Wednesday, January 14, 2009

கண்ணிய நடிகையின் கலக்கல் கவர்ச்சி நடனம்! (காணொளி/ வீடியோ)

தமிழ் மணம் நிர்வாகத்தினருக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் தலைப்பைப் பார்த்தவுடன் இந்த வலைத் தளம் தணிக்கை செய்யப்ப்பட வேண்டிய வலைத் தளம் என்றே தோன்றலாம், நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் ஓர் ஆர்வக் கோளாறு தான். இப்படி ஓர் பதிவை இட்டதனால் இன்று தான் நான் கடைசியாக தமிழ் மணப் பக்கம் வருகின்றேன் என்று எண்ணவும் தோன்றுகிறது.

இந்தப் பதிவைப் படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பானவர்கள் அல்ல என்பதால் இவ் இடத்தில் நிறுத்துக! எச்சரிக்கை- இது கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும் என்ற தலைப்போடு உள்ளது எனும் நம்பிக்கையில் நீங்கள் உள்ளே நுழையலாம்..

இவ்வளவு நாளும் ஈழம் பற்றிப் பதிவெழுதிப் போட்டு இவன் ஏன் திடீரென்று இப்படி மாறினான் என்று நீங்கள் எல்லோரும் யோசிக்கலாம்..! ஆனால் நான் மட்டும் பார்த்த இவ் அதிசய காணொளியைத் தனியே வைத்துப் பார்த்து ரசிப்பது அழகு இல்லை என்பதால் உங்களோடும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது தமிழகத்தையே இப்போது கலக்கும் ஒரு கண்ணிய நடிகையின் கலக்கல் கவர்ச்சி நடனம் என்பதால், இதனை நீங்கள் மிகவும் பொறுமையாகப் பார்ர்க வேண்டும்... என்ன யோசிக்கிறீர்கள்??
கண்ணியமான கவர்ச்சி நடிகை யார் தெரியுமா??? அவர் தான் பெருமதிப்பிற்குரிய எமது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐயா அவர்கள். இந்தக் கவர்ச்சி நடிகையின் ஊழித் தாண்டத்தாலும், அதன் கூட்டாளிகளின் கலக்கல் விமானக் குண்டு வீச்சுக்களாலும் தினமும் உணர்விழந்து இறந்து போகின்றவர்கள் யார் தெரியுமா??? வன்னியில் இப்போது வாழுகின்ற மீதமுள்ள மானமுள்ள தமிழர்கள்!

சுருங்கச் சொன்னால் இனவாத அரச பயங்கரவாதத்தின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது அப்பாவி மக்களின் நிகழ்காலத் துன்பியல் வாழ்வினைத் தாங்கிய ஒரு பாடலே இப்பதிவு. எமது மக்கள் இப்படித் துன்பபடும் போது நான் இவ்வாறு தலைப்பை வைத்தமை பற்றிப் பல கண்டனங்கள் வரலாம்.. நானும் மிகுந்த சிரமப்பட்டு அல்லற்படும் வன்னி மக்களது அவலங்களை எல்லாம் பதிவாக்கிய பின் காத்திருக்கிறேன்.,.. ஒருத்தர் கூட கடந்த இரு நாட்களாக எனது தளப் பக்கம் வர முயற்சியே செய்யவில்லை.... (மீதமுள்ள - தளத்திற்கு வந்த ஒரு சிலர் பொறுத்துக் கொள்க)

இத்தகைய சூழ் நிலையில் இப்படி ஒரு தலைப்பினூடாகப் பதிவிட்டால் தான் எமது மக்களின் துன்பங்களை அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்றால் நான் என்ன செய்ய முடியும்???

பிற்குறிப்பு: என்னதான் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து எல்லாத்தையும் படிச்ச நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து இக் காணொளியையும் பார்த்து விட்டுச் செல்லுங்கோ!
புது வருசத்தில் இடம் பெற்ற ஏமாற்றங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் நான் பொறுப்பல்ல....

எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!



இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகள்! (நேரடி ஒலித் தொகுப்பு)

2)வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......!

3)திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்!

