Wednesday, December 31, 2008

கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு!

கொஞ்சம் கொஞ்சம் நில், என் நெஞ்சம் சொல்லும் சொல்..
மீண்டும் நீயும் செல்... வாழ்வை வெல் வெல்....


இது சுஜித்ஜீ அவர்களின் முதலாவது சிங்கிள்ஸ் இசைத் தட்டில் வருகின்ற மனதிற்கு நம்பிக்கை தருகின்ற பாடல் வரிகள்...
இந்தச் சுஜித்ஜி பற்றி என்னால் முடிந்த தகவல்களை நான் உங்களுக்காகத் தருகின்றேன்..



SujeethG Final.mp3 - Melbkamal

யாரும் பேச வேண்டாம் காற்றே வீச வேண்டாம்.... எனும் பாடலில் வருகின்ற

'யாரும் பேசவேண்டாம் காற்றும் வீசவேண்டாம்
மூச்சுக் காற்றே நீயும் கொஞ்ச நேரம் வேண்டாம்
செம்மொழியாள் அந்தச் சேதி சொல்லிப்போனாள்
கோலவிழி கொண்டு என்னைக் கிள்ளிப்போனாள்
நீதான் என்; உயிரென்று காதல் செய்யச் சொன்னாள்;
நீங்கிச்; சென்றால் உலகை நீங்கிச் செல்வேன் என்றாள்

முட்டாள்ப்பெண் உன்னை நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார் சொல் கேட்டா காதல் செய்தேன்

பதினெட்டு வய(து) தொட்டு உள்ளம் புரள்பட்டு
மனம்விட்டு இளமொட்டு காதல் வசப்பட்டு
அரும்மொட்டு வெண்பட்டு எல்லாம்நீ என் சிட்டுன்
நிழல் பட்ட இடம் தொட்டு வருவேன் தொடர்ந்திட்டு

நீங்கிச்சென்றால் உலகை நீங்கிச்செல்வேன் என்றாள்
முட்டாள்ப்பெண் அவளை நான் விட்டால் என்ன செய்வேன்
பெற்றோர் சொல் உற்றார் சொல் கேட்டா காதல் செய்தேன்
முட்டாள்ப்பெண் உன்னை நான் விட்டால் என்ன செய்வேன்....


எனும் சொல்லிசை (Tamil Rap Music) மூலமாகத் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த் சுஜித்ஜி அவர்கள் இன்று பல்வேறுபட்ட சிந்தனைகளைத் தருகின்ற சமூகக் கருத்துக்களினூடாகத் தனது பயணத்தைத் தொடர்கின்றார் என்றே கூறலாம்.


சிறந்த ஒரு கவிஞர், பாடகர், சொல்லிசையாளர் முதலிய படி நிலைகளூடாகப் பயணிக்கின்ற சுஜித்ஜி அவர்கள் சிங்கிள்ஸ், அடி மேல் அடி முதலிய இரு இசைத் தட்டுக்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்.


இவரது அடுத்த இசைத் தட்டான ''இராவணன் ' இசைத் தட்டு 2009ம் ஆண்டில் வெளிவர விருக்கின்றது. வளர்ந்து வரும் நமது ஈழத்து இளங் கலைஞன் பற்றிய ஒலித்தொகுப்பினை நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.... இது சுஜித்ஜி பற்றிய முதலாவது ஒலித் தொகுப்பு.

பிற் குறிப்பு: மிக நீண்ட இடை வேளைக்குப் பின்னர் மீண்டும் ஓர் வானொலியில் மெல்போர்னிலிருந்து நிகழ்ச்சி படைக்கும் வாய்ப்பு வந்தது. எந்தவித முன் ஆயத்தமும் இன்றி நான் இருந்த போது உடனடியாக நிகழ்ச்சி படைக்க வேண்டிய சந்தர்ப்பம் காரணமாக கொஞ்சம் யோசித்துச் சுஜித்ஜி பற்றிச் செய்வோம், என் முதல் நிகழ்ச்சியை என்ற தெளிவான முடிவில் படைக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அங்கங்கே சொற்கள் பயத்தினால், மைக்கின் முன் தடுமாறுகின்றன. அறிவிப்பும் சில நேரம் நெறி தவழ்கிறது என நினைக்கின்றேன்..
வானலை வல்லவர்களே! பொறுத்தருளுக.... இது ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்காக நான் படைத்த முதல் நிகழ்ச்சி. இவ் வேளையில் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா மற்றும் ATBC நிர்வாகத்தினருக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

படத் தொகுப்பிற்காக நன்றியுடன் சுஜித்ஜி இணையத்தளம்.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)பொறாமை!

2)பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை......(சுனாமி நினைவுப் பாடல்)

3)இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி! Read More......

Tuesday, December 30, 2008

திருமணமானவர்களுக்கு மட்டும்!

திருமணம் என்பது இரு மனங்களின் ஒன்று கூடல் என்று எல்லோரும் வர்ணிப்பார்கள். மனித மனங்கள் தமது கட்டுக்களை உடைக்கும் போது நெறி தவறுவது இயல்பானதாகும். இந்த மனித மனித மனங்கள் எப்போதும் தமது சிறகுகளை அகல விரித்தே பறக்க நினைக்கின்றன.

திருமணமானவர்களும், திருமணமாகப் போகின்றவர்களும் வாழ்வில் மிகவும் அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய விடயங்களோடு எமது அப்புக்குட்டி அவர்கள் இன்று புறப்பட்டிருக்கிறார். அவர் இன்று எதிர் கொள்ளும் விவகாரமான விடயம் விவாகரத்து. இன்று சமூகத்தில் பல தாக்கங்களை ஏன்ற்படுத்தி வருகின்ற விவகாரத்து பற்றிய ஒரு சுவாரசியமான உரையாடலுடன் அப்புக் குட்டி அவர்கள் உங்களைச் சந்திக்க வருகிறார்.

இந்த உரையாடலில் என்னோடு, அப்புக்குட்டி மற்றும் திருமதி சாந்தினி ஆகியோர் பங்கு பற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியானது ஏற்கனவே ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியாகும். ஆனாலும் உங்கள் சிந்தனைக்காகவும், உங்கள் தீர்ப்பிற்காகவும் இதனை இங்கே தருகின்றேன்.

Melb Appu Vivakaraththu.mp3 - Melb Appu


என்னிடம் அப்புக் குட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் விடை சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் எனது நண்பர்கள் பலரை இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் தார்மீகக் கடமைக்கு அழைக்கின்றேன்.. அவர்கள் வேறு யாருமல்ல நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் நண்பர் லோசன், சாரல் மழை தூவும் சயந்தன், அறிவுப் பசி போக்கிக் காதற் புகழுரைக்கும் காரூரன், வானம் வசப்பட வைத்து, உப்புமடச் சந்தியில் காத்திருக்க வைக்கும் ஹேமா, நட்பாய் பெண்ணியம் பேசி , சிரிப்பால் புரிய வைக்கும் சினேகிதி இவர்களுடன் தமிழோடு தமிழால் வலம் வரும் சாந்தி முதலிய அன்புள்ளங்கள்.

இந்தக் கேள்விகளுக்கும், அப்புக் குட்டியின் சந்தேகங்களுக்கும் நீங்கள் என்ன வகையான விடைகளையும் வழங்கலாம்.. அவை ஏற்றுக் கொள்ளப்படும்.
என்ன கேள்விகள் என்று பார்க்கிறீர்களா??? இவை அப்புக் குட்டி அவர்களால் என்னிடம் கேட்கப்பட்டு அவற்றுக்கு என்னால் விடை அளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் பெரியவர்களாகிய உங்களிடம் கேட்கப்படுகின்ற கேள்விகள்.

1)விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???

2)பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???

3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???
4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???

இதனை விட மேலும் பல கேள்விகள் அப்புக் குட்டி அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் பதில் கூற வேண்டியது உங்கள் பொறுப்பு. ம்... அன்பு உளங்களே அப்புக்குட்டியின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு நீங்கள் சொல்லும் தீர்வு தான் என்ன???

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)மெல்போர்ன் அப்புக்குட்டியும் நானும்

2)தமிலும் தமிழும்...!

3)ஆண்களோடு போட்டி போடும் பெண்களிங்கு யாரு????

4)என்ர பிள்ளைக்குப் பேர்(பெயர்) வைக்கவேணும்! Read More......

Sunday, December 28, 2008

காணத்தவறாதீர்கள்! அக்கினிப் பெரு மூச்சு! அங்கம் (02)

எச்சரிக்கை! கண்டிப்பாக வயது வந்தோர்களுக்கு மட்டும்! பயந்த சுபாவமுடையவர்கள், சிறுவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்!

ஏற்கனவே உங்கள் பார்வைக்காக அக்கினிப் பெரு மூச்சுக் குறியீட்டு நாடகத்தின் அங்கம் ஒன்றினை உங்களுக்காகத் தந்திருந்தேன். இப்போது உங்கள் பார்வைக்காக இந் நாடகத்தின் பாகம் இரண்டினைத் தருகின்றேன்.

உயிருடன் புதைக்கப்பட்ட மனிதர்களின் அவலக் குரல்கள், காணாமற் போன மகனைப் பறி கொடுத்த தாயின் கதறல் ஒலி, கணாமற் போன கணவனைத் தேடும் மனைவியின் உள்ளக் குமுறல்கள், இவ்வாறு உறவுகள் அழுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர்களின் நளினத் தன்மை முதலிய பல அம்சங்களை உள்ளடக்கியவாறு இந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக விரிகிறது.

'பட்டப் பகல் வேளை ஒன்றில் இருள் வந்தது !
பொல்லா அரக்கர்களின் ஆட்சி வந்தது!
நள்ளிரவில் காவலர்கள் வீடு புகுவார்!
அகப்பட்ட ஆடவரைக் கொண்டு மறைவார்!
நடுத் தெருவில் நிறுத்திக் கொலை புரிவார்!
நின்றாலும் சென்றாலும் தண்டனை என்பார்!
ஊர் முழுதும் அஞ்சுகின்ற காலம் வந்தது!
இனி இழப்பதற்கு இல்லா நிலை வந்தது!
இனி இழப்பதற்கு இல்லா நிலை வந்தது..... இது அந்த நாடகத்தின் இடை நடுவே வருகின்ற மனதைத் தொடுகின்ற, அந்த நாடகத்திற்கு வலுச் சேர்க்கின்ற பாடலாகும்...

கனவுகள், எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் இழந்து, வாழ்க்கை சிதறடிக்கப்பட்ட நிலையில் ஏங்குகின்ற மக்களின் வாழ்க்கையினைச் சித்தரிப்பதாய் இந் நாடகம் அமைந்துள்ளது.

சமாதானத்திற்கான போர் என்ற நாமத்தில் உலகின் கண்கள் எல்லாம் கட்டப்பட்டு மனித உயிர்கள் மாத்திரம் சமாதானத்த்ற்காகப் பறி கொடுக்கப்படுவதைத் தத்ரூபமாகச் சுட்டி நிற்கிறது இந்த நாடகம்.. இன்னும் சொல்லப் போனால் நாடகாசிரியர் தேவானந் அவர்கள் குறியீட்டு வடிவத்தினூடாக மக்கள் அவலத்தைத் திறம்படக் காட்டியுள்ளார்... இதன் மிகுதி அலசல்கள் அடுத்த அங்கத்தில் தொடரும்.

உங்களிடம் ஒரு பதினைந்து நிமிடங்கள் இருந்தால் மிகவும் பொறுமையாக இந் நாடகத்தைக் பார்க்க முயலுங்கள்!
அக்கினிப் பெரு மூச்சு அங்கம் (02)


அங்கம் இரண்டின் தொடர்ச்சி!

காணொளித் தொகுப்பிற்காக நன்றி! தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)அக்கினிப் பெரு மூச்சு அங்கம் (01)

இதன் அடுத்த அங்கம் வெகு விரைவில்...அதுவரை காத்திருங்கள்! Read More......

பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை......(சுனாமி நினைவுப் பாடல்)

சுனாமி தந்த வலிகளும் ரணங்களும் எம் மனதை விட்டு இன்னும் நீங்காத வகையில் எம்முள் ஆழமாக வேரூன்றி விட்டன... அந்த நினைவுகளைச் சுமந்து வருகின்ற ஓர் பாடலினை இன்று உங்களுக்குத் தரவிருக்கின்றேன். இந்தப் பாடல் சுனாமி இடம் பெற்ற பின்னர் மிக மிகக் குறுகிய காலத்தினுள் இன்று வளர்ந்து வருகின்ற இளங் கவிஞர் வி.விமலாதித்தன் அவர்களால் எழுதப்பட்ட பாடலாகும்.
பாடலினைக் கேட்க கீழே பயணிக்கவும்!
இந்தப் பாடலினைக் கேட்க நீஙகள் Adobe Flash Player வைத்திருத்தல் வேண்டும்.




Paaikinra Alaije.mp3 - Delu

இந்தப் பாடலின் பாடல் வரிகள்:

'பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை சாய்த்திட நினைத்தாயோ... ஓ.......?
உயிர் போக்கிடத் துடித்தாயோ????
பாய்கின்ற அலையே எங்களை இனியும் சாய்த்திட நினைப்பாயோ ஓ.......????
உயிர் போக்கிடத் துடிபாயோ???
கடல் கொண்ட எங்கள் உடல் தந்த நாடு நடை பிணமாக நாம் படும் பாடு!
இறைவா பார்த்தாயோ??? எங்கள் குறைகள் தீர்த்தாயோ????

தங்கையின் தலை மட்டும் இங்கிருக்கு. தம்பியின் உடல் கரை சேர்ந்திருக்கு!
தாயவள் உடம்போ எங்கிருக்கு??? நெஞ்சமோ வெடிச்சிருக்கு,
ஜயோ நெஞ்சமோ வெடிச்சிருக்கு ...
ஆச்சியும் அப்புவும் அன்றொரு நாள் ஆசையாய் கட்டிய கல் வீட்டில்
பேச்சிலும் பாட்டிலும் மகிழ்ந்திருந்த காலங்கள் வராதோ?? வந்து சோகங்கள் தீராதோ???
இடி விழுந்திடினும் மீண்டுயிர் பெற்றே நொடியினுள் கனவுகள் தொலைத்தவர்
தேடி உடல்களை(ப்) புதைக்கின்றோம்... விழி நீரினைத் துடைக்கின்றோம்...

உற்றவர் பெற்றவர் போனாலும் உடலினால் ஊனம் ஆனாலும்
உள்ளத்தின் உரமோ ஓயாது நம் உணர்வுகள் மாறாது. அவை உடை பட்டுப் போகாது...
புத்துயிர் பெற்றிங்கு வாழ்ந்திடவே சித்தத்தில் நம்பிக்கை தோன்றிடுமே!
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் இனித் தூசெனப் போயிடுமே..நம் தேசம் மலர்ந்திடுமே...!
துயர் தூசெனப் போயிடுமே..நம் தேசம் மலர்ந்திடுமே...!
துயர் தூசெனப் போயிடுமே..நம் தேசம் மலர்ந்திடுமே...!
துயர் தூசெனப் போயிடுமே..நம் தேசம் மலர்ந்திடுமே...!

பாடலுக்கு இசை: டிலுக்சன் இராஜேந்திரன், இசை உதவி பிரஜீவ்
பாடல் வரிகள்: வி. விமலாதித்தன்
பாடியவர்கள்: பிரகதீசன் மற்றும் நிருத்திகா.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
1)புது வாழ்வு! (சுனாமி நினைவாக....)

