறார் எண்டு வச்சுக்கொள்ளுவம்.ஒரு கதைக்கு அப்புக்குட்டியின்ர மகளைத்தான் கமல் கல்யாணம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எண்டா கமல் ஓம் எண்டுவாராமோ!வெள்ளைக்காரன் எல்லாமே பழக்கித்தான் பிறகு செய்யத்தொடங்குவான்.கறிக்கு உப்புக்கூட புத்தகம் பாத்துத்தான் போடுவான்.அதுபோல கல்யாணம்கூட ஒருசிலரோடு பழகிப்பாத்துத்தான் கவனமா ஒரு கல்யாணம் செய்வான்.அது எங்களுக்குச் சரிவருமாமோ!//

சக்கடத்தார் ஏன் என்னை இதுக்கை இழுக்கிறீங்கள்??? வெள்ளைக்காரன் நல்லவன் என்டு தானே எங்கடை பிள்ளையள் சொல்லீனம்??

அப்புக்குட்டி said...

’டொன்’ லீ said...
தாரளமாக..இப்ப ஜோடியாக திரியாம அப்புக்குட்டி காலத்திலேயே திரிய முடியும்...?//

தம்பி ராசா உமக்கு வாற ஜோடியோடை இன்னொருவன் திரிஞ்சிருந்தால் நீர் என்னப்பன் செய்வீர்???

அப்புக்குட்டி said...

tamil24.blogspot.com said...
அப்புக்குட்டித் தாத்தாவை மெல்பேணை விட்டுத் துரத்தினா உந்தச் சிக்கலெல்லாம் வராது கண்டியளோ கமல் !

காடு வாவா வீடு போபோ நிலமைக்கு அப்புக்குட்டித்தாத்தாவை குடும்ப உறுப்பினர்கள் துரத்தும் நிலவரை இட்டுச் செல்லாமல் எங்கள் தாத்தாவைக் காப்பாற்றுமாறு மெல்பேன் மக்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
(தாத்தா நிலத்தில போட்ட பொல்லுக்கட்டையை எடுக்கும் சத்தம்வருகிறது நான் போட்டு வாறன்)

சாந்தி//

என்னைத் துரத்துறதென்டு தான் எல்லோரும் முடிவெடுத்திட்டீங்கள் போல??? நான் நல்லாயிருக்கிறது விருப்பமில்லையே? அது சரி என்னிலை உள்ள அனுதாபத்துக்கு நன்றிகள்.....

அப்புக்குட்டி said...

ஹேமா said...
அப்புக்குட்டியருக்கு வரவரப் பிரச்சனை கூடுதே தவிர குறைஞ்சபாடாயில்ல.அப்புக்குட்டிக்கு பழைய ஞாபகம் எல்லாம் கிண்டிக்கிளறுது அல்வா போல.ஏன் அப்புக்குட்டி ஒண்டு சொல்லேல்ல.
விடியவில பள்ளிகூடம் போகேக்க பக்கத்து வீட்டில அவருக்கு கேக்கிறாப்போல "அம்மா போட்டுவாறன் அம்மா போட்டுவாறன்" எண்டு 2-3 தரம் கத்திக் கத்திச் சொல்றதாம்.இந்த முறை அப்புக்குட்டியரின்ர பிரச்சனை OK தானே!//

பிள்ளை பழைய ஞாபகம் இருந்தால் வாறது இயல்பு தானே??? என்ன உம்மடை அனுபவமோ???

அப்புக்குட்டி said...