12 comments:

sundarmeenakshi said...

good work

ஹேமா said...

கமல் அலுத்துப் போக வேண்டாம்.
பொங்கலும் அதுவுமாக எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருக்க நினைப்பார்கள்.விடுமைறை எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள் குடும்பங்களோடு.எங்கள் தலைவிதி இப்படி நாடு விட்டு நாடு அகதிகளாகச் சொந்தங்களை விட்டுக் கிடக்கிறோம் என்றால் அதற்காக மற்றவர்களைக் குறை சொல்லமுடியுமா!எத்தனை நாட்கள் வருடங்கள்தான் எங்கள் வேதனைகளோடு வலம் வருவார்கள்.அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?நினைத்துச் செய்யவேண்டியவர்களே மௌனமாக இருக்கிறார்கள்.எங்கள் பதிவுகள் எப்போதும் கண்ணீராலேயே நனைந்து கிடக்கிறது.பார்ப்பவர்களுக்கும் அலுப்பு வரும்தானே.அதற்காகத் தளர வேண்டாம்.எங்கள் வேதனைகளை எழுத்திலாவது வடித்துக் கொண்டிருப்போம்.

Raja said...

நீங்கள் இட்ட பதிவு நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. தமிழகத்தில் எங்களுடைய இயலாமையை எண்ணி வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. இந்த அரசியல் தெருப்பொறுக்கிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் தமிழினத்துக்கு வாய்த்த சாபக்கேடுகள். நாளைய வரலாறு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் முற்றிலும் அற்று விட்டது. அப்படி ஒருவர் இருந்தால் என் சகோதர சகோதரிகளுக்கு ஏன் இந்த இழி நிலை?????

Ilaya said...

நன்றி நண்பனே ..ஆனால் ஒரு வருத்தம்..இப்படி ஒரு சோக செய்திக்கு ..இப்படி ஒரு அறிவுரை தேவை அற்றதூ ..கவர்ச்சி..என்ற தலைப்பில்..ஒரு தமிழனை ..ஈழத்தின் செய்தியாய் படிக்க வைய்தாயே . ..இலத்தின் கொடுமை என்றால் அந்த கட்டுரை படிக்கமாட்டான் .. தமிழன் என்று என்னினாயோ..

கலை - இராகலை said...

கண்ணீர்விட்டு சேர்ந்து அழமட்டுமே முடிகின்ற நிலை!!!!!!!!!

மெல்போர்ன் கமல் said...

sundarmeenakshi said...
good work//

வாங்கோ சுந்தர மீனாட்சி! மக்களின் அவலத்தை என்னால் முடிந்தவரை வெளிக்கொணர முயன்றிருக்கிறேன்... அவ்வளவு தான்... நன்றிகள்.

மெல்போர்ன் கமல் said...

ஹேமா said...
கமல் அலுத்துப் போக வேண்டாம்.
பொங்கலும் அதுவுமாக எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருக்க நினைப்பார்கள்.விடுமைறை எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள் குடும்பங்களோடு.எங்கள் தலைவிதி இப்படி நாடு விட்டு நாடு அகதிகளாகச் சொந்தங்களை விட்டுக் கிடக்கிறோம் என்றால் அதற்காக மற்றவர்களைக் குறை சொல்லமுடியுமா!எத்தனை நாட்கள் வருடங்கள்தான் எங்கள் வேதனைகளோடு வலம் வருவார்கள்.அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?நினைத்துச் செய்யவேண்டியவர்களே மௌனமாக இருக்கிறார்கள்.எங்கள் பதிவுகள் எப்போதும் கண்ணீராலேயே நனைந்து கிடக்கிறது.பார்ப்பவர்களுக்கும் அலுப்பு வரும்தானே.அதற்காகத் தளர வேண்டாம்.எங்கள் வேதனைகளை எழுத்திலாவது வடித்துக் கொண்டிருப்போம்.//

எம்மால் முடிந்ததை நாங்கள் செய்வோம் ஹேமா... இப்போது தான் நான் யோசிக்கிறேன்.... உயிர்காக்க இங்கு வந்து அல்லற்படும் எங்களை விடக் கடைசிவரை அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையில் அங்கே இருக்கும் மக்கள் எவ்வளவு மேலானவர்கள்....அவர்கள் துன்பத்திற்கும், கண்ணீருக்கும் காலம் ஒரு நாள் பதில் சொல்லும்!