2)பொறாமை!

3)இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி! Read More......

Friday, December 26, 2008

புது வாழ்வு! (சுனாமி நினைவாக....)

சலனங்கள் ஏதுமின்றி எம்
சரித்திரத்தில் இடம் பிடித்து
மரணங்கள் பலவற்றை எம்
மனதுக்குள் விதைத்து விட்டு
விரதங்கள் பல இருந்து
விடிவுகள் பல பெற்று
சிகரங்கள் போல(ப்) பாரில்
சிறப் போடிருந்த வாழ்வை
கரகங்கள் பல ஆடி(க்)
கணப் பொழுதில் அழித்து திரை போன்ற உன் அலையால் எமை(த்)
தீயிலிட்ட கடலலையே!

பாலகன் யேசு இப்
பாரினில் உதித்து
ஞாலங்கள் சிறக்க
நல் வழி காட்டிட;
ஏர்களைப் பூட்டி
எருமையை விரட்டி(த்)
தேரினை இழுத்து(த்)
தேகங் குளிர்ந்திட(த்)
தீமையை மறந்து
ஊரவர் கூடி எம்
உறவைப் பகிர்ந்ததும் மார்கழியில்!

இத்தனை சிறப்பும் மார்கழியே
இப் பூமி தனில் உனக்கிருக்க
பத்தியம் ஏது மின்றி இப்
பாரினில் உள்ள மக்களின்
சொத்துக்கள் தனை அழித்து(ச்)
சொப்பனம் காண வைத்து
நித்தமும் எம்மவரை
நிராதரவாய் விட்டு விட்டாயே!

'உத்தமர் வல்லவர் நிதம்
உதவிகள் பல புரிந்தும்
செத்துமே போய் சேர்ந்திட்ட உயிர்கள்
செம்மையாய் இங்கு வந்திடுமா???

'மாண்ட உயிர்கள் மேல்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்!
மீண்டும் எம் தேசமதை மிடுக்குடன் ஒளிர வைத்து(ப்)
புதுப் பானை எடுத்துப் பல பொங்கலிட்டு
பூமாலை பல கட்டிப் பூக்கோலம் பல போட்டு(ப்)
புது வாழ்வு வாழ்ந்து
புறங் கூறல் தனை மறந்து
இது போதும் என்று இனிதாக உனக்குணர்த்தி எம்
இதயத்தின் மிடுக்குடன்
இனிதாக உனக்கு எங்கள் உதயத்தை உணர வைப்போம்; இதை
உறுதியாய்(ச்) சொல்லி நிற்போம்!

பண்புடன் நிதம் வாழ்ந்து
பகைமைகள் பல மறந்து
விண்ணினைத் தொடுகின்ற பெரு
விருட்சமாய் வேரூன்றி
மண்ணிலே நல்லவராய் மகிழ்வுடன்
மகிழ்வுடன் நிதம் வாழ்ந்து
சதிரான உன் அலையை(ச்)
சற்றே சிந்திக்க வைத்து(ப்)
புது வாழ்வு வாழ்ந்து; பூமியில்
புத்துயிர் பெற்றெழுவோம்!


சுனாமி நினைவாக 07.04.2005 எழுதப்பட்டு முதல் பரிசை எனக்குப் பெற்றுத் தந்த கவிதை இது! நான் புதுக் கவிதையில் இருந்து மரபுக் கவிதை நோக்கிப் பயணிக்கும் போது செய்த பரிட்சார்த்த முயற்சியின் பயனாக உருவாகிய என் ஆரம்ப கால மரபும், புதுமையும் கலந்த கவிதைகளுள் இதுவும் ஒன்றாகும்!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)உங்களுக்கும் கேட்கிறதா எங்களின் புலம்பல்கள்?

2)பாதாள உலகக்காரன்! Read More......

Thursday, December 25, 2008

பாதாள உலகக்காரன்!



இந்திரலோகம் போல் எம்
இலங்கையாம் தீவை மாற்றி(ச்)
சந்திகள் பொந்துகளில் நாளும்
சட்டென்று வெடி வைத்து
மந்திரிமாரின் மான்பு மிகு
மகத்துவத்தைக் காப்பாற்றி(க்)
கொந்தராத்து அடிப்படையில் பல
கொலைகளை(ச்) செய்திடுவேன்!

எம்ம்பிலிப் பிட்டியவில் எனை
ஏறெடுத்துப் பார்த்தவனையும்
வம்புக்கு அழைத்து இந்த
வரலாற்றைத் திணித்தவனையும்
கம்பிக் கூண்டுக்குள் எனை(க்)
கனகாலம் அடைத்தவனையும்
பம்பலப்பிட்டி தனில் பணிந்திடாதவனையும்
பட்டென்று கொன்றிடுவேன்!

இன்றைய நாளில் எனை
இனிதாய் உரசினாலும்
அன்றைய பொழுதில் பல
அடிகளால் அதிர வைத்து
மென்றுமே தின்று இரையை
மெல்லவே விழுங்கி
கொன்றுமே புதைத்து(ப்)
பல கொடுமைகள் செய்திடுவேன்!

ஏராளம் கொலைகள் நான்
ஏளனமாய்(ச்) செய்தாலும்
ஆதாரம் ஏதுமின்றிப் பொலிஸ்
அலைந்து திரிந்தாலும்
பாராளுமன்றத் தாரோடு
பதுங்கியே திரிந்தாலும்
பாதாள உலகத்தானுக்கு இந்த(ப்)
பாராளுமன்றத்தார் உதவிடுவர்!

இருண்டு போன வாழ்வு
இனி எனக்கு வேண்டாமென்று
திருந்தியே வாழ்ந்து தினமும்
திக் கெட்டும் மிளிர்வோம் என்றால்
விருந்துகள் பல செய்து வித
விதமாய் ஊற்றித் தந்து
மருந்துகள் பலவற்றால் எனை
மகிழவே வைத்திடுவர் மந்திரிகள்!

பிற்குறிப்பு: இது 03.06.2005 அன்று வெளியான மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை.
இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
Read More......

Wednesday, December 24, 2008

கழுதைக்குத் தெரியுமா?? கற்பூர வாசனை???

பொடியன் சஞ்ஜயும், அவரது சில வால்பையன்களும் (வால்களும்) தாங்கள் ஏதோ ஈழம் பற்றிப் பூரணமாக அறிந்தவர்கள் போல பதிவு எழுதுவதும், தம்மை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பதிவர்கள் போன்று காட்டிக் கொள்வதும் மிக மிக வேடிக்கையனா விடயம். இந்தப் பதிவினூடாக நான் ஒரு விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று காட்டிக் கொள்ளுவதோ அல்லது புலிகளுக்குப் பிரச்சாரத்தினைத் தேடுவதோ எனது இப் பதிவின் நோக்கம் அல்ல.

அப்படி யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள் தனம். அது மட்டுமன்றி இந்தப் பதிவினூடாக தனிப்பட்ட முறையில் ''பொடியனையோ, அவர் வால்களையோ சாடுவதும் எனது இப் பதிவின் நோக்கம் அல்ல. இவற்றுக்குமப்பால் ஈழம் பற்றி எந்தக் கதையும் கதைப்பதற்கு எனக்கு வயது போதாது என்று வால் பையன் சொல்லும் போது ஈழத்தில் உள்ளவர்களுக்கு 500(ஜநூறு) வயது இருந்தால் தான் அவர்கள் போராட்டம் பற்றிக் கதைக்க முடியுமென்று அவர் பின்னுரைக்கும் போது எனக்கு அதற்கான வயது இல்லை என்பது சரி தானே??? இது வால்பையன் அவர்கள் அனுப்பிய பின்னூட்டம் கொஞ்சம் படித்துப் பாருங்கள்:
முதலில் எனது வினாவும் பின்னர் அதற்கான வால்பையனின் பதிலும் தரப்படுகின்றன.
மெல்போர்ன் கமல் said...
வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

விடுதலைப் புலிகள் வேண்டாம் என்று சொல்லும் ''சில'' தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படி என்றால் 'பல'' தமிழர்கள் விடுதலைப் புலிகள் வேணும் என்று சொல்கிறார்கள் என்பது உங்கள் கருத்துத் தானே?? அதற்கான பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள். அடுத்த கேள்வி உங்கள் ஊர்ப் புலனாய்வுத் துறையும், இலங்கை அமைச்சர் கதிர்காமார் மற்றும் சந்திரிக்கா அரசும் தான் பொய்யான வதந்திகளைக் கூறிப் புலிகளைத் தடை செய்யும் தார்மீகப் பெரும் கடமையை நிறைவேற்றியவர்கள்.. என்ன ஏதாவது புரியுதா????
வால்பையன் said...
//
இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே??? //

எனக்கு வரலாறு தெரியாது,
உங்களுக்கு எப்படியும் ஒரு ஐநூறு வயசிருக்கும் போலிருக்கு, நீங்களே சொல்லிருங்களே!//
சரி தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்றும், புலிகள் பயங்கரவாதிகள் என்றும் கருத்துரைக்கும் பொடியன் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தனி நாடே தீர்வு எனக் கருத்துரைப்பது எப்படி நியாயமாகும். ஈழத் தமிழர்களிற்கு இப்போது வேண்டியது எல்லாம் தனி நாடு ஒன்று தான் அதனைத் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறும் பொடியன் அவர்களே!

நீங்கள் கூறும் விடுதலைப் புலிகள் இல்லாமல், அவர்களின் ஆட்சி இல்லாமல் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழா தமிழ் மக்கள் தனி நாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்??? இப்போது இடம் பெயர்ந்து அவலப்படும் தமிழர்களுக்கு ஒரு வேளை உணவு அனுப்பவே தன்னால் முடியாது அவர்கள் பட்டினியால் வாடி இறந்து போவதே தகுந்த தனியுரிமை எனக் கூச்சலிடும் இலங்கை அரசாங்கமா அவர்களுக்குத் தனி நாடு கொடுக்கப் போகிறது??? அந்த தனி நாட்டையா நீங்கள் ஆதரிக்கிறீர்கள்??? நீங்கள் ஒரு பரிபூரண ஈழத் தமிழின எதிர்ப்பாளனாக இருந்து கொண்டு அதனை மூடி மறைக்கத் தானே அடிக்கடி "நான் புலிகளுக்கு மட்டுமே எதிரானவென். தமிழர்களுக்கு அல்ல. தமிழர்களுக்கு த் தனி நாடே சிறந்தது எனக் கூறுகின்றீர்கள்??? இதற்கு எடுத்துக் காட்டாக உங்களின் இந்தப் பதிவின் பகுதிகளே சான்றாகும் என நினைக்கின்றேன்.

இது பொடியன் அவர்கள் ‘’ ஈழத் தமிழர்களுக்கு மட்டும்.. இந்தியத் தமிழர்களுக்கு இல்லை..எனும் தலைப்பில் எழுதிய பதிவின் ஒரு சில பகுதிகள்: ‘'காஷ்மீரின் நிலை வேறு. ஈழத்தின் நிலை வேறு. காஷ்மிர் பிரிவினையை எதிர்த்தாலும் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன். காஷ்மிர் மக்களுக்கு இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. மாறாக சிறப்பு அந்தஸ்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் நிலை அப்படி இல்லை. அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவது நிஜம். அதனால் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன்.
ஆனால் என்னக் காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முடியாது. ராஜிவ் படுகொலை, சக ஈழப் போராளித் தலைவர்கள் படுகொலை என அவர்கள் எவ்வளவோ பாதகங்களை செய்திருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதால் நான் உங்களுக்கு எதிரியாய் தெரிந்தால் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை எதிரியாய் நினைப்பவர்களின் நட்புக்கு நான் ஏங்கவும் இல்லை. நான் மட்டுமில்லை.. வேறு எந்த காங்கிரஸ்காரருமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் பேசுகிறோமோ ஒழிய, இதுவரையில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. காங்கிரசை பிடிக்காத சில தமிழக “ நல்ல “ உள்ளங்கள் தான் காங்கிரஸ், ஈழத் தமிழர்களுக்கு எதிரனவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் “சிலரும்” அதை நம்பி சமயங்களில் உளறி வைக்கிறாகள். அதை பற்றி எல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நாங்க என்ன சீசன் அரசியலா செய்கிறோம்? :))))


இப்படித் தமிழர்களின் போராட்ட வரலாற்றைக் கொச்சைப்படுத்தி எழுதும் இந்தப் பதிவர்கள் ஈழ வரலாறு பற்றி அதிகம் கதைக்க வேண்டுமா நண்பர்களே??? தமிழர்களுக்கு உள்ள ஆதரவினை தமிழகத்தில் உள்ள ''ஒரு சில சக்திகள் சீரழிக்கிறார்கள்'' என்பது இவரது இந்தக் கருத்துகளால் நிரூபணமாகிறது தானே?? நான்குடன் மூன்றினைக் கூட்டினால் ஏழு என்பதை ஒரு கணிதம் தெரிந்த நான்கு வயதுப் பிள்ளை கூட அது எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்டால் ''தனது ஒரு கையில் நான்கு விரலையும் , மறு கையில் மூன்று விரலையும் எடுத்து எண்ணி அதனை ஆதார பூர்வமாக நிரூபித்துக் காட்டும். இந்த நான்கு வயதுப் பிள்ளைக்கு உள்ள அறிவே இவர்களுக்கு இல்லாத போது இவர்கள் ஈழம் பற்றிப் பொய் கூறுவது முட்டாள் தனம் தானே???


இதனை நான் ஏனிங்கு சொல்கிறேன் என்றால்; பயங்கரவாதம் என்பது என்னவென்று பொடியன் சஞ்ஜய் அவர்கள் விளக்கமளிக்கும் போது அவர் கூறினார்'' தனது நாட்டில் விமான நிலையத்தில் குண்டு வைத்ததும், ராஜீப் காந்தியைக் கொலை செய்ததும் பயங்கரவாதம் தான் என்று. நான் அவரிடம் கேட்டேன் இப்படி ஈழத் தமிழர் பற்றிப் பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கும் நீங்கள் எனக்கு விளக்க முடியுமா??? எப்பொது, எங்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் ? என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேட்டேன்???

நான்கு வயதுப் பிள்ளையிடம் நாங்கள் ஒரு கேள்வியைக் கேட்கும் போது அது எவ்வளவு அறிவு பூர்வமாகச் சிந்தித்துப் பதில் சொல்லும் போது, இந்த அற்ப ஜீவன்களுக்கு சிந்திக்கும் அளவுக்கு அறிவே இல்லாதது மிக மிக வேடிக்கை தானே??? விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று கூறிய பதிவரா?? நானா அதற்கான பதிலைக் கூற வேண்டும்??? நானா அந்தப் பதிவரா அதற்கு விளக்கமளிக்க வேண்டும்??? இதற்கே பதில் தெரியாமல் இருந்து கொண்டு எப்படி அவர் மட்டும் தமிழர்களின் போராட்டத்தைக் கீழ்த் தரமான கண்ணோட்டத்துடன் பார்த்துப் பதிவெழுதி தான் ஒரு ஈழத் தமிழரின் ஆதரவாளர் என்பதனை நிரூபிக்க முடியும்??? சொல்லுங்கள் நன்பர்களே???

இது அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம்: மெல்போர்ன் கமல் said...