சக்(ங்)கடத்தார் said...
அது சரி கமல் என்னவாம் வெள்ளைக்காரன் கலாசாரத்தில இருக்கிறம்.அதால பிள்ளைகளை அதுகள் கேக்கிறபடி விடட்டுமாமோ!சரி அப்புக்குட்டி விடுறார் எண்டு வச்சுக்கொள்ளுவம்.ஒரு கதைக்கு அப்புக்குட்டியின்ர மகளைத்தான் கமல் கல்யாணம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எண்டா கமல் ஓம் எண்டுவாராமோ!வெள்ளைக்காரன் எல்லாமே பழக்கித்தான் பிறகு செய்யத்தொடங்குவான்.கறிக்கு உப்புக்கூட புத்தகம் பாத்துத்தான் போடுவான்.அதுபோல கல்யாணம்கூட ஒருசிலரோடு பழகிப்பாத்துத்தான் கவனமா ஒரு கல்யாணம் செய்வான்.அது எங்களுக்குச் சரிவருமாமோ!//

அண்ணை சக்கடத்தார் ! சரியாத்தான் சொல்லுறீங்கள்?? கையைக் கொடுங்கோ???

கமல் said...

அப்புக்குட்டி said...
விடயத்தை வானொலி வரை கொண்டு வந்து விட்டார். (என்னிடம் நேரடியாக இப்படியொரு உதவி கேட்டால் செய்திருக்க மாட்டேனா?? பிறகு ஏன் றேடியோ வரை வர வேணும்??)//

தம்பி நீர் பிரச்சினைக்குரிய ஆள் என்டு இப்பத்தான் தெரியுது.. அது பரவாயில்லை உம்மை இவ்வளவு நாளும் என்ர வீட்டுக்கு உள்ள விட்ட என்னைச் செருப்பாலை அடிக்க வேணும்?? இனிமேல் பட்டு நீர் என்ர வீட்டுப் பக்கமே வரக் கூடாது.. நானும் உம்மை நல்ல பிள்ளை என்டு நினைச்சால்? நீரும்?? இனிமேலும் என்னை ஏத்தக் வாறன், றேடியோப் பக்கம் கூட்டிக் கொண்டு போக வாறன் என்டு வரவே கூடாது??? இந்தக் காலத்திலை ஒருத்தரேம் நம்ப ஏலாமல் இருக்கு??//

அப்புக்குட்டி உமக்கு நான் சொல்லுவது வேறை மாதிரித்தான் விளங்கும்?? ஏனென்றால் வயசு போயிட்டுத் தானே?? நான் சொன்னது என்னிடம் கேட்டால் ஏதாவது ஆலோசனை தந்திருப்பேன் என்று??? எதையுமே தப்பாகவே புரிஞ்சு கொள்ளுங்கோ?? நல்லதுக்குச் சொன்னால் நாசமாச் சொன்னதாகத் தான் நினைப்பீங்கள் போல??

BOOPATHY said...

//ஒரு கதைக்கு அப்புக்குட்டியின்ர மகளைத்தான் கமல் கல்யாணம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எண்டா கமல் ஓம் எண்டுவாராமோ!//
அச்சோ கமல் எப்படி ஓமெண்ணுவர் அவற்றை மரியாதை என்னாவது.
கவலையான விடயம் என்னவெண்டால் கமல் யாரோடை இப்ப திரிஞ்சாலும் நாளைக்கு அப்புகுட்டியர் மகளை ஒண்டும் பேசாமல் கட்டிக் குடுப்பார் எனெண்டால் கமல் பொடியனாம் சேறு கண்ட இடத்திலை காலை வைச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவிப் போட்டு போகலாம்.

கமல் said...

BOOPATHY said...
//ஒரு கதைக்கு அப்புக்குட்டியின்ர மகளைத்தான் கமல் கல்யாணம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை எண்டா கமல் ஓம் எண்டுவாராமோ!//
அச்சோ கமல் எப்படி ஓமெண்ணுவர் அவற்றை மரியாதை என்னாவது.
கவலையான விடயம் என்னவெண்டால் கமல் யாரோடை இப்ப திரிஞ்சாலும் நாளைக்கு அப்புகுட்டியர் மகளை ஒண்டும் பேசாமல் கட்டிக் குடுப்பார் எனெண்டால் கமல் பொடியனாம் சேறு கண்ட இடத்திலை காலை வைச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவிப் போட்டு போகலாம்.//

அதற்காகப் பூபதி எல்லா ஆண்களும் கழுவிற மீனிலை நழுவுற ஆட்கள் என்று நினைக்க வேண்டாம். நல்லாத் தான் யோசிக்கிறீங்கள். தொடர்ந்தும் வாங்கோ.

tamil24.blogspot.com said...

