Tuesday, February 24, 2009

நக்கலும் நளினமும்! (02)

பாசிச வாதம்!

சுப்பர் கப்பில் அந்த பொண்ணு சூட்டி-அவளை(ச்)
சுருக்கெனவே மறித்தவுடன் ”ஐசியினை(க்) கேட்டு
வெற்றுடம்பை(க்) கொன்றனராம் ஆறு ஆமி-ஐயோ
அநியாயம் நடப்பதனால் அழிகிறது நம்ம தமிழ்ப் பூமி!
*************************************************

வீர முழக்க(ல்)ம்!

முகமாலை வழி தாண்டி முன்னேறு தம்பி
முன்னாலே உள்ள படையோ ஒரு தும்பி
சகவாசம் இனி மேலும் வேண்டாம்- அவர்
சரித்திரம் முடியா விட்டால் ஏன் நாம்?
************************************

ஆட்டிலறி கொண்டு வாடா அரவிந்தா-இனி
அதிரடியால் அலறப் போறார் அவர்களடா
வேட்டொலிகள் கேட்டவுடன் வெளிக்கிட்டார்- அவர்
வேற்று நாடே தஞ்ச மென்று இருந்திடுவார்!
*******************************************
(27.11.2006)

அடியும் உதையும்!

பத்தினி வந்தாளாம் தன்
பாவாடை களைந்தாளாம்-உடலில்
முத்திரை பதித்தாளாம்; இதுவா
முதல் முறை என்றாளாம்??
*******************************

மொட்டை மாடி மேலே நின்று ரோஜா
‘மோக முள் எடுத்த்து வீசினாளாம்
கட்டழகன் பாய்ந்து சென்றானாம்-அவள்
காலுதையை வாங்கி வந்தானாம்!
*************************************
(19.06.2005)

பொருள் விளக்கம்:
1)ஐசி: ஆள் அடையாள அட்டையை ஈழத்தில் குறிப்பிடப் பயன்படும் சொல்.
2)ஆட்டிலறி: பீரங்கி.
3)மோக முள்: ஆசை என்னும் அஸ்திரம்/ ஆசை என்னும் முள்.

பிற் குறிப்பு: இவை அனைத்தும் அப்போதைய யாழ்ப்பாணக் கள நிலமைகளைத் தழுவி எழுதப் பட்ட கவிதைகள்.

ந‌க்க‌லும் ந‌ளின‌மும் தொட‌ரும்..............

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

*நக்கலும் நளினமும்! (01)

*எரிகின்ற எனது எனது நகரம்! (01)

*எரிகின்ற எனது நகரம்! (2)

*எரிகின்ற எனது நகரம்! (3)

15 comments:

கவின் said...

என்ன கமல் நக்கல் நல்லாதான் இருக்கு...

கவின் said...

வீர முழக்க(ல்)ம்!

முகமாலை வழி தாண்டி முன்னேறு தம்பி
முன்னாலே உள்ள படையோ ஒரு தும்பி
சகவாசம் இனி மேலும் வேண்டாம்- அவர்
சரித்திரம் முடியா விட்டால் ஏன் நாம்?
**********
இந்த நிலை விரைவில் வரனும்

’டொன்’ லீ said...

அருமை...

தொடரட்டும்....:-))

வேத்தியன் said...

நம்ம கடைக்கு வாங்க...
அவசரம் இல்லை..
இன்னொரு வேலை இருக்கு...
:-)

ஹேமா said...

கமல்,இண்டைக்குச் செய்தி.
முகமாலையும் பிடிச்சாச்சாம்.
உண்மையோ....என்ன கமல்!

ஆதவா said...

சுப்பர் கப்பில் அந்த பொண்ணு சூட்டி-அவளை(ச்)
சுருக்கெனவே மறித்தவுடன் ”ஐசியினை(க்) கேட்டு


வெற்றுடம்பை(க்) கொன்றனராம் ஆறு ஆமி-ஐயோ
அநியாயம் நடப்பதனால் அழிகிறது நம்ம தமிழ்ப் பூமி!




ரொம்ப அநியாயம் கமல்...  இதெல்லாம் வெளிப் பத்திரிக்கைக் காரர்களுக்குத் தெரிவதே இல்லையா!!!