பொடியன் சஞ்ஜயின் பொய் கூறும் விதத்தை உங்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக இதோ நான் அவருக்கு அளித்த பின்னூட்டங்களும் அதற்கான அவரின் பதில்களும்!
மெல்போர்ன் கமல் said...
19 December, 2008 9:27 AM
பொடியன்-|-SanJai said...
//தமிழர்களைப் புரிந்து கொள்ளாது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பதிவு எழுதும் நீங்கள்//

கமல், தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களை தான் நான் குறை சொல்லி இருக்கிறேன். இந்த பதிவில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதி இருக்கும் வார்த்தைகளை எடுத்துக் காட்ட முடியுமா? உடனே திருத்திக் கொள்கிறேன்.
பொடியன்-|-SanJai said...
''என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//

பொடியன்-|-SanJai said...
என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//


உங்கள் நாட்டு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் எப்போது குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா??? உங்கள் நாட்டு அமைதிப் படையினர் எங்கள் நாட்டில் செய்த நாசகார வேலைகளுக்கு நாங்கள் என்ன பெயர் கூற முடியும்????
இவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே??? விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா??? நான அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்????
உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு.

அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத், தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???

தமிழர்களின் போராட்ட வரலாறு தெரியாமல் விடுதலைப் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று கூறும் அவரா நானா அந்த வினாவிற்கான பதிலை வழங்க வேண்டும்???? இப்படி இருக்க திடீரென்று அந்த வினாவிற்கான விடை தெரியாத போது அடித்தார் பாருங்கள் ‘பல்டி’ எப்படி என்று??? (பல்டி அடிப்பது சிலருக்குச் சகஜம் போல). கமல், அந்த விமான நிலையக் குண்டு வைப்புச் சம்பவம் பற்றிக் கொழுவி வந்து தான் விளக்கினார். ஆகவே நீங்கள் வரலாறு தெரியாதவர்கள். உங்களுக்கு ஈழப் போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையில்லை.

அன்பு வாசகர்களே! சொல்லுங்கள் வரலாறு தெரியாத ஒருவனால் மட்டும் எப்படி முடியும்?? விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பதனை ஏற்றுக் கொள்ளாது, அப்படி விடுதலைப் புலிகள் குண்டு வைத்தற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?? அவர்கள் எப்போது குண்டு வைத்தார்கள் என்பது பற்றி விளக்க முடியுமா என்று கேட்பதற்கு?? இது நல்ல கோமாளித்தனமாகவெல்லோ இருக்கு.
இதற்குத் தான் எங்கள் ஊரில் ஒரு பழ மொழி சொல்வார்கள்.....’கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று??? இதற்குமப்பால் இன்னொன்று கூறுவார்கள் ''வைக்கற் பட்டறை நாய் போல'' என்று ஒரு உவமைத் தொடர் ... இதை ஏன் இவ்விடத்தில் கூறுகிறேன் என்றால் ''வைக்கற் பட்டறையில் உள்ள நாய் தானும் உண்ணாது, அந்த வைக்கலை உண்ணப் போகும் பிராணியையும் உண்ண விடாது பயமுறுத்திக் கொண்டிருக்குமாம்... இது போலத் தான் சிலரும் தாங்களும் வரலாறு பற்றி ஏதும் அறியாது புதிதாய்ப் பல வரலாறுகளை உருவாக்கிக் கொண்டிருப்பார்களாம்... மற்றையவர்களின் கருத்துக்களைச் சீரழிப்பார்களாம்.

பிற் குறிப்பு: இதில் வருகின்ற கழுதை, நாய் முதலிய வார்த்தைகள் தனிப்பட்ட ரீதியில் எவரையும் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்பட்டவை அல்ல. எமது கருத்துக்களை, எம் பக்க நியாயத்தை விளக்கக் கையாளப் பட்ட குறிச் சொற்கள்.

எவருக்குத் தொப்பி அளவோ...அவரவர் அதனைப் போட்டுக் கொள்ளல்லாம்.
இது ''தெரிவிப்பது நாங்கள்......! தீர்மானிப்பது வாசகர்களாகிய நீங்கள்.....!

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)உண்மைத் தமிழன் உணரமாட்டாரா??? Read More......

Sunday, December 21, 2008

புலம் பெயர் தமிழர்களும் புலுடாப் பார்ட்டிகளும்!

எந்த நேரமும் வேலை, படிப்பு என்று ஓயாது இயந்திர வாழ்க்கையில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கும் எம்மைப் போன்ற புலம் பெயர் இளசுகளுக்கும், புலம் பெயர் தமிழர்களுக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்து கொள்வன எப்போதாவது மாசத்தில் ஒரு தடவை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு தடவை அல்லது வருசத்திற்கு ஒரு தடவை வருகின்ற கலை நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள் அல்லது நமது உறவுகளின் பார்ட்டிகள் தான்.

என்னடா தலைப்பை இப்படி அர்த்தத்தில் வைத்திட்டான் என்று நீங்கள் ஏங்குவது புரிகிறது. ஏற்கனவே; தான் பார்ட்டிக்குச் சென்று வந்த அனுபவங்களை எனது நண்பர் ஒருவரும் தனது பதிவில் தந்திருந்தார். ம்....நானும் மெல்போர்னில் பார்ட்டிக்குச் சென்று திரும்பி வரும் போது பெற்றுக் கொண்ட அநுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன், அப்பாட என்று மெல்போனுக்கு வந்து கஸ்ரப்பட்டு வேலை ஒன்று தேடி ஓடிக் கொண்டிருந்த எனக்கு நண்பர்கள் என்று ஒரு சிலர் அறிமுகமாகினார்கள் . என்னடா நண்பர்களே இல்லாமல் இருந்திருக்கிறானா என்று யோசிக்கிறீங்களா???

இங்க ஒஸ்ரேலியாவில தமிழ் ஆட்களின்ர தொகை என்பது ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. மொத்தமாய் உள்ள தமிழர்களின் தொகை என்பது ஜம்பதாயிரத்துக்கும் குறைவு என்றுதான் கூறப்படுகின்றது. இப்படி இருக்கையில் நான் இருக்கும் மெல்போனில் உள்ள தமிழர்களின் சனத் தொகை எவ்வளவு என்பது உங்களுக்கே புரியும். இப்படியான சூழலில் எமது மெல்போர்ன் வாழ் தமிழர்கள் பெரும்பாலும் தமது சுற்றத்தார், உறவினர்கள் கூட சேர்ந்திருப்பது என்பது அரிதிலும் அரிது. அப்படியான வாழ்க்கைச் சூழலில், நாங்கள் எப்போதாவது சந்தோசமாக இருக்க வழிகாட்டுபவை இந்தப் பார்ட்டிகள் தான். சரி என்று இங்கு வந்து ஒரு மாதிரி ஒரு சில தமிழ் நண்பர்களைத் தேடிப் பிடித்து அவர்களோடு பழகிக் கொண்டிருக்கும் போது நான் வந்து இரண்டு மாதத்தால ஒரு பார்ட்டிக்குப் போக அழைப்பு வந்தது.

ஒரு மாதிரியாக பார்ட்டிக்குப் போயாச்சு. எல்லாமே புது முகங்கள். எனக்கு உறவினர்கள் என்று யாருமே இங்கில்லை. ஒரு மாதிரியாக நண்பர்களுடன் ஆசனங்கள் இருக்கும் இடம் பார்த்து இருந்தாச்சு. என்னைப் பார்த்து ஒருவர் நலம் விசாரிச்சார். எனக்கு முன் பின் தெரியாத அவர் என்னைப் பார்த்ததும் என் பின் புலம் பற்றி நன்றாக ஊகித்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் ஊரில் இருந்து வந்தது போன்றே அம்மா இழுத்துப் பழக்கிய 'சைற்' உச்சித் தலை இழுப்பும் , புலம் பெயர் இளைஞர்களை வேறுபடுத்திக் காட்டும் கடுக்கன் காதில் இல்லாமலும், தலை வெட்டில் ஏதாவது மாறுபாடு இல்லாமலும் மிகவும் சாதாரணமாய் இருந்த என்னைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி.

''தம்பி என்ன இப்பவே வந்தது??? நான் இல்லை என்று சொல்லியிருப்பன். என் நண்பர்கள் ஏதாவது சொல்லி நான் மாட்டுப் பட்டு முழி பிதுங்குவதிலும் பார்க்க ஒரே வார்த்தையில் ஓம் அங்கிள். இப்பத்தான் வந்தனான். அப்ப என்ன ஏஜென்சியாலயே??? எவ்வளவு முடிஞ்சுது என்றார்??? இல்லை அங்கிள். ஸ்டூடன் விசா. பெரிசா ஒன்றும் முடியல்லை. முதல் செமிஸ்ரர் கோர்ஸ் பீசும், இங்க வாற ரிக்கற் காசும் தான். அதை விடப் பெருசா ஒன்றும் முடியவில்லை என்றேன். அவர் அத்தோடு நிறுத்துவதாக இல்லை. ''என்ன தம்பி ஜப்னாவோ என்றார்??? அப்ப நானும் ''இல்லை அங்கிள் நாங்கள் வன்னி. ஆனால் இப்ப இங்கே வரும் வரைக்கும் அங்க இருந்தது ஜப்னா தான் என்றேன். ''ஜப்னாவில எந்த இடம் என்றார்?? நானும் அங்க இருந்த ஊரின்ர பெயரைச் சொன்னேன். உடன அவர் ஏதோ புலத்திற்கு வந்த பிறகு தாயகத்தை மறந்த ஆள் மாதிரி அது எங்க தம்பி இருக்கு என்றார்?? ? நான் சொன்னேன்.

பருத்துறை றோட்டில அங்கிள் என்றேன். பருத்துறை றோட்டோ??? அது எங்க தம்பி இருக்கு என்றார்??? நான் சொன்னேன் என்ன அங்கிள் பருத்துறை றோட்டுத் தெரியாமல் இருக்குறீங்களோ?? என்று கேட்டேன். எனக்கு விளங்கிட்டுது. மனுசன் நல்லா நடிக்கிறார் என்று. அப்ப அவர் சொன்னார் அது தம்பி நாங்கள் வந்தாப் பிறகு வைச்ச பேர் தான் போல அந்த றோட்டுக்கு என்றார். நாங்கள் இருக்கேக்க அந்த றோட்டுக்கு வேறை பேர் என்று சொன்னார். இதுக்குப் பிறகும் அவரிட்டக் கதைக்க விருப்பமில்லாத நான் ஒரு மாதிரி அவரிடமிருந்து மெல்ல நழுவி வேற இடத்துக்குப் போனேன்.

அங்கால இரண்டு காதிலயும் கடுக்கண் போட்ட இளைஞர்கள் என்னிடம் நலம் விசாரித்தார்கள். அதன் பிறகு பிறந்த நாள் விழாவில கொஞ்ச நேரம் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அப்போது அருகே இருந்த நண்பர் தன் மனதில் உள்ள கவலைகளைச் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்ப வெளிநாடுகளில எந்த விழாக்களுக்கும் ஒழுங்காகச் சந்தோசமாகப் போக முடியவில்லை. அது மட்டுமில்லை இங்க ஏதாவது கலியாண வீடென்றாலும் சரி, வேறு பல விழாக்கள் என்றாலும் சரி அழைப்பிதழ் அனுப்பும் போது குடும்பத்துடன் வரச் சொல்லி அனுப்பி விட்டு பிறகு மனுசனும், மனுசியும் மட்டும் தான் வரலாம் என்று போன் பண்ணிச் சொல்லுவீனமாம் இப்பிடியான நிகழ்வுகளுக்குப் போனால் தானே பிள்ளைகள் எங்கட பண்பாட்டை அறிந்து கொள்ளும். அப்ப எப்பிடிப் பிள்ளையளை விட்டிட்டுப் போறது என்று ஆதங்கப் பட்டார்.

அது மட்டுமன்றி என்ன கிப்ற் அல்லது கிப்ற் கார்ட் வாங்கி வாறது என்றாலும் தங்களுக்குத் தேவையான சாமான்கள் உள்ள கடைகளைத் தான் சிபாரிசு செய்யினமாம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கட விருப்பப்படி நாங்கள் கதிரையில இருக்க முடியாதாம். அவங்கள் சில பார்ட்டிகளில வெள்ளைக்காரனின்ர முறைகளைப் பின்பற்றி பேர் போட்டு மேசைகளை வைச்சிருப்பாங்களாம். அப்பிடிப் பார்ட்டிகளில சில பேர் முன் பின் முரண்பாடு உள்ளவர்களை பக்கத்தில பக்கத்தில இருக்கிற படி கதிரைகளைப் போட்டு வைப்பினமாம் என்றும் ஆதங்கப்பட்டார். இப்பிடியே போனால் எங்கட சனத்தின்ர நிலமை என்ன ஆகும் என்று அவர் பெரு மூச்சு விட்டார்?? இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது சாப்பாட்டு நேரமும் வந்தது. ஒருவாறாக சாப்பாட்டை எடுத்து வந்து உட்கார்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.

இங்க ஒஸ்ரேலியாவில பஷன் என்னவென்றால் தமிழ் பேசுவதிலும் பார்க்க எமக்கு தெரிந்த எல்லாத் தமிழர்களிடமும் ஆங்கிலத்தில் பேசுவது தானாம் என்று நண்பர் ஒருவர் சொன்னார். ஆங்கிலம் தெரியுதோ இல்லையோ ஆங்கிலம் தெரிந்த மாதிரிப் பேச வேண்டும் என்று மற்றொரு நண்பர் சொன்னார். சிற்றூண்டிகள் பரிமாறி முடிந்த பின்னர் பெருங் குடி மக்களின் திருவிழா ஆரம்பமாகியது. எனக்கு இந்தக் குடிப் பழக்கம் இல்லை என்பதால் நான் ஒதுங்கித் தனியே இருக்க முயற்சி செய்தேன். ஆனாலும் என் நண்பர்களோ விடுவதாக இல்லை. நீ குடிக்கா விட்டாலும் பரவாயில்லை சும்மா வந்து 'லெமன் றிங்'' என்றாலும் அடி என்றார். சரி என்று நானும் அவர்களுடன் போனேன்.

அப்பத்தான் எனக்கு உண்மையா விசர் பிடிச்சுட்டுதோ என்று ஒரு பிரம்மை ஏற்பட்டது. ஒருவர் வந்தார். இந்தாரும் ஒரு கப் பிடியும் என்றார். தாங்ஸ் அண்ணை, எனக்குப் பழக்கமில்லை. ''இல்லை சும்மா லைற்றா ஒரு கிளாஸ் அடிச்சுப் பாரும்' என்றார். மற்றவர். இல்லை அண்ணை எனக்கு வேண்டாம், பழக்கமில்லை என்றபடி லெமன் யூஸ் எடுத்துக் குடிக்கத் தொடங்கினேன். அப்ப ஒருவர் சொன்னார். இப்ப வெளிநாட்டுக்குப் புதிசு தானே. போகப் போகப் பழகுவீர் என்று. அது சரி பார்ப்பம் என்று நின்றேன்.