அப்புக்குட்டி

என்னைத் துரத்துறதென்டு தான் எல்லோரும் முடிவெடுத்திட்டீங்கள் போல??? நான் நல்லாயிருக்கிறது விருப்பமில்லையே? அது சரி என்னிலை உள்ள அனுதாபத்துக்கு நன்றிகள்.....
************************************
நெடுகலும் நீங்கள் பிரச்சனையோடை வந்தா என்ன அப்புக்குட்டித்தாத்தா செய்யிறது. ஏதாவதொரு முடிவு வரத்தானே வேணும். சரி அடுத்த பிரச்சனை என்னெண்டு சொல்லுங்கோ கேட்போம்.

பிரச்சினை இல்லாமல் இருக்கவிடுறீங்கள் இல்லையே?? நான் என்ன செய்ய? அடுத்த பிரச்சினை என்னவெண்டு சொன்னால் அதிலை உள்ள சுவாரசியம் குறைஞ்சிடும். அடுத்த பிரச்சினை என்னவென்று ஏற்கனவே றேடியோவிலை போட்டாச்சு. ஆனால் இதிலை எப்ப போடுறதென்பதை கமல் தான் தீர்மானிக்கவேணும்.

பிரகதீஸ்வரி said...

அண்ணா அருமை பதிவு. ஆனா பாதில முடிஞ்சமாரி இருக்கு. உங்கட பதிவு நெறய படிச்சிருக்கென். ஆனா கமெண்டு எழுதயில்ல. நீங்க நம்மட சண்ங்களுக்கு வேண்டி எழுதக்கண்டு நானும் வலைப்பூ எழுத ஆச கொண்டு வலைப்பூ ரெடிபண்ணிட்டன். ஆனா இந்த தமிழ்வெளி தளத்துல இணைப்பு குடுக்க என்க்கு புரியயில்ல. தயவு செஞ்சி நீங்க கொஞ்சம் அத விளக்க இயலுமா பிலீஸ். உங்களுக்கு முடிஞ்சயெண்டால் இந்த பதிவில் பதில் தாங்களென். நன்றி

Anonymous said...

ithu suppukutty'da copy cut aa?

அப்புக்குட்டி said...

Anonymous said...
ithu suppukutty'da copy cut aa?//

ஐயோ....என்ரை கடவுளே! என்னமா யோசிக்கிறீங்கள்? இது அப்புக்குட்டி.. அதார் சுப்புக் குட்டி?? நான் இலங்கையில் இருந்து நான் இங்கை வந்தே சுமார் எட்டு வருசங்கள் ஆகுது???

சில நேரம் சுப்புக் குட்டி எனது வழித் தோன்றலாக இருக்கலாம். நான் அவரின் வழித்தோன்றல் இல்லை... என் அண்ணை உங்கடை பேர் எங்கை போச்சு??

நான் என்ரை சொந்தக் குரலில் தான் பேசுறேன். உங்களுக்கு சுப்புக் குட்டியை மட்டும் தான் தெரியும் போல..இலங்கையை விட்டுக் கொஞ்சம் வெளியை வாங்கோ..

அப்பத்தான் கனடாவிலை எப்பிடிக் குரல் உள்ளவை இருக்கினை, இலண்டனிலை எப்பிடிக் குரல் உள்ள ஆட்கள் இருக்கீனை, இங்க ஒஸ்ரேலியாவிலை எப்பிடி ஆட்கள் இருக்கீனை எண்டு தெரியும்?? ஏதோ அவர் கொப்பி றைட்ஸ் எடுத்து வைச்சிருக்கிற மாதிரிப் பேசுறீங்கள்.

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).