மெல்போர்ன் கமல் said...

Raja said...
நீங்கள் இட்ட பதிவு நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. தமிழகத்தில் எங்களுடைய இயலாமையை எண்ணி வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. இந்த அரசியல் தெருப்பொறுக்கிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் தமிழினத்துக்கு வாய்த்த சாபக்கேடுகள். நாளைய வரலாறு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் முற்றிலும் அற்று விட்டது. அப்படி ஒருவர் இருந்தால் என் சகோதர சகோதரிகளுக்கு ஏன் இந்த இழி நிலை?????//

எல்லோராலும் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட பிணியராக இன்று எங்கள் மக்கள் ஆகி விட்டார்கள்... தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் பொய்யாகி விட்டது....எங்கள் உறவுகள் துடிப்பதைப் பார்த்து இறைவன் இன்புறுகிறான் போலும்,.. வற்றாப்பளையாளும், முறிகண்டியானும், புதூரானும் தான் தோன்றீஸ்வரனும் தமிழர் இரத்தத்தில் இப்போது தீர்த்தமாடுகிறார்கள்....எங்கள் மக்கள் வணங்கிய இறைவனுக்கே எம்மவரின் நிலமை புரியாத போது எம் தாய் தேசத்திற்கு எப்படி ஐயா இந்த நிலமை புரியும்??? அவரவர் கதிரைகளில் சாகும் மட்டும் சந்தோசமாக இருந்து செத்து விட்டால் போதும்... மற்ற்றும் படி தமிழ்ப் பற்று... தமிழ் வளர்ப்பு எல்லாம் தமிழகத்தில் கதிரைகளில் இருந்து கனவு காண்பவர்களின் வியாபார தந்திரங்களே நண்பா.... வருகைக்கு நன்றி நண்பரே!

மெல்போர்ன் கமல் said...

Ilaya said...
நன்றி நண்பனே ..ஆனால் ஒரு வருத்தம்..இப்படி ஒரு சோக செய்திக்கு ..இப்படி ஒரு அறிவுரை தேவை அற்றதூ ..கவர்ச்சி..என்ற தலைப்பில்..ஒரு தமிழனை ..ஈழத்தின் செய்தியாய் படிக்க வைய்தாயே . ..இலத்தின் கொடுமை என்றால் அந்த கட்டுரை படிக்கமாட்டான் .. தமிழன் என்று என்னினாயோ....//


நண்பரே இப்படித் தலைப்பில் பதிவிட்டால் தான் எம்மவரின் அவலம் எங்கள் தமிழக உறவுகளுக்குத் தெரியும். புரியும் என்றால் நான் என்ன செய்ய முடியும் நண்பரே.... மன்னித்தருள்க,....

மெல்போர்ன் கமல் said...

கலை - இராகலை said...
கண்ணீர்விட்டு சேர்ந்து அழமட்டுமே முடிகின்ற நிலை!!!!!!!!!...//


எல்லோராலும் கைவிடப்பட்டவர்களின் நிலமை இப்போது பரிதாபம்...நாம் என்ன செய்ய முடியும்??? இறைவன்... நீதி.... மனிதாபிமானம் எல்லாமே தூங்கி விட்டனவே??

kajan's said...

தைப்பொங்கல் நாளில் தைச்சுட்டிங்கலே நெஞ்சை கமலணை

மெல்போர்ன் கமல் said...

kajan's said...
தைப்பொங்கல் நாளில் தைச்சுட்டிங்கலே நெஞ்சை கமலணை//

வாங்கோ தம்பி! நெஞ்சைத் தைக்க வைப்பது என்பதை விடப் புரிய வேண்டியவர்களுக்கு எமது உறவுகளின் அவலத்தைப் புரிய வைப்பதே எமது நோக்கம்.. நன்றி தம்பி!

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).