ஒருத்தர் வந்து தம்பி என்ன புது முகமாக் கிடக்குது??? ஒரு நாளும் இங்க காணேல்லை. என்றபடி என்னடாப்பா ''களத்துக்குப் போயிருக்கலாம் தானே?? ஏனடாப்பா இங்க வந்தனீ??? இங்க என்ன செய்யப் போகிறாய்?? ? இந்த நாட்டில உழைக்கவே ஏலாது?? நீ என்னடாப்பா செய்யுறாய்?? உழைக்கிறியோ?? படிக்கிறியோ??? என்றார்??? நான் படிக்கிறேன், என்னப்பு படிக்கிறாய் என்றார்??? நானும் ''எக்கவுன்டிங்'' என்றேன். உடனே அவர் இங்க வந்து இப்பிடிப் படிச்சு; என்ன வேலை செய்யலாம் என்றே நினைக்கிறாய்?? பேசாமல் ஊருக்குப் போய் களத்துக்குப் போனீர் என்டாலும் தமிழீழம் கிடைக்குமெல்லோ என்றார்?? எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இரண்டும் கெட்டான் நிலையில இருந்து கொண்டு மனதுக்க யோசிச்சன். அப்ப இவை மட்டும் ஏனாம் இங்க வந்தவை?? ஏன் இவையள் அதை முதலில செய்திருக்கலாம் தானே??? இவை அதைச் செய்து போட்டெல்லோ எங்களிட்டச் சொல்ல வேணும். பிறகு எங்களுக்கு நியாயம் படிப்பிக்கீனமாம்???ம்... என்றபடி சொன்னேன். அண்ணை என்ன களத்தில நிற்கிறதென்றால் என்ன நீங்கள் சின்ன வயசில கிளித்தட்டு விளையாடுறது மாதிரி மறிச்சுக் கொண்டு நிற்கிறதே??? உந்தப் பல்குழல் ஒரெ நேரத்தில 64 குண்டுகளையும் தள்ள; மிக் வந்து குண்டு போட , ஆட்டிலறி ஷெல் வந்து சராமரியா விழ எப்பிடி என்னால நிற்க முடியும்?? அதற்கெல்லாம் ஒரு மன உறுது வேணும். என்னட்ட அந்த மன உறுதி இல்லை அண்ணை. அப்பிடி என்னட்டை மன உறுதி இருந்திருந்தால் நான் இங்க வந்திருக்க மாட்டென் என்றேன். மனுசன் மூச்சுப் பேச்சில்லை.

இங்க உள்ள ஒரு சில விதண்டா வாதியள் புலியளும் ஆமியும் ஏதோ ''கெற்றப்போல்'' வைச்சுக் கல்லால எறிஞ்சு தான் சண்டை பிடிக்கினம் என்ற நிலையில போராட்டத்தையும், போராளிகளையும் வலு சிம்பிளா நோக்கும் போது எனக்கு பயங்கரக் கோபம் தான் வந்திச்சு. ஏதோ சமாளிச்சிட்டேன். ''போராட்டம் என்பது பூப்பறிக்கிற வேலை'' என்று நினைக்கிற ஆட்கள் இன்னும் எங்கட சமூகத்தில உள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம் தான். அந்தப் போராளிகளின் மன உறுதிக்கு நிகராக உலகத்தில வேறு எதையும் என்னால உவமிக்க முடியாது. அதுக்குப் பிறகு அந்தப் பார்ட்டி முடிவடைய வீட்டிற்கு வந்தோம்.

பல மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு பார்ட்டி இப்போது அண்மையில் வந்தது. கொஞ்சம் வித்தியாசமாக அரைவாசி ஒஸ்ரேலியத் தமிழனாக மாறிய நிலையில் அதான் என்னவென்று கேட்கிறீர்களா??? அதாங்க தலையை கொஞ்சம் சரிச்சு வெட்டி, ஒரு பக்கக் காதில தோடும் போட்டுப் பார்ட்டிக்குப் போனேன். இப்போது நிறைய நண்பர்கள் வழமையை விட அறிமுகமாகியிருந்தார்கள். முன்பு போல இழுத்தடிகாமல் நேரடியாக விடயத்திற்கு வாறேன். ஒருவர் வந்தார். அவர் கொழும்பில இருந்து, கொழும்பில படிசு இங்க வந்தவர். அவருக்கு எங்கட ஊரில சண்டை நடக்கிற இடங்கள் சரியாகத் தெரியுமோ தெரியாது. அவர் சொன்னார்??

உங்களுக்கு மச்சான் ஒரு விசயம் தெரியுமே??? ''பொடியள் மட்டக்களப்பில அடிச்சுப் போட்டு மச்சான் எனக்கெல்லே போன் பண்ணிச் சொல்லுறாங்கள். புதினத்துக்கு நியூஸ் அப்டேற் பண்ணு என்று. என்னடாப்பா உண்மையாவோ என்று கேட்டேன்? ஓமடாப்பா. அது மட்டுமில்லை அடுத்த தாக்குதல் விரைவிலயாம். றெடியா இருக்கட்டாம் . போனை என்கேஜ் இல்லாமல் வைச்சிருக்கட்டாம், எப்பவென்று தெரியாது. எந்த நேரமென்றாலும் போன் அடிப்பாங்கள் என்றும் சொன்னவையள்' என்றார். ம்.... நான் கேட்டன். பொடியள் உம்மட்டையோ நியூஸ் தாறாங்கள் புதினத்துக்கு அப்டேற் பன்ணும் என்று??? அது சரி புதினத்தின்ர ''சேவர் '' என்னவென்று தெரியுமோ என்றேன்?? அவர் மூச்சுப் பேச்சில்லை.

இதுக்குப் பிறகு ஒருவர் வந்து சமகால அரசியல் ஆய்வு பற்றிக் கதைச்சார். ''எங்கட அரசியல் ஆய்வாளர்கள் ஊரில என்ன நடக்குதென்றே தெரியாமல் ஏதோ எல்லாம் தெரிஞ்சவையள் போல ஆய்வெழுதினம், அது மட்டுமில்லை ஊரை விட்டு வந்து பதினைஞ்சு, இருபது வருசமாயிருக்கும். ஆனால் அவையள் அதுவும் தாங்கள் களத்தில நின்றெல்லோ நிலமைகளை ஆய்வு செய்து எழுதுவது போல எழுதுகீனம் என்று' ஒரு நண்பர் சொல்ல மற்றவர் குறுக்கிட்டார். இல்லை மச்சான் அந்தாள் என்று..........அவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வன்னியில பஸ் கொண்டக்ரராய்(பஸ் நடத்துனர்) இருந்தவரோ என்று கேட்டார்?? ஏனடப்பா?? இல்லை மச்சான்; அந்தாள் வன்னியில உள்ள எல்லா வீதிகளின்ர பெயரையும் நீள அகலத்தோட சரியாச் சொல்லுறார் என்றார்.

''என்ன மச்சான்??? ஏன் ஆய்வாளர்கள் மீது கோபப்படுறீங்கள் என்று கேட்டேன்??? இல்லை மச்சான் ஒருத்தர் எழுதினார் சிங்கள இராணுவத்தில ஆயிரம் புலிகள் புலனாய்வு உறுப்பினர்களாக ஊடுருவி இருக்கினம் என்று எழுதினால் யாரும் நம்புவீனமோ?? அது மட்டுமில்லை உவையள் எழுதுறது ''இப்போது புலிகளுக்கு இரண்டு வழிகள் உள்ளது! ஒன்று முன்னேறும் இராணுவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடிக்கும் வகையில் புலிகள் ஊடறுப்புத் தாக்குதலை நடாத்த வேண்டும்; என்று எழுதிப் போட்டுப் புலியள் இப்படி ஏதாவது தாக்குதல் நடாத்தினால் அடுத்த ஆய்வில் ''நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம்... புலிகள் இப்படியொரு தந்திரோபாயத் தாக்குதலை நடத்துவார்கள் என்றும் அதன் படி தான் புலிகள் தாக்குதல் நடாத்தினாரகள் என்று தம்பட்டம் அடிக்கீனமெல்லோ என்றார்.

''பின்னப் பார்கப் போனால் புலிகளுக்குப் புலத்தில இருந்து கொண்டு இவை எல்லோ தாக்குதல் திட்டம் வகுக்கீனம்'' என்று தாங்கள் எழுதினாலும் எழுதுவீனம் என்றார். அது மட்டுமில்லைப் ''புலிகள் இயக்கத்தின்ர வெற்றியின் இரகசியம் அவர்களின் தாக்குதல் இறுதிவரை எவருக்கும் வெளியே தெரியாதவாறு செய்ய வேண்டியதைத் தக்க நேரத்தில் தகுந்த முறைப்படி செய்வது தான்''. அப்பிடியிருக்கப் புலிகள் இனி அடுத்த் படையெடுப்பு எங்கே நடாத்துவார்கள் என்று சும்மா இங்க இருந்து வாசிக்கிற சனத்தை ஏமாற்றுகிற அளவிற்கு எழுதுவது மிக மிக முட்டாள்தனம் என்று நண்பர்க்ள் புலம்பி முடித்தார்கள்.

இப்பிடி இருக்க ஒருத்தர் சொன்னார் மச்சான் என்ர பிறண்ட் ஒருவன் ரெண்டு மூன்று நாளாக ஒரே அழுகை. சாப்பிடக் கூடவே இல்லை. அது மட்டுமில்லை மச்சான் ஊருக்குப் போய் சந்நிதி முருகனுக்குக் காவடி எடுப்பதாகவும் நேர்த்தி வைச்சிருக்கிறான் என்றார். ஏனடாப்பா?? இல்லை மச்சான் ''பூநகரி போயிட்டு என்று இங்க இவன்...........ன் ஒரே அழுகையடா மச்சான். ரெண்டு நாளாகச் சாப்பிடவும் இல்லை'. என்றான். ''அத்தோட புலிகள் ஏன் புதிதாக ஒரு முற்றுகைத் தாக்குதலையும் நடத்துகீனம் இல்லை என்று கேள்வி மேல கேள்வி கேட்டுக் கரைச்சல் பண்ணுறான் என்றார்.

நான் சொன்னன். இங்க உள்ள ஒரு சில ஆட்களுக்கு ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்தி கேட்க வேணும் போல. ''அநுராதபுரத்தில 22 கரும்புலிகள் பாய்ஞ்ச மாதிரி ஒவ்வொரு நாளும் பாய வேணும் போல. அது மட்டுமில்ல புலிகள் தங்கட ஒவ்வொரு போராளியின் உயிரையும் எந்தளவு தூரம் பெரிதாக நினைக்கீனம் என்பது இங்க உள்ளவைக்குத் தெரியாது போலும்'' என்று முடித்தேன்.

மற்றுமோர் நண்பன் சொன்னான். ''நான் வாற வருசத்தோட என்ர படிப்பை விடப்போறேன்'. . ஏன் என்று கேட்டேன். இல்லை மச்சான். ''என்ர அக்காவிற்கு கலியாணம் செய்து வைக்க வேணும். அதுவும் ஒரே ஒரு அக்கா. மாப்பிளை லண்டனில தான் இருக்கிறார். ஜம்பது இலட்சம் சீதனம் கொடுக்க வேணுமாம்' என்றார். ஏன்ராப்பா??? இந்தக் காலத்திலயும் சீதனம் கேட்கிற ஆட்கள் இருக்கினமோ என்றேன்??? இல்ல மச்சான் மாப்பிளை வீட்டுக்காரர் சொன்னவை. நாங்கள் ஏதும் கேட்க மாட்டோம். உங்கட பிள்ளைக்கு உங்களால் முடிஞ்சால் ஏதாவது கொடுங்கோ என்று. அதான் நான் இங்க ஒஸ்ரேலியாவில இருக்கிறன். எங்கட ஊரில ஒருத்தர் தன்ர பிள்ளைக்கு ஒற்றை விழச் சீதனம் கொடுக்க வேணும் என்பதற்காக 99( தொண்ணூற்றொன்பது) இலட்சம் ரூபா கொடுத்தவர். ம்........ அப்பிடியென்றால் நானும் கொடுக்க வேணும் தானே, அதான் நானும் இப்ப ஒரு கொஞ்சக் காலத்திற்குப் படிப்பை விடுவதாக உத்தேசம் என்று சொன்னார்.

இவங்களை எல்லாம் எப்பிடித் திருத்துவது என்று சொல்லி யோசித்துக் கொண்டிருக்க இன்னுமொருவர் பெரியொரு குண்டைத் தூக்கித் தலையில போட்டார். யாரோ ஒருவர் தலைவரின்ர மாவீரர் நாள் உரைக்கு இப்ப விளக்க உரை கொடுக்கிறாராம், ஏனடப்பா உந்தாளுக்கு உந்த ஆசை என்று இழுத்தார்... அப்பாடா.... இதுக்கு என்னால விளக்கம் கொடுக்க முடியாது என்று சொல்லிப் போட்டு; ஆளை விட்டாப் போதும் மச்சான் இனிமேல் உந்தப் ''பார்ட்டிகளே'' வேண்டாம் என்று ஒரே ஓட்டமாய் வந்து விட்டேன்.

இப்பத்தான் ஒன்று ஞாபகம் வருது. பிந்தி வந்த ஒஸ்ரேலியத் தமிழன் ஒருவர் , ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர் போல நடிக்கும் முந்தி வந்த ஒருவரைப் பார்த்துக் கேட்டாராம். ஹவ் ஆயு கோயிங் என்று??? அதுக்கு முந்தி வந்தவர் சொன்னாராம் ஜ ஆம் கோயிங் பை பஸ் . (Ques: Hi How r u going?? Answer: I'm going by Bus)

உனக்கல்லடி உபதேசம்....ஊருக்கடி என்றாராம் ஒருவர்...

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)மெல்போர்ன் அப்புக்குட்டியும் நானும்

2)தமிலும் தமிழும்...!


3)ஆண்களோடு போட்டி போடும் பெண்களிங்கு யாரு????


4)என்ர பிள்ளைக்குப் பேர்(பெயர்) வைக்கவேணும்! Read More......

Wednesday, December 17, 2008

உண்மைத் தமிழன் உணரமாட்டாரா???

நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போலவும், நெல்லுக்கு இறைத்த நன்னீரால் பயன் பெறும் புல்லுகளைப் போலவும் (நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- என்பதனைக் கவனத்திற் கொள்க) ஒரு சில புல்லுருவிகள் சமூகத்தில் வாழ்வது இயல்பு.

இவ் வகையில் ஈழத் தமிழ்ப் பதிவர்கள் பிராந்திய வாதிகளா?? சர்வதேச வாதிகளா?? அவர்கள் அனைவரும் தேசப் பற்றுள்ளவர்களா??? என ஆராய்ந்து பின்னூட்டம் மூலம் அவர்களைப் பின்னிப் பிடலெடுக்க ஒரு சில கயவர்கள் முயற்சிப்பது இயல்பு. இவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பமாகியது?? தமிழர்கள் ஏன் போராட வேண்டி வந்தது?? தமிழர்கள் அஹிம்சை வழியில் எப்போதாவது போராடியிருக்கிறார்களா?? இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார் முதலிய பல வினாக்களுக்கு விடைகளே தெரியாத நபர்கள், தாங்கள் தான் அஹிம்சையின் பீஷ்மர்கள், கலியுகக் காந்திகள் என்று பூச்சாண்டி காட்டுகின்ற, உண்மைத் தமிழர்கள் எனத் தம்மைத் சொல்லிக் கொள்பவர்கள் உலகினில் வாழ்வது மிகவும் வேடிக்கையான விடயம்.

உண்மைத் தமிழன் என்பதன் அர்த்தம் தெரியாது உலகினில் வாழ்பவர்களே?? உண்மைத் தமிழன் அவர்களே! முதலில் நீங்கள் ''உன்னைத் தமிழன் எனச் சொல்லிக் கொள்ளுங்கள்'' அதன் பிறகு இந்த சமூகம் உண்மைத் தமிழன் தான் நீங்கள் என ஏற்றுக் கொள்ளும். தமிழன் எப்போதும் நீதிக்காக குரல் கொடுப்பானாயின் அவர்களை நாங்கள் உண்மைத் தமிழன் என்று அழைக்கலாம்??? அப்படி என்றால் உங்களை நாங்கள் எப்படி அழைக்க முடியும்????????

