Thursday, October 15, 2009

’வேம்படியிலை என் குருவி ‘ஏ. எல் A/L) படிச்சவா!

இப்ப எல்லோருக்கும் வேம்படிக் குட்டிகள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து போவீனம் என்று நினைக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த வேம்படி மகளிர் கல்லூரி. எங்கள் பாடசாலையின் சகோதரப் பாடசாலை அல்லது சகோதரிப் பாடசாலையும் இது தான். பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நான் ஏதோ என் குருவியைப் பற்றிப் புலம்பப் போறேன் என்று நினைத்தால் அது தவறு பாருங்கோ.



இந்தப் பதிவு ஈழத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பாடலை உள்ளடக்கிய பதிவு. பாடலைப் பாடியவர் ஏ.ஈ.மனோகரன் என்று நினைக்கிறேன். உறுதியாகக் கூறமுடியவில்லை. இனிப் பாடலுக்குள் செல்வோமா...




குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....


குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...


பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா

‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)



சுன்னாகம் சந்தைக்கு நான் அன்றாடம் போகையிலே
பன்னாகம் பஸ்ஸுக்குள்ளே பார்த்துச் சிரிச்சவளே
வட்டுக்கோட்டை மேஸ்திரியார் கட்டினது கந்தர்மடம்
காங்கேசன் சீமெந்திலை கட்டினேண்ட்டி காதல் மடம்
சுண்டுக்குளி வந்ததுமே நெஞ்சுக்குளி நோவுதடி..
நாவற்குழி அண்டங் காகம் நாவறண்டு பாடுதடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)



உண்ணாமல் உறங்காமல் உடுப்பிட்டி பஸ்ஸெடுத்து
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூரில் நான் தவிக்க
இணுவில் மாம்பழத்தை, கோண்டாவில் கொய்யாவை
கொக்குவில் அணில் பார்த்துக் கொட்டாவி விட்ட கதை
நல்லூர் கந்தனுக்கு நாநூறு பழத் தேங்காய்
கீரிமலை வேந்தனுக்கு கேணி ஏறித் தீர்த்தம் வைத்தேன்
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)


அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)




இந்தப் பாடலைக் கேட்பதற்கு உங்களிடம் பிளாஷ் பிளேயர் இருக்க வேண்டும். என்ன பாட்டுக் கேட்க எல்லோரும் றெடியோ????



Get this widget | Track details | eSnips Social DNA
Read More......

என்னையும் நினைவிருக்குதோ??

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைப் பதிவு வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். காணாமல் போன பதிவர்கள் வரிசையில் சேர்க்கப்பட்ட கமல் மீண்டும் வந்து விட்டாரா என்று யோசிக்கிறீர்கள் போலும்?? வேலைப்பளு, என் மனைவியுடன் மெல்பேணில் வசிப்பதற்காக வீடு தேடுகின்ற பிரச்சினை, இன்னும் பல இன்ன பிற காரணங்களால் பதிவுலகப் பக்கம் கடந்த ஏழு மாதங்களாக எட்டிப் பார்க்க முடியவில்லை. அதற்காக என்னுடைய மன வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



கமல் திருமணம் முடித்ததால் தான் பதிவு எழுதவில்லை என்று யாராவாது நினைத்தால் அது தவறு. என் மனையாள் இன்னமும் ஒஸ்ரேலியாவிற்கு வரவில்லீங்கோ...??? இப்பத்தான் தனிய ஒரு வீடு எடுத்து இருக்கிறன். இனித்தான் அவா வருவா??? நான் மெல்பேணிலை வீடு தேடி எடுத்ததே ஒரு சுவாரஸ்யமான விடயம். அது சம்பந்தமாக பிறிதொரு பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.



என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களைக் கவிதையாக்கி வழங்கிய நண்பர் ‘தேவன்மாயம்’ அவர்களுக்கும், வாழ்த்துக்களை வழங்கிய சக பதிவர்களுக்கும் காலங்கடந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நன்றி மறக்கலைங்கோ???? (தாமதத்திற்கு மன்னிக்கவும்) இவனுக்கு ‘இப்பவாச்சும் எங்களைப் பற்றி நினைப்பு வந்திருக்கு’ என்று யாரோ சொல்லுவதும் காதில் விழுகிறது. என்னால் முடிந்த வரை இனியும் முன்பு போல சுவாரஸ்யமாகப் பதிவுகளைப் போடலாம் என்று நினைக்கிறேன். முடிந்தவரை முயன்று பார்க்கிறேன்.


ஏற்கனவே நாங்கள் வழங்கிய ஒரு சில பதிவுகளுக்குப் பல சொல்லெறிகள் விழுந்திருந்தாலும், அவை எல்லாம் காலம் கடந்த பின் உண்மை என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதற்கு எடுத்துக் காட்டாக நானும் நண்பர் புல்லட் பாண்டியும் வழங்கிய ’’எதிர்கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கும்?? எனும் பதிவினையும், புலிகள் அழிந்து விட்டார்களாம்...??? எனும் பதிவினையும் குறிப்பிடலாம்.




உங்கள் அன்புக் கரங்களை என்னோடு கோர்த்து என்னையும், உங்களில் ஒருவனாக இணைத்துக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில் மீண்டும் களமிறங்குகிறேன். அடுத்த பதிவு ‘’வேம்படியிலை என் குருவி ‘ஏ ஏல்’ (A/L) படிச்சவா. என்ன யோசிக்கிறீங்கள்?? கொஞ்ச நேரம் பொறுங்கோ. Read More......

தமிழ் மதுரம்..! is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).