Wednesday, January 14, 2009
வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகள்! (நேரடி ஒலித் தொகுப்பு)
வன்னிக்குள் என்னதான் நடக்கிறது என்று ஏதும் அறியாதவர்களாய் உலக நாடுகளும் மனிதாபிமான அமைப்புக்களும் பகல் வேடம் போட்டு உலகம் எனும் அகலத் திரையில் நாடகம் ஆடிக் கொண்டிருக்க இனவாத அரசின் நடிகர்களின் துணையுடன் பயங்கரவாதம் எனும் போர்வையின் கீழ் அப்பாவிப் பொது மக்கள் நாளுக்கு நாள் கொல்லப்படுகின்ற போது மௌனித்துப் போயிருக்கும் சூழ் நிலையில், வன்னி மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடுகள் அடங்கிய ஒலித் தொகுப்புக்கள் உங்களுக்காக இங்கே தரப்படுகின்றன! 
விடிவிற்காக ஏங்கும் மக்களின் உண்மையான உள்ளது உணர்வுகளும், அரச படைகளால் கொல்லப்படுபவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், அப்பாவிப் பொது மக்களே! என்பதையும் இவ் ஒலித் தொகுப்பினூடாக நீங்கள் கேட்டுத் தெளிந்து கொள்ளலாம். வாழ்வில் விடுதலைக்காக ஏங்கும் உண்மையான இனத்தின் உணர்வின் வெளிப்பாடுகளும் எல்லோராலும் நட்ட நடு ஆற்றில் கைவிடப்பட்ட பொது மக்கள் அனைவரினதும், நீதி வேண்டிய நிஜாயங்களின் பிரதிபலிப்புக்களும் இங்கே உங்கள் செவிகளை நோக்கி விரிகின்றன.
மனிதாபிமானம், பயங்கரவாதம், ஜனநாயகவாதம், சம உரிமை வாதம், பாசிச வாதம் முதலிய தார்மீகச் சிந்தனை பற்றித் தலை முறை தலை முறையாக விளக்கமளிப்பவர்களே எனக்குப் புரியவில்லை இது எந்த வாதமென்று??? யாராவது புரியவைப்பீர்களா???
Vanni Avalam.mp3 - Melbkamal
இவ் ஒலித் தொகுப்பைக் கேட்க உங்களிடம் Adobe Flash Player இருத்தல் வேண்டும்.
ஒலித்தொகுப்பு மற்றும் பட உதவிக்காக நன்றியுடன் தாயகக் குரல் புலிகளின் குரல்!
இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
1)வன்னிக் கதை கேட்டு வழியும் விழி கண்டால்.......!
2)திரும்பிப் பாருங்கோ! ஈழச் சிறார்களின் அவலம்!
3)முல்லைத்தீவிற்குள் முடங்குமா?? அல்லது முல்லைத்தீவிலிருந்து முழங்குமா???



21 comments:
கமல் உங்கள் நேரடி ஒலித் தொகுப்பைக் கேட்டுவிட்டு நேற்று இரவு முழுதும் நித்திரை குழம்பித் தவித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவு தாக்கியது அந்தக் குரல்களும் நிகழ்வுகளும்.என்னதான் செய்யமுடியும்.கொடுமையிலும் கொடுமை இது.ஒரு 25 வயதுப் பெண் கை இல்லாமல் அவளது வாழ்க்கை...!நினைக்கவே பயங்கரமாயிருக்கு.
கமல் தளம் அழகாயிருக்கு.பெயரும் நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.
ஹேமா said...
கமல் உங்கள் நேரடி ஒலித் தொகுப்பைக் கேட்டுவிட்டு நேற்று இரவு முழுதும் நித்திரை குழம்பித் தவித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவு தாக்கியது அந்தக் குரல்களும் நிகழ்வுகளும்.என்னதான் செய்யமுடியும்.கொடுமையிலும் கொடுமை இது.ஒரு 25 வயதுப் பெண் கை இல்லாமல் அவளது வாழ்க்கை...!நினைக்கவே பயங்கரமாயிருக்கு.
கமல் தளம் அழகாயிருக்கு.பெயரும் நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.//
வாங்கோ ஹேமா.... இங்கிருக்கும் எங்களுக்கே இப்படி நிலமை என்றால் அங்கே நாளாந்தம் பரிதவிக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும்???? இறைவனும், உலகமும். தர்மமும் தூங்கிவிட்டது.... அராஜகம் இப்போது தலைவிரித்தாடுகிறது.... நன்றிகள் ஹேமா.... தொடர்ந்தும் வாங்கோ.....
கமல் உங்கள் முயற்சி தொர வாழ்த்துக்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
தமிழன்-கறுப்பி... said...
1......15//
நண்பா இது என்ன வேலை??? ஏன் இந்த கணக்கெடுப்பு???? புரியவில்லை??
சாத்திரி said...
கமல் உங்கள் முயற்சி தொர வாழ்த்துக்கள்//
வாங்கோ சாத்திரி.! என்னால் முடிந்தவற்றோடு நான் தொடர்வேன்....நன்றிகள் நண்பரே!
Post a Comment