இதில் விநோதம் என்னவென்றால் யாழ்ப்பாணம் என்ன நிறம்?, தமிழர் தாயகப் பகுதிகளில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன, தமிழரின் பூர்வீக வாழ்வியல் வரலாறு பற்றி ஏதும் அறியாது யாரோ இரு இந்திய இராணுவ ஆய்வாளர்கள் எழுதிய விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் ( இலங்கை இந்திய ஒப்பந்த காலப் பகுதி) இடம்பெற்ற போரியல் வரலாற்றின் பின்னரான அரசியல் ஆய்வு நூல்களைப் பக்கம், பக்கமாக மனனம் செய்து விட்டுத் தாங்களும் ஏதோ தமிழர்களின் போரியல் வரலாறு தெரிந்தவர்கள் என்று பக்கம் பக்கமாகப் பதிவு எழுதத் தொடங்குவது மிக மிக முட்டாள் தனம்.

அதுவும் அந்த இரு ஆய்வாளர்களின் புத்தகத்தில் சப்பியதை (மனனம் செய்தவற்றை) அப்படியே காறி உமிழ்கின்ற உண்மைத் தமிழனுக்கு அந்தப் புத்தகமும், வேறு சில மாற்றுக் கருத்து இணையத் தளங்களும் இல்லை என்றால் அவருக்குப் ஈழப் பிரச்சினை பற்றிக் கருத்துச் சொல்லவே தெரியாமல் இருக்கும் போல. இவ்வாறு பொய்களையும், புரளிகளையும் பேசும் இவர்தான் உண்மைத் தமிழனா??

இதற்குமப்பால் பிரபாகரன் படித்தவரா?? அவர் எத்தனையாம் வகுப்பு வரை படித்தார்?? அவருக்கு ஆங்கிலம் தெரியுமா?? என்றெல்லாம் ஆராயும் அதி மேதாவிகளுக்கு அந்த பிரபாகரன் என்ன செய்தார், அவரால் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது என்று ஆராயாமல் இருப்பது மிக மிக வேடிக்கையான விடயம். அப்படிப் படிக்காத ஒருவரால் தான் தமிழர்கள் பற்றிச் சிந்திக்க முடிந்தது என்றால் இப்படிப் படித்த இந்தக் கோழைகளால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்த மட்டும் தானே முடிகிறது.
தமிழர்களைத் தலை நிமிர வைத்தவர் யார் என்பது தெரியாமல் கதைக்கும் உண்மைத் தமிழர்கள் இதில் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அஹிம்சை பற்றி அதிகம் அலட்டிக் கொள்கின்ற உண்மைத் தமிழர்களே??? எனக்கு அஹிம்சை என்றால் என்னவென்று புரிய வைக்க முடியுமா?? இந்தியப் படைகள் எமது தேசத்திற்கு வந்து எமது உறவுகளைப் பல மாற்றுக் குழுக்களுடன் இணைந்து சுட்டுக் கொன்றார்களே அது தான் நீங்கள் கூறும் அஹிம்சையா?? அல்லது எத்தனையோ எமது அழகுப் பெண்களை (தமிழின விரோதிகளின் பாசையில் சொல்லப் போனால் தமிழ் அட்டுப் பிகர்களை) மானபங்கப் படுத்தி கதறக் கதறக் கொன்றார்களே அது தான் அஹிம்சையா???

அல்லது (87 களிற்குப்) எண்பத்தியேழுகளின் பின்னர் பிறந்த எத்தனையோ குழந்தைகள் தமது தகப்பன் யார் என்று அறியாமல் எமது ஊரில் உள்ளார்களே அது தான் நீங்கள் கூறும் அஹிம்சையா??? அல்லது பாரதத்தின் பொய் முகத்தைக் கிழிக்க ஜந்து அம்சக் கோரிக்கை வைத்து தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலகுக்கு உணர்த்தத் திலீபன் தன் உயிரைத் தியாகம் செய்தானே அது தான் அஹிம்சையா?? இதற்குமப்பால் கால காலமாகத் தமிழர்களை அடக்கி ஆள நினைத்து, அவர்களை அழித்தொழிக்க நினைக்கின்ற இலங்கை அரசிற்கு, ஒரு புறம் தமிழ் நாட்டு மீனவர்கள் பயங்கர வாதிகள் எனக் கூறி அவர்களைக் கொலை செய்கின்ற இலங்கைப் படைகளுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவி வழங்கி மகிழ்கிறதே அது தான் அஹிம்சையா??

இன்னும் சொல்லப் போனால இராஜீப் காந்தி கொலையினை ஒரு சாட்டாக வைத்து தமிழர் முகமெல்லாம் கரி பூசி அவர்களின் போராட்டத்தை நசுக்க முனைகின்ற இந்திய அரசின் செயற்பாடுகள் தான் உங்கள் பாசையில், மொழி வழக்கில் அஹிம்சையா??? சரி விடுதலைப் புலிகள் பொதுமக்களை தமது கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேற விடவில்லை என்று குமுறுகிறீர்களே?? அதனை நிரூபிக்க உங்களிடம் ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா??? விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டின் மீது படையெடுத்த போது அங்கு உள்ள ஜந்து இலட்சம் மக்களையும் தமது பாதுகாப்பிற்காக பணயக் கைதிகளாக அப்போதும், இப்போதும் வைத்திருந்த, வைத்திருக்கும் இலங்கை இராணுவம் அந்த மக்களை குடாநாட்டை விட்டும், போர் நடைபெறும் பகுதிகளை விட்டும் போக விடாது ஊரடங்குச் சட்டம் போட்டுத் தடுத்து வைத்தார்களே அது தான் அஹிம்சையா???

அது சரி அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்?? உங்கள் அஹிம்சையின் வரைவிலக்கணத்திற்கு அப்போது அர்த்தம் கற்பித்திருக்கலாம் தானே??? விடுதலைப் புலிகள் நீங்கள் சொல்வது போல யுத்த தர்மம் தெரியாதவர்கள், போரியல் விதி முறைகள் தெரியாதவர்கள் என்று சொன்னால் ஏன் நீங்கள் ஆதரவு அளிக்கும் இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்களையும், ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும் குண்டு வீசிக் கொல்ல வேண்டும்?? இது தான் நீங்கள் அடிக்கடி கூறும் அஹிம்சையா??? தமிழர்களில் 98 வீதமானவர்கள் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளில் 98 வீத்மானவர்கள் தமிழர்கள் என்றும் கூறும் இலங்கை அரசு பிறந்து ஜந்தே மாதாமான குழந்தைகளைக் குண்டு வீசிக் கொல்லும் போது இலங்கை அரசு தனது கருத்தை நிரூபிக்கத் தானே முனைகிறது. அப்படி என்றால் தமிழர்கள் என்றால் புலிகள், புலிகள் என்றால் தமிழர்கள். புலிகளும் தமிழர்களும் வேறு வேறு இல்லை என்பதை நீங்களும் , உலக நாடுகளும் உணராது உள்ளனவே அது தான் அஹிம்சையா???

இப்படி இலங்கை அரசு தமிழர்களைக் கொல்வதைப் பார்த்தும், தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை உணராது பாராமுகமாய் இருந்து விட்டு, ஒட்டு மொத்த தமிழர்களும் பயங்கரவாதிகளே எனக் கூறும் அரசிற்குத் துணை நின்று, தமிழர்களின் உலகளாவிய விடுதலைப் போராட்டத்தின் பிரச்சாரத் தன்மையைப் பயங்கரவாதம் என்ற ஒரே நாமத்தின் கீழ் உள்ளடக்கி அவரளின் போராட்டத்தை தடை செய்து தமிழர் போராட்டத்தின் நியாயத் தன்மை பற்றி ஏதும் உணராது உலகம் உறங்கிக் கொண்டிருக்கிறதே அது தான் அஹிம்சையா??
சிலருக்கு சிலதைப் புரிய வைக்கலாம். சிலருக்குச் சிலதைப் புரிய வைக்க முடியாது.

'காந்தி தேசம் எம்மைப் பார்த்துக்
கைகள் கொட்டிச் சிரிக்கும்!
வாந்தி பேதி வந்தவர் போல்
வகை வகையாய் அறிக்கை பல சொல்லும்!
தேம்பி அழும் எம்மவரை(த்)
தெரு நாய்கள் போலப் பார்க்கும்!
சாந்தமான உறவாம் தொப்புள் கொடி என
சரித்திரத்தை மட்டும் புரட்டிப் பார்க்கும்!

பிற்குறிப்பு: இவ்வளவையும் படித்துப் பார்த்த பின்னர் உங்களால் நியாய பூர்வமாக, நியாயத்தின் பக்கமாக கருத்துக்கள் சொல்ல முடியாத போது எமது
இலங்கைத் தமிழ் புரியவில்லை'' என்று ஒரே ஒரு கருத்துச் சொல்லித் தப்பிக்க நினைப்பீர்களே அது தான் உங்கள் மொழியில் அஹிம்சையா??? Read More......

உதட்டோடு உதடு சேர்த்தால் என்ன ஆகும்??

என்னடா ஆபாசமாக தலைப்பை வைத்திட்டானே என்று தணிக்கைக் குழுவினர் ஏங்குவது புரிகிறது. எல்லாமே எமது சக பதிவர் ஹேமா செய்த சதி வேலை தான் பாருங்கோ. சும்மா ஏதோ என் பாட்டுக்கு நான் என் மனதில பட்டவற்றை, அங்கங்கே ரசித்தவற்றைப் பதிவுகளாக்கிக் கொண்டிருந்த நேரத்தில என்னிடம் சினிமா தொடர் பதிவுக்கு மனு அனுப்பி விட்டு எப்படா இவன் சினிமாத் தொடர் போடுவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறா.

நான் என்னததைச் செய்ய முடியும்?? எனக்கு நேரமே இல்லை. வாரம் ஒரு பதிவு பதிவு எழுதுவதே பெரிய வேலை ஆகிப் போச்சு இப்போது. அப்படி இருந்தும் சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் எமது நண்பி ஹேமா சினிமாத் தொடர் பதிவுக்கு வரும் படி அழைப்பாணை அனுப்பியிருந்தா. ஆனாலும் இன்று தான் அதற்குரிய நேரம் காலம் வந்தது என்று கூற வேண்டும்.

என்னடா இவன் தலைப்பை வைத்து விட்டு ஏதும் சொல்லாமல் இருக்கிறான் என்று ஏங்குகிறீர்கள். அதுவும் புரிகிறது, உதட்டோடு உதடு சேர்த்தால் என்ன ஆகும் என்று நான் அறிந்தது இந்தச் சீனிமாவில் இருந்து தான். எங்கள் ஊரில், அதுவும் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் வரை அங்கே அரிசி வருகிறதோ, சீனி வருகிறதோ, மற்றும் இதர பல உணவுப் பொருட்கள் வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக எங்கள் ஊருக்கு புதிதாக வெளியிடப்படும் சீ(சி)னிமா வந்து விடும்.

நான் எல்லாம் இந்தச் சினிமா பார்ர்கும் அளவிற்கோ, சினிமா பற்றி அதீத அறிவுள்ள அதி மேதாவியோ இல்லை. இதனை விட எவர் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வல்லமையோ, அறிவோ என்னிடம் நீங்கள் எதிர் பார்த்தால் அது கிடைக்காது. இப்படிப்பட்ட என்னைக் கேள்வி கேட்கால் அதற்கு எப்படி என்னால் பதிலளிக்க முடியும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஏதோ என் அறிவுக்கு எட்டியவரை என்னால் முடிந்தவரை நான் பதிலளிக்க முயன்றிருக்கிறேன். ம்....சரி என்னடா ஏதோ அலட்டுகிறாய் என்று எரிச்சலடைகிறீர்கள். இருந்தாலும் நான் கேள்விகளுக்குள் நுழைகின்றேன். பார்ப்போம். உவா ஹேமா எப்பிடி முதல் கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கிறா என்று பார்ப்போம்.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

எனக்குத் தெரிய நான் முதன் முதல் சினிமா பார்த்தது எனது ஒன்பதோ அல்லது பத்து வயதில் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் முதன் முதல் பார்த்த திரைப்படம் என்றால் எனது ஏழு வயதில் என் அப்பாவுடன் அவரின் வியாபார நிலையத்திற்குச் சென்று திரும்பி வரும் போது மீசாலைப் பகுதியில் அண்ணாமார் ஒரு காணியோ/ பாடசாலையோ தெரியாது படம் போடுவதாக அறிந்ததும் அப்பா என்னை அழைத்துச் சென்று அந்தப் படத்தைக் காட்டினார்.

அந்தப் படம் என்னவென்று இப்போது ஞாபகம் இல்லை. அந்தப் படத்தில் வரும் பாடல் ''எழு எழு பகைவர்கள் விழ விழ இனியொரு புதுயுகம் பிறந்திடும் நட நட ...'' மட்டும் இப்போதும் நினைவில் உள்ளது. இதுவே பின்னாளில் என்னுள் பல மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தது. அது மட்டுமன்றி அப்பா வழமையாகத் தனது வியாபார நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்வதில்லை. ஏனெனில் ஒரு முறை நான் அங்கு போய் கடையில் உள்ள ரொபி முழுவதையும் எடுத்து வந்து வீட்டில் ஒரு கடை நானும் தொடங்கி அப்பாவிற்கு போட்டியாக வியாபாரம் தொடங்கியதால் தான்.

ஆனால் அப்பாவின் கடை அப்போது மீசாலையில் இருந்தது. நாங்கள் அப்போது கொடிகாமத்தில் இருந்தோம். நான் முதல் முதல் படம் பார்த்த இடம் மீசாலைக்கும் கொடிகாமத்திற்கும் இடைப்பட்ட பிரதேசம் என்று நினைக்கின்றேன். இது தவிர பின்னர் யாழ் பெரும் இடப்பெயர்வுகளின் பின்னர் சினிமா பார்க்க முடியவில்லை அல்லது அப்போதைய எனது வயதில் சினிமா மீது அதிக நாட்டம் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்

2)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நினைவு தெரிந்த பின்னர் முதல் பார்த்த படம் என்றால் அதுவும் 1997இல் என்று நினைக்கின்றேன். அது சூரியவம்சம் மற்றும் விதி. ஆனால் அந்தப் படங்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் நித்திரையாகி விட்டேன். யாரே உறவினர் ஒருவரின் திருமண நாளன்று முதன் முதல் சினிமா பார்த்ததாய் ஞாபகம். ஆனால் அந்தப் படங்களை மீண்டும் முழுமையாக பார்த்தேன். இவற்றோடு ஜூராசிக் பார்க், றகுலா முதலியனவும் நினைவு தெரிந்த பின்னர் பார்த்த சினிமாக்கள்.

3)என்ன உணர்ந்தீர்கள்?

நல்ல கேள்விதான் கேட்டுள்ளீர்கள். நான் சினிமா பார்த்து என்னதை தான் உணர்ந்தேனோ?? அந்த வயதில் எதுவும் என்னால் உணர முடியவில்லை. அப்படி உணரும் அளவிற்கு அப்போது (அது சரி இப்போது தான் என்று முணுமுணுக்கிறீங்கள்) நானும் பக்குவப் படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உணர்ந்தேன். பேய் என்பது அப்போது உண்மை என்று.