நளினமாகச் சொன்னாலும் அதன் உண்மை சுடுகிறது..

ஆதவா said...

இரண்டு மூன்று முறை முயற்சி செய்து இன்றுதான் உங்கள் தளத்தில் பதிவிடமுடிகிறது!!!

ஆதவா said...

முகமாலை வழி தாண்டி முன்னேறு தம்பி
முன்னாலே உள்ள படையோ ஒரு தும்பி
சகவாசம் இனி மேலும் வேண்டாம்-

அவர்
சரித்திரம் முடியா விட்டால் ஏன் நாம்?


எனக்கு இதற்கு அர்த்தம் தெரியவில்லை..  ஏதோ

சொல்ல வருகிறீர்கள்..... இருப்பினும் கவிதை சாரம் அருமையாக இருக்கிறது.

ஆதவா said...

ஆட்டிலறி கொண்டு வாடா அரவிந்தா-இனி
அதிரடியால் அலறப் போறார் அவர்களடா
வேட்டொலிகள் கேட்டவுடன்

வெளிக்கிட்டார்- அவர்
வேற்று நாடே தஞ்ச மென்று இருந்திடுவார்!


பாரதியைப் பார்த்த உணர்வு!!



நல்ல சந்தம் பிடித்து உணர்வைக் கொப்பளித்திருக்கிறீர்கள். இது நடக்கவேண்டுமே கமல்!!! புலிகள் ஏன்

மெளனமாக இருக்கிறார்கள், வலிந்து யுத்தம் செய்யவில்லை என்று ஒரு சமயம் புலிகள் மீதே கோபம் வந்தது@@@

ஆதவா said...

பத்தினி வந்தாளாம் தன்
பாவாடை களைந்தாளாம்-உடலில்
முத்திரை பதித்தாளாம்; இதுவா
முதல் முறை

என்றாளாம்??


அப்பட்டமாக இப்படி கவிதை புனையவும் தைரியம் வேண்டும்.. அது நம் தமிழர்களுக்கு

உண்டென்பது அறிவேன். முகத்தில் அறைந்ததைப் போன்று இருக்கிறது....... இந்த ஒரு கவிதையே போதும்... அத்தனைக்

கவிதைகளுக்கும் மேல்!!!

ஆதவா said...

மொட்டை மாடி மேலே நின்று ரோஜா
‘மோக முள் எடுத்த்து வீசினாளாம்
கட்டழகன் பாய்ந்து சென்றானாம்-அவள்


காலுதையை வாங்கி வந்தானாம்!


இத்தனை கவிதைகளிலும் இக்கவிதையே நக்கலாக எனக்குத் தெரிகிறது!

(அனுபவமா??) சும்மா கேட்டேன்!!!

கவிதைகள் அழுகின்றன... துடைத்துவிட ஆளில்லை....... எத்தனை நாட்கள்

சொல்வது.. காலம் பதில் சொல்லவேண்டுமென்று!!!!

வாழ்க தமிழ்

கமல் said...

கவின் said...
என்ன கமல் நக்கல் நல்லாதான் இருக்கு...//

சொல்லவேயில்லை??

கமல் said...

கவின் said...
வீர முழக்க(ல்)ம்!

முகமாலை வழி தாண்டி முன்னேறு தம்பி
முன்னாலே உள்ள படையோ ஒரு தும்பி
சகவாசம் இனி மேலும் வேண்டாம்- அவர்
சரித்திரம் முடியா விட்டால் ஏன் நாம்?
**********
இந்த நிலை விரைவில் வரனும்//

கவின் எப்ப வரும்??

இது முந்தி எழுதினது.. நினைவூட்டலுக்காகத் தான் போட்டனான்.

கமல் said...

’டொன்’ லீ said...
அருமை...

தொடரட்டும்....:-))//

நன்றி லீ...

கமல் said...

ஹேமா said...
கமல்,இண்டைக்குச் செய்தி.
முகமாலையும் பிடிச்சாச்சாம்.
உண்மையோ....என்ன கமல்!//

ஹேமா அப்ப சொல்லவேயில்லை...

ஆர் அப்ப கொடியேத்தினது??

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).