4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இப்போது தான் திருட்டு சீடி கிடைக்கிறதே. பிறகு ஏன் நாங்கள் காசு செலவளித்து தியேட்டருக்குப் போக வேணும் என்று எண்ணுகின்ற காலத்தில் புலம் பெயர முன்னர் அதாங்க சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்த போது வவுனியா வசந்தி திரை அரங்கில் ''எம்டன் மகன்'' விழுந்து விழுந்து சிரிச்சு பார்த்தேன். அதன் பிறகு புலம் பெயர்ந்த பின்னர் நேரம் இன்மை, படிப்பு, வேலை முதலிய இதர பல காரணங்களால் இற்றை வரை அரங்கில் ''கடைசியாக அமர்ந்து'' படம் பார்க்குமளவிற்கு காலம் கை கூடி வரவில்லை.

5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக அரங்கிலின்றி வீட்டில் பார்த்த சினிமா பிரிவோம் சந்திப்போம், காதலில் விழுந்தேன், மற்றும் வல்லமை தாராயோ. அதுவும் படம் பார்க்கவே நேரம் இல்லாத காலத்தில்(அதாங்க தற்போது), எனக்கு விரும்பிய உள்ளங்கள் கொடுத்த அன்புத் தொல்லை காரணமாக ''இது நல்ல படம் அதுவும் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்'' என்பதற்காக ஏதோ பொறுமையாகப் பார்த்த படம்.

இதில ஒரு விடயம் என்ன வென்றால் பிரிவோம் சந்திப்போம் படத்தை மட்டும் பார்த்து முடிக்க எனக்கு நான்கு நாட்கள் எடுத்தன என்பது தான். ( யோ என்ன புலுடா விடுறாய் என்று கத்துறீங்க.. அந்த படம் ஏதோ இரண்டு அல்லது இரண்டரை மணித்தியாலம் தான் ஆனால் நான் பார்க்க இவ்வளவு நேரம் எடுத்த்து)

6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

இதில் மிக....மிகத் தாக்கிய தமில்(ழ்) சினிமா என்றால் கன்னத்தில் முத்தமிட்டாலில் எமது வரலாறு மிக மிகச் சிதைக்கப் பட்டிருப்பதும், தெனாலியில் எமது தமிழ் இப்படித்தான் என்று பேசி தமிழ் நாட்டவர்களைப் போலியாக நம்ப வைத்ததும் மிக மிகத் தாக்கிய சம்பவங்கள்.

மிகவும் தாக்கிய சினிமா என்றால்...... வேதம் புதிது, திருவிளையாடல், மண்வாசனை, முதல்மரியாதை, தவமாய் தவமிருந்து, அழகி, குணா. இவற்றில் திருவிளையாடல் என்னுள் புதைந்திருந்த பேச்சு, கவிதை, அறிவிப்பு முதலிய திறமைகளை வெளிக் கொணர உதவியது. இதனை விட நாங்களும் நண்பர்களும் ஒரு முறை உயர்தரம் படிக்கும் போது ''ஆயுத எழுத்து ராஜா திரை அரங்கில் அமர்ந்து பார்த்த போது தியேட்டரில் எமக்கு நேரெதிரே ஒரு அண்ணாவும் ''அக்காவும் லைவ் சோ'' காட்டினார்கள். அதுவும் எமது யாழ் நகரில் முதலில் ராஜா திரை அரங்கில் நாங்கள் லைவ் சோ பார்த்தது என்றால் இதுவும் தாக்கிய சினிமா தானேங்கோ???

இவை தவிர ''வேலி, செருப்பு, முதலிய குறும் படங்களும் நெருப்பு நிலவுகள், கடலோரக் காற்று, ஆணிவேர் முதலிய நமது ஈழத்துப் படங்களும் தாக்கிய சினிமா என்றே சொல்ல முடியும்.

7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஓ அதுவா??? அதாங்க சினிமாவில இருக்கிற ரசிகர்கள் ஆதரவு தமக்கு எப்போதும் இருக்கும் என்று நம்பித் தேர்தல் களத்தில குதிச்சு முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவோடு அந்த ரசிகர்களை நம்பி ''அரசனை நம்பி புருசனை இழந்த கதையா'' ஆகிறவங்கள் கதை தான் என்னைத் தாக்கியது என்று சொல்லலாம்.

8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில் நுட்ப சம்பவங்கள் என்று சொல்லும் போது நீங்கள் எமது ஈழத்துச் சினிமா பற்றிக் கேட்டிருந்தால் நிறையச் சொல்ல முடியும். ஆனால் தமிழ் சினிமாவில் வரும் அபூர்வ சகோதரர்கள் பட தொழில் நுட்பம் மட்டுமே ஏதோ ஓரளவிற்கு அறிவு பூர்வமாக சிந்தித்து என்னைச் செயற்பட வைத்து அந்தத் தொழில் நுட்பம் எப்படி வந்தது என்று தீர்வு காண வைத்தது. இதற்கும் மேல் எவ்வளவோ இடர்களின் மத்தியில், தொழில் நுட்ப வசதி குறைந்த காலத்திலும் தரமான முறையில் நேர்த்தியான படங்களைத் தந்த தமிழீழ நிதர்சனம் பிரிவின் தொழில் நுட்பங்களும் தாக்கியவை என்று தான் சொல்லலாம்.

9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

அதெப்படி எப்போதும் ஒரே செய்தியை என்னால் மட்டும் வாசிக்க முடியும். அதாங்க ''கறுப்பு நடிகர் சிவப்பு நடிகையுடன் காதல்'', நடிகையின் நாய்க்கு நாலு வயதாம், நயன்ந்தாரா இடுப்பில் கரப்பான் பூச்சி அதனைப் பார்த்ததும் பரத் பாய்ந்து காப்பாற்றி விட்டார்( அது ஏதோ படத்தில வாற சீன் பற்றின நியூஸ்) இப்படிப் பல செய்திகள் அரைத்த மாவை அரைப்பது போல வரும் போது எப்படி என்னால் மட்டும் அதனைத் திரும்பத் திரும்ப வாசிக்க முடியும்?? அதனால நான் தமில்(ழ்) சினிமா பற்றி வாசிப்பதில்லை. அப்படி வாசிக்கும் அளவிற்கு எனக்கு ஏதும் தோன்றவும் இல்லை.

10)தமிழ்ச்சினிமா இசை?

இப்போது ஏதோ புரியாத இசையில், புரியாத பாடல்கள் ஒலிக்கும் போது எப்படி அதுபற்றி என்னால் சொல்ல முடியும். நான் இங்கு தொழில் புரியும் பெற்றோல் ஸ்ரேசனில் ஆங்கிலப் பாடல்கள் எப்போதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தான் எமது இசையின் மகத்துவம் எப்படி என்று புரியும். அதாங்க எங்கயோ இருந்து யாரோ சுட்டதை, நம்மவர்களும் சுட்டு விற்கிறாங்கள். இதை விட மனதை வருடுகின்ற, நெஞ்சுக்கு நிம்மதி தருகின்ற அனைத்து இசைகளும் பிடிக்கும். அதிலும் நம்ம இளையராசா ....மிகவும் அருமை.

11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?

எப்போதாவது அப்படிப் படங்கள் பார்ப்பதுண்டு. ஹிந்தியில் தேவதாஸ் ஆங்கிலத்தில் நிறையப் படங்கள்.. என்ட் ஒப் த டேய்ஸ், மற்றும் த கிறீன் மைல் இவற்றோடு சிங்களத்தில் பார்த்த படங்களில் என்னை மிகவும் தாக்கிய படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனால் கதை மட்டும் ஞாபகம்.

ஒரு சிங்களப் படை வீரனின் தந்தையின் மன நிலை பற்றியது. அவர் மகன் போர்க்களத்தில் உயிர் துறந்த பின்னர் அந்தப் படை வீரனின் உடலை மீட்க முடியாத இராணுவம் அந்த வீரன் இறந்த செய்தியை அவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்காமல் மறைத்து விடுவதும், இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் மகனிடமிருந்து கடிதம் வருவதும் அவர் மகன் இறந்து போக அந்தக் கடித வரவு தடைப்படுவதும், இதனால் மனமுடைந்த தந்தையார் ஒவ்வொரு நாளும் தபாற்காரனிடம் தனது மகனிடம் அவன் அனுப்பிய கடிதம் வந்ததா? எனக் கேட்டுக் , கேட்டுக் கலங்குவதும் பின்னர் அவர் இராணுவ அதிகாரிகளிடம் விசாரிக்க அந்த இராணுவ வீரன் பற்றித் தகவல் அறிந்து வருவதாகக் கூறிய அதிகாரிகள் மீண்டும் அவரிடம் வந்து எந்த வித உடலும் அற்ற ஒரு வெற்றுச் சவப் பேழையைக் கொண்டு வந்து, உங்கள் மகன் அண்மையில் இறந்ததாகவும், அவரின் உடல் சிதைந்துள்ளதால் அதனைத் திறக்க முடியாது என்றும் கூறி அடக்கம் செய்வதும் தான் அந்தப் படத்தின் கதை. என்னுள் மிகவும் நீண்ட சோகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் அது.

12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படிப் பெரிதாக ஏதாவது தொடர்புகள் இல்லை. அப்படி இருந்தாலும் நான்கு பாட்டு, ஜந்து காமெடி, மூன்று சூடான காட்சிகள், ஆறு அபரிமிதமான சிறுவர்களையும் ஏனையவர்களையும் ஏமாற்றும் சண்டைக் காட்சிகள், ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காதல்/ காதல்கள் இறுதியில் பிரிவு அல்லது இருவரும் சேர்வு இப்படியான உருட்டிய கட்டையை திரும்பவும் உருட்டும் (தப்பாகப் பொருள் கொள்ளல் தகாது- இது அரைத்த மாவை திரும்பவும் அரைத்தல்) திரும்பவும் உருட்டும் தமிழ் சினிமாவில் ஏதாவது தொடர்பிருந்தால் என்னால் மட்டும் என்னவாம் செய்ய முடியும்??? திரிசாவின் கையைப் பிடிச்சு இழுத்தவரே இன்னொரு தரம் கையைப் பிடிச்சுப் பார்க்க ஏங்கும் போது என்னிடம் அப்படி ஏதும் தொடர்புகள் இருந்தாலும் என்னால் மட்டும் என்னவாம் செய்ய முடியும்??

13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏற்கனவே எடுத்த அதே பரிணாமத்தில் தொடர்ந்தும் படங்களை எடுக்காது ஏதாவது புது மாதிரி, வித்தியாசமாக மிகவும் சிறந்த கதை அம்சத்தோடு படம் எடுத்தால் எதிர்காலம் நன்றாக அமையும். ஆனால் கருத்தாளம் இருக்கிறதோ இல்லையோ தமிழ் சினிமா நன்றாக புலத்தில் ஓடுவது எங்கள் புலம் பெயர்ந்த தமில் சினிமா வெளியீட்டு ஏக போக விநியோகஸ்தர்களால் தானே?? ஒரு வேளை தமிழீழம் கிடைத்து இந்த புலம் பெயர் தமிழ் சினிமா வெளியீட்டாளர்கள் எல்லோரும் தாயகம் திரும்பினால் எதிர்காலத்தில் தமிழ் சினிமா முதலீடும், புலம் பெயர் சூழலில் தமிழ் சினிமாவின் நிலமையும் கேள்விக் குறிதான். அதோ கதி தான்??? அதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர்களுக்கு எதுவும் ஆகி விடாது. ஏற்கனவே பல வருடங்களாகப் போரில் அகப்படுச் சிக்கிச் சின்னாபின்னமாகி வலியால் வாடி சினிமா பார்க்காது இருந்த போதும் தமிழன் தமிழனாகவே இருந்தான். ஆதலால் அவன் எப்போதும் தமிழனாகவே இருப்பான்.

அது சரி சும்மா நாமளாச்சு நம்ம பாடாய்ச்சு என்று இருந்த என்னை ஏதோ வம்பில மாட்டி விட்டு விட்டு தான் தப்பினேன் பிழைத்தேன் என்று ஹேமா இருப்பது போல் நானும் இருக்க வேண்டாமா???
யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்பதற்கமைவாக நானும் கொஞ்சப் பேரை இந்தச் சினிமாத் தொடர் பதிவுக்கு பெரும் உவகையுடன் அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அவங்கள் வேறு யாரும் இல்லை. இதோ இந்தத் தொடர் பதிவினைத் தொடர்ந்து தொடர்ந்திட

'சினேகிதி' அவர்களையும்.
'கவின்' அவர்களையும்
கனடாவில் இருந்து காதல் பற்றி புகழுரைக்குக் 'காரூரனையும்' அன்போடு அழைக்கின்றோம்.

அப்பாடா ஒரு மாதிரி ஏதோ எழுதி முடிச்சாச்சு. எதுவா இருந்தாலும் பின்னூட்டமாகப் போடுங்கோ... அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே... நான் வரட்டுமா???? Read More......

Tuesday, December 16, 2008

என்ர பிள்ளைக்குப் பேர்(பெயர்) வைக்கவேணும்!

இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப உலகில் மனிதனது நாகரிகம் காலங் காலமாக மாற்றமடைந்து வருகின்றது. மனிதன் எப்போதும் தன் வேர்களை தனது விருட்சங்கள் எனப்படும் பாரம்பரியத்தில் இருந்து அறுத்தெறியவே முயற்சிக்கின்றான்.

ஆரம்ப காலத்தில் எம் முன்னோர்கள் வாழ்வில் அவர்களது பெயர்களாக முத்துத்தம்பி, கந்தசாமி, பொன்னுத்துரை, நாச்சிமுத்து, பொன்னம்மா, சின்னாச்சி, சின்னையா, இரத்தினசிங்கம், கனகலிங்கம், செல்லாச்சி, சேவற்கொடியோன், சொக்கலிங்கம், ஆலாலசுந்தரம் முதலிய பல நீண்ட பெயர்கள் வழக்கிலிருந்தன.

அவை பின்னர் திரிபடைந்து, காலவோட்ட மாற்றத்திற் சிக்குண்டு கார்த்திகா, கவிதா, நிறோயன், பிரசாத், சுகந்தன், நிருபா, மலர்விழி, கயல்விழி, வேல் விழி, பிரியா, சாந்தன், சீலன், எழில்ச்செல்வன், ஆதவன், தெய்வீகன், மயூரன், மயூரி முதலிய அழகு மிகு பெயர்களாக ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தன.

இன்றைய புலம் பெயர் சூழலில் வெளிநாட்டவர்கள் எமது இத்தகைய நீண்ட பெயர்களை உச்சரிக்க எவ்வளவு தூரம் கஸ்ரப்படுகின்றார்கள் என்பதனை உணர்ந்த எமது தமிழ் கூறும் நல்லூலகம் சின்னதாகவும். சித்தினிப்பாகவும் (அதாங்க ஆங்கிலத்தில சொல்லுவாங்க ''சோர்ட் அன்ட் சுவீற்'' என்று) பெயர் வைக்கும் அளவிற்கு முன்னேற்றமைடைந்துள்ளது.

இது பற்றிய ஒரு ஒலிப்பதிவு நிகழ்ச்சியைக் கேட்க உங்களிடம் Adobe Flash Player இருத்தல் வேண்டும்.


Mel Appu- Per.mp3 - Appukutty

நவீன வடிவில் பெயர் வைக்கும் முறை இன்று எமது புலம் பெயர் உலகின் தாக்கத்தினால் எமது தாயகத்திலும் இப்போது பரவியுள்ளது. இந்த தாக்கத்தை நன்குணர்ந்த எமது தமிழீழ தேசத்துப் புதல்வர்கள் 2002ம் ஆண்டளவில் தமிழ்ப் பெயர்க் கையேடு என்கின்ற பல ஆயிரம் நற் தமிழ்ப் பெயர்கள் கொண்ட கையேட்டை வெளியிட்டு வைத்ததோடு மட்டுமல்லாது தமிழீழ வைப்பகத்தினூடாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரினை அவர்களது பெற்றோர்கள் வைத்தால் அந்தக் குழந்தையின் பெயரில் தேட்டக் கணக்கினை ஆரம்பித்து( தேட்டக் கணக்கு என்றால் என்ன என்று முளிக்கிறீர்களா?? தமிழீழத்தைப் பற்றி எழுதும் போது நினைவுக்கு வந்த தூய தமிழ்ச் சொல்- சேமிப்பு வைப்பு) சிறு தொகைப் பணத்தினையும் வைப்புச் செய்து வந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க எல்லோருக்கும் தங்கள் பெயருக்கு உள்ள அர்த்தங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு தமது பெயரின் அர்த்தங்கள் தெரியாது யாரும் கேட்டவுடன் அவர்கள் திக்குமுக்காடுவதுமுண்டு. நமது வலைப் பதிவர்கள் பல பல விநோதமான பெயர்களை வைத்திருப்பதும் வேடிக்கையான விடயம். பாடசாலையில் படிக்கும் போது சக நண்பர்களால் செல்லப் பெயர்கள் இருபாலாருக்கும் வைக்கப்படுவதுண்டு. இதற்கு எடுத்துக் காட்டாக தடியன், பேத்தை, காடை, எல்.எம்.எல். ஓமக்குச்சி. கச்சான், கட்டபொம்மன், எலி, குட்டை நாய், சகடை, கரடி, பீப்பா எனப் பல பட்டப் பெயர்களைக் குறிப்பிடலாம். (என்ன முறைக்கிறீங்க?? உள்ளதைச் சொன்னால் கோபம் வரும் தானே)

எனது நண்பர் மெல்போர்ன் அப்புக்குட்டி அவர்கள் இன்றைய புலம் பெயர் சூழலில் தனது பேரப் பிள்ளைக்குப் பெயர் வைப்பதற்காக படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் தாங்கள் வைக்கும் பெயர்களிற்கு என்ன அர்த்தம் என்றே தெரியாமல் அரைவாசி தமிழிலும், மிகுதி ஆங்கிலத்திலும் கலந்து தமிங்கில்ஷ் பெயர் வைக்கும் இந்த சமூகத்தின் மத்தியில் ஒருவர் தனது பேரப் பிள்ளைக்கு ஒரு பெயர் வைப்பதற்காக அலைந்து திரிகின்றார்.

உங்களால் முடிந்தால் அவருக்கு ஏதாவது நல்ல பெயர் கண்டு பிடித்துக் கொடுக்க முடியுமா??? யாரவது நல்ல மனசு உள்ளவர்கள் உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் அந்த வயசு போன மனிசனின்ர பிரச்சனையைக் கேட்டு நல்ல தீர்வு சொல்லுங்கோ..

இது இப்படி இருக்க நாங்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் எது கதைக்கும் போதென்றாலும் அடிக்கடி'

இதற்கும் அப்பால் எமது ஆசிரியர் ஒரு நாள் வகுப்பு தொடங்கிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது எமது சக நண்பி அவர்கள் பிந்தி வந்து விட்டா. எமது ஆசிரியரும் நல்ல குறும்பாக சந்தர்ப்பத்திற்கேற்ற படி கதைக்கக் கூடியவர். அந்தப் பிள்ளை இருக்கிற இடம் 'நீர்வேலி'' உடனே ஆசிரியர் அந்த மாணவியைப் பார்த்து பிள்ளை ''நீர், வேலிக்கை இருந்தே வாறாய் ''என்று கேட்டதும் எல்லா மாணவர்களும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டோம். உடனே அந்த மாணவியின் நிலமை அதோ கதிதான் ( ஏன் சிரிச்சமென்று யோசிக்கிறீங்களா??? இதுக்கு நீங்கள் வியாழனில றூம் போட்டு உட்காந்து யோசிச்சால் தான் விடை கிடைக்கும்) இதன் பிறகு நாங்கள் அந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் வைச்சிருப்போம் என்று நீங்களே யோசியுங்கோ??

பிற் குறிப்பு; ஒரு கொஞ்ச நேரம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சியை கட்டாயம் கேளுங்கோ...அதுவும் இப்பதிவு பற்றி உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனைப் பின்னூட்டமாக போடுங்கோ. அதுதான் வளர்ந்து வாற இளம் பதிவர்களுக்கு நல்ல முறையில் எழுதுவதற்கு வழி வகுக்கும். நீங்கள் நிறையப் பேர் எனது பக்கத்திற்கு வாறீங்கள். ஆனால் பின்னூட்டங்கள் ஒன்றிரண்டு பேர் தான் போடுறீங்கள். இதனாலை எத்தனை பின்னூட்டமிருக்கிறது என்று கணக்குப் பார்த்த எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பின்னூட்டம் இது.

இதனையும் கொஞ்சம் படிச்சும் பாருங்கோ. முருகேசர் சொன்னது: ''பதிவும் நானே பின்னூட்டமும் நானேயென யாரோ இங்கே தனித்தவில் வாசிக்கிறார்கள் :) யாராவது இந்தப் பொடியையும் கண்டுகொள்ளுங்கோடா.

இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....

1)மெல்போர்ன் அப்புக்குட்டியும் நானும்

2)தமிலும் தமிழும்...!


3)ஆண்களோடு போட்டி போடும் பெண்களிங்கு யாரு????
Read More......

Saturday, December 13, 2008

மெல்போர்னில் மென்(ல்) பதிவர் சந்திப்பு!

வலையுலகில் தங்களைப் பற்றிய அதிகளவு அறிமுகமில்லாது இலை மறை காயாகப் பதிவுகளை இட்டு வரும் பதிவர்களை நேரில் பார்க்க வேண்டும் , அவர்களுடன் சந்தித்துக் கதைக்க வேண்டும் என்ற எண்ணம் எமது எல்லாப் பதிவர்களுக்கு ஏற்படுவது வழமை.

இந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது தான் மெல்போர்னில் முதல் தர மூத்த பதிவர் வசந்தன் ( இவர் வசந்தன் பக்கத்தை எழுதுபவர்) அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட மெல்போர்ன் மென்(ல்) பதிவர் சந்திப்பு!

இவ்வளவு காலமும் தலை மறைவாகி விட்டாரோ/ மெல்போர்னில் காணாமல் போய் விட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு அனைவரையும் தூண்டிய வசந்தன் அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் திடீரென்று மெல்போர்னில் உள்ள அனைத்துத் தமிழ் வலைப் பதிவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி அவர்களை ஒன்று கூட்ட வைத்தது மிகப் பெரிய விடயம் என்றே கூற வேண்டும்.

நிகழ்வுகள் அனைத்தும் மெல்போர்ன் நேரப்படி இன்று மதியம்(13.12.2008) 12.30 மணிக்கு 'அவன்டெல் காடண்' ( Avondale Gardens) பிரதேசத்தில் உள்ள ஜங்கா பூ பே கொமியூனிற்றி மண்டபத்தில் ஆரம்பமாகின. மெல்போர்ன் வாழ் வலைப் பதிவர்கள், வலையுலக வாசகர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்டவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும்.

முதலில் நிகழ்வுகள் அனைத்தும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. மங்கள விளக்கினை இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக கனடாவின் ''ரொரன்றோ' பகுதியிலிருந்து வந்த எமது மூத்த பெண் வலைப் பதிவர் சிநேகிதி அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய விளக்குகளைச் சக பதிவர்களான கமல், வசந்தன், இவன், கந்தப்பு, முருகேசர் மற்றும் சோமி ரசிகைகள் மன்றத் தலைவர் கமல்காசன் முதலியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு நிமிட அக வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வின் தலைவர் வசந்தனின் தலமையுரை இடம்பெற்றது. அவர் தனது தலமையுரையில் தான் வலையுலகிற்குள் நுழைந்தது எப்படி??? தான் வலையுலகில் பெற்றுக் கொண்ட சாதனைகள், வேதனைகள் முதலியவற்றைப் பற்றி விபரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று அவரது கையடக்க தொலைபேசி மணி ஒலிக்கத் தொடங்கிய போது....எம் உறவுகளே! ஒருவர் இப்போது உங்களுடன் பேச விரும்புகிறார் என்று கூறியதும் அவரது தொலைபேசியில் வந்த அழைப்பு வெளியடக்க ஒலிபெருக்கி மூலமாக பரவவிடப்பட்டது.

அப்போது அந்தக் கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரனான மெல்போர்னின் மூத்த் பதிவரும், தற்போது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவருமான சாரல் வலைப் பதிவின் சயந்தன் அவர்கள் ''என் அருமை வலையுலக நண்பர்களே! உங்கள் அனைவரையும் மனமார வாழ்த்துவதுடன் நீங்கள் மென் மேலும் பல பயனுள்ள விடயங்களைப் உங்கள் பதிவினூடாகப் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தனது வாழ்த்துரையை நிறைவு செய்த போது அரங்கில் எந்தவொரு ஓசையும் எழாது சிறு விநாடிகளுக்கு நிசப்பதம் நிலவியது, அப்போது குறிப்பிட்ட வசந்தன் இதுவே மூத்த பதிவருக்கு இன்றைய இளம் பதிவர்களின் நன்றிக் கடன் என்று கூறினார்.

வசந்தனின் உரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் சிநேகிதி அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் இன்றைய வலை உலகில் மகளிரின் பண்பு என்ன ??/. மகளிர் ஏன் இன்னும் நிறையப் பதிவுகளைத் தராது காணாமல் போகின்றார்கள் என்றும் தாயகப் பறவைகள் எனும் தனது வலைப் பதிவின் ஆரம்ப கால முயற்சி ஊடாகத் தான் பெற்றுக் கொண்ட அநுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் பதிவர்களின் சந்திப்பும், கேள்வி பதில் நிகழ்வும் இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்ட நாற்று வலைப் பதிவின் எழுத்தாளர் நாசி அவர்களின் கேள்வி ஒன்று மிகவும் பயனுள்ள வினா என்று நினைக்கின்றேன். அவர் வசந்தனிடம் ''ஏன் நீங்கள் இப்போது வலைப் பதிவு எழுதுவது இல்லை?? என்று கேட்ட போது அதற்கு வசந்தன் ''தான் தற்போது மிகவும் மும்முரமாகவும், பிசியாகவும் ஒரு செயலில ஈடுபட்டு வருவதாகவும், அச் செயல் என்னவெனில், வலைப்பதில் டைப் பண்ணி தமது நேரத்தை வீணாக்கி பதிவிடுவதற்கு நேரமில்லாத பதிவர்களுக்காகவும், தன் போன்றவர்களுக்காகவும் மிகவும் பயன் தர வல்ல ஒரு கருவியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்தக் கருவி பற்றி வசந்தன் மேலும் விளக்குகையில் டைப் பண்ணி அடிக்கடி பதிவு இடுபவர்களுக்கு அவர்களின் நன்மை கருதி அவர்கள் வாயால் ''தமிழில் சொல்லச் சொல்லத் தட்டச்சும் ஒரு கருவியைத்'' தான் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். அந்த முயற்சி விரைவில் முடிந்ததும், அது உங்களுக்காக அறிமுகப் படுத்தபடும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சயந்தனின் வானொலி முயற்சி பற்றி வசந்தனிடம் கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்குப் பதிலளித்த வசந்தன் ''சயந்தனிடம் அப்படி வானொலி உருவாக்கும் எண்ணம் இல்லை என்றும் அது, மெல்போர்னில் உள்ள யாரோ வேண்டத்தகாத விஷமிகள் இந்தப் பொய்யான விளம்பரத்தை பரவ விட்டார்கள் என்றும்'' குறிப்பிட்டார்.

''சயந்தனிடம் அப்படி ஏதும் எண்ணங்கள் இதுவரை இல்லை'' என்றும் வசந்தன் கூறினார். அப்படிச் ''சயந்தன் வானொலி ஏதும் ஆரம்பித்தாலும் உடனடியாக சயந்தனுக்குப் போட்டியாக யாரோ, ''சிட்னியில் இருந்து வானொலி ஆரம்பிக்க உள்ளதாகவும்'' இரகசிய செய்திகள் தெரிவிப்பதாகவும் வசந்தன் வசந்தன் கூறினார்.

இவ் விழாவில் சயந்தனின் ரசிகைகளாக இருந்து பின்னர் சோமியின் ரசிகைகளாக மாறிய பெண் ரசிகர் குழாம் தனது பங்களிப்பையும் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. விழாவின் இறுதியில் வசந்தன் அவர்களால் பல்வேறுபட்ட மதிய சிற்றுண்டி வகைகள் பரிமாறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சிநேகிதி அவர்களின் குரலில் ''எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....எனும் பாடலும், வசந்தனின் குரலில் அம்பாப் பட்டும், புளியடி வலைப்பதிவர் வனஜாவின் குரலில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்... எனும் பாடலும் இசைக்கப்பட்டன. கமலின் நன்றியரையுடன் இவ் விழா இனிதே நிறைவு பெற்றது.

ஒட்டு மொத்தமாய் சொல்லப் போனால் இவ் விழாவில் கலந்து கொண்ட 35 இற்கும் மேற்பட்ட பதிவர் மனங்களிலும் மகிழ்சியைக் காணக் கூடியதாக இருந்தது. எமையெல்லாம் ஒன்றாக்கிய வலைப் பதிவிற்கும், வசந்தனுக்கும் எம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


பிற் குறிப்பு! இது நான்கு வருடங்களுக்குப் பின்னர். அதுவும் நீண்ட இடை வேளையின் பின்னர் இடம்பெற்ற மெல்போர்னின் இரண்டாவது வலைப் பதிவர் சந்திப்பு! மெல்போர்னில் இடம்பெற்ற முதலாவது வலைப் பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்களையும் அறிய ஆவலா?? இங்கே சொடுக்கவும். Read More......

Friday, December 12, 2008

எனது பார்வையில் எமது தாயகம்!

தமிழர் தாயகப் பகுதியின் இன்றைய நிலமைகள், தமிழர்கள் உலகிடம் கேட்கும் நீதி என்ன? ஆண்டாண்டு காலமாக அல்லற்படும் தமிழர்கள் வாழ்வில் அவர்கள் விடியலைப் பெற்றுக் கொள்வதற்காக எப்படி எல்லாம் அவலம் சுமக்கிறார்கள், ஏன் அவர்கள் அந்த முள் முடி சுமந்து நடக்கிறார்கள் முதலிய பல தாயகம் பற்றிய சிந்தனைகளை பல்வேறு பட்ட வடிவில் உள்ளடக்கி மெல்போர்னில் ஒரு புலம் பெயர் தாயக இளைஞனால் ஆற்றப்பட்ட உரையின் ஒலி வடிவம் உங்களுக்காகத் தரப்படுகின்றது.
புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே நீங்கள் நிச்சயமாகக் கேட்க வேண்டிய உரை இது! இந்த இளைஞனின் தனிப்பட்ட நலன் கருதி அவரின் பெயர் விபரங்களை இங்கே தணிக்கை செய்துள்ளோம்.

பட உதவி: நன்றியுடன் தமிழ் நாதம்!
ஒலி வடிவில் கேட்க...

Speach From Melbourne.mp3 - From Melbourne Read More......

Tuesday, December 9, 2008

ஆண்களோடு போட்டி போடும் பெண்களிங்கு யாரு????

புலம் பெயர் வாழ்வும் எமது புதுமைப் பெண்களும் பற்றியும் பெண்களால் அடக்கப்படும் ஆண்கள் பற்றியும், பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் மகனாக அப்புக் குட்டி அவர்கள் தனது தனிப்பட்ட வாதப் பிரதி வாதங்களை முன் வைத்திருந்தார்.

இவரது கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக பொங்கி எழுந்த பெண்களின் (சிநேகிதி உட்பட) சீற்றத்தின் குரலாக ஆண்களுக்குப் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மெல்போர்ன் கலையகத்தின் முகாமைத்துவப் பகுதியில் பணியாற்றுபவரும், அறிவிப்பாளருமாகிய திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள் நிரூபித்திருக்கிறார்/ நிரூபிக்க முயன்றுள்ளார்.

கடந்த பல வாரங்களைப் போலவே இந்த வாரமும் எங்கள் வாசக நெஞ்சங்கள் எமது இந்தப் பதிவிற்கும் தங்கள் ஆதரவுக் கரத்தினை நல்குவார்கள் என நம்புகின்றேன். கடந்த வாரங்களில் ஒலிபரப்பாகிய தமிலும் தமிழும் மற்றும் மெல்போர்ன் அப்புக் குட்டியும் நானும் எனும் இரு நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு எவ்வளவு என்பதனை உலகமெல்லாம் புதிதாக திடீரென்று முளைத்த பெண்ணியக் கழகங்களூடாகவும், தமில்(ழ்) சங்கங்களூடாகவும் நாம் இனங்கண்டுள்ளோம்.

அது மட்டுமன்றி தமிழையே வாசிக்க தெரியாத ஆங்கில மொழியில் மிகவும் புலமை வாய்ந்த ''கொழுவியின் கொள்ளுப் பேரன்'' அவர்கள் அநாமதேய முகமூடி அணிந்து வந்து எமது நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் மொழி பெயர்கச் சொல்லி வற்புறுத்தியதும் எமது அப்புக் குட்டி அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பேரன்பினைக் காட்டு கின்றது.

மீண்டும் மற்றுமொரு அப்புக் குட்டியின் குரல் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை இப்போது தற்காலிகமாக விடை பெறுகின்றோம். ஓ...நிகழ்ச்சியைக் கேட்க மறக்க வேண்டாம். நிகழ்ச்சியைக் கேட்க கீழே பயணிக்கவும்.

Melb Appu 03.mp3 - Appu Kutty Read More......

Monday, December 8, 2008

பொறாமை!

இன்றைய நவீன உலகில் வளர்ந்து வரும் கலைகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்ச் சொல்லிசையில் பல கலைஞர்கள் அண்மையில் முன்னணியில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது புலம் பெயர் நாடுகளில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற தமிழ் இசைக் கலைஞர் சுஜித்ஜி. யார் இந்த சுஜித்ஜி??

தமிழீழத் தேசமதின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்து திருகோணமலை மாவட்டத்தில் தனது இளமைப் பிராயத்தைக் கழித்து தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகின்ற ஒரு இளைய தலை முறைப் பாடலாசிரியர், சொல்லிசைப் பாடகர்.

இன்றைய நவீன உலகில் வளர்ந்து வருகின்ற கலைஞர்கள் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகின்றார்கள், சமூகம் அவர்கள் மீது எவ்வாறான கரிசனையைக் கொண்டிருக்கிறது, சமூகம் ஏன் வளர்ந்து வருகின்ற கலைஞர்களைப் புறக்கணிக்கின்றது முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கி சுஜித்ஜி வெளியிட்ட பாடல் ''பொறாமை என்கின்ற... பாடலாகும்.

இந்தப் பாடலுக்கு இசை வழங்கியிருக்கின்றார்: VermonG
வழமை போலவே பாடலை எழுதிப் பாடியுள்ளார்: சுஜித்ஜி!

இந்தப் பாடலின் பாடல் வரிகள் இதோ! பாடலைக் கேட்க கீழே பயணிக்கவும்.

''உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்!

என்னைக் கவிழ்க்க சிலர் உள்ளம் துடிக்கும்
என்னில் குறை காண தினமும் தவிக்கும்
என்னைப் பொய்யனெனச் சொல்லித் தொலைக்கும்
நான் போகும் வழி எல்லாம் குழியைப் பறிக்கும்
என்பெயர் சொல்ல இங்கென் வாழ்க்கை இல்லை
சொல்லித் திரிவதிலும் பயனேதும் இல்லை
வாழ்வில் பட்டதையே நான் சொல்லிப்போவேன் - என்
கையில் சுட்டதையும் நான் சொல்லிப்போவேன்
நீ தந்த வரத்திற்கு இயற்கையே நன்றி
நான் இங்கு வெறும் புழுதி உன் கருணை இன்றி
உனக்காக பணிசெய்வேன் வரையறை இன்றி
து}ற்றுவார் து}ற்றட்டும் அவர் காட்டுப் பன்றி!

உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்!
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்!
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்!

வரி கொண்டு நான் பாய்வேன் நான் வரிப்புலி!
தவறேதும் நான் செய்யேன் எனக்கேது கிலி!
சமுதாய மேம்பாட்டில் நான் சின்ன உளி!
தடுமாறிப்போனாலே அன்றே நான் பலி!
ஐயோ எனக்கிங்கே எதிரிகள் வேண்டாம்
கூடித்திரியவும் நண்பர்கள் வேண்டாம்
தன்னந்தனியாயே நான் இங்கு வந்தேன்!
இன்னும் சில நாளில் நான் மாண்டு போறேன்!

பொங்கும் பொறாமையும் ஒங்கும் எரிச்சலும்
வாழ்வில் வந்துவிட்டால் அமைதி இருக்காது
மங்கும் வாழ்வுதனில் எங்கும் அன்பு கொண்டால்
சொர்க்கம் என்ற ஒன்று வேறெங்கும் இருக்காது!


Poramai - SujeethG.mp3 - SujeethG


பாடல் வரிகளுக்காக.. நன்றி சுஜித்ஜி இணையத்தளம்.

Read More......

Sunday, December 7, 2008

காணத்தவறாதீர்கள்! அக்கினிப் பெரு மூச்சு!

நாடகங்கள் பல்வேறு வகைப் படுகின்றன. அதுவும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாடக இலக்கியங்கள் முதன்மை பெற்கின்றன. இந்த நாடக வடிவங்கள் கூத்து நாடகம், தெரு வெளி நாடகம், மேடை நாடகம், தனி நடிப்பு நாடகம் எனப் பல்வேறு வகைப்படுகின்றன.

(என் அறிவிற்குத் தெரிந்தன இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றை விட வேறு பல நாடக வடிவங்களும் வகைகளும் இன்னும் நிறைய இருக்கின்றன. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்????)

தமிழ் ஈழப் போரியல் வரலாற்றில் தெரு வெளி நாடகங்களும், குறியீட்டு நாடகங்களும் மிக முக்கிய அங்கத்தினைப் பெறுகின்றன. அந்த வகையில் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி ஊடாக ஒளிபரப்பான தேவானந்தின் தயாரிப்பிலும் நெறியாள்கையிலும் உருவான் அக்கினிப் பெரு மூச்சு எனும் குறீயீட்டு நாடகத்தினை உங்களுக்கு காணொளி மூலம் பதிவிட உள்ளேன்.

சமாதனத்திற்கான போர் எனும் நாமத்தில் ஆட்சியாளர்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்கள், தமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்தால் கடத்திக் காணாமல் போகடிக்கப்படும் குடும்பஸ்தர்களின் மனைவிமார் எவ்வாறு சமூகத்தினால் பார்க்கப்படுகின்றார்கள்? சமூகம் அவர்களுக்கு எத்தகைய அந்தஸ்தினை வழங்குகிறது.. முதலியவற்றோடு இன்னும் பல முக்கிய விடயங்களைக் கொண்டு விளங்குகிது இந்த நாடகம்.

சமூகத்தில் இராணுவத்தால் கடத்திக் காணாமல் போகடிக்கப்படுகின்ற ஒரு ஆடவனின் மனைவி இன்று வரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்து தன் காலத்தைக் கடத்துவது நான் என் கண் கூடாகக் கண்ட விடயம், அவாவைப் போல எமது தாயகத்தில் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் இவ்வாறு உள்ளார்களோ???

''போரின் வலி என்றால் என்ன என்பது பற்றி அறியாதவர்களும், எமது தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றி மாறுபட்ட கருத்துள்ளவர்களும்'' கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நாடகம் இது.

இது மூன்று பகுதிகளை உள்ளடக்கிய காணொளி ஆகும்.

நன்றி: தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மற்றும் வக்தா தொலைக்காட்சி.

அக்கினிப் பெரு மூச்சு அங்கம் ஒன்று! இதன் அடுத்த அங்கம் வெகு விரைவில்...அதுவரை காத்திருங்கள்!



பாகம் ஒன்றின் தொடர்ச்சி!

Read More......

Saturday, December 6, 2008

இதயம் வலிக்குதடி! உனைத் தினமும் நினைக்குதடி!



அண்மையில் வளர்ந்து வரும் கலைகளில் ஒன்றாக தமிழ்ச் சொல்லிசையும்(Tamil Rap)விளங்குகின்றது.

இந்த சொல்லிசைப் பாடல்களையும் எனது பதிவினூடாக அறிமுகப்படுத்தல்லாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே பல சக பதிவர்கள் தமிழ் சொல்லிசைப் பாடல்கள் பற்றி ஆரம்பித்து விட்டு இடையில் கைவிட்டு விட்டார்கள்.

அவர்கள் விட்ட சொல்லிசைப் பாடல்களின் குறை நிறைகளை நான் தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். அதற்கு எங்கள் வாசகர்களாகிய நீங்கள் நேசக்கரம் நீட்டு வீர்கள் எனும் நம்பிக்கையில் எனது இந்தக் கன்னி முயற்சியை ஆரம்பிக்கின்றேன்.

நான் இன்று உங்களுக்கு வழங்கவிருக்கும் பாடல் இலங்கையின் சூரியன் எப்.எம், மற்றும் சக்தி எப்.எம் இல் அறிவிப்பாளராகவும் தற்போது தமிழ் நாட்டில் ஆஹா எப்.எம் இல் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் விளங்கும் பாலேந்திரன் காண்டீபனின் பாடலாகும்.


இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், பாடல் ஆசிரியர், மற்றும் ஓர் கவிஞர் என்பது இவ் விடத்தில் குறிப்பிடுவது நனி சிறந்தது என்று நினைக்கின்றேன். கான்டீபனைப் போலவே நம் சாரல் புகழ் சயந்தனும் ஓர் சிறந்த சொல்லிசைப் பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமால்லாமல் சூரியன் எப்.எம் இல் அறிவிப்பாளராக விளங்கிய ஆர். திருச்செந்தூரனும்(இவர் லோசனின் சகோதரர்) கேளுங்கள் கொழும்புப் பாட்டு... எனும் பாடலை இலங்கையில் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் காண்டீபன் அவர்களால் 2005ம் ஆண்டு அவர் சக்தி எப்.எம் இல் பணி புரியும் போது வெளியிடப் பட்ட பாடலாகும். இந்தப் பாடலில்
பாடல் வரிகள்: பாலேந்திரன் காண்டீபன்.
பாடலுக்கு இசை : டிலுக்ஸன் இராஜேந்திரன்.
பாடியவர்கள்: பாலேந்திரன் காண்டீபன் மற்றும் கீர்த்தனா இராஜகோபால் இவர்களுடன் பாடலின் சொல்லிசையை டிலுக்ஸன் இராஜேந்திரனும் பாடியுள்ளார்.

பிற்குறிப்பு: இந்தப் பாடலில் காண்டீபன் அபோதைய கள நிலமைகளுக்கு அமைவாக ஒரு பெண்ணாக சமாதனத்தை உருவகித்து ''பல பேச்சுக்கள் நடந்தது... இன்னும் தீர்வே இல்லையடி... முடியும் வரைக்கும் எமக்குள் முடிவேதும் இல்லையடி... நீ இருப்பதைச் சொல்லி விட்டால் வாழ்க்கை இருக்குதடி...நீ இல்லை என்றாலோ அடி நானே ....... எனத் தன் கவி வித்துவத்தைக் காட்டியுள்ளார்.பாடலைக் கேட்க கீழே பயணிக்கவும்!
Solli Vidavaa - Kaandee

Read More......

Wednesday, December 3, 2008

உங்களுக்கும் கேட்கிறதா எங்களின் புலம்பல்கள்?

மாணவன் புலம்பல்
'ஆனந்தம் கோலங்கள்' என
அற்புதமாய் 'றாமா ' இருக்க
ஏனிந்த படிப்பு என நான்
ஏதிலியாய் அலைகின்றேன், 'இளைய
கானங்கள்' பார்த்திடுவீர்! தினமும்
காவியா பார்த்திடுவீர்!
தானாங்கள் வழங்கா விடினும்
தடயத்தை மறந்திடாதீர்!
மனையாள் புலம்பல்!
'கண்ணா ஆடுகிறான்' அவன்
காவியாம் பேசுகிறான், நான்
'பெண்ணாய்'(ப்) பிறந்து விட்டேன்!
பெரிய தவம் செய்து விட்டேன்!
உண்ணா நோன்பிருந்து(ம்) அவர்
உயிரை விட நேர்ந்தாலும் '
அண்ணாமலை' பார்க்காது நான்
அடுப்பை மூட்ட மாட்டேன்!
பாட்டிமார் புலம்பல்!
தேவலோகம் செல்லும் நாள் எனைத்
தேடி வந்தாலும் இங்கு
ஆவியாய் எந்தன் அப்பு தினம்
அருகே வந்து நற்சேதி சொன்னாலும்
பாவியே நீர் என; எனை(ப்)
பரிகஷித்துச் சென்றாலும்
'காவியா அஞ்சலி' பார்க்காது நான்
கடைசிவரை கண்மூடேன்!
துறவியின் புலம்பல்
சித்தத்தை சிவன் பால் வைத்து
சிறப்போடு வாழ்வதற்காய்
பக்தி எனும் பாதைதனில் பல பேர் சென்றாலும்
முத்தி எனும் வழியடைய
முந் நூறாண்டாலும்
'சித்தி' தொடர் பார்க்காது
சிவத் தொண்டு செய்ய மாட்டேன்!
பிற் குறிப்பு: இந்தக் கவிதை என் பதின்ம வயதில் எனக்கும் மரபுக் கவிதை என்கின்ற முதிர்கன்னிக்கும் இடையில் ஏற்பட்ட மிக நெருக்கமான காதலின் காரணத்தாலும், நான் மரபின் மீதும் யாப்பின் மீதும் கொன்ட அளவற்ற நெருக்கத்தின் காரணத்தினாலும் என் பதின்ம வயதில் எழுதப்பட்டு, உதயன் பத்திரிகையில் ஞாயிறு சூரிய காந்தி இதழில் பிரசுரிக்கப் பட்ட கவிதை.
இக் கவிதையில் அப்போதய ''சீரியல் சிற்றுவேசனுக்கு அமைவாக நான் பல சின்னத்திரைப் பெயர்களைப் புகுத்தியிருக்கிறேன். அவற்றில் எத்தனை சின்னத்திரைத் தொடர்கள் உள்ளன என்று கண்டு பிடித்துச் சொல்பவருக்குப் பெறுமதி மிக்க பரிசு ஒன்று வழங்கப் படும்.
இது உதயன் பத்திரிகையில் ஞாயிறு சூரியகாந்தி இதழில் 10.07(ஜீலை).2005 அன்று பிரசுரிக்கப் பட்ட கவிதை.
Read More......

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).